Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 12

💞 நயம் 12 💞

வரதன் தான் அனைத்து குழப்பத்திற்கும் காரண கர்த்தாவா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கணேஷ், அபி இருவரும் அவன் செய்திருக்க வாய்ப்பில்லை என்றனர். கடந்த இருபது வருடங்களாக அவர்கள் தான் தங்கள் நிறுவன வேலைகளை செய்கின்றனர். தொழில் முறை பழக்கத்திலும் மிக நல்லவன். அதே போல் அவன் அண்ணன் தப்பு செய்தால் கொலை செய்ய கூட அஞ்சாதவன். கண்டிப்பா அவன் பண்ணி இருக்க மாட்டான். வேறோ யாரோ தான் அவர்களும் அறியாமல் செய்துள்ளனர், போலீஸ் விசாரணை செய்ததிலும் இதைதான் கூறி உள்ளனர் என்றனர்.



Advertisement

ஆனாலும் மனது கேளாமல் கோகுலை அழைத்து கொண்டு போய் வரதனை சந்தித்தான். அவர்கள் உள்ளே சென்றதும் மன்னிச்சுக்கோங்க தம்பி, என்று தான் வரவேற்றார் வேலு வரதனின் அண்ணன். மேலும் நம்ம கம்பெனி பெயர் கெட என்கிட்டே வேலை பார்த்த லாரி டிரைவர் காரணம் ஆகிட்டான். அவன் இங்கே சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. மத்த கம்பெனி வண்டியெல்லாம் ஒழுங்கா கொண்டு போய் கொடுத்தான்னு தான் இங்கேயும் அவனையே அனுப்பினோம். இப்படி பண்ணிட்டான். அவன் தப்பு பண்ணுவான்னு நாங்க நினைக்கல. சாரி தம்பி என்கிறார் மீண்டும்.

Advertisement

Advertisement

அவன் வீடு, அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் குடுங்க. நாங்களும் தேடி பாக்குறோம். யார் செஞ்சாங்கன்னு எங்களுக்கு கண்டிப்பா தெரியணும். அப்பதான் இழந்த பெயரை நாங்க மீட்க முடியும் என்றான் அரவிந்த்.

Advertisement

அவர்களுக்கு அனைத்து தகவல்களும் தந்து உதவியது வரதனே. சாரி ப்ரோ. கல்யாணம் பண்ண மறுநாளில் இருந்து உங்களை இப்படி ஓடவிட்டானே. அவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும். நானும் தேடிகிட்டு தான் இருக்கிறேன். கைமாதான். உங்களுக்கு இம்சை குடுத்தவனை நான் சும்மா விடமாட்டேன். கவலைப்படாம நீங்க போங்க. எதுனாலும் நாங்க இருக்கோம். கண்டுபிடிச்சி வெளுத்துற மாட்டோம் என அவன் கூறியதைக் கேட்டு, இவனைப் போய் சந்தேகப்பட்டோமா, அபி சொன்ன மாதிரி நல்லவனாத்தான் இருக்கான். இவன் பண்ணியிருக்க மாட்டான் என்ற முடிவிற்கு அரவிந்த் வந்துவிட்டான்.

இவர்கள் இங்கே அலைந்து கொண்டு இருக்க ஆபிஸ் வேலைகளை அனைத்தும் அபியே பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது தான் அவளுக்கு ஒரு விஷயம் காலம் கடந்து ஞானத்திற்கு வந்தது. சரக்கு அனுப்பும்போது, அந்த பில்லில் ஒரு சிப் வைத்து அனுப்புவர். பொருட்களை சரிபார்த்து வாங்கியபின், வாங்கிடுவோர் ஒப்புதல் அளித்து திருப்பி தரும் பில் காப்பிதாள் அது. அந்த சிப்பில் ஆடியோ சேமிப்பு உள்ளது. தேவைப்பட்டால் சரக்கு எங்கேனும் திருடுப்போனாலோ , தொலைந்தாலோ கண்டுபிடிக்க முடியும் என சென்ற மாதத்தில் தான் அதனை தனது நிறுவனத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தாள். பெரிய அளவிலான சரக்கு அனுப்பும்போது மட்டும் அதனை உபயோகப்படுத்தலாம் என கூறி இருந்தாள்.

கல்யாண லீவில் இவள் இருந்ததால் மேனேஜர் மட்டுமே அத்தனையும் பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த புதிய நடைமுறையை உபயோகப்படுத்தி இருந்தால் நமக்கு அது உதவி செய்யுமே என அப்போதுதான் அவளுக்கு தோன்றியது. தெய்வாதீனமாக அன்று சரக்கிற்கு அந்த பில் முறை தான் பயன்படுத்தி இருந்தனர். ஏனெனில் இருபது லட்சம் மதிப்பிலான சரக்கு என்பதால் அதனை செய்தனர்.

உடனே அரவிந்தை அழைத்து இந்த விஷயத்தை கூறினாள்.

ஏய், இந்த மெத்தெட் நான் அங்க என் கம்பெனில பண்றது ஆச்சே, இங்க அது பாலோவ் பண்றிங்களா.

இல்லை போன மாசம் தான் மாமா சொன்னாங்க. சிப், பில்ஸ் மெத்தெட் எல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி தான் முடிச்சி வச்சேன். இன்னும் இந்த பில் படி எந்த சரக்கும் போகல. பிரஸ்ட் டைம் நம்ம இப்ப தான் அனுப்பி இருக்கோம். அந்த பில் தான் போலீஸ்ட மாட்டியிருக்கு.

இத ஏன் முன்னாடி சொல்லல? , இந்நேரம் எல்லா பிரச்சனையும் முடிஞ்சி இருக்கும்.

நானும் தானே லீவுல இருந்தேன். இப்ப அவங்களுக்கு அர்ஜென்டா வேற சரக்கு அனுப்பணுமேனு பில் செக் பண்ணும்போது தான் நானே கண்டுபிடிச்சேன். எனக்கே தெரியாது இந்த மாதிரி அனுப்பி இருக்காங்கனு.

அதனை உறுதிப்படுத்தியவுடன் மிகுந்த மகிழ்ச்சியில் இன்ஸ்பெக்டரிடம் ஓடினர். அவர்கள் வைத்திருந்த பில்லை எடுத்து, சிப்பில் உள்ள ஆடியோவை கேட்டால் அதில் உள்ள பேச்சு பதிவை வைத்து யார் செய்தது என கண்டுபிடித்து விடலாம் என்றதில் அவரும் உடனே செயல்பட ஆரம்பித்தார்.

அதில் வண்டி செக்யூரிட்டி கேட்டில் கிளம்பியது முதல் தற்போது வரை அனைத்தும் குரல் பதிவாய் பதிந்து இருந்தது.

அதன்படி அவர்கள் நிறுவனத்திற்கு எதிரி நிறுவனமே இந்த பாதக செயலை செய்தது உறுதி ஆனது. ஆம் டிரைவர் அவர்களோடு பேசிய பதிவில் அந்த நிறுவன மேனேஜர் பெயரையும் கூறி பேசி இருந்தார். டிரைவரின் அலைபேசி எண்ணின் ரிகார்டுகளின் படியும் இது உறுதி செய்யப்பட்டது. ஏனெனில் நிறைய எண்களில் அவன் பேசியதால் யாரை சந்தேக பார்வையில் கொண்டு வர என போலீஸ் யோசித்தது. அவன் கூறிய பெயரினை அடிப்படையாக வைத்து, ஒவ்வொன்றாக நூல் பிடித்து சென்றதில் இறுதிமுனை குற்றவாளியை அழகாய் கைகாட்டிவிட்டது.

மோசடி செய்ய முயன்ற வழக்கு, செம்மர கடத்தல் வழக்கு என பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மேல் சட்டத்தில் இருந்து வெளியேற முடியா வண்ணம் வழக்குகள் கொடுக்கப்பட்டன.

மேலும் AK நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதால் நிறுவனம் சார்பாக மான நஷ்ட வழக்கும் கொடுக்கப்பட்டது. ஆதாரபூர்வ சாட்சியங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அச்சுதன் மற்றும் AK நிறுவனம் மேலான வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. வழக்கு பற்றிய அனைத்து தகவல்களும் செய்தியில் இடம் பெற்று அவர்கள் பக்க நியாயத்தை உரைத்தது.

திருமணத்திற்கு பின்னான ஒன்பது நாட்கள் கடந்த நிலையில் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. ஊர் வாயை மூடினாலும் உறவுகள் சில எகத்தாளம் பேச தான் செய்தது. உறவுகள் உன்னதம் உணர்ந்து எதுவும் சொல்ல முடியாமல் இருந்தனர். முடிந்த மட்டும் பேச்சினை தவிர்த்தனர்.கொட்டிய வார்த்தைகள் அள்ள முடியாது என்ற போதிலும் உறவுகளிடம் முன் போல் பேச மனம் வருமா என்று யோசிக்க தான் வேண்டும். அனைத்தும் முடிந்த நிலையில் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து பெரிய அளவிலான பூசணிக்காயை சுற்றி போட்டார் பிரியாவின் தாயார் மஹாலட்சுமி.

என் பேத்தி கல்யாணம் முடிஞ்சு ஊரெல்லாம் கண்ணு. எந்த கொள்ளிக்கண்ணு பட்டு இப்படி வாட்டி வதைக்கிதோ தெரியலை. இனி எல்லாம் பட்டு போகும். மொத எல்லாரும் போயி குலதெய்வத்துக்கு பொங்கல் வச்சி நல்லபடியா வாழணும்னு வேண்டிட்டு வருவோம். எல்லாம் இனி தெய்வம் பாத்துக்கும் என்றதை யாராலும் மறுக்க இயலவில்லை.

அதன்படி மறுநாள் காலையே அச்சுதன் வீட்டு குலதெய்வத்திற்கும் , மாலை கணேஷ் வீட்டு குலசாமிக்கும் பொங்கல் வைத்து மனதார வேண்டி வந்தனர்.

கட்டிய மனைவியை பார்க்க கூட நேரமில்லாது சுற்றி கொண்டிருந்தவன் இன்றுதான் அவளை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஏனெனில் கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் மீண்டும் ஒரு பிரச்சனை.

கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம் என்ற சொலவடை உண்டு. அதற்கேற்ப அச்சுதன் மாமா பெண் காஞ்சனா கோயிலுக்கு சென்று அவர்கள் திரும்பி வரும் போது பார்த்து விட்டார். அவர்தான் அபியை துரத்தி விட சொல்லி மீண்டும் மீண்டும் சொன்ன நொறுங்கி போன உறவு. இத்தனை நாட்கள் நடந்த பேச்சுக்களை அச்சுதனிடம் மறைத்த குடும்பத்தால் அவரின் முகத்திற்கு நேரே பேசிய உறவினை தடுத்திட முடியவில்லை.

தன் மருமகளை வீட்டை விட்டு வெளிய அனுப்ப சொன்னதும் மனிதர் பொங்கி விட்டார். உனக்கு என் மருமகளை பற்றி என்ன தெரியும்? என் மானத்தை மட்டும் இல்லை, உசிரையே காப்பாற்றிய குணவதி அவள். அவ இல்லைனா நான் செத்த இடத்துல இந்நேரம் மரமே முளைச்சி இருக்கும். யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற. இனிமே உங்க ஓட்டும் வேணா, உறவும் வேணா, இப்படி நஞ்சு தோய்ந்த மனசோட என் வீட்டு வாசப்படி கூட மிதிச்சிடாதே. ஒரு வார்த்தை இனிமே அவளை பத்தி பேசுனீங்க, உசுரோட விடமாட்டேன் என கர்ஜனை செய்தவரை கட்டுப்படுத்தி கூட்டி வருவதற்குள் படாதபாடு பட்டுவிட்டனர்.

அண்ணா, கோபப்படாதீங்க, வாய் இருக்குன்னு அவங்க பேசுனா அதெல்லாம் உண்மை ஆகிடுமா. நம்ம பிள்ளைகளை பத்தி முடிவு அவங்க எப்படி எடுக்க முடியும்? கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா, நம்ம மனசையும், உடம்பையும் நம்ம தான் பார்த்துக்கணும். எனக்கும் இதெல்லாம் கேட்டா வருத்தமா தான் இருக்கு.

ஒரு தடவை அவங்க பேச்சை எல்லாம் கேட்டு நீங்க பட்ட பாடு போதும். அதுக்கே இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா வாங்க என பிரியாவும் தன் பங்குக்கு பேசி தான் சற்றே அமைதி ஆனார்.

தங்களை பிரிக்க ஏன் இத்தனை பேர் வரிந்து கட்டி கொண்டு பேசுகிறார்கள் என தான் அபிக்கும், அரவிந்த்க்கும் தோன்றியது.நம்ம யாருக்கும் அந்த மாதிரி எண்ணம் இல்லையில்லைபா. லூசு மாதிரி பேசுனா கண்டுக்காம வாங்க. இவங்க சொல்றது எல்லாம் கேட்டு டென்ஷன் ஆகாதீங்க. எங்களை பிரிக்க யாராலும் முடியாது. ஏதோ நம்ம கம்பெனி நிறைய டர்ன் ஓவர் ஆகுதுன்னு பொறாமையில் அந்த கம்பெனிக்காரன் பண்ணா அதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும். ஊர்ல பேசுறது எல்லாம் நம்பி நம்ம வாழ்க்கையை தொலைக்க முடியாது. நம்ம தான் வாழ போறோம். அவங்க இல்லை. நம்ம தான் முடிவு பண்ணனும், அவங்க இல்லை. அதை மனசுல வச்சி ரிலாக்ஸ் ஆகுங்க என அரவிந்த் கூறியதை கேட்டவர் கண் கலங்க மகனை அணைத்து கொண்டார். மனம் அமைதி பெற கோயிலுக்கு சென்றவர்கள் மீண்டும் இறுக்கத்துடன் தான் திரும்பி வந்தனர்.

அங்கே பேசும்போது தோணாத விஷயங்கள் இப்போது வேறு விதமாய் அவனுக்கு தோற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அபியின் தொழில் மீதான நடவடிக்கை கண்டிப்பாக கல்லூரி முடிந்த ஒரு வருட மாணவிக்கு சாத்தியமாகாது. கண்டிப்பாக அவளின் தொழில் அறிவு வருடம் கடந்தே இருக்க வேண்டும். மேலும் தன் தந்தையின் உயிரை காப்பாற்றியது எப்போது என்றும் அவனுக்கு தெரியாது.

தன் அத்தை கூறிய அபி இவளல்ல. அவள் மிகவும் விளையாட்டு பெண், மனதில் உள்ளதை மட்டுமே செய்பவள். அனால் இங்கோ அவனுக்கு புரியாத புதிராய் மட்டுமே இருந்தாள். கண்டிப்பா அவள் வாயை திறந்து கூறினால் மட்டுமே பல விஷயங்கள் அவனுக்கு புரியும்.

காதல் வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள் ஏற்பட்டாலும் அவர்கள் மீதான பிடித்தம் அவர்களை சற்று இணைத்து வைத்துள்ளது. தங்களுக்கு தனிமை கிடைத்தால் மட்டுமே அவளை பற்றி முழுமையாக அறிய முடியும் என நினைத்தவன் செல்ல நினைத்தது மேகமலைக்கு தான். பெற்றோரிடமும் சொல்லிவிட்டு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு காரில் ஏறி அமர்ந்து விட்டனர்.

அதுவரை தைரியமாக இருந்தவள், அவனோடு முன் பக்கம் ஏறி அமர்ந்த நொடி மனதின் படபடப்பை உணர்ந்தாள். அதற்கேற்ப அவனும் இனி இரண்டு நாள் யாருமில்ல, தனிமையில் நீயும் நானும் மட்டுமே. எந்த தயக்கம் இல்லாமல் என்னோடு வாழ போற வாழ்க்கையை மட்டுமே யோசித்து வண்டில ஏறி உட்காரு. திருப்பி இன்னொரு தடவை டைம் எல்லாம் கேட்க கூடாது. சரியா என்றவன், ஏன்னா நான் எங்க அப்பா மாதிரி இருக்க மாட்டேன், பொண்ணுங்களோடு விளையாட ரொம்ப பிடிக்கும் . அதனால் எதையும் யோசிக்க எல்லாம் கூடாது சரியா என்றான்.

எதே, பொண்ணுங்களோடு விளையாட போறியா, எவ்வளவு தைரியம் இருந்த இதை என்கிட்டயே சொல்விங்க. கட்டுன பொண்டாட்டியை இன்னும் பார்க்கலயாம். இதுல இவரு வேற பொண்ணை பார்த்துட்டாலும் என கோபப்பட்டாள்.

நிறுத்துமா, ஏன் கோபப்படுறே, எங்க அப்பா என்கூட எல்லாம் விளையாடமாட்டாரு. ஆனால் நான் அப்படியில்லை, என் பொண்ணுங்களோடு விளையாடணும்னு சொன்னேன். இது ஒரு குத்தமா, ஏன்டா அபி இவ்ளோ டென்ஷன். கூல், கூல் என்றான் சிரித்துக்கொண்டே.

ஐயோ, இப்பவே ஆரம்பிச்சிட்டானே, இன்னும் என்ன எல்லாம் பண்ண போறானோ தெரியலையே என நினைத்து முடிப்பதற்குள் ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே , உன் மீது ஏக்கம் கொண்டு தூக்கமில்லை கண்ணே.., என பாட ஆரம்பித்து விட்டார் SPB . சட்டென திரும்பி அவனை தான் பார்த்தாள்.

நான் சும்மா தான் பாட்டு போட்டேன், அதுவா வந்தா நான் என்ன பண்ண….,,

நடத்துடா செல்லம் நீ, வசமா மாட்ட தானே போறே, அப்ப வச்சிக்குறேன் என மனதில் எண்ணி கொண்டு ம்ம்ம்., என்று மட்டும் முனகினாள். அதனை தொடர்ந்து

“காதல் கிளிகள்

ரெண்டு ஜாடை பேசக்கண்டு

ஏதேதோ எண்ணம் என்

நெஞ்சில் உதிக்கும்

நானும் நீயும்

சேர்ந்து ராகம் பாடும்போது

நீரோடை போல என்

நெஞ்சம் இனிக்கும்

இனிய பருவமுள்ள

இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம்

மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட

இளமையும் துடிக்குது

நாணம் அதை வந்து

இடையினில் தடுக்குது

ஏங்கித் தவிக்கையில்

நாணங்கள் எதற்கடி ஏக்கம்

தனிந்திட ஒரு முறை தழுவடி

காலம் வரும் வரை

பொறுத்திருந்தால் கன்னி

இவள் மலர்க்கரம் தழுவிடுமே…,”

என தங்கள் மனதை பிரதிபலிக்கும் பாடல்களை வழியெங்கும் கேட்டபடி, மௌனமே மொழியாய் கொண்டு இயற்கை அழகில் பூத்து குலுங்கும்

காட்சியை கண்டு ரசித்து கொண்டே தங்கள் உயிர் ஜனித்த இடத்திற்கு வந்தனர்.

💞💞💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!