Abinayangalin Vizhigalil 13
நயம் 13
மேகமலை நாலைந்து மலைச்சிகரங்களுக்கு நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. இங்கு பெரிய மரங்கள், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள், உயர்ந்த மலைகள், மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் ஆகும், அந்த அழகான மலை பகுதியில் மகாராசாமெட்டு என்னும் இடத்தில் தான் இவர்களின் வீடு உள்ளது. வீட்டின் வெளிப்புறம் ஒரு குடும்பத்தை மட்டும் வாடகைக்கு விட்டு அவர்கள் பராமரிப்பில் வீட்டினை ஒப்படைத்து உள்ளனர்.
வீட்டினை அடைந்தவுடன் ஒன்றும் சொல்லாமல் பேகினை எடுத்து கொண்டு கதவை திறக்க சென்று விட்டான். இவள் இறங்க காரின் கதவினை கூட திறக்காது சென்றதை பார்த்து ஏன்டா இப்படி இருக்கிற, பொண்ணை கையில் தூக்கிட்டு பாட்டு பாடி எப்படி எல்லாம் காதல் பண்றங்க , நமக்கு பாரு, கதவை கூட திறக்காம போறாரு என கத்த வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. பொறுமையாய் படியேறி கதவின் அருகே சென்றதுதான் அவள் அறிவாள், அடுத்த கணம் காற்றில் மிதந்தாள்.
நீ மனசுல நினைச்சதை நான் நேரிலே செய்றேன், அவ்வளவுதான், இனி நான் சொன்னபடி தான் கேட்கணும், இங்கே யாரும் இல்லை, வேலையாளையும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டேன், அதனால் பயப்படாம வா, என கையில் தூக்கியபடியே,
Advertisement
“யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதை தந்தால் நன்றி
பிடிவாதம்இன்றி
நீ தந்தால் நன்றி துளி துளிரே…………
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன் மறு உயிரே…………
மறுக்காதே நீ மறக்காதே நீ
எந்தன் அழகியே நீ நீ நீ நீ நீ நீ நீ …….
நின் நீ நின் நீ நின் நீ…,
பாடிக்கொண்டு அவளை மேலே தூக்கி கொண்டு சென்றவன் அவன் அறையின் வாசலுக்கு வந்ததும் கீழே விட்டு கண்களை மூடி அவளை அழைத்து சென்றான்.
இமை திறந்து பார்த்தவள் தன்னை மறந்து நின்றாள். ஏனெனில் அவன் கூட்டி வந்தது மொட்டைமாடியில் அவர்கள் விளையாடிய அதே ஊஞ்சல் இடத்திற்கு தான். அப்போது மேற் கூரை மட்டும் இருந்த இடத்திலே தற்போது அறையாய் மாற்றி இருந்தான். இப்போது சிறு ஊஞ்சல் இல்லை. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிலே ஊஞ்சலாக மாற்றி, இரும்பு கம்பிகள் கொண்டு பிணைக்கப்பட்ட இடத்திலே எல்லாம் வண்ண மலர்களாய் மாற்றி அமைத்து மிக மிக அழகாய் இருந்தது.
Advertisement
கிருஷ் , எவ்ளோ அழகா இருக்கு, இது எல்லாம் எப்போ பண்ண, யாரும் என்கிட்டே சொல்லவேயில்லையே, செம்மையா இருக்கு.
Advertisement
ம்ம்ம். உனக்கு தெரிய கூடாதுனு கோகுல் அண்ணா கிட்ட சொல்லி பண்ண வச்சேன். இனி இங்கேயே ஆடலாம், பாடலாம், படிக்கலாம், சாப்பிடலாம், தூங்கலாம், என்னலாம் பண்ண தோணுதோ அது எல்லாம் பண்ணலாம். நம்ம கல்யாணம் பண்ணி இங்கே தான் உன்னை கூட்டிட்டு வரணும்னு நினைச்சேன். பட் முடியல, நடுவுல என்னனென்னமோ நடந்து சொதப்பி விட்ருச்சு, இல்லைனா எப்போவே இங்கே வந்து இருப்போம். நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணியும் இருப்போம். லேட்டாகிரிச்சு , அதனால இப்போ தீயாய் வேலை செய்யணும் குமாரு .., என்றான் கண் சிமிட்டி.
அவன் சிமிட்டலை கண்டதும் வெட்கம் கொண்டாலும் கொஞ்சம் அசந்தா இப்பவே ஆரம்பிச்சிருவான், அதனால் பேசாம இருப்போம் என எண்ணியபடி, சரி கீழே போய் வீட்டை பார்க்கலாம், இங்கே வந்து எவ்ளோ வருசமாச்சு, ருக்மணி பாட்டி கூட இங்கே தான் இருக்காங்களாம் , வாங்க போய் பேசிட்டு வருவோம், சாப்பிட்டு அப்புறம் இங்கே வரலாம், என கூறியபடியே அறையை விட்டு ஓடி வந்து விட்டாள்.
அவர்களின் வருகைக்காக காத்திருந்த பாட்டியும் அவர்களை தேடி வந்து விட்டார். அவர்களின் சிறு வயதில் வீட்டு வேலை பார்த்தவர். கணேஷின் தந்தை காலத்தில் அநாதவராய் வந்தவரை திருமணம் செய்து கொடுத்து இன்று வரை பார்த்து கொள்கின்றார்கள் அபியின் வீட்டினர். அவருக்கு ஒரே பெண், கட்டி கொடுத்து வெளியூரில் வசிக்கின்றாள். கணவன் மனைவி மட்டும் வீட்டையும், தோட்டத்தையும் பார்த்து கொண்டு இங்கேயே வசிக்கின்றார்கள்.
Advertisement
எப்படி பாட்டி இருக்கீங்க, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க என்றபடி அவர்களின் கால்களை தொட்டு நமஸ்கரித்தனர், சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டும், வீட்டை சுற்றி பார்த்து , சாப்பிட்டு விட்டு ஹாலில் அமர்ந்தனர்.
மேடம் , உங்க லவர் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கிறீங்க , பேப்பர்ல தான் எழுதி வைப்பிங்களா, நேர்ல இருக்கேன் , ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா என மெதுவாய் ஆரம்பித்தான்.
இந்நேரம் ஊருக்கே தெரிஞ்சுருக்கும், நான் உங்களை லவ்
பண்ணறேன்னு , உங்களுக்கு இன்னும் தெரியாது, நம்புற மாதிரி பேசுங்க பாஸ், நீங்க லெட்டரை படிக்கணும்னு தானே பார்க்கிற மாதிரி வச்சேன். அப்போவே படிக்க ஆரம்பிச்சீங்கன்னு தானே கீழே போனேன். அப்புறம் என்ன திருப்பி கேள்வி.
அடிங்க, ஒரு வார்த்தை சொல்றியா, என்னை புடிச்சு தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு?
உங்க ஆபீஸ், வீடு எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலே இருந்து இவ்ளோ நாள் நான்தானே பார்த்துக்கிட்டேன். பிடிக்காம யாராவது இவ்ளோ பண்ணுவாங்களா, கொஞ்சம் உங்க கிட்னியை யூஸ் பண்ணுங்க ,அப்போ தான் புரியும் என்றாள் நக்கலாய்.
வாயாடி, என்னை ஆபீஸ்ல பார்த்த உடனே சொல்லி இருக்கலாமே , ஏன் ஒன்னும் சொல்லமா மறைச்ச, இவ்ளோ நாள் வேஸ்ட் பண்ணிட்டேன். நிஜமா உனக்கு எந்த வருத்தமும் இல்லையா, என்னை பார்க்காம என்றான்.
வருத்தம் இல்லாம இல்லை. அம்மா அடிக்கடி சொல்வாங்க. கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் இஷ்டப்பட்ட வாழனும். அப்போ தான் கஷ்டம் தெரியாது, இஷ்டம் மட்டும் தான் பெருசா தெரியும்னு. உங்களுக்காக கஷ்டப்பட்டு இவ்ளோ பண்ணேன். சில பேர் பக்கத்துல இருந்தாலும் மனசுல நெருக்கமா இருக்க மாட்டாங்க, ஆனால் நீங்க எவ்ளோ தொலைவில் இருந்தாலும் என்கூட தான் மனசிலே இருந்திங்க, உருவம் மட்டும் தான் தெரியாது, மத்தபடி உங்களை பத்தி எல்லாம் தெரியும். அப்புறம் என்ன ? என்றாள் சிரித்து கொண்டே.
ம்ம்ம்., நானும் படிச்சேன், மேடம் உருகி உருகி காதல் பண்ணுவாங்க , ஆனால் நேரிலே மட்டும் சொல்ல மாட்டாங்க. அப்புறம் ஏன் அன்னைக்கு டைம் கேட்டே.
உங்க தோழியா மட்டும் தெரிஞ்ச என்னை காதலியா நீங்க மட்டும் தெரிஞ்சிகிட்ட போதுமா, என் காதல் பத்தி உங்களுக்கும் தெரிய வேணாமா, அந்த நெருடல் மனதில் இருந்தது. அதுக்கு தான்.,
ஞான் இவிடே எந்து பறையும்?
எந்து பறையும்னு லந்து பண்ணாம என்னை கண்டு பறையும். மனசிலயோ?
இ பெண்குட்டி வல்லிய புத்திசாலின்னு ஞான் சோதிச்சு. பச்சே ஞான் கொறச்சு…. என அவன் முடிக்கும் முன்பே நீ இப்படியே வாயில்ல வடை சுடு. நான் போறேன் என்றபடி மாடி ஏற ஆரம்பித்தாள்.
ஏய், யாரை பார்த்து சொல்ற, நான் எவ்ளோ பெரிய பிசினஸ் மேன், எவ்ளோ வேகமா கல்யாணம் பண்ண அத்தனை வேலை பார்த்து இருக்கேன், என்னைப் பார்த்து இப்படி சொல்ற.
உன்னை பார்த்து தான் சொல்றேன், வாய் மட்டும் தான் பேசும், வேற ஒன்னும் பண்ண மாட்டாய் என கூறி முடிப்பதற்குள் அவள் இதழ்கள் அவனிதழ்களிடையே சிக்கி கொண்டது. அவர்களின் முதல் முத்த தீண்டல், திக்கி திணறி, மூச்சுக்கு தவித்து , முட்டி மோதி நீண்ட நேரத்திற்கு பின்னரே அவளை விடுவித்தான்.
இது தான் வாயிலே வடை சுடுறது, எப்படி இருக்கு, இனி எதாவது பேசு, அப்புறம் வாய் பேசாது, வாயாலேயே பேசுவேன் என்றான் கண் சிமிட்டி. நாணத்தில் அவள் முகம் காண மறுத்து அவன் மார்பில் தஞ்சமடைந்தாள் மங்கையவள்.
பேசி பேசியே, கலைத்து, கலைந்து, களைத்து போயினர். பிரிவின் துயர் அனைத்தும் அவர்களின் தீண்டலில் மோட்சம் பெற்று தணிந்தது. உயிரில் இணைந்த உறவுகள் உணர்வில் கலந்து, ஊணில் நிறைந்து மலர்ந்தது . அவர்களின் சிருங்கார நயனத்தில் காமனே நாணம் கொண்டான்.
ஓய்ந்து, சாய்ந்து, மலர்ந்து , மயங்கி, மயக்கி, மயக்கம் கொண்டு, நிலவு மகள் தன்னிடம் மறைய இவர்கள் உறக்கம் கொண்டனர். பிரிவென்பதே இல்லை என்ற நோக்கம் கொண்டனரோ அவன் மார்பில் மஞ்சம் கொண்டிருந்தாள்.
ஆதவன் சுட்டெரிக்கும் உச்சிப்பொழுதில் தான் மெல்ல துயில் களைந்தாள். அதுவும் விடாது ஒலிக்கும் வீட்டின்
அழைப்பொலியைக் கேட்டு, தூக்கத்தில் உருண்டவள் எழுந்து தன்னை பார்த்தே அதிர்ந்தாள். இதோடு எப்படி வெளி செல்வது என தன்னவனை எழுப்பி, கண்டு வர சொன்னாள்.
அவன் கண்டதோ வீட்டில் குடி இருக்கும் பாட்டி. அவர்கள் வராததை எண்ணி சாப்பாடு கொண்டு வந்ததை சொன்னார்கள். நேற்று இரவு உண்டவர்கள் மதியம் ஆகியும் எதுவும் சாப்பிட வரவில்லையே என தானே கொண்டுவந்ததை கூறினார்.
நன்றி சொல்லி வாங்கி கொண்டு உள் நுழைந்தான். அதற்குள் அவன் தலைவி குளிக்க ஓடி விட்டாள். இவனும் குளித்து முடித்தவுடன் சாப்பிட்டு விட்டு வெளியே சுற்றி பார்க்க கிளம்பினர்.
வெள்ளிமலையில் ட்ரெக்கிங் போகணும்னு தான் பிளான் பண்ணேன். ஆனால் நீ ரொம்ப டயர்டா தெரிகிற. நாளைக்கு காலையில சீக்கிரம் எந்திரிச்சி அருவிக்கு போவோம். மதியம் வெள்ளிமலை போவோம், அங்க சூடா மீன்களை பொறிச்சி கொடுப்பாங்க, சாப்பிட்டுட்டு ட்ரெக்கிங் போவோம், இதான் பிளான் பண்ணி இருக்கேன். பாப்போம். அதனால் இன்னைக்கு வியூ பாயிண்ட் போவோம். அங்க ரொம்ப அமைதியா, இயற்கையை ரசிச்சுட்டே போகலாம். மேரேஜ் அப்புறம் எந்த போட்டோவும் எடுக்கல. அங்க போய் நிறைய எடுத்து நம்ம ஆல்பத்துல சேர்க்க சொல்லிருவோம் என்றான் .
முதலில் வந்த இடம் அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள வியூபாயிண்ட். அங்கே இருந்து பார்த்தால் மேகமலைத் தொடர், வைகை டாம், வருசநாடு மலைன்னு கண்ணுக்கு குளிர்ச்சியா ரசிக்கலாம். மலைக்கு நடுவே சூரியன் உள்ளே இறங்க. நிலா மேலே வர பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும். சின்னவயசில் சுத்தினோம், இப்போ லவ்வர்ஸா சுத்த போறோம். என்றபடியே மலைமீது ஏற ஆரம்பித்தனர். அபி சார்ட் குர்தா, ஜீன்ஸ் அணிந்து இருந்ததால் அவளும் மேகமாகவே நடந்து வந்தாள்.
அபி எனக்கு ஒரு டவுட்டு இருக்கு, கேக்கவா ?
இதென்ன புதுசா பெர்மிஷன் எல்லாம் கேக்குறீங்க. சொல்லுங்க.
அன்னைக்கு கோவில்ல இருந்து திரும்பி வரும்போது காஞ்சனா சித்தியிட்ட அப்பா திட்டி பேசுனாங்க இல்ல. அப்போ என் உயிரை காப்பாத்துனான்னு சொன்னாரு. அது எப்போ? எங்கே நடந்தது? கொஞ்சம் சொல்றியா?.
ம்ம்..,நான் காலேஜ் முதல் வருடம் முடித்த சமயம். மாமா வந்துருந்தாங்க. அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பிசியா வேலை இருந்தது. பில்டிங் ஒன்னு பினிஷிங் ஸ்டேஜ்ல இருந்ததால அவங்களால வீட்டுக்கு வர முடியவில்லை.
அப்பதான் உங்களை பத்தி என்கிட்டே முதன் முதலா சொல்ல ஆரம்பிச்சார். நீங்க வீட்டுல இருக்காம, ஹாஸ்டல் போய் ஸ்டே பண்ணி படிக்குறீங்க. கேட்டா வீட்ல யாரும் இல்லாமல் நான் மட்டும் இங்கே இருந்து என்ன பண்ண போறேன்னு சொன்னீங்கன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். நான் இவனுக்காக ஓடி ஓடி சம்பாதிக்கிறேன் கொஞ்சம் என் கூட இருந்து அப்பப்ப ஆஃபிஸ் வேலை பார்க்கலாமே, படிப்புதான் முக்கியம்னு சொல்றான்.
நீயும் தானேம்மா படிக்குற. உங்க அப்பாவுக்கு நீ ஹெல்ப் பண்ணலியா, எனக்கும் ஒரு பொண்ணு இருந்திருந்தா, என் கஷ்டம் புரிஞ்சி இருக்கும் போல. ஒத்த பையனை பக்கத்துல வச்சிப் பார்க்க கூட முடியலை. நானும் தப்பு பண்ணிட்டேன். பிசினெஸ்ன்னு நாங்க ரெண்டு பேரும் அலைஞ்சோம். போன்ல மட்டுமே தான் பேச முடிஞ்சது.
நாங்க வரும்போது அவன் தூங்கி இருப்பான். நாங்க எந்திரிக்கும் போது அவன் கிளம்பி நிற்பான். என்ன வாழ்க்கை வாழறோம்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசினார், கொஞ்ச நேரத்தில ரொம்ப வியர்க்க ஆரம்பிச்சி காரை வேகமாக நிறுத்தினார். அப்படியே மயங்கி விழுந்துட்டார்.
