Skip to content
Post Views: 2,591
நயம் – 3 
நேற்று அவள் பேசியதை அடுத்து அவன் வாயினை திறந்து எதுவும் பேசவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தான். அவளை பார்க்க கூட இல்லை.
அன்று கொள்முதல் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்ததால் அவளும் அவனை கண்டு கொள்ளவில்லை.
வீட்டிற்கு வரும் போதே இன்று அம்மாவிடம் மிளகாய் பஜ்ஜி செய்ய சொல்ல வேண்டும் என்ற நினைப்புடன் நுழைந்தாள். வாசல் கேட்யை திறக்கும் முன்பே அம்மா என்ற கத்தல் கேட்டு விடும். வரும் போதே சாப்பிட என்ன இருக்கு என கேட்டு கொண்டே நுழைவது தான் அவள் வாடிக்கை. நேற்று தான் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தாள்.
Advertisement
அம்மா இன்னிக்கு மதியம் கொடுத்த லஞ்ச் செம்மயா இருந்துச்சி. ஒரு பிடி புடிச்சேன். அதே மாதிரி இப்பவும் ஒரு வாழைக்காய் இல்லை மிளகாய் பஜ்ஜி போட்டு சுட சுட ரெடி பண்ணி வைப்பியாம். நான் வந்து நல்ல சாப்பிடுவேனாம். ஓகே என்றபடி ரூமிற்குள் சென்று விட்டாள்.
அம்மா பவி போன் செய்றா. நான் பேசிட்டு சாப்பிட வர்றேன். நீங்க சாப்பிட்டு முடிங்க.
என்னக்கா சொல்லு.
Advertisement
பசங்களுக்கு டிரஸ் வாங்கின சரி. அதை ஏன் ஆன்லைன் டெலிவரி மாதிரி வீட்டுக்கு அனுப்பி விட்டு இருக்க. ஏன் கையில் கொடுக்க கூட முடியாம மேடம் ரொம்ப பிசியா.
Advertisement
அக்கா நான் வாங்கினேன். ஆனால் பில் கட்ட வரதுக்குள்ள ஒரு லூசு பண்ண வேலையில் வாங்கவே மறந்துட்டு வந்துட்டேன். அப்பறம் எப்படி உனக்கு வந்துருக்கும்.
என்னடி ஆச்சி? யாரு அந்த லூசு?
கடையில் நடந்த கதையை சொன்னதுடன், கோயிலில் நடந்தது முதல் அனைத்தையும் கூறி முடித்தாள்.
Advertisement
ஊரெல்லாம் நீ வம்பு இழுப்ப. உன்னை வம்பிலுக்க ஒரு ஆளா? என கூறி சிரித்தாள்.
நானே இவன் என்ன பண்ண போறான்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன். நீ வேற ஏன் அக்கா? ஓர் பொண்ணு வாய் திறந்து கல்யாணம் பண்ண போறதை பத்தி சொல்றேன் , அப்பவும் ஒன்னும் புரிய மாட்டேங்குதே, இவன் தான் கிருஷ்ணானு எனக்கு தெரியாதா? அப்பவும் எதுவும் சொல்லாம முறைக்கின்றான் .
நேத்து கோயில்ல பார்த்தப்போ தெரியலை. ஆனால் ஆபீஸ்ல வந்து நின்னதும் புரிஞ்சு போச்சி. சரி நம்மளும் கொஞ்சம் விளையாடி பாக்கலாம்னு லந்து பண்ணேன். ஆள் இன்னைக்கு ஏதும் பேசலை. இவனை கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறேனோ ? இன்னும் அம்மாட்ட எதுவும் சொல்லல, சொன்னா உடனே மருமகனுக்கு நியூஸ் பறந்துரும், அதுனால் நீயும் எனக்கு தெரியாத மாதிரியே சொல்லு. என்ன பண்ணுவாங்கனு பார்க்கலாம். இத்தனை வருஷம் விட்டுட்டு போக தெரிஞ்சது, கொஞ்ச நாள் அனுபவிக்கட்டும்.
சரிடா, நான் எதுவும் சொல்லல . நீ டென்ஷன் ஆகாத. ஒகேவா. இப்போ போய் சாப்பிட்டு ஒழுங்கா படு என அறிவுரை கூறி விட்டு போனை வைத்தாள்.
அக்காவிடம் பேசிய பின் சற்று முகம் மலர வந்த மகளை கண்டதும் பிரியாவும் ப்ரோப்லேம் சரி ஆகிருச்சு போல என எண்ணி கொண்டாள். வேறொன்றும் கேட்க வில்லை.
அம்மா இன்னிக்கு எல்லா பிரண்ட்ஸ்ம் சேர்ந்து தெப்பக்குளம் போறாங்க. நானும் போகவா, ரொம்ப நாளாச்சு அவங்கள எல்லாம் பார்த்து என தாயிடம் கேட்டவள் அவரின் அனுமதியோடு வெளியே வந்து விட்டாள்.
தெரு முனை கூட தாண்டவில்லை. அவளின் சீனியர் வருண் நின்று இருந்தான். அவளை பார்த்ததும் வேகமாக அவளை நோக்கி வந்ததால் இவளும் பின் தங்கினாள்.
என்ன அபி! இப்போ எல்லாம் வெளியே ரொம்ப பார்க்க முடியல. வேலைக்கு போய்ட்டு வர நேரம் சரியா இருக்கா என்றான் வருண்.
வேறு வழியின்றி சிறு புன்னகையுடன் தலை அசைத்தவளை கண்டு நானும் வருஷ கணக்கா வெயிட் பண்றேன். ஒன்னும் சொல்ல மாட்டேங்கற. எப்போ கல்யாணம் பண்ணலாம்?
இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் என் பதில் ஒண்ணுதான். அது எப்பவும் மாறாது.
பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா? உன் ஆளை கண்ணுல காட்ட மாட்ட. இல்லாத ஆள் எப்படி வந்து உன்னை கல்யாணம் பண்ணுவான். என்னை ரொம்ப கோபபடுத்தாதே. இன்னும் ஒரு வாரம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள உன் மனசை மாத்திட்டு என் கூட வர்ற. இல்லைனா தட்டி தூக்கிட்டி போய் தாலியை கட்டிருவேன். என் அண்ணன் இந்த ஏரியா ரவுடி தெரியும் தானே. பாத்து நடந்துக்கோ என கோபமாக கத்தி விட்டு மூச்சு வாங்க நின்றான்.
இவளோ மிகவும் அசால்ட்டா இங்க பாருங்க வருண். நீங்க நான் பிளஸ் டு படிக்கும் போது இருந்து என் பின்னால சுத்தி வர்றிங்க. எனக்குள்ள உள்ள காதலை உணர வச்ச ஒரே விசயத்துக்காக தான் உங்ககிட்ட பொறுமையா பதில் பேசுறேன்.
உங்க அண்ணன் ரவுடியா இருந்தா எனக்கு என்ன? எனக்கு எந்த பயமும் இல்லை. என் ஆளு என்னை தேடி வந்தாச்சு. நம்பலைன்னா இன்னும் கொஞ்ச நாள்ல என் கல்யாணம் நடக்க போகுது.
வந்து மொய் கூட எழுத வேணாம். நல்லா சாப்பிட்டு எங்களை வாழ்த்திட்டு போங்க. இப்ப வழிய விடுங்க. நேரமாச்சு. நான் போகணும் என கூறிவிட்டு பறந்து விட்டாள்.
தெப்பக்குளம் சென்றவள் அவனை மறந்து விட்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாள். அங்கு வந்திருந்த தோழிகள் சிலருக்கு திருமணம் கூட முடிந்து இருந்தது. அடுத்த வாரம் இன்னொரு தோழியின் திருமணம் நடக்க இருப்பதால் தான் இன்று அவர்கள் ஒன்று சேர்ந்து அங்கே வந்தது.
என்னடி நீ மட்டும் வந்து இருக்க. புது மாப்பிள எங்கே ஆளை காணோம்? என்றால் ஒருத்தி.
உன்னை பார்த்தா இவளை விட்டு போய்விடுவார்னு கூட்டிட்டு வரலையாம். கல்யாண மேடையில் தான் கண்ணில் காட்டுவாளாம் என்றால் மற்றொருத்தி.
இப்படியே ஜாலியா பேசி பொழுதை கழித்தவர்கள் அப்படியே சிவன் கோயிலுக்கும் சென்று விட்டு நேரம் ஆனதும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
இரவில் படுக்கைக்கு வந்தவள் நீண்ட நாட்களுக்கு பின் ஓவியம் வரைய ஆரம்பித்தாள். விதவிதமான கிருஷ்ணனின் உருவங்கள் அவள் கைவண்ணத்தில் அறையில் ஒளிவீசும்.
சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் பல பரிசுகளை பெற்று உள்ளாள். ஒருவரின் உருவத்தை கூட அழகாக சிறிதும் மாறாமல் தீட்டி விடுவாள். ஆயகலைகள் அனைத்தும் கற்க முடியாது. சிறிது கற்றாலும் அதில் திறன்பட செய்ய வேண்டும் என்பது அவளின் எண்ணம்.
தஞ்சாவூர் பெயின்டிங் இவள் தூரிகையில் அழகிய ராதா கிருஷ்ணன் வடிவம் பெற ஆரம்பித்தது. ஒரு படத்தை வரைந்து அதன் வண்ணம் ஒவ்வொன்றும் தன் எண்ணம் போல் தீட்ட ஆரம்பித்தாள். நடு இரவில் தான் அதனை முடித்தாள். குழம்பிய மனம் மிக அமைதியாகி நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்.
காலை வேளை அழகாய் புலர்ந்தது. அக்கா பேசியதிலும், ஓவியம் வரைந்ததிலும் முகம் நிலவாய் மின்ன இறங்கி வரும் மகளை தான் கண்டார் பிரியா.
சாப்பிட அமர்ந்தவள் முன் இட்லிகளை எடுத்து வைத்து கொண்டே நேற்று கிருஷ்ணா பேசினான் அபி. அத்தை மாமா இந்த வாரம் வருவார்களாம். வந்த உடனே அவனுக்கு கல்யாணம் பண்ணி முடிக்கணும்னு சொல்லி இருக்காங்களாம் என்றப்படி மகள் முகத்தை தான் பார்த்தார்.
தாய் அறியா சூல் உண்டா. மகள் மனதில் கிருஷ்ணன் உள்ளான் என்பதை அறிந்தாலும் அவள் வாய்மொழி வாயிலாக அறிய வேண்டும் அல்லவா.
நான் என்னமா சொல்ல போறேன். உங்க முடிவு தான் என் முடிவும். மேரேஜ் எப்பன்னு சொன்னா வேலையே ரிசைன் பண்ணனும் இல்ல ஆபீஸ்ல முன்கூட்டியே சொல்லி லீவு வாங்க வேண்டும். டக்குனு லீவு போட்டு இப்போ வர முடியாது. இப்போதான் எங்க ஆபீஸ்க்கு பாஸ் வந்திருக்கிறார். அதனால் சீக்கிரம் சொல்ல வேண்டும்.
அவரும் சிரித்துக்கொண்டே தலையை தடவி விட்டு, உன் பாஸ் கிட்ட சொல்ல தானே இந்த வாரமே சொல்லிருவோம் என்றார்.
அப்பாடா சீக்கிரம் தேதி குறிச்சி, இந்த லூசுட்ட சொல்லணும். அப்போதான் எந்த கோணங்கி சேட்டையும் செய்ய மாட்டான்.
அவளை ஆபீஸ்க்கு அனுப்பி விட்டு கிருஷ்ணனுக்கு போன் செய்தார்.
கிருஷ்ணா என்ன பண்ணிட்டு இருக்க ? இப்போ பேசலாமா பிரீ தானே ?
சொல்லுங்க அத்தை.
ஊருல இருந்து வந்து ரெண்டு நாள் ஆகுது. இன்னும் அத்தைய பாக்க வர உனக்கு நேரம் கிடைக்கலையா ?
நேத்து புல்லா பிஸியா இருந்ததால வர முடியல அத்தை. இன்னிக்கி வரேன்.
என் பொண்ண என்னடா பண்ண ?
ஏன் உங்க லூசு உங்கட்ட எதும் சொல்லலையா ?
அவ என்கிட்டே எதும் சொல்லல பவிட்ட தான் பொலம்பிருக்கா.
உங்க பொண்ணுக்கு நான் யாருன்னு கூட தெரியல, இவளை என்ன பண்ணலாம்?
அவ உன்ன பத்தி பேசுனாலே அழுக ஆரம்பிச்சுருவானு உன்ன பத்தி எதுமே சொல்றது இல்ல. நேர்ல நீ வந்து நின்னாலும் அவளுக்கு தெரியாது. உன்கிட்ட தான் வேல பாக்கறோம்னு கூட தெரியாது. இனிமே தான் சொல்லணும்.
நீங்க இப்போ எதுவும் சொல்ல வேணாம். சண்டே அன்னிக்கி அவளுக்கு தெரியட்டும். அது வரைக்கும் சஸ்பென்ஸாவே இருக்கட்டும்.
ஏன் அவளை அங்க வம்பிழுத்துட்டே இருக்கணுமா ?
ஜாலியா இருக்கு அத்தை. அவ என்கிட்டயே க்ரிஷ தான் கல்யாணம் பண்ணிப்பேன் ங்கிறா. அதான் வச்சு ஓட்டிட்டிருக்கேன்.
அவளுக்கு தெரிஞ்சதுனா நீ சட்டினி தான் மகனே !
நான் வீட்டுக்கு வரும்போது ஆலம் எல்லாம் கரைச்சு வெடி வெடிச்சு உள்ள கூட்டிட்டு போனும். ஒகேயா ?
ஆலம் இப்போ பண்ண மாட்டேன். ஆனா கண்டிப்பா வெடி வெடிக்கும். நீதான் பாத்துக்கணும். ரெடியா இருந்துக்கோ.
என்ன ஆனாலும் பாத்துக்கலாம் எப்போவும் ரெடி தான் என சிரித்துக்கொண்டே போனை வைத்துவிட்டான்.
அன்றவன் காலையில் ஆபீஸ் செல்லவில்லை. மண்டபம் பார்க்க சென்று விட்டான். மண்டபம் வாடகை , டெகரேஷன் என பிஸியாக இருந்தான். மதியம் ஆபீஸ் சென்றவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
சிவா & கோ கம்பெனி பர்சேஸ் ஆர்டர் ரெடி பணியாச்சா. ஸ்டீல் உடன் கேட்டு உடனே போன் பண்ணிட்டாங்க. அதே மாதிரி பத்து நாளுக்கு தேவையான எல்லா பொருட்களும் நம்மகிட்ட ஸ்டாக் இருக்கனும். எந்த ஆர்டரும் டிலே ஆகா கூடாது. அடுத்து நான் இங்கே வர முடியாது. பிஸியா இருப்பேன். அதனால எல்லாமே ரெடி பண்ணுங்க. சீக்கிரம் முடிச்சுட்டு என டேபிள்ல எல்லா பேப்பரும் கொண்டு வந்து வைங்க என்று கூறியதை தலையாட்டி சென்றுவிட்டாள்.
கர்மசிரத்தையாய் ஒவ்வொரு பொருளின் இருப்பினை அறிந்து, யாரெல்லாம் அடுத்து கொள்முதல் செய்வார்கள் என அனைவரிடமும் போன் செய்து கேட்டு, PO ரெடி பண்ணி அவள் முடிக்கும் போதே மணி ஆறு ஆகிவிட்டது. இனி இவன்கிட்ட போய் நின்னு இதெல்லாம் கையெழுத்து வேற வாங்கி வைக்கணுமே . இன்னிக்கு லேட்டாதான் வீட்டுக்கு போவோம் போல என பதறி எழுந்து அவனிடம் சென்று நின்றாள்.
எதுவும் பேசாமல் அவள் கொடுத்த ஒவ்வொரு ஆர்டரையும் ஊன்றி கவனித்து சரிபார்க்க ஆரம்பித்தவன் முடிக்கும்போது ஒருமணி நேரம் கடந்துவிட்டது. அதுவரை வேலை விஷயம் தவிர்த்து அவன் பார்வை அவள் மேல் பதியவே இல்லை. அனைத்திலும் கையெழுத்திட்டவன், உங்களுக்கு வீட்டுக்கு போக நேரமாச்சே . உங்க அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்களா ? அவங்ககிட்ட சொல்ல போன் பேசுனீங்களா என பொறுப்பாய் கேட்டான்.
அச்சோ இன்னிக்கி என்ர பாஸ் நல்லபையனாய் இருக்கானே . பரவாயில்லை நம்மதான் தப்பா நினைத்து விட்டோம் போல எண்ணிக்கொண்டவள். அம்மாட்ட சொல்லிட்டு தான் வந்தேன். மெசேஜ் பண்ணிட்டேன் என்றாள் இவளும் வெள்ளை மனதுடன்.
அப்படியா . அப்ப இந்த பேப்பர்ல உள்ளதை மட்டும் படிச்சு காட்டிட்டு போங்க என்று ஒரு தாளினை நீட்டினான் அதில் பாரதியின் பாடலை ரீமிக்ஸ் செய்து எழுதி இருந்தான். படித்துப்பார்த்தவள் எதை கொண்டு அடிக்கலாம் எனத் தான் நினைத்தாள்.
அதில் இருந்தது ,
” சிந்து ரிவரின் மீமிசை மூன்னிலே
சேர நன்னாடு யங்கேர்ல்சுடனே
பியூட்டிபுல் தெலுங்கினில் சாங் இசைத்து
போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம்
கங்கை ரிவர்சைடின் கோதுமை புட்
காவிரி வெற்றிலைக்கு எஸ்சேன்ஜ் செய்வோம்
சிங்க மராட்டியர் தம் போயம் கொண்டு
சேரத்து தந்தங்கள் கிப்ட் பண்ணுவோம் “
பரவாயில்லை, நான் வீட்டுல போய் படிக்கிறேன் சார். ரொம்ப தேங்க்ஸ் என அந்த பேப்பரை உருவி கொண்டு தான் குண்டு விழிகளை உருட்டி கொண்டு சென்று விட்டாள்.
இம்மை அரசன் அடுத்து என்ன செய்ய போகிறானோ ? அடுத்த பதிவில் சந்திப்போம்.
உயிர்த்தோம் இணைந்தோம்
உணர்ந்தோம் பிரிந்தோம்
வளர்ந்தோம் சலித்தோம்
கடந்தோம் கண்டோம்
கொண்டோம் மலர்ந்தோம்
நினைந்தோம் மறப்போம்
உயிர்ப்போம் உணர்வோம்
இறப்போம் மீண்டும் இணைவோம் .



error: Content is protected !!