Skip to content
Post Views: 1,620

நயம் – 6 

வெளியில் சென்று இருந்த பவியும், கோகுலும் வந்தவுடன் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். மாப்பிள்ளை வீட்டில் எத்தனை மணிக்கு, எத்தனை பேர் வருகின்றார்கள், இரவு என்ன மெனு என்பது பற்றி எல்லாம் பேசி கொண்டே சாப்பிட்டு முடித்தனர். விஷ்ணு குட்டி செய்த சேட்டையை அனைவரிடமும் கூறி பிரியா சிரித்தார்.
மதியம் சாப்பிட்டு விட்டு குழந்தைகளை உறங்க வைத்தனர், ஏன் அபி இன்னும் மாப்பிளைட்ட நீ எதுவும் சொல்லலையே. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க. அவரு என்னமோ உனக்கு தெரியாத மாதிரி எல்லாம் செய்றார். உனக்கு தெரிஞ்சும் நீ ஒன்னும் சொல்லாம இருக்கு. என்ன தாண்டி நடக்குது இங்க, எனக்கு தான் பைத்தியம் பிடிக்குது என்றாள் பவி.
கல்யாணம் முடியட்டும் அப்ப எல்லாம் சொல்றேன், அதுவரைக்கும் எதுவும் சொல்லமாட்டேன். நீயும் பொறுமையா காத்திரு. அவரு எவ்ளோ ஸ்பீடா இருக்கார்னு பார்ப்போம்.
Advertisement
அதெல்லாம் உனக்கும் மேல தான் ஸ்பீடா இருக்கார். ரெண்டு நாள்ல எவ்ளோ வேகமா எல்லாம் நடக்குது தெரியுமா?.
பொறுத்திரு மகளே , யார் ஸ்பீட்னு உனக்கு புரியும் என மர்மமாய் சிரித்தாள்.
பின்பு சிறிது நேரம் உறங்கிவிட்டு நான்கு மணி போல் அவள் எழும்போது வீடே அமர்களமாய் உறவினர்கள் சூழ கும்மாளமாய் இருந்தது . தன்னை அலங்கரித்து, தாய் வைத்து சென்ற சேலையை கட்டினாள் . வேறெந்த நகைகளும் அணியாது எப்போதும் போலவே டி குடிக்க சென்றாள். அங்கே வந்த அன்னையோ இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் இங்கே வந்துவிடுவாங்க. அக்காட்ட நகை கொடுத்து இருக்கேன். அதை எல்லாம் போட்டுட்டு பூவும் வைத்துக்கொள். எத்தனை வருசமாச்சு அவங்களை எல்லாம் பார்த்து ம்ம்.. என்ன செய்வது ? கல்யாணம் முடிந்ததும் நீ இங்கே இருப்பியோ லண்டனில் இருப்பியோ யாருக்கு தெரியும் என அங்கலாய்த்து கொண்டே சென்றார்.
Advertisement
அங்கு வந்த தமக்கையோ அபிம்மா சீக்கிரம் நகை போடு.நான் போய் மற்ற வேலைகளை பார்க்கணும். இந்த பசங்கவேற படுத்துறாங்க. உங்க மாமா வேறு இன்னும் காணோம். அவங்க வீட்டிலிருந்து கிளம்பி வந்துட்டா அவ்வளவுதான். ஒண்ணுத்துக்கும் நேரமிருக்காது.
Advertisement
அக்கா. என்ன பாத்தா பாவமா இல்லையா ? மாப்பிள்ளையை இன்னும் கண்ணில் காட்டலை. அதுக்குள்ள நிச்சயதார்த்தமா . ஏன்கா இப்டி பண்றீங்க ?
மாப்பிளையோடு சேர்ந்து நீயும் ரொம்ப படுத்துறடி . அவரை உனக்கு தெரியாதா ? கொல்ல போறேன் பாரு என தலையில் கொட்டி விட்டு சென்று விட்டாள்.
இதோ பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து விட்டது . வந்தவர்களை வாசலுக்கு சென்றே வரவேற்றனர். அச்சுதன், பிரமிளா, அர்விந்த் , மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் என இருபது பேர் வரை வந்து இருந்தனர். பல வருடங்கள் சென்று அனைவரையும் காண்பதால் நல விசாரிப்புகள் அனைத்தும் முடிந்தவுடன் காபி, பலகாரம் கொடுத்தனர். பின் பெண்ணை கூட்டி வர பவி மாடிக்கு சென்றாள்.
Advertisement
குனிந்த தலை நிமிராது கோதையவள் வந்து நின்றாள். பார்த்து பழகிய பெண் என்றாலும் திருமணம் என வருகையில் நாணம் தன்னால் வருகின்றதே. அபி அவர்களின் முன் சென்று நின்றதும் தன் மாமாவை கண்டு சிரித்தாள். பின் வெட்கம் மேலிட விழியுயர்த்தி பார்த்தால் அரவிந்த் எப்போதும் போல கம்பீரமாய் அமர்ந்திருந்தவான் கண் சிமிட்டி சிரித்தான். சட்டென்று முகம் மாறினாள். கோபம் என அவன் நினைத்தான். ஆனால் அவளுக்கு தானே தெரியும் அவளின் மலர்ச்சியை பிறர் காண வண்ணம் மறைகின்றாள் என்பது. நாலு நாளாய் என்னை படுத்திவிட்டு , இப்ப வந்து சிரிச்சிட்டு உக்காந்திருப்பதை பாரேன் என மனதில் நினைத்தாள். அவள் கோபத்தை கண்டவுடன் புன்னகை முகமாய் அவளோடு பேச வேண்டும் என்றான். பெரியோர்கள் சரியென்றவுடன் தோட்டத்திற்கு செல்ல தொடங்கினர்.
தினமும் ஆபீஸ்லே சேர்ந்து தான் வேலை பார்க்கிறீர்கள் பின் என்ன இன்னும் பேச வேண்டுமா ? என நக்கல் செய்தான் கோகுல்.
நானே இதனை வருஷம் கழிச்சு இப்பதான் பாக்குறேன். எவ்ளோ பேசணும், அடிவாங்கணும் , மிதி வாங்கணும் இன்னும் என்னென்ன இருக்கோ. யாருக்கு தெரியும் ? என்றான் மெதுவாய் அவனிடம்.
அது உண்மை தான் , எவ்ளோ வாங்க போறியோ, போப்பா போய் நல்லா வாங்கிட்டு வா. என்றான் கோகுல். பவி திருமணத்திற்கு பின் இருவரும் மிகுந்த நட்பாய் பேச ஆரம்பித்து இருந்தனர்.
இருவரும் தோட்டத்திற்கு வந்தனர். அவளுக்கு மிகவும் பிடித்த வெள்ளை ரோஜாவின் அருகே சென்று நின்று கொண்டாள்.
ஒன்றும் கூறாமல் பேசாமலே இருந்ததிலே அவள் கோபத்தை உணர்ந்து ,
சாரி டா, சின்ன பிள்ளையாய் உன்னை பார்த்தது. இப்போது வளர்ந்து நிற்கும் போது, உன் மனத்திலும் நானிருக்கிறேனா என எப்படி எனக்கு தெரியும். அதான் ஜவுளி கடையில் கைப்பிடித்தேன். அடிக்க கை
ஓங்கினாய். அப்பதான் தெரியும். உனக்கு என்னை தெரியலைன்னு . அதனால்தான் ஆஃபீசிலேயும் விளையாட்டாய் கல்யாணம் பண்ண கேட்டேன். நீ க்ரிஷை தான் கட்டிப்பேன்னு சொன்ன, அதான் அரவிந்தா , க்ரிஷா என்று உன்னை குழப்பினேன். பரவாயில்லை. நீ அப்பா மேலே ரொம்பவும் மரியாதை வைத்துள்ளாய். நான் எவ்ளோ விளையாடினாலும் கண்டுக்காம இருந்த, உறுதியாய் நின்ன, அதே போல என்னையும் புரிந்து கொண்டு கல்யாணம் பண்ணுவியா?
எதுவும் பேசாமல் கைகளை கட்டிக்கொண்டு பார்த்து கொண்டே இருந்தாள். அவள் பேசவில்லை. ஆனால் விழிகளில் ஆயிரம் அபிநயங்கள்.
பார்த்த ஞாபகம் இல்லையோ, ஏன் பேசாம நிற்கிறாய் ? என் மேல் கோபமா? என்றான்.
உங்க மேல ஏன் கோபப்படணும், அப்படி எல்லாம் இல்லை, முதலில் சொல்லி இருக்கலாமே, அந்த வருத்தம் மட்டும்தான் .வேற எதுவும் இல்லை .
அப்போ உனக்கும் கல்யாணத்துக்கு சம்மதம் தானே ? ஒரு வாரத்துல கல்யாணம் உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை தானே. ஏன்னா நாங்களே முடிவெடுத்து பண்றோம். உன் மனசுல என்ன இருக்கும்னு தெரியணும் இல்ல. அதனால் தான் கேட்கிறேன்.
புடவை எல்லாம் எடுத்து வெச்சு தேதி குறிச்சாச்சு. இப்போ வந்து கேக்குறீங்க.
அப்படியில்லை. அத்தை என்னை உனக்கு பிடிக்கும்னு சொன்னதால் தான் வந்தேன். நீயும் அச்சு மாமா பையனை தான் கட்டிப்பேன்னு சொல்லிட்ட. இருந்தாலும் இப்பதான் மாமன் மகனா என்னை நேரில் பார்க்கிற. கொஞ்சம் நாள் கழித்து கல்யாணம் வைக்கலாம்னு கூட மனசுல நினைக்கலாம். அதான் கேக்கின்றேன். ஆனால் எனக்கு இன்னைக்கு கூட கல்யாணம்னு சொன்னாலும் ஓகே தான். எத்தனை வருஷமா வெயிட் பண்றேன் தெரியுமா.
அவன் சொன்னதைக்கேட்டு புன்முறுவலுடன் தலையை மட்டுமே அசைத்தாள்.
ஏய். நீயென்ன தலையாட்டி பொம்மையா . என் அபி குட்டி சின்ன வயசுல எப்படி வாயடிப்பா தெரியுமா ? நீ ஏன் இப்போ பேசவே மாட்டேங்குற ?
ஓ…உங்க அபி ஞாபகம் எல்லாம் இருக்க. அதான் என்னை தேடி வர இவ்வளவு நாளா ?
இனிமே உன்னை விட்டு பிரிய எல்லாம் முடியாது. கல்யாணம் பண்ணிட்டு கூடவே இருக்கணும். உன்னை தான் வீடியோ கால்ல தினமும் பார்க்கிறேனே. பேசுனா ஓடி வந்துருவேன்னு தெரியும். அதான் பேசலை.
நிஜமாலே என்னை நீ மறந்துட்டியா ? எதுவும் ஞாபமில்லையா? என்னைப்பார்த்து சொல்லு?
மறக்க எல்லாம் இல்ல. என் நேசத்தை சொன்னா உங்களுக்கு இப்ப புரியாது. கொஞ்ச நாளில் நீங்களே என்னை புரிஞ்சுப்பீங்க, இனி நான் பேச போறத கேட்க தானே போறீங்க. அப்போ உங்களுக்கு புரியும். என சிரித்துக்கொண்டே கூறினாள். பின் இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.
அவர்கள் உள் நுழையும் போதே திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்து இருந்தனர். அபி மேலே தன் அறைக்கு சென்று விட்டாள். இவன் ஹாலில் அவர்களோடு அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டான். அவன் வந்தவுடன் இன்விடேஷன் அடிச்சு கொடுக்க ஏதோ ஐடியா சொன்னியாம், என்னப்பா ? என்றார் அச்சுதன்.
ஆமாம்பா. நீங்க வீட்டுல போய் எல்லாரையும் எப்படி கூப்பிடுவீங்களோ அதே மாதிரி பேசி வீடியோ எடுத்துருவோம். முதல நீங்க பேசுற மாதிரி, அப்புறம் இன்விடேஷன் , கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் நலங்கு, அதுக்கு அப்புறம் நடக்க போற நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் சொல்லிட்டு , அடுத்து மண்டபத்திற்கு வர்ற கூகுள் ரூட் மேப் எல்லாமே எடிட் பண்ணி ஒரு வீடியோ கிளிப் மாதிரி கொண்டு வந்திருவோம்.
நெருங்குன சொந்தம் மட்டும் நேரில் போய் கூப்பிடுவோம். மத்தவங்க எல்லாருக்கும் வாட்ஸ் அப் , மெயில் அனுப்பிருவோம். அப்படியே யூடூபில் லைவ் டெலிகாஸ்ட் பண்ற மாதிரி சொல்லிருக்கேன். ரெண்டு நாள்ல நடக்கிற எந்த நிகழ்ச்சியையும் யாரும் மிஸ் பண்ண கூடாது. கொஞ்சம் டெக்னாலஜி யூஸ் பண்ணா தப்பில்லையே, இது சரியா வருமான்னு சொல்லுங்க என்றான் அர்விந்த்.
கரெக்டா வரும் . அடுத்து அவங்க வரும்போதே எல்லாரும் ரிசப்ஷன்ல நின்னு கூப்பிட்ருவோம். ஒன்னும் சொல்லாம இருக்க மாட்டாங்க, ஆனால் வேற வழி இல்லையே. பேசி புரிய வைப்போம் என்றார் பிரமிளா.
சரி. அடுத்து கல்யாண சேலை மத்தவங்களுக்கு எல்லாம் எங்கே வாங்கலாம் என்றார் பிரியா.
அத்தை என் தங்கச்சி கல்யாணத்திற்கு வாங்கின கடையில் ஆன்லைன் சேல்ஸ் இருக்கு. அந்த கடைக்கு போன் பண்ணி சொன்னா நிறைய டிசைன்ஸ் அனுப்பி விட்ருவாங்க. எல்லாரும் பாருங்க , புடிச்ச சேலையை மட்டும் வீட்டுல கொண்டு வருவாங்க. நேரில் பார்த்து புடிச்சா மட்டும் வாங்கலாம். எல்லாரும் ஒரே மாதிரி கட்டினா பார்க்க ரொம்ப அழகா இருக்கும். நீங்க எல்லாம் பேசி முடிவு பண்ணுங்க என்றான் கோகுல்.
அப்புறம் ப்ளவுஸ் எல்லாம் பத்து தூண்கிட்ட ஒரு கடை இருக்கு. ஆரி ஒர்க் பண்ணியே விக்கிறாங்க. நம்ம அளவு பிளவுஸ் கொடுத்தா அப்பயே புடிச்சும் கொடுத்துருவாங்க. அதனால அங்கேயே போயிருவோம் என்றாள் பவி.
இன்விடேஷன் மாடல் எல்லாம் என் பிரெண்டு கடையில் இருந்து அனுப்ப சொல்லிருக்கேன். எப்படி வேணுமுன்னு சொல்றோமோ அங்கேயே டைப் பண்ணி புரூப் பாத்து அவனே பிரிண்ட் பண்ணியும் கொடுத்துருவான். கிருஷ்ணா சொன்னா மாதிரி வீடியோ கிளிப் அவங்களையே ரெடிபண்ணி தர சொல்றேன் என்றார் கணேஷ்.
இன்னும் தாலி, மெட்டி, கொஞ்சம் நகையும் வாங்கணும். சண்டே எல்லாரும் சேர்ந்து போய் அது எல்லாம் வாங்கி விடுவோம்.ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வேலையை எடுத்து செஞ்சா வேகமா முடிச்சிடலாம். சேர்ந்து இழுத்தா தானே தேரை நகர்த்த முடியும். தனியா செஞ்சா ரொம்ப கஷ்டம் . நம்ம குடும்பத்துல உள்ள எல்லோரையும் சேர்த்து ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து விடுவோம். அவங்கவங்க பண்ணறது எல்லாம் அதிலே சொல்லிப்போம். அப்ப தானே கடைசி நேர டென்ஷன் இருக்காது என்றார் பிரியா.
இது எல்லாம் ஓகே. கேட்டரிங் அரேஞ்சுமென்ட் என்ன பண்ண போறோம். பெரிய வேலையே அதுதானே என்றார் அச்சுதன்.
எப்பவும் போல நம்ம ஹரி கேட்டரிங் சொல்லி விடுவோம். லிஸ்ட் ரெடி பண்ணி அதை விட கூட நூறு பேருக்கு எக்ஸ்ட்ரா சொல்லி விடுவோம். ஏன்னா ஆளுங்க விடுபட சான்ஸ் இருக்கு. திடிர்னு நிறைய பேருக்கு சமைக்க சொன்னா ரொம்ப கஷ்டம் . அவதி அவதியா போய் பந்தியிலே சாப்பிடணும். எல்லாருக்கும் சிரமம். அதே மாதிரி மீதம் இருக்கும் உணவை எப்பவும் போல மகாத்மா முதியோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவோம். என்ன வேணும்னு மெனு லிஸ்ட் ரெடி பண்ணுங்க என்றார் பிரியா.
இப்படியாக அனைத்து திருமண வேலைகளை பற்றியும் அங்கேயே உட்கார்ந்து பேசி விட்டனர். மீண்டும் அனைவரையும் அழைத்து கேட்டு கேட்டு செய்ய முடியாதே. காலில் சக்கரம் கட்டாத குறையாய் வேலை செய்தாலும் அள்ள அள்ள பெருகி கொண்டே போவது திருமணத்தில் தானே. சும்மாவா சொன்னார்கள் வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பார் என்று.
அபியின் வீட்டின் முனையில் பெரிய பேனர் வைத்து விட்டனர். யார் பார்த்தாலும் கல்யாண வீடு என்று தெரிய வேண்டுமே.
அதே போல் அந்த ஏரியா ரவுடி வைத்துள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனதில் தான் இருவரும் தொழில் நிமித்த வண்டிகளை வாங்குவது வழக்கம் . அவர்களை நேரில் சென்றே அழைத்தனர். வருண் தான் கல்யாண வேலைகள் முன்னின்று செய்யும் முக்கிய ஆள். ஓனர் அவன் அண்ணா தானே. அவனால் என்ன செய்ய முடியும். அண்ணன் பேச்சை மீற முடியாதே. கண்ணில் இரத்தம் வழிய காதலியின் திருமணத்திற்கு வேலை செய்தான். அந்தோ பரிதாபம். இதில் வேடிக்கை என்னவென்றால் பெற்றோர் பத்திரிக்கை வைக்க போகும் போது தான் நம்ம அபி அவனையும் திருமணத்திற்கு வர சொல்லி மெசேஜ் அனுப்பியது. கத்தி இல்லாமல் அவன் கண்ணை குத்திவிட்டாள்.
உறவுகளில் சில நாரதர்கள் இருக்க தானே செய்வார்கள். லண்டன் மாப்பிளை ஒத்தை பையன் என்றதும் வளைத்து விட்டாங்க. அதான் வேகமா கல்யாணம் பண்ணி முந்தானையில் முடிக்க பாக்குறாங்க என்றும், என்ன சூடு தண்ணீரை காலில் கட்டுன மாதிரி இவ்ளோ சீக்கிரம் கல்யாணம், நிறுத்தி நிதானமா பார்த்த ஆகாதா என்றும், காசிருந்தா கடையையே வாங்குவாங்க. கல்யாணமா பண்ண மாட்டாங்க என்றும், நூறு பவுன் தான் போடுறாங்களா , ஏன் கூட போடா மாட்டங்களோ, ஏன் மூத்தவளுக்கு பண்ணது தான் பண்ணனுமா, கூட போட்டா குறைஞ்சா போவாங்க என போனில் கலகத்தை ஆரம்பித்தனர்.
yar என்ன பேசுனாலும் கவலைப்படமாட்டோம், இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுட்டு அவர்களின் வேலையை மட்டும் பார்த்தனர்.
அடுத்து பதிவில் திருமண நிகழ்வுகளை பார்ப்போம். கல்யாணத்திற்கு எல்லோரும் வந்துருங்க.
****************
“அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா
அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா……..
வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்
கண்ணில் ஒரு
துளிநீர் மெல்லக் கழன்று
விழுந்தது ஏன்
விண்ணில் ஒரு
விண்மீன் சற்று விசும்பி
அழுதது தான்
உள்ளங்கை கடந்து
எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறைசெய்யவே காதல்
மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்…, “
error: Content is protected !!