Skip to content
Post Views: 2,231

மேலூர் வந்து சேர்ந்த வானதியும் வேலுவும் வேலுவின் வீட்டிற்கு தான் சென்றனர்… விடியற்காலையில் தான் வந்து சேர்ந்து இருந்தனர்…. அவர்கள் வரும் போதே அருள் இவர்களுக்கு அழைத்து துபாய் வந்து விட்டதாக கூறி விட்டான்…..வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிய வானதியை மிரட்டி தூங்க அனுப்பினாள் ரஞ்சி….
அவளும் சோர்வாக இருந்ததால் எதுவும் பேசாமல் தூங்க சென்றுவிட்டாள்… மதியம் வரை உறங்கியவள் வயிறு என்னையும் கவனி என சத்தம் எழுப்பியாதால் எழுந்தாள்….
Advertisement
குளித்துவிட்டு வெளியே வந்தவளை பார்த்த ரஞ்சி அவளை அழைத்து கொண்டு சாப்பிட வைத்தாள்…. அவளும் ரஞ்சியையும் அமர வைத்து விட்டு இருவருக்கும் உணவை போட்டு அவளையும் சாப்பிடுமாறு கண்ணை காட்டினாள்…. இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு பாத்திரத்தை எல்லாம் கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தனர்….
Advertisement
Advertisement
வானதி வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறினாள்… ரஞ்சி விடவில்லை…. ஆனால் நாளை பள்ளி செல்லவேண்டும்… அதுக்கு எல்லாம் பார்க்க வேண்டும் என கூறிவிட்டு தாயம்மாள் பாட்டி முன்பு நின்றாள்….
அவரும் அவளை பார்த்து விட்டு “என்ன ராசாத்தி” என்று கேட்டார்…. அவளும் அவரிடம் என்னுடன் “வீட்டிற்கு வரவில்லையா” என்று சைகையில் வினவினாள்…..
Advertisement
அவரும் “போவோம் டா ராசாத்தி” என்று கூறி விட்டு வேலுவின் பெற்றோர் மற்றும் ரஞ்சியிடம் கூறிவிட்டு வானதியுடன் கிளம்பினார்…. வானதி நேற்று வரும் போதே ஸ்கூட்டியில் வந்து இருந்தாள்… பாட்டி இரண்டு நாட்களாக அருளின் வீட்டில் தான் இருந்தார் அவன் ஊருக்கு கிளம்புவதால்….
அவரும் வானதியின் ஸ்கூட்டியில் மெதுவாக ஏறி அமர்ந்து கொண்டார்… ஐந்து நிமிட பயணத்தில் வானதியின் வீட்டை அடைந்தனர்…
பள்ளி கல்லூரி முடித்து தேவாவும் யுகேனும் வானதி வீட்டிற்கு வந்தனர்… அவர்களுக்குகாகவே சூடாக சமோசா செய்து வைத்து இருந்தாள்… முன்பே கூறி இருந்தனர் மாலை இங்கு தான் வருவோம் இனி என…. பாரதியும் இன்று இவர்களுடன் தான் பஸில் வந்தாள்…
அவளும் வீட்டிற்கு சென்று முகம் கழுவி விட்டு வானதி வீட்டுக்கு வந்து விட்டாள்…. மூவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்… அப்போது தேவாவை தனியாக அழைத்த வானதி ஒரு பாத்திரத்தை குடுத்து வீட்டிற்கு கொண்டு போய் உன் அம்மாவிடம் குடு… ஆனால் ரஞ்சி குடுத்து விட்டதாக கூறு… இரவு உணவும் நாங்கள் உண்டு விட்டு வரும் போது கொண்டு வருகிறோம் என்று கூறு என்று சைகையில் கூறினாள்….
அவனோ “என்னால முடியாது வானு ம்மா… அவங்க உங்களை என்ன என்ன சொல்லி இருக்காங்க… அவங்களுக்கு குடுத்து விடுறிங்க…. அவங்களே செஞ்சி சாப்பிடட்டும்” என்று முகத்தை திருப்பி கொண்டு சிறு பிள்ளையாக கூறினான்….
( தேவா சிறு வயதில் இருந்தே எப்போதும் வானதியை வானு ம்மா என்று தான் அழைப்பான் )
அவனின் தலையை செல்லமாக கலைத்து விட்டு போனை எடுத்து “தேவ் பாவம்ல அவங்க… யாருமே அவங்க கூட பேசுறது இல்ல… இத்தனை நாள் உங்க அண்ணா அந்த வீட்டுல இருந்தாரு…. நீங்க ரஞ்சி வீட்டுல இருந்தாலும்…. ஆனா இப்போ யாருமே இல்ல… ஒழுங்கா நீயும் யுகியும் நைட் வீட்டுக்கு போய் தூங்குங்க…. நான் தினமும் நைட் சாப்பாடு செஞ்சி தரேன் அவங்களுக்கு… நீயும் அவனும் இங்க சாப்பிட்டு போயிடுங்க… காலைல நீங்க இருந்தா உங்களுக்கு சாப்பாடு செஞ்சிட்டு அவங்க ரெண்டு வேளையும் சாப்பிடுவாங்க” என்று டைப் செய்து காட்டினாள்…
“அவங்க பாவமா… அப்டினா நீங்க அவங்க பண்ணதை மறந்து பேசுவீங்களா வானு ம்மா.. ” என்று கோவமாக கேட்டான்… அவன் கேட்டதுக்கு அமைதியாகவே நின்று இருந்தாள்…
அவள் அமைதியை பார்த்து “நீங்களும் பேச மாட்டீங்க… நான் மட்டும் பேசணுமா” என்று கேட்டான்…
அவளோ செல்லமாக அவனின் தலையில் கொட்டி விட்டு “நான் பேசுவேன்.. ஆனா அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்… ஒழுங்கா போய் குடுத்துட்டு வா” என்று டைப் செய்து காட்டி விட்டு பையை அவன் கையில் குடுத்துவிட்டு பாரதி யுகேனை நோக்கி சென்றாள் அவர்களை படிக்க வைப்பதற்காக…..
தேவாவும் வீட்டுக்கு சென்று பத்மினியிடம் “அக்கா குடுத்து விட்டுச்சு… நைட் சாப்பாடு அங்க தான்… நாங்க வரப்ப உனக்கு கொண்டு வரோம்” என்று தகவலாக கூறிவிட்டு அவனுக்கும் யுகேனுக்கும் மாற்று உடை எடுத்து சென்றான்….
இது எப்போதாவது நடக்கும் ஒன்று தான்… அதனால் பத்மினிக்கு எதுவும் தோணவில்லை…
இரவு தேவாவுக்கு பிடித்த சப்பாத்தி காய்கறி குருமா வைத்தாள்…. பாரதி இரவு உணவு உண்ண அவள் வீட்டுக்கு சென்றுவிட்டாள்…. இங்கே சாப்பிடு என்று கூறியும் “பாட்டி சமைச்சு வெச்சு இருக்கும் க்கா… நான் போய் சாப்பிட்டு பாத்திரம்ல கழுவனும்…” என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள்….
அவள் சென்றவுடன் தாயம்மாள் பாட்டி யுகேன் தேவா வானதி நால்வரும் அமர்ந்து சாப்பிட்டனர்…. சாப்பிட்டு முடித்தவுடன் பத்மினிக்கு சூடாக சப்பாத்தி போட்டு குடுத்து அனுப்பினாள்….
ஒருவாரம் சென்றது…. ஒருவாரமும் மாலை எதோ சாப்பிட ஸ்னாக்ஸ் மற்றும் இரவு உணவும் பத்மினிக்கு தேவா மூலம் வானதி குடுத்து விடுவாள்…… அன்று ஒரு நாள் ரஞ்சி வீட்டிற்கு வந்து இருந்தாள்….
அம்மாவும் மகளும் பேசிக் கொண்டு இருந்தனர்…. அப்போது பத்மினி ரஞ்சியிடம் “ரஞ்சி என்ன தினமும் எனக்கு நைட் சாப்பாடு குடுத்து விட்டுட்டு இருக்க… உங்க வீட்டுல அண்ணி எதுவும் சொல்லலையா….” என்று கேட்டார்
“நான் எங்க ம்மா குடுத்து விடுறேன்… எனக்கு இந்த ஒரு வாரமா காலேஜ் விட்டு வரவே ஏழு மணி ஆகுது…. உனக்கு எப்படி நான் சாப்பாடு குடுத்து விட போறேன்… அத்த தான் எனக்கே மூனு நேரமும் சமைக்குறாங்க….” என்று கூறினாள்…
“ஆனா ரஞ்சி தேவா நீ தரனு தான் எனக்கு சாப்பாடு தரான்…..” என்று குழம்பியபடி கூறினார்…
“அம்மா அவனுங்க தினமும் வானதி வீட்டுக்கு தான் காலேஜ் ஸ்கூல் முடிச்சிட்டு போறானுங்க…. அவ தான் குடுத்து விடுவா… ” என்று கூறினாள்…
அன்று அவளுக்கு கல்லூரி விடுமுறை…. எனவே மாலை நான்கு மணி மேல் இங்கு பிறந்த வீட்டுக்கு வந்தாள்… அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே தேவா பத்மினிக்கு ஸ்னாக்ஸ் கொண்டு வந்து தர வந்து இருந்தான்…
ரஞ்சி வீட்டில் இருப்பதை பார்த்து முழித்து நின்றான் தேவா… பின் எதுவும் கூறாமல் பையை வைத்துவிட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு ரஞ்சியை கையோடு இழுத்து கொண்டு ஓடிவிட்டான்….
“டேய் சின்ன பையன்னு நினைப்பா… கைய விடு டா… பக்கி பயலே…. நான் எங்க டா அம்மாவுக்கு சாப்பாடு தரேன்… வானதி தானு கொடுக்குறா… அவ தான் தரானு சொல்ல வேண்டியது தானே..” என்று முறைதாவாரு கேட்டாள்….
“அக்கா வானு ம்மா தான் அப்படி சொல்ல சொன்னாங்க… எனக்கு தெரியாது….” என்று கூறினான்…
“சரி அம்மாவுக்கு தெரியும்னு அவ கிட்ட சொல்லிட்டு இருக்காத… வா அத்தய கூட்டிட்டு அங்க போலாம்” என்று ரஞ்சியின் வீட்டுக்கு சென்று வேலுவின் அம்மாவை அழைத்து கொண்டு வானதியின் வீட்டுக்கு சென்றாள்…
இவர்கள் வெளியேறியதும் பத்மினி அப்படியே அமர்ந்து விட்டார்… வானதி மேல் அவருக்கு இன்னும் இன்னும் நன்மதிப்பு கூடி தான் போனது…. அவரை நினைத்து அவருக்கே கோவமாக இருந்தது….
சிறு வயது முதல் தான் பார்த்து வளர்ந்த தன் அண்ணன் மகளை என்ன என்ன பேசிவிட்டேன்… தன் அண்ணன் தன்னை எவ்வாறு வளர்த்தார்…. ஆனால் நான் கேட்க கூடாதாவர்கள் பேச்சை கேட்டு என்ன என்ன செய்துவிட்டேன் என்று கவலையில் அப்படியே அமர்ந்து விட்டார்…
பின் பக்கத்து வீட்டு பெண்மணி இவரிடம் பேச வந்தார்… அருள் தான் அவரிடம் சொல்லிவிட்டு சென்று இருந்தார்… அம்மா தனியாக இருப்பார்… நீங்கள் அடிக்கடி பார்த்து கொள்ளுங்க… இல்லை என்றால் மீண்டும் குழப்பி விட பார்ப்பார் நாயகி என்று கூறி இருந்தான்… எனவே அவரும் தினமும் இரண்டு மூன்று வந்து பார்த்துவிட்டு செல்வார்….
தற்போதும் அவரிடம் பேச தான் வந்து இருந்தார்…. பத்மினி தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்து “பத்து என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க… தலை வலிக்குதா” என்று அவரை கேட்டார்…
பத்மினி கண்ணீருடம் நிமிர்ந்து “அக்கா.. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் க்கா.. கேட்க கூடாதாவங்க பேச்சை கேட்டு தங்கமான புள்ளையை கஷ்ட படுத்தி இருக்கேன் க்கா” என்று கூறிவிட்டு வானதி சாப்பாடு குடுத்து அனுப்புவதை கூறினார்….
அந்த பெண்மணியோ “விடு பத்மினி… தப்பு பண்ணிட்ட… அதை மாத்த முடியாது… ஆனா இனிமே அதை பண்ணாத…. இனிமே அந்த புள்ளையை தங்கமா பாத்துக்கோ” என்று கூறினார்….
பத்மினியும் “ஆமா க்கா… இனிமே என் உசுரே போனாலும் அதை மட்டும் பண்ண மாட்டேன் க்கா..” என்று கண்ணீருடன் கூறினார்…
“சரி உன் மருமக உனக்காக குடுத்து விட்டு இருக்கா….அழுகாம சாப்பிடு.. நான் வீட்டுக்கு கிளம்புறேன்….” என்று கூறி தன் வீட்டுக்கு கிளம்பினார்…
error: Content is protected !!