Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 15 2

விவேகன், திருமண விழா முடித்து, நேராக தன் அலுவலகம் வந்துவிட்டான். போன் கால்கள் எதையும் எடுக்கவில்லை அவன். ஒரு கூண்டு புலியின் நிலையில் இப்போது விவேகன்.

எதிலோ தோற்க போகிற உணர்வு, மொத்தமாக வீழ்ந்தது போல் ஓர் எண்ணம், என்ன முயன்றும் அதனை தடுக்க முடியவில்லை.

எப்போதும் எதிலும் ஜெயித்தே பழகியவர்களுக்கு, தோல்வியை எதிர் கொள்ள பயமாக தானே இருக்கும்.

‘தனக்கு கீழே இருந்து வளர்ந்த வந்த ஒருவன் எப்படி என்னை நெருங்கலாம், நான் எப்படி இவ்வளவு இடம் கொடுத்தேன்’ என தன் மீதே விவேகனுக்கு கோவம் வந்தது.



Advertisement

அதை முயன்று தவிர்க்க பார்க்கிறான் முடியவில்லை. எங்கே தவறு நிகழ்ந்தது என யோசிக்கவும் முடியவில்லை. நான் எப்படி கவனிக்காமல் இருந்தேன்.’

நேற்று, சங்கரலிங்கம்  வந்து சொல்லும் வரை, தான் எப்படி கவனிக்காமல் இருந்தேன். இது தெரியாமல் நான் வேறு வைப்வை அழைத்து வந்திருக்கிறேன்.’ என அவன் சிந்தனையிலேயே நின்றான்.

கண்ணை மூடினால் அந்த மகி முகம் தான் வந்தது. தான் அமர்ந்திருந்த சேரில் நிமிர்ந்து சீலிங் பார்த்து அமர்ந்து கொண்டான். ஓய்ந்த தோற்றம். கண்ணில் ‘விட்டு விட்டேனே, ஒரு நல்ல வாய்ப்பை விட்டு விட்டேனே’ என்ற தவிப்பு.

Advertisement

திருமணத்தில் துர்காவை பார்த்து விட்டு வந்த விவேகனுக்கு, ஒரு சொல்ல முடியாத உணர்வு. அத்தோடு மகி அவனை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னானே, “இப்போது தான் பழகுகிறார்கள்” என

Advertisement

அது எந்த அர்த்தத்தில் சொன்னான், “இப்போது தான் வந்திருக்கிறாள், நான் சொன்ன வேலையை உனக்கு தெரியாமல் செய்தும் விட்டாள்” என்ற அர்த்தம் இருந்ததோ என யோசனை வேறு.

தன், தொழிலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், யாரை வேண்டுமானாலும் கெடுப்பேன் என்றிருப்பவன் விவேகன்.

மகி, இவ்வாறு பொறுமையாக பேசியே முடிக்க கூடிவன் என்பது அவனிற்கு ஆச்சிர்யமே. அதுவும் எந்த வித தயக்கமும் இல்லாமல் தன் மனைவியையே பேச செய்ததுதான் அவனின் முழு கொந்தளிப்புக்கு காரணமே.

Advertisement

இப்போது என்ன செய்வது என புரியவில்லை. ‘இது செண்டிமெண்ட் அட்டாக்’ அதனால் இதில் மகியின் கைதான் ஓங்கும் என புரிந்திருந்தான் விவேகன்.

அதனால் வந்த உணர்வு தான் ‘நான் தோற்க போகிறேன்’ என்ற எண்ணம். எனவே கதிரிடம்

“பெரிதாக அடிக்க வேண்டும், கொஞ்சம் பெரிதாகவே தான் செய்ய வேண்டும், கொஞ்ச நாள் அவன் எழ முடியாத அளவிற்கு அடிக்க வேண்டும் அப்போது தான் எனக்கு திருப்திண்ணா” என்றான் அமர்ந்த இடத்திலிருந்து மேலே பார்த்த வண்ணம். அந்த குரலில் அடக்கபட்ட கோவம்.

கதிர் “தம்பி பொறு..” என முடிக்க கூட இல்லை. தன் இருக்கையிலிருந்து எழுந்து பரபரப்பாக நடந்தான் இங்கும் அங்கும். இவர், உடனே வாயை மூடிக் கொண்டார்.

‘எப்படி’ என்றவனின் மனதில் வந்தது தான், ‘துர்காமகேஷ்வரன்’ என்ற பெயர். இதில் கருணை கிடையாது. நேரே செய்ய வேண்டும் எல்லோர்க்கும் தெரியும் படி செய்ய வேண்டும். இனி யாரும் என்னை எதிர்க்க நினைத்திருந்தால் கூட மறந்து விட வேண்டும் .

ஏதோ இத்தனை நாள் கைகட்டி வேடிக்கை பார்த்தாயிற்று, இனி அப்படி இல்லை. அவனின் பலத்தை தட்டி விடுகிறேன். மொத்தமாக தரை மட்டமாக தட்டி விடுகிறேன். என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டிருந்தான்.

இதன் பெயர் தான் ஆணவம். தான் மட்டும் தான் வளர வேண்டும், அடுத்தவன் வளர்ந்தால் இப்படி தான்…. என காட்டும் விதமான செயல்.

விவேகன் தான் இங்கேயே இல்லையே, அவன் தனி உலகத்தில், மகியை எப்படி அழிப்பது என்ற எண்ணத்தில் இருப்பதால் சுற்று புறம் அவன் உணரவில்லை அதனால் “கதிர்ண்ணா.” என்று கத்தினான்.

அவர், அருகில் இருப்பதை மறந்து. அவ்வளவு கோவம், முடித்தே விட வேண்டும் என்ற வெறி. இப்போவே, இப்போவே என்ற எண்ணம் தான் விவேகனிடம்.

“தம்பி..” என்றவரிடம் “அண்ணா, நம்ம ஆட்களை கூப்பிடுங்க, நம்ம கம்பனி லாரிய எடுக்க சொல்லுங்க. இன்றைக்கு இரவே முடியனும், முடிந்தால் இப்போதே முடியனும்” என்றான்.

இப்போது விவேகனின், விவேகம் தப்பி போயிற்று.

கதிர் “ஏன் தம்பி அவசரம், அதுவும் நம்ம லாரி வேற சொல்றீங்க. இதெல்லாம் சரியா வராது தம்பி, பொறுமையா செய்வோம்.

இப்போது  வைபவ், இங்கு தானே இருக்கு, நீங்க முன்ன சொன்னது போல, நாம FIR போட்டுக்கலாம். இதுல நீங்க கூட தலையிட வேண்டாம், நாம் வேறு யாரையாவது வைத்து செய்வோம்” என்று பொறுமையாகவே சொன்னார்.

“இல்ல ண்ணா, அது வேண்டாம். சரியாக வராது. மகி ரொம்ப பேசிட்டான். என் கிட்ட நின்னு பேச கூட அவனுக்கு தகுதி இல்லை. ஆனா, பேசிட்டான். இது சரியா வராது. நீங்க கூப்பிடிரீங்களா, இல்ல நானே பார்த்துக்கவா” என்றான் கோவத்தில் குரல் நடுங்கியது.

அதன் பின் கதிரின் வார்த்தைக்கு வேலையில்லை. விவேகன் மட்டுமே பேசினான். துர்கா, மகி இருவரும் கண்காணிக்கபட்டனர், வினோ, அகில் எங்கிருக்கிறார்கள் என தகவல் வந்தது.

துர்கா எந்த நேரம் வெளியே வந்தாலும், அவளை மொத்தமாக முடித்திட தான் உத்தரவு அந்த லாரிகாரர்களுக்கு.

நான் எங்கும் போக போவதில்லை என அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டான் விவேகன்.

@@@@@@@@@@@@@

வராதராஜன் “வாங்க மாப்பிள்ளை” என்றவர். “துர்கா” என்றார். மகியின் வரவை சொல்லும் விதமாக அழைத்தார்.

அப்போதே மணி ஒன்பதரை, துர்கா வந்து பார்த்தவள் “வாங்க , காபி தரவா” என்றாள்.

அவளின் தாயார் வந்து “சாப்பிடலாம் மாப்பிள்ளை” என்றார். மகி திரு திருவென விழித்தான்.

கீர்த்தி தான் “அம்மா, என்ன ஒவ்வருத்தர் ஒன்னு ஒன்னு சொல்றீங்க, சாப்பிடலாம் பாவா நாம” என்றான் சிரித்துக் கொண்டே.

கீர்த்திக்கு வாயெல்லாம் பல்லாக, ஒரே சிரிப்பு. எத்தனை நாள் கனவு இன்று நிறைவேற போகிறது என்ற எண்ணம், அதனை தந்தது போல.

கலகலப்பாக இருந்தான். அனைவரையும் வம்பிழுத்துக் கொண்டிருந்தான். தன் பாவாவையும் விட்டு வைக்கவில்லை. “என்ன பாவா அக்கா இப்போது தான் சிரிக்கிறா, நைட் நேரம்னு கூட தெரியல, காபி குடிக்கிறீங்களா ன்னு கேட்கறா? இன்னும் அவளிற்கு நேரமே போகல போல” என்றான்.

ஏற்கனவே இவனை கவனித்திருந்த மகி இப்போது “ஏன் உனக்கு வேலை சீக்கிரம் நடக்கனும்னு, சொல்லு அத விட்டுட்டு நீ ஏன் உன் அக்காவை சொல்ற” என்றான்.

கீர்த்தி வாய் திறந்து பார்த்திருந்தான். மகி தன் அக்காவை பற்றி பேசியதும். ஷன நேரத்திருக்கு பிறகு “என்ன கீர்த்தி “ என்றான் மகி.

அப்போது தான் கீர்த்தி “என்ன பாவா அங்க சொன்ன, இங்க கோவம் வருது” என்றான் சிரித்துக் கொண்டே.

“மாப்பிள்ளை, கிளம்பு கிளம்பு சாப்பிட்டு வேலைய பார்க்கலாம், உனக்கு தான் நிறைய வேலையிருக்குள்ள, அப்புறம் ஏன் என்னை போட்டு குடையற” என்று  சிரித்துக் கொண்டே எழுந்தே விட்டான் மகி.

துர்காவின் வீட்டினர் சற்றே ஆச்சர்யாமாக தான் மகியை பார்த்தனர்.

உண்டு முடித்து. மகி ஹாலில் அமர்ந்துகொள்ள, மற்ற வேலை முடித்து சந்தோஷியை தன் தம்பி அறைக்கு அனுப்பிவிட்டு தான் வெளியே வந்தாள் துர்கா.

மகி “போலாமா” என்க.

துர்காவின் தாய் “இருங்க “ என்று சொல்லி உப்பு மிளகாய் எடுத்து வந்து இருவரையும் நிற்க வைத்து சுற்றினார். அதன் பின்னே தான் இருவரையும் செல்ல அனுமதித்தார்.

இருவரும் கிளம்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!