Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 15 1

அத்தியாயம்                15

மகி, திருமணம் முடித்து, நேரே தங்கள் வீட்டிற்கு வந்தவன் விட்டான். மதியம் தூங்கி எழுந்து நேரே மகி ஓபன் டாக் சென்றுவிட்டு, அகிலிற்கு போன் செய்து வர சொல்லலாம் என நினைத்திருந்தான். அகில் கிளம்புவதாக போன் செய்தான். பின் கொஞ்ச நேரம் அங்கிருந்து விட்டு களைக்ஷன் டீட்டைல் பார்த்து விட்டு, ஸ்டாக் பார்த்து விட்டு அமர்ந்திருந்தான்.

வினோ, போன் செய்தான் “எங்கிருக்க மகி” என்றான்.



Advertisement

“இங்கு தான் ஓபன் ல “என்க.

“சரி இங்கு ஷோரூம் வரியா, இல்லை நாளைக்கா” என்றான் வினோ

“இல்ல வரேன், ஏன் ஏதும் முக்கியமா” என்றான்.

Advertisement

“இல்ல கேட்டேன், வைக்காவா” என போனை வைத்து விட்டான் வினோ.    மாலை ஒரு ஏழு மணி போல்  மகி அங்கு சென்றான்.

Advertisement

இங்கு, ஷோ ரூமிற்கு வந்த மகிக்கு ஏதோ யோசனை போல, அமைதியாக அமர்ந்திருந்தான். சற்று நேரம் கழித்தே, சர்வீஸ் செக்ஷனிலிருந்து வந்தான் வினோ.

மகியை பார்த்தவன், பிடித்துக் கொண்டான். “ஏன் மகி, துர்காவ எதுக்கு அந்த விவேகனிடம் அறிமுகம் செய்து வைத்தாய். என்ன மனசுல பெரிய காந்தினு நினைப்பா, அவனுக்கு தெரியாதா வரை தான் துர்காவிற்கு சேப்.

நீ வேற அடிக்கடி, துர்காவ பார்த்துக்கோ பார்த்துகோன்னு  என் கிட்ட சொல்லிட்டு, இப்போ நீயே ஏன்டா இப்படி பண்ற, அவங்களை, எங்கையும் வெளியே போக வேண்டான்னு சொல்லு,

Advertisement

அந்த விவேகன் சும்மா இருக்க மாட்டாண்டா” என்றான் ஆற்றாமையாய்.

மகிக்கு வினோ பேசுவதெல்லாம் காதிலேயே விழவில்லை போலும். அவனிற்கு, வந்ததிலிருந்து ஒரே யோசனை, ‘தான் எப்படி துர்காவிடம் விவாகரத்து கேட்டேன், அத்தோடு எப்படி காலையில் அவளிடம் என் உரிமையை எதிர்பார்த்தேன்’  என திரும்ப் திரும்ப ஒரே யோசனை.

எங்கு சென்றாலும் அவள் நினைவே வந்தது. காலையில் அவள் விழி சொன்ன மொழி, தனக்கு எப்படி புரிந்தது. இவள் எனக்கு வேண்டாம் என்றேன், என்னை விட்டு போ என்றேன். இப்போது அவள் கலங்கவும் தன்னால் பார்க்கவும் முடியாது நிற்கிறேன்.

இப்போது சரியாக இருக்கிறேனா, இல்லை அப்போது சரியாக இருந்தேனா…. என மகி தன் சிந்தனையில் இருக்க, அந்த நேரத்தில் தான் உள்ளே வந்த வினோ இவ்வாறு கடிய.

மகி இப்போது உறுமினான், ஏனென்றே தெரியவில்லை துர்காவை ஏன் அறிமுகம் செய்தாய் என கேட்டகவும் வந்தது கோவம். ஆனாலும் வினோவிடம் அதை மறைத்தான்.

மகி அசராமல் இருப்பதை பார்த்து “என்ன டா, நான் சொன்னது கேட்டுதா” என்றான், அவனின் முக அமைப்பை பார்த்து தாழ்ந்த குரலில்.

மகியிடமிருந்து இப்போது அடங்கிய கோவத்துடன் வார்த்தைகள் வந்தது “இப்படி தான் அப்பவும் சொன்னீங்க, அவன் என்ன வேணும்னாலும் செய்வான், நீ தனியா இருன்னு சொன்னிங்க.

அவனின் செயலுக்காக நான் ஏன், என் செயலை மாற்றிக்கணும். பார்ப்போம் டா, அவன் அப்படி என்ன தான் செய்யறானு பார்ப்போம் டா

இது என்னுடைய நிலம், இதில் நானும், அந்த குடும்பம் மட்டுமே சம்பந்த பட்டுள்ளோம், அவன், அந்த விவேகன் தான் மூன்றாம் மனிதன்…சோ, எனக்கு தான் அவன் பயப்படனும்.” என்றான் அழுத்தமாக.

பின்பு, தன்னுடைய இயல்பிற்கு வந்தவன், அதே அசால்டுடன் “நான் எதுக்கு அவனிற்கு பயப்படனும். அவ எதுக்கு வெளிய போகாம இருக்கணும், போகட்டும், எப்போதும் போல அவள் இருக்கட்டும்.

அவனிற்கும், எனக்கும் தான் பிரச்சை, இதில் என் மனைவியை அவன் என்ன செய்ய முடியும். அப்படி ஒன்று நடந்தால், அதன் பின்…..” என்றவன் முடிக்காமல் உறுமினான்.

மகியின் பேச்சு குறைவு தான் எப்போதும். இன்று தான் மிக அதிகமாக பேசுகிறானோ என்று தோன்றியது வினோவிற்கு.

மேலும், அவனிற்கு பயந்து, இந்த ஷோ ரூமை காத்துக் கொள்ளத்தான்,  தன் மனைவியை விவாகரத்து செய்ய நினைத்ததே, இப்போது என்னமோ சரியில்லை அவன், என்னமோ சரியே இல்லை அவன் என வினோவிற்கு திகிலாக இருந்தது. இந்த பொறுமை எதற்கோ என.

வினோ “மகி, இது விளையாட்டல்ல…. பார்த்து, எனக்கென்னமோ“ என்றான் முடிக்கவே விடவில்லை மகி “விடு டா பார்த்துக்கலாம், காபி எடுத்து வர சொல்லு, தலைய வலிக்குது” என்றான்.

வினோவிற்கு போன் வர, வெளியே சென்று பணியாளர்களிடம் காபி சொல்லிவிட்டு போன் எடுத்தான். “ம், ம் எப்போ…. “ என்றவன் அதன் பின் பேசவே இல்லை.

யோசனையுடனேயே உள்ளே வந்தான். “மகி அந்த வைபவ் இப்போ இங்கு தான் இருக்கானாம், நேற்று தான் வந்தானாம்” என்றான்.

மகி சற்றும் அசரவில்லை ”சரி, நாளைக்கு துர்கா கிட்ட சொல்லி அங்க பேச சொல்றேன். பார்க்கலாம் என்ன சொல்றாங்கன்னு” என்றான் அமர்த்தலாக.

“டேய், அந்த வைப்வே இங்க வந்திருக்கான் டா, தூக்கிடலாம். நாளைக்கு வேலைய முடிச்சிட்டு விட்டுடலாம் டா, ஒன்னும் பெருசா பிரச்சை வராது. ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றான் பரபரப்பாக வினோ.

மகி “இல்ல, நாம் சொன்னால், அவங்க அம்மாவே கூட்டிட்டு வருவாங்க டா, அதெல்லாம் பார்த்துக்கலாம். அதான் துர்கா பேசிட்டால்ல, விடு இன்னும் ரெண்டு நாள்ளா செய்திடுவோம். நானே கூலா இருக்கேன் உனக்கென்ன, ஏன் இவ்வளவு டெஷன்.“ என்று முறைத்தான், ஆம் கிட்ட தட்ட முறைத்துக் கொண்டிருந்தான்.

வினோ இன்னும் அவனை புதிதாக பார்த்தான், அவனிற்கு இப்போது எரிச்சல் பொங்கியது, “ச்சே…..” என ஓங்கி டேபிளில் குத்தினான்.

மகி “என்னடா பண்ற” என கத்தினான். மகிக்கு இப்போது துர்காவிடமிருந்து போன், அவனை முறைத்துக் கொண்டே போனை எடுத்தான் கொஞ்சம் கரகர குரலில் “ஹலோ “ என்றான்.

துர்கா, காலையில் நடந்த நிகழ்வைக் கொண்டே இந்த நாளை கடத்தி இருந்ததாள், அவனின் இந்த குரல் அவளிற்கு ஒரு சின்ன ஏமாற்றத்தை தந்தது.

ஆனாலும், தன்னை சரி செய்து “நான் இங்க, எங்க வீட்டில் இருக்கேன், அப்பா சாப்பிட வர சொன்னாங்க, தம்பியின் இரவு ஏற்பாடெல்லாம் செய்துட்டு, அப்படியே நாம நம்ம வீட்டுக்கு போய்டலாம்” என தன் தந்தை சொன்னதை கூறி, தன்னை வந்து அழைத்து போ, எனவும் கூறி முடித்து  விட்டாள் துர்கா.

மகி “ஏன், நீ கார் எடுத்து வரலையா, பசங்க, யார் இருக்கா உன் கூட” என்றான்.

இதற்கு என்ன பதில் சொல்வாள், இங்கு தன் அப்பாவின் கார் இருக்கிறது தான், தேவையானால் எடுத்துக் கொள்ளாலாம், ஏன் இவ்வளவு நாள் அப்படி தான் நடந்தது.

இன்று ஏதோ, துர்கா தன்னையும் மீறிய எதிர்பார்ப்புடன் மகியிடம் ‘வாருங்கள்’ என்றாள். ஆனால் மகி இப்படி கேட்கவும், திரும்பவும் அதே ஏமாற்றம்.

“இல்ல உங்களுக்கு வேலையிருந்தால், பரவால்ல. நான் போய்க்கிறேன். பசங்க ரெண்டு பேரும் அத்தையோட அங்க தான் இருக்காங்க, நான் அப்பா கூட வந்துக்கிறேன் “ என்றாள் ஒரு கோவம், ஒரு ஆற்றாமை,  இனிமேல் இப்படி தான், சரியே ஆகாது என்ற விரக்தி எல்லாம் அவள் குரலில்.

உடனே மகியின் குரல் தளர்ந்தது, காலையிலேயே அவளின் தவிப்பை புரிந்தவன், இப்போது குரல் வழி அவளின் நிலை உணர்ந்து “ஹேய், இல்ல நான் கார் எடுத்து வரல, அதான் பசங்க உன் கூட இருக்காங்களா கேட்டேன், நான் வண்டி தான் எடுத்து வந்தேன், என் கூட வருவீயா” என்றான் புதிதான ஒரு குரலில். இந்த விளக்கம் புதிது, குரல் புதிது. அவள் உணர்ந்ததே இல்லை, இப்படி  ஒரு மொழியை அவனிடமிருந்து.

இந்த வாழ்க்கை வாழ, வார்த்தைகள் எவ்வளவு முக்கியம்.

துர்காவின் கண்ணில் சிறு கண்ணீர் வந்தது, மகி கேட்ட அந்த வார்த்தையில் வந்தது. இவ்வளவு நேர விரக்தியில் இருந்த குரல் இப்போது வெட்கத்தை கொண்டது “ம்…” என்றாள்.

மகி “சரி, நான் அரைமணி நேரத்தில் அங்கு இருப்பேன் “ என்றான்.

எப்போதும் 8 மணிக்கே ஷோரூம் மூடப்படும், இன்றும் அப்படியே, வினோவிடம் “நீ கிளம்பு டா, நானும் கிளபறேன், நாளைக்கு சாமிய வர சொல்லணும். நீயே போன் செய்து சொல்லிடு” என்றான்.

வினோ “டேய், பார்த்து “ என்க. மகி “சரிரிரிய், நீ கிளம்பு” என கிட்ட தட்ட துரத்தினான்.

மகி ,எல்லாம் சரி பார்த்து, நைட் வாட்ச்மேன்னிடம் வந்து பேசியே சென்றான். நேரே துர்காவின் வீட்டிற்கு சென்றான்.

                     *************** ************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!