Skip to content
Post Views: 7,736
அத்தியாயம் 21
மையல் கூட்டும் அழகான மாலை வெயில், மகியின் அறையினுள் ஜன்னல் கண்ணாடியின் வழியே ஊடுருவி, அங்கு தன் போல் தலை வாரிக் கொண்டிருந்த துர்காவின் மூக்குத்தியில் பட்டு தெறித்து, அவளின் ஈஷ்வரின் கவனத்தை ஈர்த்தது.
அவள் அன்று மீட்டிங்கு எடுத்து செல்லவேண்டிய கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் இந்த, ஒளி சலனத்தில் தன் நிலை கலைந்தான்.
Advertisement
கண்ணாடி முன் நின்று தன்னிரு கைகளை தூக்கியபடி, ‘சரியாக பின்னுகிறேனா’ என பார்த்து கொண்டிருந்தாள் அவள். அப்போது, அரைகுறையாய் விலகிய நிலையில் முன்னழகு சற்று அதிகமாக அவனை கவர, இதுவரை கணவனாக இருந்தவன் கள்வனாக மாறினான்.
கண்ணில் ரசனையாக பார்த்திருந்தான். ‘என்னை யார் கேட்பது’ என அவனின் கண்களும் அவளை முழுதாக ரசிக்க தொடங்கின.
இத்தனை நாள் தோன்றாத கனவெல்லாம் இப்போது விழித்திருக்கும் போதே வந்தது. இதுவரையில் தன் மனையாளை, கடமை என கடந்தவனின் மனத்தில் இப்போது தீரா மோகம் வந்தது.
Advertisement
அவளின் தங்க நிறத்தில், அந்த மரகத பச்சை வண்ண புடவை, ஏதோ ‘அவளிற்கெனவே என்னை நெய்தனர்’ என்னுமாறு அவனுடன் மல்லுக்கு நின்றது.
Advertisement
அவளோ, தன் வேலை மும்முறத்தில் இருக்க, அவளின் உதட்டோரம் தெரிந்த நாக்கின் நுனி, ‘என்னை நீ பார்த்திருக்கியா’ என சீண்ட, மகியின் மனம், கார்காலத்தில், வேப்பமரத்தில் ஒற்றையாய் கூவும் குயிலின் நிலை.
“துக்காஅஅஆ” என சர்வேஷ் கத்த, அதில் தான் நிலைக்கு வந்தான் மகி. ஒருபாடு தன் முச்சை இழுத்து விட்டு சரி செய்து கொண்டான். ‘இரண்டு புள்ளைங்களுக்கு அப்பன் மாறி நடந்துக்கடா’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டே, தன் டி-ஷர்ட்டின் காலரை மேலே எடுத்து விட்டு நிமிர்ந்தான்.
“எங்க போற” என தன் அன்னையின் கால்களை கட்டிக் கொண்டு, அழகாக அண்ணார்ந்து பார்த்து சர்வா கேட்க.
Advertisement
துர்கா, தனது தூக்கியிருந்த கையை இறக்கி, பக்க வாட்டில் பின்னலை பின்னிய வண்ணம் “ஆபீஸ்க்குடா தங்கம், கொஞ்ச நேரத்தில் வந்துருவேன்.” என இவளும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க.
தன் மகனையே ஏக்கமாக பார்த்திருந்தான் மகி. “ப்பா, என்னம்மா ஒட்டிகிறான் அவ கிட்ட” என பொருமினான். இன்னும் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மகி தனது தொண்டையை சரி செய்தான், அப்பங்களின் முதல் எதிரி பசங்க தான் போல.
துர்கா “டைம்மாச்சா, தோ கிளம்பிட்டேன் பாவா” என சொல்லிக் கொண்டே மகனை கையில் ஏந்தியவள், மகி எழும் வண்ணம் தனது தோள் கொடுக்க. ”ம்கூம் “ என்றவன்.
“சர்வா, அப்பாட்ட வா “என அழைத்தவன், அவனை தன் முதுகில் சுமந்து கொண்டு தன் மனையாளின் தோள் பிடித்தது நடக்க. சர்வேஷ் தான் “ப்பா, இப்போ ஊஅ சரியா போச்சாப்பா” என கேட்டுக் கொண்டே வந்தான்.
ராஜேஷ் அங்கு ஹாலில் தயாராக அமர்ந்திருந்தான். இப்படி மகியை பார்த்தவன் “ஏன் அண்ணி, நான் இங்க தானே இருக்கேன், என்னை கூப்பிடளாம்ல்லா” என கடிந்து கொண்டே சர்வேஷை மகியிடமிருந்து வாங்க கை நீட்ட.
சர்வேஷ் வரமாட்டேன் என அழுகை, மகி தான் “விடு டா, அதான் வந்தாச்சே“ என சொல்லி சோபாவில் இறக்கி விட்டான். துர்கா, மகியையும் அமர வைக்க, “வேண்டாம்” என்றவன் ராஜேஷை பார்த்து “கிளம்புங்க நேரம்மாச்ச்சு” என்றான்.
மகி தனது வாக்கர் எடுத்து வந்தான் வாசல் வரை, அங்கு அழகான ரெட் கலர் அல்டோ நின்றிருந்தது. ராஜேஷ் சென்று காரை வெளியே எடுத்து நிறுத்த துர்கா கேள்வியாய் கணவனை பார்த்தாள்.
அது மகியின் செண்டிமெண்ட், எதற்கானாலும் முதலில் அதை எடுத்து தான் செல்வான். தன் அப்பா தனக்காக வங்கி கொடுத்தது, மற்றதெல்லாம் அவனே வாங்கிக் கொண்டது. அதனால், அந்த ரெட் அல்டோ மீது தனி மோகம் மகிக்கு.
அவனின் இடது கை பெருவிரல், தன் மனையாளின் கன்னம் வருடிய படியே அவளை ஆழமாக பார்த்து “சிலதை மாத்திக்க முடியலை“ என்றான். அதில் என்ன கண்டாளோ, “எதுவும் மாற வேண்டாம்” என்றாள் அவன் போல் அழுத்தமாக.
சர்வேஷ் அருகில் வருவதை உணர்ந்தவள், தன் கன்னம் வருடும் அவன் விரலை பற்றினாள் துர்கா, அந்த நொடியில் மகி, தனது கையினுள் கொண்டு வந்திருந்தான் அவள் விரல்களை.
இப்போது அந்த விரல்களை தனது கை கொண்டு வன்மையாய் ஒரு அழுத்தம் கொடுக்க. அப்படி ஒரு வலி, தன் கைகள் நொறுங்குவது போல் இருந்தது துர்காவிற்கு, ஆனால் இதயத்தில் ஜில் என ஒரு உணர்வு பரவியது.
இமைக்காமல் அவனையே பார்த்தாள் துர்கா, அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பார்வையும், செய்கையும், அவளுள் ஏதோ ஒன்றை தந்தது.
நம்பிக்கையை தந்ததா, நேசம் சொன்னதா, வென்று வா என்றதா, அவனை வசமிழக்க வைத்ததா, இல்லை இவளை வசமிழக்க வைத்தா அல்லது இவை எல்லாம் இல்லாமல் ‘நான் உன்னவன்’ என அவளுள் உணர வைத்ததா…… அவள் மட்டுமே சொல்ல கூடும்.
பின் கரகரப்பான குரலில் “பொறுமையா, ம்” என்றான், வேறு ஏதும் சொல்லாமல் தலையசைக்க, துர்கா ஒரு கலவையான மனநிலையில் கிளம்பினாள்.
அங்கு சங்கத்தில், இன்று நிறைய கூட்டம், மகி தனது போன் மூலம் அனைவரையும் கலந்துகொள்ள செய்திருந்தான். அந்த புகாருக்கு வலு சேர்க்க.
விவேகன் எப்போதும் போல் வந்தான். கூடவே வரும் கதிர் தான் இல்லை. ஆனால், அதற்கு பதில் விவேகனின் தந்தை மற்றும் அட்வகேட் வந்திருந்தனர். அவர்கள் பங்கு ஆட்களுடன்.
துர்காவை பார்த்ததும் விவேகனின் தந்தை “வாம்மா, அப்பா நல்லா இருக்காறா” என்றார் இயல்பாய். இப்படியாக கூட்டம் தொடங்கியது. பொதுவாக மாதாந்திர கூட்டத்திற்கு அத்தனை நபர்கள் வருவதில்லை. மகியின் அழைப்பை ஏற்றே வந்திருந்தனர்.
கூட்டத்தில் சல சலப்பு தொடங்கியது. விவேகன் ஏதும் பேசவில்லை. சொல்லித்தான் கூட்டி வந்தனர் அவனின் அட்வகேட்டும், தந்தையும் அதனால் இந்த அமைதி.
இந்த கூட்டம் தொடங்கிய உடன், விவேகன் “தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சொல்லி, அந்த கடிதத்தை கொடுத்து, செல்ல தான் வந்திருந்தனர். ஆம், விவேகனின் தந்தை அவனை பற்றி அறிந்ததில் இருந்து இந்த முடிவை தான் சொல்லி கூட்டி வந்தார்.
செய்த தவறை சரி செய்யவே நினைத்தார். விவேகனின் தந்தை.
தலைவர் எனற முறையில் இப்போது வரவேற்புரை நிகழ்த்த தொடங்கினான் விவேகன், இது வரை இருந்த கட்டுபாடுகள் அந்த கனத்தில் மறைந்தது அவனிடம்.
‘இப்போது வந்தவர்கள் எல்லாம், என்னை விளக்க முடியுமா’ என்ற வகையில் அந்த பேச்சு சென்றது, உடனே ராஜேஷ் தனது ஆட்களிடம் சொல்லி விவேகனை எதிர்த்து பேச வைத்தான்.
இந்த நிலையில் நேரடியாகவே மகியை குற்றம் கூறினான் விவேகன். இதை தானே எதிர்பார்த்தனர் நம்மாட்கள், அந்த நொடியிலேயே அவனது பேச்சை நிறுத்த சொல்லி, ‘புகாரை, துர்காவை வைத்தே வாசிக்க வைத்தனர். முறையான ஆதாரமாக சிசி கேமரா ரெகார்ட் கொடுக்கப்பட்டது.
போலிஸ் கம்பளைன்ட், விவேகனின் தந்தையை மனதில் கொண்டே கொடுக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது.
இப்படி செய்ததற்கு தண்டனையாக, இப்போதே தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும், ஐந்து வருடம் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்” என்று அந்த புகார் முடிவடைந்தது.
‘அமைதியாக முடித்துவிட்டு செல்லாம்’ என்று நினைத்த விவேகனின் தந்தைக்கு இப்போது கோவம் வந்தது. அட்வகேட்டிடம் சொல்லி “எல்லாம் முடித்து வாருங்கள் “ என சொல்லி கிளம்பிவிட்டார்.
விவேகன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். தனது விலகல் கடித்தத்தை கொடுத்தவன். அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
எல்லோரும் வெளியூரிலிருந்து வருவதால், இப்போதே அடுத்த தலைவர் யார் என கேள்வி எழுந்தது. இப்போது விவேகனின் ஆதரவாளர்கள் சிரித்துக் கொண்டே ‘அதென்ன படுத்திருக்கரவர போட்டுடலாம்’ என்றனர்.
துர்கா தான் “நாமக்கல் செந்தில் வேலு அவர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம்” என கூற, கொஞ்சம் அமைதி வந்தது. அவர்க்கே இந்த செய்தி புதிது. எனவே சந்தோஷமாக ‘நன்றி’ எனும் வண்ணம் கைகூப்ப, அரங்கமே சற்று நேரம் வேடிக்கை பார்த்த பின் தான், இயல்பிற்கு வந்தது.
error: Content is protected !!