Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 23

அத்தியாயம்                23

துர்காவிற்கு, மனது ஒரு பக்கம், ‘இனி அப்படி தான், நிற்க மாட்டான் உன்னிடம்’ என்றது. இன்னொரு புறம் ‘இது தான் எப்போதும், ஏதோ இரண்டு மாதம் கொஞ்சம் முடியவில்லை என்னை எதிர் பார்த்தான், இப்போது தான் சரியாகி விட்டதே’ எனவும் எண்ணம் வந்தது.

இந்த எண்ணத்துடனே எங்கே என தேடினாள், கீழே காணவில்லை எங்கும். ‘மாடிக்கு சென்றிருப்பானோ’ என தோன்ற மனதே இல்லாமல் மாடிக்கு சென்று பார்த்தாள், சத்தமே இல்லாமல் சென்று தான் பார்த்தாள். ஆம், மாடியில் தான் இருந்தான்.



Advertisement

கண் கலங்கியது, இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை அவள். ஓய்ந்து போனது மனது. ஒரு வீம்பு வந்தது அவளுள். உள்ளே சென்று பாலை கொடுத்து விட்டு வந்துவிடலாம் என தான் உள்ளே சென்றாள்.

ஓய்வாக அமர்ந்திருந்தான் மகி, ஒரு ஷார்ட்ஸ்ல், க்ரே கலர் ரவுண்டு நெக் டி-ஷர்ட்டில், ஓய்வாக அந்த அறையின் மூலையில் போட்டிருந்த சோபாவில் அமர்ந்து, டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

துர்காவும் அவனிடம் பால் கப்பை கொடுத்து விட்டு, கதவு நோக்கி செல்ல, அப்போது தான் உணர்ந்தான் மகி. அவள் இங்கே அமரவில்லை என

Advertisement

மகி “ஸ்ரீ “ என்றான், அவளை தடுக்கும் குரலில். அவளும் நின்றாள் “இங்க வா, ஏன் போற” என அவன் இயல்பாய் வினவ. அவளிற்கு தான் பேச முடியவில்லை.

Advertisement

மகி சொல்லாமல் வந்தது அவளிற்கு என்னோ போல் இருந்தது. அதனால் “இல்ல, சர்வா தனியா இருக்கான். நான் போறேன் “ என செல்லப்போக, மகி இப்போது எழுந்துவிட்டான்.

“நான் தான், பெரியம்மாவிடம் விட்டு தான் வந்தேன் “ என்றான் கோவமாய். மேலும், இத்தனை நாளில் அவளை புரிந்தவனுக்கு, இந்த குரல் ஏதோ சரியில்லை என காட்டிக் கொடுக்க. மகிக்கு கோவம் தான் வந்தது. ஆனால் குரல் அவளிடம் கெஞ்சியது “இன்னும் என்னடி” என்றான்.

துர்காவிற்கு இந்த வேண்டுதல் என்னவோ செய்ய, பொல பொலவென கண்ணில் நீர் வந்தது “என்கிட்டே சொல்லாமலே வந்திட்டீங்க” என்றாள், அவனை நேரே பார்க்காது, சிறு பிள்ளையாய்.

Advertisement

ம், அப்படி தான் தெரிந்தாள் அவன் கண்ணிற்கு. அதற்குள் அவள் அருகில் வந்திருந்தவன், குனிந்து அவள் முகம் பார்க்க, இப்போது அவனிற்கு முகம் காட்டாது திருப்பிக் கொண்டாள். சிரித்தவாறே அவளை பின்னிலிருந்து தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டான்.

துர்காவிற்குள் சிறு நடுக்கம் தெரிய, அவள் காதுகளில் “என்ன சொல்லணும்“ என்றான் மென்மையாய். அந்த குரலில் நேசம் மட்டுமே வழிந்தது. அதில் பெண்ணவள் உருக தொடங்க.

அவளை அணைத்தவாறே லேசாக அப்படியே தூக்கினான். பதறி போனாள் துர்கா ”பாவா, வலிக்கும் விடுங்க” என்க. ம்கூம் அலட்டிக் கொள்ளவில்லை அவன்.

அவளை, கட்டிலில் அமர வைத்தவன், தான் சென்று அங்கு டிபாய் மேல் வைத்திருந்த பால் கப்பை எடுத்து வந்தான். தானும் அவள் அருகில் அமர்ந்தவாறே ரசித்து பருகினான்.

அவளிடமும் கொஞ்சம் கொடுத்தான். அவளும் ஒன்றும் சொல்லாமல் வாங்கி அருந்தவும். இப்போது சட்ட திட்டமாக அமர்ந்து கொண்டு அவளையே பார்த்து “ம் சொல்லு, என்ன வேணும் உனக்கு“ என்றான்.

ஏதோ, கணக்குகளை சரி செய்யும் முதலாளியின் தோரணை வந்ததது அவன் முகத்தில். இதை பார்த்து, துர்காவிற்கு வந்த கோவத்திற்கு எதை எடுத்து அடிப்பது என தேடினாள். அவளின் இந்த செய்கையையும், ஒரு ரசிப்புடன் பார்த்திருந்தான்.

ஒன்றும் சிக்கவில்லை, ‘இவனுக்கெல்லாம் புரியாது’ என எழுந்து வெளியே செல்ல தொடங்கினாள். அவனுக்கு இவளின் பார்வையில் சிரிப்பு வந்தது. தன்னவளிடம், விளையாடும் காதலன் எண்ணம் வந்தது அவனிற்கு. எனவே, பின்னோடு அவனும் சொல்ல, அவளின் புடவை தலைப்பை பிடித்தவன், பின்னோக்கி இழுத்தான்.

இவள் அசையாது நிற்கவும், அவளை அப்படியே தள்ளி சுவற்றோடு சாய்த்து “இந்த மகிக்கு அவ்வளவு தான் தெரியும்” என்றவன் வெறிதனமாக அவள் உதடுகளை, தன் வன்மையான உதடுகளால் மூடினான். வெகு நாள் காத்திருந்தவனின் நிலை சொல்லியது அந்த முத்தம், பெண்ணவள் கொஞ்சம் தன்வசமிழந்தாள்.

ஆனால், ஏனென்றே தெரியாமல், அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழியவும் தான் மகி நிமிர்ந்தான். அவளை இப்போது நன்றாக குனிந்து தூக்கினான். அவளும் ஒன்றும் சொல்லவில்லை.

கண்ணீர் கண்டு கோவம் வரவில்லை அவனிற்கு, அமைதியாக கட்டிலில் கிடத்தினான். அவள் மேலே தானும் படர்ந்தான் “என்னால எதுவும் சொல்ல முடியாது. ஏன் உனக்கு புரியாதா, நான் உன்னை தான் நேசிக்கிறேன்னு. நான் என்ன சின்ன பையனா, உன்கிட்ட வந்து வந்து சொல்றதுக்கு.” என்றவனது பார்வை அவள் உதடுகளை மொய்க்க. அவன் பேசும் நிலையில் இல்லை.

அவளின் உதட்டோரம் லேசான சிவப்பு கோடுகள் கண்டான் “இரு கடிச்சிட்டேன் போல” என்றவன். திரும்பவும் அவள் உதடுகளை சிறை செய்ய, வலிப்பதற்கு பதில் இனித்தது அவளிற்கு.

அவள் கண்ணில் மயக்கத்தை கண்ட மகிக்கு, இப்போது மோன நிலை, மீண்டு எழுந்தவன், அவளின் சிவந்திருந்த மூக்கை லேசாக கடித்தவன் “நான் இப்படி தான், இது உனக்கு தெரியாதா, ம்” என்றான் கொஞ்சம் ஆற்றாமையாய்.

அவள் இன்னும் அமைதியாய் இருக்கவும் “நீ இப்படி அமைதியா இருக்க இருக்க தான் எனக்கு உன்ன, இன்னும் பிடிக்குது“ என்றான் காதலாய். சொல்லமாட்டேன், சொல்லமாட்டேன் என்றவன் தன்னையறியாமல் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதில் துர்காவின் மனம் கரைந்தாலும், கொஞ்சம் விழித்துக் கொள்ள, “ம், அப்புறம் ஏன் டைவர்ஸ் கேட்டீங்க” என்றாள் கோவமாக.

அப்போது தான் நினைவு வந்தவனாக அவளின் கையில், அந்த காயத்தை தேடினான். இடது கையில் அது தெரியவும் எடுத்து தன்னிரு கண்ணிலும் ஒற்றிக் கொண்டான் “சாரி டி, ரொம்ப படுத்திட்டேன், சாரிடா ஸ்ரீ” என அவளின் கையை எடுத்து தன் மார்போடு அனைத்து நிமிர்ந்து படுத்துக் கொண்டான்.

ஏதோ குற்றம் செய்த உணர்வு வந்தது அவனுள். ‘ஆறுதலுக்காக கூட அவளை பார்க்கவில்லையே அப்போது’ என தோன்றியது அவனிற்கு.

அவளின் முந்தைய ஏக்கமான கேள்வி நியாபகம் வரவும் “என்னை மீறி நடந்திடுச்சு, சாரி ஸ்ரீ, தப்பு தான்” என அவன் முடிக்க கூட இல்லை “போதும் பாவா விட்டுடுங்க, பழசை தெரியாமல் கேட்டுட்டேன்” என்றாள்.

ஆனால் மகி விடாது “உன் கிட்ட நான் டிவர்ஸ் கேட்டு இருக்க கூடாது தான். ம்…,

தெரியல, எதனாலன்னு……., இப்போ வரைக்கு யோசிச்சாலும் புரியல, சில்லியா இருக்கு டா, கொஞ்சம் இல்லை, உன்னை நிறையவே கஷ்ட்ட படுத்திட்டேன் ‘சாரி டா, சாரி ஸ்ரீ” என்றவன் எழுந்து அவள் கண்கள் பார்த்து.

ஆழ்ந்த குரலில் “என்னை நீ மன்னிக்க வேண்டாம் டா, ஆன கூடவே இரு விட்டுட்டு போய்டாத டி, இப்படி தள்ளி தள்ளி நிக்காத ஸ்ரீ,” என்றவன் அவளின் உள்ளங்கை எடுத்து தன் கன்னத்தில் அழுத்தியாவாரே திரும்பவும் பேச தொடங்கினான்.

“உண்மையை சொல்லவா, ஏதோ ஒரு பவர் இருக்கு உன்கிட்ட, அது தான் இப்படி உன்னை நோக்கி ஈர்க்குது, எனக்கு இந்த துர்காவ பிடிக்காமா இருக்குமா, அப்போ ஏதோ, ச்சு……. தெரியலை, உன் அருமை புரியல” என,  என்ன சொல்வது என தெரியாது, அவனது பார்வை, காதல் கொண்டு அவளின் பதிலிற்காக தவித்து நின்றது.

இத்தனையும் தன் கணவனிடமிருந்து வரக் கூடும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த துர்காவிற்கு அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் புதிதாக காதல் கொள்ளும் கன்னி பெண்ணாய் காதல் பெருகியது. உள்ளம் முழுவதும் நிறைந்து வழிந்தது.

மகி சொல்லும் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தைக்கே உருகி நிற்பவள், இப்போது கரை கடந்தாள். தன் முகம் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தவனது முகம் பற்றி தன் இதழ் பதிக்க, அவன் கர்வமெல்லாம் திரும்ப அவனிடமே வந்து ஒட்டிக் கொண்டது.

“ஸ்ரீம்மா, என்னவள்டா நீ, என் கூட தானே இருப்ப எப்போதும், எனக்கானவள் தானே டா நீ, என்னில் பாதியானவள் தானே டா நீ” என அதீத கவிதை சொல்ல,

இதுநாள் வரை துர்கா கொண்ட கலக்கமெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்தான். ‘காதல் எந்த வயதிலும், ஒருவனை பித்தனாக்கும்’ என மகி உணர்ந்தான்.

அவளின் தடைகளை எல்லாம் எப்போதும் போல் பொறுமையாகவே கடக்க வைத்தவன் தன் இலக்கு நோக்கி அவளையும் நகர்த்தினான். மூச்சில் தொடங்கிய அவளின் வாசம், உயிரில் கலக்கும் நேரம் வரை அவளை விளக்கவில்லை அவன்.

தன் ஓவ்வொரு செயலிலும் ‘நீ தான், நீ மட்டுமே தான் என புரிய வைத்தான்’ தன்னவளிடம் எப்போதோ கேட்ட “ஈஷ்வர் “ என்ற சொல், திரும்பவும் வரவும், அதுவரை புயலென சுழன்ற அந்த மகேஷ்வர், இப்போது மூச்சுக் காற்றென அவளுள் ஓடினான். முழுவதுமாக அவளிடம் கலந்தான்.

அழகான வைகறை பொழுது, துர்கா இப்போது தான் குளித்து புது மலரென வெளியே வரவும், மகிக்கு ஏதோ விழிப்பு வந்துவிட்டது. இத்தனைக்கும் சத்தம் செய்யவில்லை அவள். நினைவுகள் அவளை சுற்றியே இருப்பதால், அவள் விலகல் அவனையும் எழுப்பியதோ என்னவோ.

அழகான இரவு உடையில், சின்ன பொட்டுடன் அமர்ந்தாள் சோபாவில், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எழுந்தது தெரியாது ஆதலால், இவள் அமைதியாக இருக்க. “என்னடி, அதுக்குள்ளே குளிச்சிட்ட” என்றான்.

திடுமென சத்தம் வரவும் திரும்பி பார்த்தாள், அவன் விழித்திருப்பது  தெரிந்தது. இவளும் ஏதும் சொல்லாது சிரித்து வைக்க “வா” எனும் விதமாக தன்னிரு விரல் அசைக்க, “இருங்க, குடிக்க ஏதாவது எடுத்து வரேன்” என கீழே சென்றாள்.

அந்த நேரத்திற்கு, ஹோர்லிக்ஸ் கலந்து எடுத்து வந்தாள்.

அதற்குள் மகியும், ரெப்ரெஷ்ஷாகி, நேற்றைய மகிழ்ச்சியின் சாயல் முகத்தில் கொண்டு அவளுக்காக சோபாவில் அமர்ந்திருந்தான்.

இவள் வரவும், அங்கிருந்த ஜன்னல் திரைகளை விலக்கி அந்த விடியலை ரசித்த வண்ணம், அருகருகே அமர்ந்து துளி துளியாய் அந்த காலை பானத்தை பருகினர்.

பெரிதாக பேச்சு வரவில்லை. எப்போது போல் இயல்பாய் அமர்ந்திருந்தனர். சின்ன வெட்க சாயல் துர்காவினிடத்தில் அவன் அருகில் இருப்பதால். தன் தலை முடி காய்வதற்காக, விரிய விட்டிருந்தாள் துர்கா. இப்போது பானம் குடித்து முடித்தவனது பார்வை, அவள் கூந்தலில் செல்ல, தன் கை கொண்டு அதனுள் உள் நுழைத்து, சற்று நேரம் ஆற்றியது.

திசைகள் தோறும் இனிமை, திகட்டாத பேச்சும் அந்த விடியலை இன்னும் ரம்மியமாக்க, அவள் நெஞ்சி சாய்ந்த படியே ஏதோ பேசிக் கொண்டிருந்தான் மகி.

திடுமென “இன்னைக்கு காலையில உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, அது உனக்கு எப்படின்னு தெரியல, ஆனால், எனக்கு ரொம்ப…, என்ன சொல்ல, நான் மிஸ் பண்ண போறேன், ஆனா நீ கண்டிப்பா வாங்கிக்கணும்” என்றான். காதலா கட்டளையா புரியவில்லை அவளிற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!