Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 25 2

மகியும் எல்லாவற்றையும் தன் தம்பிக்காக பார்த்து பார்த்து செய்தான். எங்கும் வேலையென ஒதுங்காமல், இன்முகத்துடன் கல்யாண வேலைகளை செய்தான்.

கமலை, அங்கு துர்காவின் தாய் வீட்டில் விட்டு விட்டு இவர்கள் இருவரும் அடிக்கடி, மேட்டூர் வந்தனர், சர்வேஷ்வுடன்.

ராஜேஷ் தான் சேலத்தில் மகியின் வேலைகளை பார்த்துக் கொண்டான், கூடவே வினோ இருப்பதால், சற்று நிம்மது மகிக்கு.

இப்போது, தான் எடுக்க இருந்த இன்சினாயில் டீலர்ஷிப்பை மகி, ராஜேஷுக்கு எடுத்து கொடுத்திருந்தான். எனவே, அது சேலத்தில் தான் என்பதால், ராஜேஷ் இங்கு தான் இருந்தான்.



Advertisement

அழகான திருமண நாளும் வந்தது. தனது சுக துக்கத்தை பகிர்ந்து கொள்ள தன்னுடன் இணையாய் வருமாறு ப்ரியாவை, மங்கள நாண் இட்டு அழைத்து வந்தான் ராஜேஷ்.

‘எப்போது டா திருமணம் முடியும்’ என பார்த்திருப்பான் போல மகி, துர்காவை இப்போது தான், மிரட்டி அமரவைத்தான். யார் கவனத்தையும் கவராமல், அமைதியாக மிரட்டிக் கொண்டிருந்தான். “எதுக்குடி இப்படி பம்பரமா சுத்தற, அமைதியா ஒரு இடத்தில் உட்கார், கல்யாணம் முடிஞ்சாச்சி இனி நான் சொல்றத தான் கேட்கணும், அன்னிக்கு நீ தான் சொன்ன“ என்றான்.

அன்று எப்போதோ, அவள் சொன்னாள், ‘எதுக்கு இப்படி அலையற’ என மகி கேட்டதற்கு, ‘கல்யாணம் முடியட்டும் ஒரே இடத்தில் இருக்கேன்’ என்றாள். அதை தான் இப்போது நினைவு படுத்தினான் மகி.

Advertisement

நாலு மாதம் இப்போது துர்காவிற்கு, அசதி மட்டுமே கண்ணில் தெரிந்தது. மற்றபடி சுறு சுறுப்பாகவே இருந்தால் அவள்.

Advertisement

திருமணம் முடிந்து இரண்டு நாள் தான் இருக்கவிட்டான் மேட்டூரில், அதன் பின் பாக் செய்து அனுப்பிவிட்டான், தம் மக்களையும் மனைவியையும் அவர்களின் அம்மா வீட்டிற்கு.

மகி ஒருவாரம் இருந்து கணக்கு வழக்கெல்லாம் பார்த்து தான் வந்தான். வீடு வந்தவன், துர்காவை அழைக்க, வந்துவிட்டாள் அவளும், பார்த்தவனுக்கு இப்போது தான் சற்று நிம்மதி. இந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் தேறி இருந்தாள்.

ராஜேஷை சேலத்திலேயே தனியாக வைத்தனர். அந்த வைபவம் வேறு வருவதால் மகி இன்னமும் சற்று கடுமையாக தான் இருந்தான் துர்காவிடம்.

Advertisement

தன், கண் பார்வையிலேயே வைத்திருந்தான். காலையில் தன்னுடன் ஆபீஸ் அழைத்து சென்று விடுவான். மதியம் திரும்பும் போது கூட்டி வந்து உணவு முடித்து, உறங்க சொல்லி, அவன் அலுவலகம் சென்று விடுவான்.

அதன் பின், துர்காக்கு மாலை கமலுடன் நேரம் செல்ல, மகி சீக்கிரமாக வீடு வந்து, இரவு அவளை வாக்கிங் கூட்டி செல்வான். இப்படி அவர்களின் நாட்கள் கடந்தது. அவளின் ஒவ்வெரு அசைவையும் அருகிலிருந்து கவனித்தான் மகி.

அடிகடி மனைவி, மக்களோடு தயிர் சாதம் சாப்பிட சென்றான், அதே 65 லட்சம் காரில் தான். இப்போது விலை தெரியவில்லை. குடும்பம் மட்டும் தெரிந்தது மகியின் கண்ணிற்கு.

&&&&&&&&&&&&&&&

மகிதுர்காவின் மகள் ஆதிரா. வரம் தர வந்தவளா, வரம் பெற்று வந்தவளா தெரியவில்லை. ஒல்லியாக, தங்க நிறத்தில், மகி போல் உயரமாய் சர்வேஷையும், தனது ராஜேஷ் சிட்ப்பாவையும் மட்டும் முறைக்க கற்று வைத்திருக்கும் நான்கு வயது செல்ல சிட்டு அவள்.

மகிக்கு, தனது சின்ன தம்பி ராஜேஷை தான் எப்போதும் நினைவு படுத்துவாள்….. சட்டு சட்டுன்னு பேச்சு தான் எப்போதும் அவனை போல, கொலுசு சத்தத்திற்கு இணையாக பேச்சும் இருக்கும்.

மற்ற அண்ணன்களிடம் ஒட்டு ஆதி, சர்வேஷ்ஷிடம் மட்டும் சண்டைக்கு நிற்பாள். அதே போல் ராஜேஷை கண்டால் சிறிது பயம். ஆனால் அகில் சிட்ப்பா மட்டும் ஆல் டைம் பாவேரிட்.

இரவு தூங்கும் வேளையில் தனது அகில் சிப்பாவிடம் கதை பேசாமல் தூங்குவதில்லை அவள்.

இதோ இன்று முதல் நாள் பள்ளி செல்கிறாள். நேற்றே வந்துவிட்டான் அகில், அவளை பள்ளி கூட்டி செல்ல. மகி இப்போது கொஞ்சம் பிசி. ஆம் சில கெமிக்கல் இம்போர்ட் பிசினஸில் இறங்கி இருக்கிறான். அதனால் இப்போது ஹைதராபாத் சென்றுள்ளான்.

இங்கு முழு நேரமும் துர்கா பார்த்துக் கொள்கிறாள், கூடவே தம்பிகள் இருவரும் அவ்வபோது வருவர். கணக்குகள் எல்லாம் அகில் வசம், அதனால், வாரம் ஒரு முறை அவன் வருவது உறுதி. இது மகளிற்கு என ஸ்பெஷல் விசிட்.

ஆதி அமைதியாகவே கிளம்பினாள், அகில் தான் ஆர்பாட்டம் செய்தான். ‘என்ன இன்னும் வாட்டர் பாட்டிலில் தண்ணி ஊத்தல, ஏன் தலைக்கு பூ வைக்கல” என எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தான்.

ராஜேஷ் தான் “ண்ணா, இன்னைக்கு பஸ்ட் டே, லேட்டா போனா போதும், இரு அண்ணி எடுத்து வருவாங்க” என்றான்.

அப்போது தான் சாப்பிட்டு, இந்த பதிலை சொல்லிக் கொண்டே வந்த ராஜேஷ், ஆதியை தூக்கி, தன் தலைக்கு மேல் தூக்கி போட்டு அசால்டாக பிடிக்க, அது தன் அகில் சிட்ப்பா இருக்கும் தைரியத்தில் பெருங்குரலெடுத்து அழுதாள்.

அவ்வளவுதான் அகில் பொங்கி விட்டான் “ஏன் டா ஸ்கூல் போற நேரத்தில் அவளை அழுக விடுற …………” என ஆரம்பித்து, ராஜேஷின் பையன் கனிஷ் வந்து, தன் தந்தையை அடித்த பிறகே, தன் அழுகையை நிறுத்தினால் ஆதி.

“போடி “ என்றான் ராஜேஷ் அவளை, “நீ போடா “ என சகட்டுக்கு அவனை திருப்பி திட்டினாள், அந்த வீட்டின் பெண்ணரசி, இப்படி எப்போதும் அவளிடம் வாயை பிடுங்குவான் ராஜேஷ், அந்த மழலையில் தன்னை திட்டும் ஆதியின் முகத்தை அப்படி ரசிப்பான் அவளின் ராஜி சிட்ப்பா.

எல்லாம் முடித்து அவனிடமிருந்து ஒரு சாக்கி வாங்கிக் கொண்டே பள்ளி கிளம்பினாள் ஆதி. அகில் தான் ஒரு மணி நேரம் அங்கே ஸ்கூல்லில் இருந்து அழைத்து வந்தான்.

துர்கா இதற்கெல்லாம் பார்வையாளர் மட்டும் தான்.

இதையெல்லாம் மகி இரவு வீட்டிற்கு வந்தவுடன் தானே சொல்லி, அப்போ நடந்ததை இப்போ நடந்ததாக எண்ணி அழுது, சிரித்து என பல வகையில் சொல்லி, செய்து காட்டி அவன் மடியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ஆதி.

பசங்க இருவரையும் துர்கா உறங்க வைக்க மேலே சென்றிருந்தாள். இவளை அழைத்து சென்றால் தூங்கரவங்களையும் கெடுத்து விடுவாள் என எண்ணி, மகியிடம் விட்டு சென்றாள்.

இப்போது தனது அறைக்கு பக்கத்தில் உள்ள அறையையே ஆல்டர் செய்திருந்தான் மகி, அதனால் அவன் குடும்பம் முழுவதும் அங்கே தான். இப்போது ஆதியை தூக்கிக் கொண்டு மேலேறி வந்தான் மகி.

மகியின் உலகம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இந்த அறையினுள் வந்து விட்டால், முழுவதும் அவன், ஸ்ரீ வசம் தான்.

அவளை தங்கள் அறையில் விட்டவன், துர்காவை தேட, அவள் அங்கு இல்லை, பசங்க அறையில், அவர்களுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

உடனே விழித்து விட்டாள் துர்கா, அதை பார்த்தவன் “என்ன டி அதுக்குள்ள தூக்கம்“ என்றான்

“சும்மா பாவா” என்றவளை தூக்கிக் கொண்டே பால்கனிக்கு வந்தான். அந்த ரூமின் கதவை லேசாக சாற்றி, அங்கிருந்த ஷேடோவையும் இழுத்து விட்டு, அங்கிருந்த ஜுலோவில் அமர்ந்தான், அவளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டே தான்.

அப்படியே அமர்ந்திருந்தனர் இருவரும், பேச்சுக்கள் தேவையிருக்கவில்லை. ’தங்களது கண்கள், தங்களது இணையை மட்டும் உணரும் படியான இருட்டு, மெல்லிய மல்லிகை மணம், இருவரின் மனம் நிறைய நேசம்’ இந்த நிலையில் பேச்சுக்கள் அவசியமே இல்லை தானே.

அந்த இரவில் ஏதோ ஒரு, டீ கடையிலிருந்து………

“நீலம் கொண்ட கண்ணும்……….

நேசம் கொண்ட நெஞ்சும்………

காலம் தோறும் என்னை சேரும் கண்மணி……..

பூவை இங்கு சூடும்…….. பூவும் பொட்டும் யாவும்…….

மன்னன் எந்தன் பெர்ரை கூறும் பொன்மணி……..

…………………..

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

………………………

………………………..

உன் வண்ணம்…… உன் எண்ணம் …….

எல்லாமே……. என் சொந்தம்………..

இதயம் முழுதும் உனது வசம்………..

வா வா அன்பே…… அன்பே…….” என கேட்க துர்கா தன்னவன் நெஞ்சில் இன்னும் ஒட்டிக் கொள்ள…. அவனும் உணர்ந்து தன்னுள் புதைத்துக் கொண்டான் அவளை.

சிறிது நேரம் சென்று, துர்கா தான் ஆரம்பித்தாள் அவன் மீது அமர்ந்த வண்ணம், அவன் கன்னத்தில் தனது உள்ளங்கையை வைத்த வண்ணம் “போதும் பாவா, நீங்க ஓடினது, இனி இந்த ஒரு வருஷத்துக்குள்ள எல்லாத்தையும், இங்கிருந்து செய்யற மாதிரி பாத்தக்கோங்க, இனி நீங்க எங்கயும் அலைய கூடாது“ என கோரிக்கையில் ஆரம்பித்து, கட்டளையில் முடித்தாள்.

மகியும் “ம்….., அத தான் நானும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன், செய்திடலாம்.” என்றான்.

இப்படி அவனின் இலக்கு நோக்கி பாயும் அம்பானாள் அவள். துர்கா என்ற அம்பிடம் மட்டும் வளையும், வில்லானான் இந்த மகேஸ்வரன்.

                          **** சுபம் *****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!