Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 25 1

அத்தியாயம்                25

சர்வாவின் சத்தம் மட்டுமே வீட்டில், மற்றபடி அந்த பெரியவீட்டில் மகி துர்காவின் பார்வை பரிமாற்றங்கலே அதிகமாக இருந்தது. பெரிதாக பேசியே பழக்க படாதவர்கள், இப்போது யாருமில்லா இடத்திலும் அவர்களுக்கு பேச்சுக்கள் தேவையாக இருக்கவில்லை போலும்.

இந்து பத்து நாட்கள் முழுவதும் துர்காவிற்கு விடுமுறை, சர்வையும், மகியையும் கவனிப்பது ஒன்றுதான் வேலை. எனவே சற்று ஓய்வாக இருந்தாள். மனமும் அவள் வசம் இருந்ததால் தனது ஈஷ்வரின் எண்ணமே முழு நேரமும் அவளை சுற்ற வைத்தது, சுற்றியும் வந்தது.



Advertisement

காலை கொஞ்சம் நேரம் கழித்து எழுவது, ஏதாவது சுலபமாக உணவு தயாரிப்பது, மகியை பிக், அப் ட்ராப் செய்வது சர்வாவுடன் விளையாடுவது, சில நேரம் தனது அம்மா வீட்டிலிருந்து மதிய உணவு வரும், இல்லையென்றால் இரவு உணவிற்கு இவர்கள் அங்கு  செல்வார்கள் என துர்கா கொஞ்சம் ஓய்வாக இருந்தாள்.

இதில் மகிக்கு தான் வசதியாக போயிற்று, எப்போதும் துர்கா சரணம் தான், அவள் மடியில் தலை வைத்து ஹாலிலேயே படுத்துகொள்வான், அதனால் எப்போதும் சர்வாவிற்கும் இவனிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.

மகி, துர்காவின் அருகில் வந்தால் போதும், எங்கிருந்தாலும் அவனும் வந்து அவளின் மேல் ஒட்டிக் கொள்வான். மகி ஒரு பெருமூச்சுடன் விலகி செல்வான்.

Advertisement

ஆனால், இரவுகள் மிக நீண்டது இருவர்க்கும், துர்காவின், ஈஷ்வரிடம் இப்போது பேச்சுகள் அதிகமாகியது, தன் கல்லூரி நாட்கள், தன் நண்பர்கள், தனது பயணம், அதில் எடுத்த போடோஸ், அதில் நடந்த அழகான மற்றும் அபாயமான நிகழ்வுகள், என எல்லாம் பகிர்ந்து கொண்டான்.

Advertisement

அவளின் கல்லூரி நாட்கள் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டான். அவளும் தனது அழகான நினைவுகள் சொன்னாள், சில பேச்சுகள் எதிர்காலத்தை நோக்கி எழுந்தது.

இப்போது மகி தெளிவாக சொன்னான் “இன்னும் கொஞ்ச நாளில் நான் இன்சினாயில் டீலர் ஷிப் எடுக்க போறேன், அப்புறம் ஒரு பெட்ரோல் பங்க் ஒன்னு விலைக்கு வருது, யோசிச்சிக்கிட்டு இருக்கேன்……… ம்” என்றவன்

கொஞ்சம் தளர்வாக அவளிடம் “அப்புறம் நீ, இதே போல எப்பவும் கூடவே இருக்கணும், என்ன வேணுமோ என்கிட்ட மட்டும் கேட்கணும், எனக்கு தெரியாது சொல்லு செஞ்சிக்கலாம், ஏதாவது தப்பா நடந்தா சண்டை போடு, இந்த மகி எப்போதும் உன் ஈஷ்வர் தான், காட் இட்” என்றான் நிர்மலமான முகத்துடன் அவளை நெஞ்சில் சாய்த்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தான்.

Advertisement

ஏதும் சொல்லவில்லை துர்கா, எங்கோ சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கை இப்படி ஒரு அழகான புரிதலில் தொடங்கும் என்று நினைத்தே பார்த்திருராதவள், மகியின் இந்த வார்த்தைக்கு பிறகு அவனை பாத்தவள், ஒன்றும் சொல்லாமல் பேசிய அவன் இதழ்களை முத்தமிட்டாள்.

இதில் கொஞ்சம் அதிர்ந்தது போல் பார்த்த மகி, அவளை தன்வசப்படுத்தும் வேலையில் முழ்கினான். ஒதுங்கியே நிற்கும் மகி இப்போது ஸ்ரீயை சார்ந்தே நின்றான். அவளிற்கு தேவையான, இடத்தில் தன்னிடம், கோவம் பாடவும் சொல்லி தந்தான். இப்படி அவளை ‘மகியின் ஸ்ரீ’ யாக மாற்றிக் கொண்டான்

அவன் ஏதும் சொல்லாமலே அவனை புரிந்து கொண்டவள், இப்போது இவன் காட்டும் நேசம்தனில் பரவச நிலையிலிருந்தாள், அவளை கீழிறக்கி  கொண்டு வரவே, சிங்கபூர் சென்ற பட்டாளம் தங்கள் சுற்றுலா முடித்து திரும்பியது.

கமல் தான் சற்று டல்லாக இருந்தான். ‘ஏதோ இனி எங்கும் அனுப்ப கூடாது’ என துர்கா நினைத்திருந்தால், ஆனால், மகியிடம் நன்கு ஓட்டினான் கமல், இப்போது சர்வா, மகியை விட்டு தள்ளி நிற்க, கமல் அந்த இடத்தை பிடித்துக் கொண்டான்.

மகியுடன் சைக்கிள் பழகினான், வண்டி ஓட்டும் போதெல்லாம் கமல் தான் ஹன்டுள் பிடிப்பது என கொஞ்சம் குழந்தை தனம் மறைந்து, அவன் அப்பாவிடம் ஓட்டினான்.

மகிக்கு தான் ‘தானும் தன் தந்தையும் இருந்த நினைவுகள் அடிக்கடி எழுந்தது கமலால். அதற்காவே இப்போது மாலை ஒரு தரம் வீடு வந்து, கமலை வண்டியில் அழைத்து சென்றுவிட்டே, தனது அலுவலகம் சென்றான் மகி.

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கை நிரம்புகிறது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இப்போது பள்ளி திறந்து விட்டது. எனவே ரொட்டீன் நாட்கள் தொடங்கின. ராஜேஷின் நிச்சையம் அடுத்த வாரம் என்ற நிலையில், அதற்கு முன்னே வீடு விழா கோலம் கொண்டது.

துர்கா இன்னொரு வாரிசை தாங்கி நின்றாள். இதோ, வைதேகி உற்பட மேட்டூரிலிருந்து எல்லோரும் விஷயம் அறிந்து கிளம்பி வந்து கொண்டிருந்தனர்.

நித்யா வந்தவுடன் கட்டிக் கொண்டாள் அவளை, பேசவில்லை இருவரும், ‘எங்கோ தொலைய இருந்த எனது வாழ்க்கையை, தனது ஒரு சொல்லால் மீட்டு தந்தவள் நித்யா,’ என்ற என்னத்தினுடே “தேங்க்ஸ் க்கா” என்றாள் மெல்லிய குரலில்.

அவளை தன்னிலிருந்து விளக்கிய நித்யா, “போடி லூசு “ என கண்ணில் நீர் வர சிரித்தவள். ஏதும் வார்த்தை வராமல் அமர்ந்து கொண்டாள். அகிலும் ராஜேஷும் உள்ளே வரும் போது இதனை தான் பார்த்தனர்.

துர்கா “வாங்க அத்தை வாங்க தம்பி என வரவேற்க” வைதேகிக்கு ஏக சந்தோஷம், தனது பெரிய மகனின் போறாத நேரத்தை, தன் மருமகள் அழகாக காத்து, இப்போது இன்னொரு பொக்கிஷத்தையும் தர போகிறாள் என பூரித்து நின்றார்.

ஒரு சில நொடிகள் வார்த்தைகள் தேவை இருக்கவில்லை யாருக்கும், தேவ நிமிடங்கள் அவை. ராஜேஷ் தான் சுதாரித்தான். “அண்ணி ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்றான்.

பிறகே துர்கா, வைதேயிடம் ஆசீர்வாதம் வாங்கி உள்ளே சென்று அனைவர்க்கும் குடிக்க காபி எடுத்து வந்தாள்.

மகி அப்போது தான் உள்ளே வந்தான், அவனின் பாதி முகம் வெட்கத்தை தான் காட்டியது, ஆனாலும், அதனை மறைத்து, தலையை கோதிய வண்ணம், எப்போதும் அலட்சியம் மின்னும் அவன் கண்ணில், இப்போது கனிவுடன் எல்லோரையும் பார்த்து “வாங்க” என அழைத்தவன் ராஜேஷை பார்த்து “வாடா புது மாப்பிள்ளை “என்றான் தெரியாமல்.

ராஜேஷ் பெரிதாக சிரித்தே விட்டான், “அப்படி அடிக்கடி சொல்லு அப்போ  தான் தெரியுது, யாரு புது மாப்பிள்ளைன்னு” என்றான் கிண்டலாக.

நித்யா தான் “விடு ராஜேஷ், இப்போ தான் எங்க பெரிய பாவா முகமே கலையா இருக்கு” என்றவள்

வைதேகியை பார்த்து “அத்தை முதலில் சுத்தி போடுங்க” என்றாள்.

பின்பு, ராஜேஷை பார்த்து “எல்லோரும் இருக்கும் போது உங்க அண்ணனை ஏதும் சொல்லிடாதீங்க, கண்ணு பட்டுடும், இப்போவே யாருக்கும் சொல்ல வேண்டாம், ஒரு நாலு மாசம் கழிச்சு சொல்லிக்கலாம்“ என்றாள் நித்யா, தயங்கி, தயங்கினாலும், சந்தோஷமாக தன் அத்தையை பார்த்த வண்ணம் எல்லோருக்கும் பொதுவாக சொன்னாள்.

வைதேகியும் “ஆமாம் ராஜேஷ், அவ சொல்றது சரி தான் கவனமா இருங்க எல்லோரும்.“ என்றார். இந்த கலாட்டாக்கள் எல்லாம் முடிந்த உடன், துர்காவின் தாய் வீட்டினர் வந்தனர்.

கீர்த்தி தான் “பாவா, கலக்கிட்டீங்க“ என வந்து மகியை கட்டிக் கொண்டான். வந்தவர்களை கவனித்து, அன்று விருந்து முடித்து, உடனே மேட்டூர் கிளம்பினர் அனைவரும்.

மகி, துர்கா இரண்டு நாள் முன்னே வருவதாக ஏற்பாடு. நிச்சையம் பெண் வீட்டில் என்பதால், இவர்களுக்கு ஒன்றும் வேலையில்லை. அழைப்புகள் எல்லாம் போனில் தான். அதனால் தான் ‘இரண்டு நாள் முன் வந்தால் போதும்’ என்றார் வைதேகி.

நிச்சையம் நல்ல படியாக முடிந்தது. இப்போதும் மற்ற உறவினர்களின் கண்கள் துர்கா, மகியை தான் குரு குருவென பார்த்தன, ஆனால் இப்போது துர்காவிற்கு, ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. அவர்கள் எல்லாம் அப்படி தான், மாற்ற முடியாது என கடக்க பழகிக் கொண்டாள்.

ராஜேஷுக்கு பார்த்த பெண் ப்ரியதர்ஷினி. மிகவும் கலகலப்பாக பேசினாள், இந்த வீட்டின் சீரியஸ் போக்கை அவள் சற்று மாற்ற கூடும். அப்படி ஒரு கலகலப்பு.

மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் தனது ஓரகத்திகளை தோழிகளாக்கிக்  கொண்டாள். ராஜேஷுக்கு அவளின் இந்த குணத்திலேயே விழ்ந்துவிட்டான்.

கட கடவென நாட்கள் சென்றது.  புடவை எடுக்க, நகை எடுக்க, பத்திரிகை வைக்க, மண்டபம் பார்க்க என எல்லா வேலைகளுக்கும் துர்கா தான் முதலில் நின்றாள்.

‘அலைய வேண்டாம்’ என, யார் சொல்லியும் கேட்கவில்லை. ‘என் கல்யாணத்திற்கு நித்யாக்கா செய்தாங்க, இப்போ ராஜேஷ் தம்பி கல்யாணத்திற்கு நானும் தான் வருவேன்’ என எல்லாவற்றிற்கும் முன் நின்றாள்.

இப்போது இவளை சாமளிப்பதே பெரிதாக இருந்தது அனைவர்க்கும். மகி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவள் மகிழ்ச்சியான மன நிலையில் இருந்தால் போதுமென அனைவரும், அவள் சொல்லிற்கு அடங்கினர். ஆம், இப்போது பேச கற்று இருந்தாள் துர்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!