Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 5

அத்தியாயம்                5

 

கந்தசாமி இருந்த வரை எதிரி என யாரும் இருந்ததில்லை, ஆனால் மகி எதிரிகளை உருவாக்கி கொண்டான். தன் செயலால். யாரையும் அனுசரிக்காமல்… எங்கும் வலையாலாமல்… எப்போதும் நிமிர்ந்தே இருந்தான்.

மேலும், அவன் இதுவரை வலைய நேர்ந்ததே இல்லை. கணக்குகளில் சுத்தம், அரசு அலுவலகங்களில் எல்லோரையும் பழக்கம், எங்கும் பந்தா இல்லாமல் தானே சென்று காரியம் நடத்திக் கொள்வான்.



Advertisement

அதனால், எல்லா வகையிலும் அவனிற்கு மரியாதை தான். இந்த கார் ஷோ ரூம் பொறுத்த வரை…. தன் அப்பா காலத்து நிலம்… இவனிற்கு அது தெரியம் ஆதலால், எதையும் பற்றியும் கவலை படாமல் தனது கட்டிட வேலையை துவங்கினான்.

முக்கிய பைபாஸ் சாலையில் 7 முதல் 8 கிரௌண்ட் ஏரியாவில்…. நல்ல அழகான வைட் கலர் பில்டிங்…. முன் புறம் முழுவதும் புல்லட் ப்ருப் கண்ணாடி கொண்டு அமைத்திருந்தான்.

ஆம் கோடிகளை தொடும் கார்களுக்கு இந்த பாதுகாப்பை செய்திருந்தான். பின் புறம் அதற்கான வொர்க் ஷாப்… என பிரம்மாண்டமாக் தான் அமைந்தது….

Advertisement

சொல்லுவார்களே ‘பணத்தை தண்ணீரை செலவழித்தார்கள்’ என அப்படி தான் செய்திருந்தான். கட்டிடத்திற்கு தேவையான மணலில் இருந்து…. அங்கு வரும் கஸ்டமர் அருந்து காபி கப் வரை… ஒவ்வொன்றும் தானே நேரடியாக செய்தான்.

Advertisement

எந்த இண்டிரீயரிடமும் விடவில்லை, மகிக்கு ரெட் கலர் மிகவும் பிடிக்கும்… எனவே, அதன் தாக்கம், சில இடங்களில் இருந்தது…. ஒரு பக்கம் முழுவதும் ரெட் வால் பெய்ன்ட்….. அதில் கிர்ஸ்டல் கொண்டு 3D எப்பைக்ட்டுடன் தனது பிரண்ட் காரரை சுவற்றில் பத்தித்தார் போன்று இருக்கும்.

இப்படி ஒவ்வொன்ரையும் ரசனையாக செய்தான் அவன்.

தனது பல வருட கனவு நடந்தே விட்டது என பறந்து கொண்டிருந்தான். ஆனால், இல்லை அப்படி, இல்லை என அவனின் காதிர்க்கு ஒரு விஷயம் வந்தது.

Advertisement

*#############* *##############* *##############*

விவேகன் சுப்புரத்தினம், ஐயங்கரன் குரூப் ஆப் கம்பனியின் தற்போதைய CEO. அந்த ஊரில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது இவரை.

35 வயதில், கோதுமை நிறத்தில், யாவரையும் எடை போடும் கண்கள், கிளீன் ஷேவ் என எப்போதும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பார்.

விவேகன் தனது அலுவலகத்தினுள் நுழைய, அனைத்து ஊழியர்களின் முகமன்களை ஏற்று கொண்டு, துரித நடையில் தனது கபின் சென்று அமர்ந்து விட்டான்.

அதன் பின்…. பத்து நிமிடம் கழித்து தான் விவேகனின் உதவியாளன் கதிர் அங்கு வந்தார். விவேகனை விட சற்று பெரியவர். அதனால் “அண்ணா” என தான் அழைப்பான் விவேகன்.

வந்த உடனேயே… தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விவேகன்… கதிர் வரவும்…. அவர் முகம் பார்த்தான்…. ‘உண்டா… இல்லையா… ‘ என்ற கேள்வி அதில் இருந்தது.

அவரும் ஆர்வமாக “தம்பி நீ ஆசைப்பட்டு ஒன்னு நடக்காம இருக்குமா? நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்?….” என சிரித்த படியே கூறி தான் கொண்டு வந்த பைலை அவன் முன் வைத்தார்.

இந்த ஷோ ரூம் வைபதற்கு, இவர்களும் போட்டியிடனர், இவர்கள் இது போல் பல வியாபாரம் செய்யும் பரம்பரையை விசிடிங் கார்டுடாக கொண்டவர்கள்.

ஏதோ, ஒரு மயிரிழையில் அவர்களுக்கு அந்த ஷோ ரூம் வாய்ப்பு பறிபோனது, இப்படி ஏதாவது ஒன்று, இரண்டு நடப்பது தான் விவேகனுக்கு. ஆனால், எப்படியேனு தான் விட்டதை திரும்பவும் கைபற்றியே தீருவான் விவேகன்.

அவர்களது ஒரு கூட்டு தொழில் முறை…. எனவே எல்லாவற்றையும் தாயரிப்பர். தாங்களே மார்கேடிங்க செய்வர்.

தங்களது சொந்தத்திற்குள் எல்லாம் அமைவது போல் பார்த்துக் கொள்ளும் ஒரு அசாத்திய வியாபார அமைப்பு.

அதில் விவேகனது ஆட்டோ மொபைல் சம்மந்தமானது…. இந்த இடத்தில் அவனை தவிர யாரும் ஆட்சி செய்ய முடியாது என்னும் நிலை தான் அங்கு.

அதனால் விவேகன் கொஞ்சம் அசால்டாக இருந்த நேரம், மகி கைக்கு அந்த ஷோ ரூம் அமைக்கும் அழைப்பு வந்தது.

விவேகன் முடிந்தவரை முளையிலேயே கிள்ளி விடுவார் தான், இப்படி அரிதாக மகி மாட்டவும்…. வளரவிட்டு அழிக்க நினைத்தார்.

மகியை வளர விட்டு அழிக்க எண்ணி காரணம் தேடினர்…. அப்படி அவர்களுக்கு அடித்த ஜாக்போர்ட் தான்… மகிக்கு ஆப்பாக நிற்கிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&         >#<         &&&&&&&&&&&&&&&&&&&

புகழ் ஒரு போதை தரும் விஷயம் தான்… தன் காது பட எல்லோரும் “அது தானே, எப்படி விவேகனுக்கு கிடைக்காமல் போகும்..”

“அது தானே, உன் கிட்டை இருந்து யார் தப்ப முடியும்….”

“அதானே நீ நினைத்தால் முடிக்காமல் விட மாட்டாய்….” என இப்படி புகழுக்கு மயங்கியவன் தான் விவேகன்.

எனவே அந்த புகழை தக்க வைத்துக் கொள்ள ‘எதுவும் செய்யலாம்’  என்ற நிலைக்கு அவன் வந்து பல காலம் ஆகிறது.

தான் நேரில் செல்ல வேண்டும் என்று இல்லை, தன் பெயர் சொன்னால் மட்டும் போதும், அவன் நினைக்கும் காரியம் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.

அப்படி விவேகன் தேடிய தேடலில் கிடைத்தது தான்…. மகி வைத்திருக்கும் ஷோ ரூம் நிலத்தின் மிக உண்மையான பத்திரம்.  ஆம் உண்மையான பத்திரம்.

ஒருவரை உயர்த்த நினைப்பவர்கள் கிடைப்பது அரிது…..

ஆனால் வீழ்த்த… தானாக மகிக்கு எதிராக விவேகனுடன் ஆட்கள் சேர்ந்தனர்…. மொத்தம் 3 பேர்…. எங்கிருந்தோ ஒரு பத்திரத்தின் செராக்ஸ் காப்பி கொண்டு வந்தனர், சரியான பத்திரத்தை.

#####################################################

இப்போது மகி ஷோ ரூம் வைத்திருக்கும் நிலத்தை, மகியின் அப்பா வாங்கும் போது…. அது ஒரு மைனர் சொத்து.

தெரிந்தே தான் தன்னுடைய own riskல் வாங்கினார்.

மிகவும் பழக்கமானவர்கள்….. அந்த பெரியவரின் மருத்துவ செலவுக்கு, அவர்களின் மகன் வந்த கேட்கவும், ‘இல்லை’ என சொல்ல முடியாதவர்… அந்த நில பத்திரத்தை தன் பெரிய மகன் பெயருக்கு மாற்றிக் கொண்டு தான் பணம் தந்தார்.

(மைனர் சொத்து என்பது 18 நிரம்பாத குழந்தைகளின் மேல் எழுதும் சொத்து…. அதனை அவர்களின் பெற்றோரோ, பாதுகாப்பாலாரோ அனுபவிக்கலாம், ஆனால் விற்க முடியாது. அந்த மைனர் மேஜர் ஆன பின் அவன் கையெழுத்து போட்டால் தான் செல்லும்.)

அப்போதெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது… அதனால் இது போல் நிறைய உதவிகள் செய்ய பலர் இருந்தனர்.

ஆனால் மகியின் நேரம்…. அந்த பணத்தை வாங்கியவர், அதாவது அந்த மைனரின் தந்தை இறந்து விட்டார்.

அதானல் இந்த விவரம் அவர்கள் வீட்டிலும், மகியின் வீட்டிலும் யார்க்கும் தெரியவில்லை, இல்லை காலபோக்கில் மறக்கடிக்க பட்டிருந்தது.

இந்த விவரம் மகிக்கு தெரியாது. எனவே அதில் தன்னுடைய எல்லா செயல்களையும் செய்தான்.

கந்தசாமியின் கணக்குபிள்ளைக்கு இந்த விவரம் தெரியும், ஆனால் அவரெல்லாம் இப்போது மகியின் தொடர்பில் இல்லை.

                     @@@

விவேகன், இப்போது அந்த பத்திரத்தை கொண்டு, அக்கு அக்காக விசாரித்து இருந்தான்.

ஒரு நூல் கிடைத்தால், சேலையையே நெய்பவனுக்கு….. எவ்வளவு பெரிய விஷயம் கிடைத்திருக்கிறது.

‘ப்பா…’ அவன் பெருமுச்சு விட்டான் இப்போது, ஆனால் அவசரப்படவில்லை…. பொறுமையாக விளையாட நினைத்தான் விவேகன்.

விவேகனின் ஜாக்பர்ட் தான் 18 வயதே ஆன ஆனந்த்வைபவ், அவனின் மாமா சங்கரலிங்கம்.

விவேகன் முதலில் விசாரித்து, வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை என தெரிந்து. சங்கரலிங்கத்திடம் ஆசை வார்த்தை கூறி, மிரட்டி என இப்படி பல வடிவில் அவர்களை கைக்குள் போட்டு கொண்டு.

மகியை கடந்த 6 மாதங்களாக நெருங்கிக் கொண்டிருக்கிறான் விவேகன்…. ஆம் இன்னும் முழுதாக அவனை சுற்றி வளைக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

தனது ஒரே தட்டில், மகி நிலை தடுமாறி விழுந்து மண்ணோடு மண்ணாக போக வேண்டும். அப்படி இருக்க வேண்டும் தனது அடி, என நேரம் பார்த்தக் கொண்டிருக்கிறான் விவேகன்.

இந்த விஷயம் ஒரு 6 மாதம் முன்பிலிருந்து எப்படியோ மகியின் காதிற்கு வந்துவிட்டது.

வந்த அன்றிலிருந்து….. மகியின் தூக்கம் பறந்தது. தன் ஷோ ரூமை தவிர ஏதும் அவன் கண்ணிற்கு தெரியவில்லை.

எப்போதுமே தன் குடும்பத்தில் பற்றில்லாமல் இருந்தவன்…. இப்போது இன்னும் விலகி போனான்….

காக்க வேண்டும் தனது கனவை, எப்படியேனும் நிலை நிறுத்த வேண்டும் என இந்த 6 மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கிறான்.

முதல் முறையாக தன் தந்தையை தவிர இன்னொன்றின் மேல் ஆசை பட்டுள்ளேன்.

அது இப்படி பாதியில் நிற்க வேண்டுமா.. அதை நினைக்கவே அவனால் முடியவில்லை.

விசாரித்து விட்டான் எல்லாவற்றையும், ஆம் ‘அந்த நிலத்தில் பிரச்சனை’ என அவனிற்கே தெரிகிறது…. ‘அய்யோ ஏமாந்து போனேன்’ என இப்போது நொந்து கொள்ள மட்டுமே முடிகிறது அவனால்.

சட்ட ஆலோசனையும் செய்தாகி விட்டாது, கோர்ட்க்கு சென்றால், கண்டிப்பாக, அந்த ஷோ ரூம்மை தற்காலிகமாக மூட முடியும் எனவும் தெரிந்து கொண்டான்.

பணம் வேண்டுமா…. எடுத்துக் கொள்… சொத்து வேண்டுமா இந்த சேர்த்து எடுத்து கொள்.

ஆனால், தன் உயிர் மட்டும் விட்டு, மானத்துடன் சேர்த்து…. தன் கண்களையும் பிடுங்கும் நிலை தான் இப்போது மகியினுடையது.

இவர்கள் இருவரும் இப்போது போட்டி இடுவது கௌவுரவத்திற்காக………

மகிக்கு இந்த ஷோ ரூம் அவனிடமிருந்து பறிக்க பட்டால், தனது கௌரவம் போகும் என நினைக்கிறான்.

விவேகன் இந்த ஷோ ரூமை மூடி விட்டால், தான் இழந்த கௌரவம் மீண்டு விடும் என நினைக்கிறான்.

மகிக்கு, விவேகன் என்னும் அரக்கனை தெரியும், அவர்களின் (கூட்டமைப்பு)சங்கத்திற்கு சென்றால்… அவன் புகழ் மட்டும் தான் கேட்கும்.

என்னமோ மற்றவர்கள் எல்லாம் வாழவே தகுதியற்றவர்கள் எனும் நினைப்பில், பேசப்படும் முகஸ் துதி என்பார்களே. அதன் நெடி தான் அதிகம் இருக்கும்.

இதையெல்லாம் கடந்து விடுவான் தான். ஆனால், அவனின் செயல்கள் மேல் இப்போது ஒரு பயம் வந்தது.

விவேகனுக்கு மனிதர்களை பார்க்க தெரியாது. எதை கொடுத்தாலும் அரைக்கும் மிஷின் போல்…. கரும்பு சாரெடுக்கும் மிஷிணிற்கு அரைப்பவனின் கை என்று தெரியுமா…. இல்லை கரும்பென்று தெரியுமா…..

அனைத்தையும் பிழிவது மட்டுமே, அதன் வேலை. அப்படி தான் விவேகனும், தன் காரியம் ஆக, எது வேண்டுமோ செய்வான். அது குறித்து யாரும் கேள்வியும் கேட்க மாட்டார்கள்..

விவேகனுக்கும், மகி என்னும் சாத்வீகனை பற்றி தெரியும்… வளர்ந்து வருபவன் என… சங்ககளுக்கு வரும் போதெல்லாம் பார்த்திருக்கிறான்…. எங்கோ ஒரு மூலையில்….

சட்டென அவன் தனது பாதைக்கு வருவான் என கற்பனை கூட செய்யவில்லை விவேகன்…. அதனால் தான் இந்த வன்மம் மகி மேல்.

தன்னை எப்படி, ஒரு வளர்ந்து வருபவன் எதிர்க்கலாம், ‘நான் அங்கு போட்டி இடுகிறேன் என தெரிந்ததும் அவன் விலகி இருக்க வேண்டாமா….’ என்பது தான் விவேகனின் எண்ணம்.

மகிக்கு புரியவில்லை, கிட்ட தட்ட அனைத்தும் அவன் கையில் இருக்கிறது… ஏன் இன்னும் அவன் தன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என.

ஆனால் இந்த விஷயம் தனக்கு தெரியும் என்பது போல் ஒரு செய்கை மகியிடம் இல்லை. தன்னை இயல்பாகவே காட்டி கொண்டான் வெளி பார்வைக்கு.

ஆனால் வீட்டில் அனைத்திற்கும் சேர்த்து படுத்துகிறான் தானே,

மகிக்கு இப்போது யோசிக்க நேரமில்லை இன்னும் ஒன்று இரண்டு மாதத்தில் அவர்கள் இந்த ஷோ ரூம்மை மூடி விடுவார்கள்…. ஆம் அப்படி தான் அவனால் நினைக்க முடிந்தது.

ஏனெனில் அவர்களுக்கு தேவை அது தான்…. பணம் கொடுத்து சரி கட்ட முடியாது.

பார்ப்போம், எதுவாக இருந்தாலும் தன் எதிரியிடம் இருந்தே வரவேண்டும் என…. மகி தனது வேலையை செய்தான்…. அது தான் வேடிக்கை பார்ப்பது.

அந்த ஷோ ரூம் ஆரம்பிக்கும் போது அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்திருந்தான். எனவே அந்த தொகையும் திரும்ப வராது.

மேலும் செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடாக தன் சொத்துக்கள் பிடுங்க படும்.

அதன் பின் தனது நிலை, தன் குடும்பத்தின் நிலை எவ்வளவு பெரிய அவமானம்…. அதற்கு முன், தானே அதை முடித்து வைக்க நினைத்து செய்த ஏற்பாடு தான்….

விவேகனை முழு மூச்சாக எதிர்ப்பது….. அதற்கு தன்னை தயார் செய்து கொள்வது, எப்பாடு பட்டாவது… தனது இடத்தை ஷோரூமை தக்க வைத்துக் கொள்வது.

அதற்காக மகி எடுத்திருக்கும் முடிவு தான், தன் தலையில் மட்டும் அல்லாது, தன்னுடைய மனைவி மக்கள் தலையிலும் சேர்த்து…. **அள்ளி போடுதல்.

நான் தனியாக செய்ய வேண்டிய செய்யலை…. குடும்பம் என்ற கட்டுக்குள் நின்று என்னால் செய்ய முடியாது…. என உணர்ந்தான்.

எங்கேயும் சிக்கி கொள்ளாமல், தன் குடும்பத்தின் நிழல் தன் மேல் படாமல் இருந்தால் தான்…. அது அவர்களையும், தன்னை பாத்திக்காது…. அதனால் அவர்கள் எனக்கு தேவையில்லை என தெளிந்தான்.

எப்போதும் குடும்பம் என்பதை பெரிய பாரமாக நினைப்பவனுக்கு, இப்படி ஒரு சாக்கு தேவைப்பட்டது போல, அதனால் போதும் இந்த சம்சார வாழக்கை என நினைத்து விட்டான் போல.

அதனால், முதலில் குடும்பத்தை பிரிய நினைத்தான் மகி, துர்காவிடம் விவாகரத்து கேட்கிறான். ஜிவனாம்சம் என்ற பெயரில் அவளிற்கு பாதி சொத்து பிரித்து கொடுத்து விடலாம்.

தனக்கு எது என்றாலும் பரவாயில்லை. தன்னை சார்ந்தோருக்கு ஏதேனும் என்றால், பார்த்துக் கொண்டிருக்க முடியாதல்லவா.

முதலில் மனைவி குழந்தைகளை தள்ளி வைக்க நினைத்தான். அவனிற்கு முதலில் ஓடியது அது தான். அதனால், தன் குடும்பத்தில் பிரச்சனை என்பதையும்….

தான் விவாகரத்து கேட்க போவதையும் பற்றி, வெளியே கசிய விட்டான். இதோ நாளை தனது பெரிய சொத்துகளை துர்கா பெயருக்கு மாற்றம் செய்ய போகிறான். ஜீவனாம்சம் என்ற பெயரில்.

அண்ணன் தம்பிகளின் சொத்துகள் ஏற்கானவே பிரித்தாகி விட்டது அதனால் அதை பற்றி பயமில்லை.

எனவே மகி தனது யோசனையில் தெளிவாக இருந்தான். அதன் படி நாளை சொத்து மாற்றம். விவாகரத்து பத்திரத்தில் துர்காவை கையோப்பம்மிட வைத்து தான்.

அது பற்றி தான் வினோவிடம் பேசிக் கொண்டிருந்தான் மாலை.

ஆனால், இந்த விஷயங்கள் அனைத்தையும் துளி கூட உறுத்தல் இல்லாமல் மகியால் செய்ய முடிந்தது.

துர்கா என்பவளை தன் மனைவியாக நினைக்க வேண்டாம், ஒரு சராசரி பெண்ணாக கூட அவனால் நினைக்க முடியவில்லை.

அப்படி அவன் கண்களை… அவனின் கனவு, ஆசை, கௌரவம் இன்னும் எத்தனையோ மறைத்து விட்டது போல… இது எதையும் இன்னும் வீட்டில் சொல்லவில்லை. எப்படி ‘தான் தோற்று விடுவேன்’ என சொல்லுவது என அமைதியாக இருக்கிறான் மகி.

ஆனால் மகிக்கு யார் சொல்லுவது…. வீடு என்பது உன்னுடைய பணத்தையோ, நல்ல பெயரையோ, நீ முதன்மையானவன் என்பதையோ மட்டும் பார்ப்பதில்லை.

உன்னுடைய தோல்வியையும், கோவத்தையும், ‘நீ ஒன்றுமே இல்லை இந்த உலகில்’ என உன்னை சுற்றி இருப்போர் துற்றும் போதும், இந்த வீடு தான் அனைத்தையும் சத்தமில்லாமல் தாங்கி, உனக்கு புத்துயிர் தந்து…. திரும்பவும் அதே இடத்தில் நிற்க வைக்கும்…. இதெல்லாம் புரியவில்லை அவனிற்கு, புரியும்…. வாழ்க்கை அவனிற்கு புரிய வைக்கும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!