Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 9 1

அத்தியாயம்                9

துர்கா அப்படி கேட்கவும் மகிக்கு பழைய அலட்சியம் வந்து ஒட்டிக் கொண்டது முகத்தில். அப்படி என்ன தான் சொல்லபோகிறாள் கேட்போம் என தான் தோன்றியது..

துர்கா இப்போது அவனை பார்க்கும் வண்ணம் எழுந்து வந்து அவன் எதிரில் அமர்ந்து. “நீங்க ரொம்ப குழம்பி போய் இருக்கீங்க, இல்ல உங்கள குழப்பி இருக்காங்க” என்றாள் சம்மந்தமே இல்லாமல்.



Advertisement

துர்கா சற்று பயந்த வண்ணமே இந்த வார்த்தையை சொன்னாள், எங்கே கத்துவானோ, அடித்தே விடுவானோ என பயந்த வண்ணம் தான் சொன்னாள்.

ஆனால், அதற்கு மாறாக மகி அமைதியாக இருந்தான். ‘நான் பலவீனமானவனா’ என்னை அடுத்தவர் எடைபோடும் அளவா என் செயல் உள்ளது என எண்ணம் வந்தது.

தன் மனையாளையே பார்த்துக் கொண்டிருந்தான். துர்காவும், அவன்  எதுவும் பேசாததால். “நீங்க ஒரு பத்து நாள், இந்த ஷோரூமை விட்டு தள்ளி இருங்க,” என்றாள்.

Advertisement

“அதாவது, கொஞ்சம் தள்ளி நின்னு யோசிங்க, உங்களுக்கு ஏதாவது வழி கிடைக்கும்.” என்றாள். சிறிதான குரலில் தெளிவாக அவள் சொல்ல கேட்டிருந்தவனுக்கு.

Advertisement

எப்படி முடியும், நான் அந்த பக்கம் சென்றால், இங்கு கேஸ் ஏதாவது கொடுத்துவிட்டால், என தான் தோறின்யது.

மேலும், தன் அப்பாவை பற்றிய சிந்தையில் இருந்தவனது மூலையில் இப்போது கோவம் வரவில்லை துர்காவின் பேச்சை கேட்டு, மாறாக தன் அப்பா இருந்திருந்தால் இ’ப்படி ஒரு யோசனை வந்திருக்குமோ’ என்ற எண்ணம் வந்தது அவனுள்… எனவே இன்னும் அவளை ஊடுருவி பார்த்தான்.

அவளே தொடர்ந்து “நீங்க நாளைக்கு, அட்வகேட் கிட்ட பேசிட்டு, நானோ, இல்ல…. வேண்டாம், வினோவ இங்க பார்க்க சொல்லிட்டு போங்க. ஒரு, ஒரு வாரம்.” என இவள் இலகுவாக சொன்னாள்.

Advertisement

மகிக்கும் கேட்டு பார்க்கலாம், தன்னை ஏதோ பிடித்து வைத்திருப்பது போலே தான் உணர்ந்தேன். மேலும், இதை வேறு விதமாக செயல்படுத்தவும் தோன்றியது அவனிற்கு. அதனால் ‘சரி’ எனும் விதமாகவே அவனின் தலை அசைந்தது.

பார்த்திருந்த துர்காவிற்கு, அய்யோ சரி என்றே சொல்லிவிட்டானா என தான் தோன்றியது. இது எப்படி நடந்தது என புரியவே இல்லை அவளிற்கு.

அந்த சந்தோஷத்தை கூட முகத்தில் காட்டாமல் எழுந்தாள் துர்கா. மணி அதிகாலை மூன்று. இது போலெல்லாம் அவன் முகம் பார்த்து பேசுவது இதுவே முதல் முறை… என தனது நிலை, குறித்து நினைத்துக் கொண்டே அவள் எழும்போது…

அவளையே பார்த்திருந்த மகிக்கு, அவளை அனுப்ப மனமில்லை போலும் “ஸ்ரீ, இன்னுரு காபி தரியா”  என்றான்.

துர்காவும் ஒன்றும் சொல்லாது, உள்ளே சென்று, இருந்த பிரட்டை, ரோஸ்ட் செய்து முதலில் கொடுத்துவிட்டு, காபி கலந்து எடுத்து வந்தாள்.

அத்தனையும் காலி செய்திருந்தான் மகி, ‘உனக்கு வேணுமா’ என கூட கேட்கவில்லை, காபியையும் குடித்து முடித்து தான் எழுந்தான்.

இவளை பார்த்து “காலையில் 9 மணிக்கு ரெடியா இரு, ஷோ ரூம் போகணும்” என்றான். பின்பு சென்றுவிட்டான் தன் ரூமிற்கு.

துர்கா சிரித்துக் கொண்டே சென்றால் உறங்குவதற்கு. எங்கே தூக்கம் தான் வரவில்லை. ஆனால், மகி படுத்த உடன் உறங்கி விட்டான். நிம்மதியான உறக்கம் போலும், 8 மணிக்கு தான் விழிப்பே வந்தது மகிக்கு.

மகி கீழே வரும்போது சரியாக மணி ஒன்பது, அப்போது தான், சர்வேஷ்க்கு இட்லி ஊட்டிக் கொண்டிருந்தாள் துர்கா. கமலேஷை ஸ்கூல்லுக்கு அனுப்பி விட்டு, சர்வேஷ் சைக்கிளில் அமர்ந்து அந்த ஹாலை சுற்றிக் கொண்டிருக்க, இவள் அவனின் பின்னால் சுற்றிக் கொண்டே ஊட்டிக் கொண்டிருந்தாள்.

தலைக்கு குளித்த, துண்டை கூட இன்னும் அவிழ்க்கவில்லை, ஒரு ஆரஞ்சு வண்ண காட்டன் சுடியில் நெற்றியில் பொட்டு கூட வைக்கவில்லை குங்குமத்துடன், ஓய்ந்த தோற்றமாக சர்வேஷுடன் போராடிக் கொண்டிருப்பவளை பாத்துக் கொண்டே இறங்கினான் மகி.

மகியின் பெரியம்மா, அங்கு கிட்செனில் மகிக்கு இடியாப்பம் செய்துக் கொண்டிருந்தார். மகிக்கு இட்லி இறங்காது. காலையில் இடியாப்பம் தேங்காய் பால் இருந்தால் பிடிக்கும்…. காரத்திற்கு ஏதோ ஒரு சட்னி போதும் அவனிற்கு.

வைதேகி, அங்கு பால் எடுத்துக் கொண்டிருந்தார். மகியை பார்த்ததும், சர்வேஷ் “ப்பா…” என வேகமாக சைக்கிளை அழுத்திக் கொண்டு அவனிடம் வந்தான். தூக்கு என்னும் விதமாக கைகளை நீட்ட, மகியும் அவனை கீழே குனிந்து தூக்க..

துர்கா தான் “பார்த்துங்க ஷர்ட்” என்றாள். சதுரங்க கட்டம் போல, கருநீலம் மற்றும் வெள்ளை நிற செக்குடு காட்டன் ஷர்ட், வேட்டி அணிந்து இருந்தான்.

துர்கா இப்படி சொல்லவும், அங்கு யாருமில்லை என நினைத்தான் போல, யாரும் இருந்தாலும் கவலை படப்போவதில்லை அவன்.

அவள் அணிந்திருந்த ஷாலை எடுத்து, தன் மகனின் வாய் துடைத்து, மற்றொரு பகுதியை தனக்கும் தன் மகனிற்கும் நடுவில் தன் மேல் போட்டுக் கொண்டு, சர்வ சாதரனாமாக பூஜை அறைக்கு சென்றுவிட்டான்.

‘பே வென’ விழித்தபடி நின்றாள் துர்கா, போனவன் தனக்கும் தன் மகனிற்கும் திருநீறு வைத்து திரும்பி வரும் வரை அவள் அப்படியே நிற்க.

மகி ”சரி, நீ போய் சீக்கிரம் கிளம்பு” என்றான். அதில் கலைந்தவள், கிட்செனுள் சென்று கை கழுவிக் கொண்டு நகர போக, வைதேகி நிறுத்தி “அவனுக்கு சாப்பாடு வைத்து விடு” என்றார்.

மகியும், தன் மகனுடன் வந்து அமர, வைதேகியும், பெரியம்மாவும் ஹாலிற்கு சென்றனர். மகியிடம் எதுவும் இப்போதெல்லாம் இருவரும் பேசுவதே இல்லை.

துர்கா, தட்டம் வைத்து உணவு பரிமாரி, சர்வேஷை தூக்கி சென்று வாய் கழுவி இறக்கி விட்டாள். அவனும் ஹாலிற்கு விளையாட சென்றுவிட்டான்.

மகி திரும்பவும் “நீ போ, நான் போட்டு சாப்பிட்டுக்கிறேன்” என்றான்.

“இல்ல பராவயில்லை” என சொல்லிய படி அவன் அருகிலேயே நின்றிருந்தாள், ஏதும் பேச்சுக்கள் இல்லை இருவரிடமும்.

துர்கா இன்னும் பார்த்த படியே நிற்க ”என்ன” என்றான் சற்று காரமாக.

“இல்ல அத்தைக்கிட்ட இன்னும் சொல்லல, உங்க கூட வெளிய போறத பத்தி” என்க.

“நான் சொல்லனுமா…” என்றான். இவள் அப்படியே நிற்க. சென்றுவிட்டான் ஹாலுக்கு.

தன் அன்னையிடம் “அம்மா, நான் ஸ்ரீயை, ஷோ ரூம் கூட்டிட்டு போறேன்.” என்றான்.

அவரும் “சரிப்பா, போயிட்டு வாங்க” என்றார்.

துர்கா ரெடியாகி வந்தாள், அழகான வைலட் நிற சில்க் காட்டன் புடைவையில், அவளின் அடர்த்தியான கூந்தலை பின்னி, கொஞ்சமாக  மல்லிகை பூ வைத்து, லேசான அடர் மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு, இதமான நறுமணத்தில் வந்து மகியின் பின் புறம் நின்றாள்.

மகிக்கு, அவள் வந்து நின்றதை உணர முடிந்தது. திரும்பி பார்க்க வேண்டும் என தான் தோன்றியது ஆனால், அமைதியாக போன் பார்த்துக் கொண்டிருந்தான்.

வைதேகி அவளை பார்த்து “சாப்பிட்டியா” என்றார்.

“ம், கிளம்பறோம் அத்தை.” என்றாள்.

வைதேகிக்கு இருவரையும் ஜோடியாக பார்த்ததும் நல்லதாக சொல்ல ஆசைதான், ஆனால் அதற்கும் மகி எங்கேனும் முறுக்கி கொண்டால் என்ன செய்வது என அமைதியானார்.

இவர்கள் கிளம்பும் போது சர்வேஷ் அங்கிருந்தால், அழுவான் என, அவனை ரூமினுள் எடுத்து சென்றிருந்தார் பெரியம்மா.

மகிக்கு போன் வந்தது, அட்வகேட் வந்துவிட்டார், என  வினோ அழைத்திருந்தான்.

பின்பும் ஏதேதோ போன் வர பேசிக் கொண்டே வந்தான். துர்கா அவனின் போன் பேச்சுகளை காதில் வாங்கிக் கொண்டே, அமைதியாக,  தன் கணவனுடன் காரில் செல்லும் இந்த நேரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

மிகவும் விரைவாக ஷோ ரூம் வந்தது போல் இருந்தது துர்காவிற்கு, இறங்கிய உடன் மகி, இவளை ‘வா’ என கூட சொல்லவில்லை, போன் பேசிக் கொண்டே சென்றுவிட்டான்.

மகி உள்ளே சென்று ஒரு ஐந்து நிமிடம் கழித்து தான் துர்கா அவனின் கேபினுக்கு போய் சேர்ந்தாள்.

அங்கு இவர்களை எதிர்பார்த்து, அந்து புது அட்வகேட் இருந்தார். கூடவே வினோ.

நாற்பதுகளில் இருப்பார், நெற்றியில் திருமண் சாற்றி, நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருந்தார், பார்த்தசாரதி.

மகி, அவர்க்கு, ‘தன் மனைவி’ என துர்காவை, அறிமுகம் செய்து வைத்தான். வினோவை முன்பே தெரியம் ஆகையால் பேச்சுகள் தொடர்ந்தது.

துர்காவிற்கு இப்போது  தான், நான் ஏதோ சிறிதாக சொல்ல, இவர் ஏதோ பெரிதாக செய்கிறார் என தோன்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!