Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-4

பாப்புவின் கண்ணீர் குரலில் உறைந்து நின்ற வசீகரனின் மனம், அவனின் தாய் இந்நேரம் இங்கு இருந்து இருந்தால், நன்றாக இருக்கும் என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. அவரை வற்புறுத்தி சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தவன் இவன் தானே. வசீகரனின் தந்தை வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட, இவன் அவனின் தாயையும் சேர்த்து அனுப்பி, அப்படியே ஒரு ஆறுமாசம் ஐரோப்பிய நாடுகளை சுற்றிபார்த்துவிட்டு வருமாறு சொல்லி, வற்புறுத்தி அனுப்பு வைத்திருந்தான். வசீகரனின் தந்தை எங்கு இருந்தாலும், […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-3

ஒரு நிமிடம் கிருஷ்ணாவின் பார்வையில் உறைந்த உமையாள், அடுத்தகனமே தெளிந்து, தன்னை தெளிவித்து கொண்டு, ஏற்கனவே அறிமுகமானவர்களை, மீண்டும் சந்திக்கும் போது சிந்தும் அளவான நட்பு பாராட்டும் புன்னகையுடன், அவனை நெருங்கி, “கிருஷ்ணா, எப்படி இருக்கீங்க” என்று கேட்க, அவனோ அவளின் புன்னகைக்கு பதில் புன்னகை தர வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல், இயந்திரதத்தை ஒத்த குரலில், “யா பைன், நீங்க” என்று இவ்வளவு நேரத்தில், முதல் முறையாக தன் திருவாய் மலர்ந்து, அவளின் […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-2

பிறப்பால் மட்டுமே சில விஷயங்கள் மறுக்கப்படுவது எவ்வளவு கொடியதோ, அதே அளவு கொடியது, பிறப்பால் மட்டுமே திணிக்கப்படும் விஷயங்களும். வசீகரன் பரம்பரை பணக்கார குடும்பத்தின் ஏகவாரிசாக பிறந்த ஒரே காரணத்தினால், குடும்ப தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது தான் திறமை என்ற எண்ணம் கொண்ட வசீகரனின் தந்தை, அவனை குடும்ப தொழிலை ஏற்று நடத்தமாறு, அவனின் படிப்பு முடிந்த கையோடு வற்புறுத்த தொடங்கினார். வசீகரனின் எண்ணமோ, முன்னோர்கள் எழுப்பிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வதில் என்ன பெருமை […]

Readmore

மருவக் காதல் கொண்டேன்-1

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னையில், பெரிய பெரிய பங்களாக்கள் எல்லாம் தனி தனி கோட்டைகளாய் அமைந்த அந்த பணக்கார வீதியில், பெரிய நீச்சல் குளம், அலங்கார தோட்டம் என கம்பீரமாய் நின்ற அந்த பங்களாவில், பறவைகள், மனிதர்கள் என எல்லோரும் தங்கள் பணி முடிந்தது, தங்கள் கூடுகளுக்கு திரும்பும் அந்த அந்திமாலை நேரம் அது. சொல் வேந்தர் சுகிசிவம் அவர்களில் கணீரென குரலில் பூசலார் நாயனார் பற்றிய உரை அந்த திறந்த வெளியில் எதிரொலிக்க, உரைக்கு […]

Readmore