Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒளி சிந்தும் இரவு 10.2

மேலும் பத்து நாள்கள் முடிந்திருக்க, முன்னறிவிப்பின்றி சத்யனும் சரவணனும் வீட்டிற்கு வந்தனர். மாதவன் இன்ஸ்டியூட்டிலிருக்க, கல்பனா சமையலறையில் இருந்தார்.     அன்பரசு வீட்டிலில்லாததால் ஜனனியை பார்த்துக்கொள்ள வந்திருந்த சுகந்தி, ஜனனியை பாட்டு க்ளாஸில் விட்டு வந்து நாளைக்கு பள்ளியில் கொடுக்க வேண்டிய ப்ராஜக்ட்டை மகளுக்காக செய்து கொண்டிருந்தாள்.     யாரோ நிற்பதுபோல் தோன்ற திரும்பியவளின் முகம் ஆனந்த அதிர்வில் பரவசமடைந்து பின்னே சில நொடிகளில் கோபமாய் மாறியது. சுகந்தியின் பாவனையில் இருவரும் மௌனமாய் சிரிக்க, “இரண்டு நாள் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 10.1

அத்தியாயம்  10     மாதவன் விருப்பமின்மையை தெரிவித்ததிலிருந்து துவண்டு விட்டார் ரங்கசாமி. அன்பரசை மருகனாக  ஏற்ற பின்னே வேறொருவனை பார்க்க நினைத்தாலும் அன்பை போல் வருமா என்றும், அப்படியென்ன தன் மகள் குறைந்துவிட்டாள் என்றும் மனம் வெம்ப, உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.    இரண்டு நாள்களாக இந்நிலை நீடிக்கவே நலமிழந்தார் ரங்கசாமி. லேசாய் நெஞ்சு வலிப்பதாய் சொல்ல, பதறிப்போனார் ஜானகி. மகளிடம் சொல்லி உடனடியாக மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றனர்.    அசிடிக் ப்ராப்லம்தான். ஆனால் உடல் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 9.2

அத்தனை சோர்விலும் சத்யனுக்கு அழைத்தான் அன்பரசு. அழைப்பை ஏற்றதும் “என்னடா சுகந்திகிட்ட பேசியிருக்க?” என்றான் ஆர்வத்தோடு.    “ம் நிறைய பேசினேன்” என்றான்.    “சத்யா…” என உற்சாகமாக கத்தியவன், “எப்போ ஊருக்கு வர?” என்றான் ஆவலாக.    “டேய் இன்னும் கல்யாணம் பத்திலாம் யோசிக்கலடா”    “ஆனாலும் சுகந்தியைப் பத்தி யோசிச்சதான?” என பாராட்டி, “முடிஞ்சவரை சீக்கிரம் கல்யாணம் செய்துக்க பாரு சத்யா. அப்பாக்கும் அத்தைக்கும் இதைவிட பெரிய கிஃப்ட் உன்னால கொடுக்கவே முடியாது”  என்றான் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 9.1

அத்தியாயம்  9     மாதவன் குளித்துக்கொண்டிருக்க அவரின் மொபைல் ஒலிக்கவே, “மாமா சத்யன்கிட்டயிருந்து போன்” என உரக்க சொன்னாள் சுகந்தி.     “பேசும்மா, இதோ வந்துடறேன்” என்றார் உள்ளிருந்து.     அத்தை இறந்தபோது சத்யனிடம் பேசியது. அதுவும் தானாய் போய் பேசவும் அதற்கான பதிலை மட்டுமே தந்தான். அதன்பின் சேகர் பலமுறை சத்யனிற்கு அழைத்து பேசியிருக்கிறான், சத்யனும் சேகருக்கு அழைத்து பேசுவான். ஆனால் தன்னிடம் பேசியதில்லை ஆதலால் தற்போது அழைப்பை ஏற்க தயக்கமாக இருக்கவே ஏற்கலாமா வேண்டாமா […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 8.2

ஷோரூமில், “எந்த கார் வாங்கலாம் சுகந்தி, ரொம்ப பணம் இல்ல, இருபத்தி அஞ்சு லட்சம் இருக்கு. அவ்வளோதான் அட்வான்ஸ் கொடுத்தாங்க, அதுக்கேத்த மாதிரி பாரு” என்றான் அன்பரசு.     அன்பரசு சொல்வது போல் பார்க்கலாம் என சுகந்தி யோசிக்க, ஷோரூமில் அன்பரசை கண்டுகொண்ட ஒருவன், “சார் நீங்கலாம் இப்படி சொல்லலாங்களா? இப்போ பெரிய பட்ஜட் படத்துல நடிச்சிட்டிருக்கிங்க. உங்க ரேன்ஜ்சுக்கு பாருங்க சார்” என்றான் இன்முகத்தோடு.    சுகந்திக்கு ஒருமாதிரி ஆகிட, “அன்பு… சத்யனுக்கு போன் செய்து […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 8.1

அத்தியாயம்  8    அதிகாலை நாளிதழை பார்த்துக்கொண்டிருந்தார் ரங்கசாமி. கணவனருகே வந்தமர்ந்த ஜானகி “எதோ யோசனையாவே இருக்கிங்க. இப்போ கூட பேப்பரை கையில வச்சிருக்கிங்க, ஆனா உங்க கவனம் அதுல இல்ல. என்னனு சொன்னா எனக்கு தெரிஞ்சதை சொல்வேன்ல?” என்றார்.    “முல்லை எழுந்துட்டாளா?”    “உங்க டென்ஷன்லயே நேத்து நைட் ரொம்ப நேரம் கழிச்சுதான் தூங்கியிருப்பா போல. பனெண்டு மணிக்கு தண்ணி எடுக்க வந்தப்போ ரூம்ல லைட் எரிஞ்சது. லேட்டாதான் எழுந்துப்பா”     “ஹம்… நேத்து […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 7.2

    “லூசு… என்னை நினைச்சு அப்படி சொல்லல. நம்ம குடும்பத்தை நினைச்சு பயமாயிருக்குனு சொன்னேன்”     “கோபத்துல முதல் மருமகளை தள்ளி வச்சதால, உன் பொண்டாட்டியையும் கொடுமை பண்ணுவாங்கனு நினைச்சிட்டியாடா? என் மாமா அப்படிபட்டவர் இல்ல”     “லூசு…” என தலையில் லேசாய் குட்டியவன், “என் அப்பா பத்தி எனக்கு தெரியாதா?” என கடிந்து, “பிரச்சனை அதுயில்ல. சத்யனும் கல்யாணம் செய்துக்கமாட்டேங்குறான். சரவணன் காதல் தோல்வினு பைத்தியகாரதனமா அமெரிக்கா போய்ட்டான். எதோ காரணத்துனால உனக்கும் கல்யாணம் பிடிக்கல. […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 7.1

அத்தியாயம்  7     முல்லை வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தியவனுக்கு வீட்டினுள் செல்லலாமா என்ற யோசனை வர, அங்கே கேட்டினுள் இன்னொரு காரும், மூன்று பைக்குகளும் இருந்ததை பார்ததவன், ‘ஒ… அவரோட அக்கா, தம்பி ஃபேமலி வந்திருக்காங்க போல. பரவால்ல, பிரச்சனைன்னதும் வந்துட்டாங்க’ என மெச்சுதலாய் நினைத்தவன், பிரச்சனை கஜேந்திரனாலா இல்லையா என அறிந்துகொண்டால் நிம்மதியாகிடலாமே என முடிவெடுத்து கேட்டின் உள்ளே பைக்கை செலுத்தினான்.    “தம்பி பிரச்சனை பண்ண வீட்டுக்கே வந்துட்டிங்களா?” என இடைமறித்தான் காவலாளி. […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 6.2

குவைத்தில் ஷுட்டிங் முடித்து மீண்டும் சென்னையில் இருபதுநாள் தங்கியிருந்து நடித்தான். நான்கு நாள் கழித்து மீண்டும் ஷுட்டிங் இருக்கவே, உடல் ஓய்விற்கு ஏங்கியபோதும் ஜனனிக்காகவும், சுகந்திக்காகவும் வீட்டிற்கு வந்தான்.    சத்யனுக்கு தான் அளித்த ஒருமாத கால அவகாசத்தில் இருபதுநாள் முடிந்திருந்ததால் இன்னும் பத்து நாள் கழித்து நல்ல பதில் சொல்வான் என்ற அற்ப நம்பிக்கை இருந்தது. இனி சுகந்தியிடம் பேசனும். நேரடியாக மறுமணம் குறித்து பேச வேண்டாம். வேறு மாதிரி பேசலாம் என்ற நினைப்போடு வீட்டிற்கு […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 6.1

      அத்தியாயம்  6     மகளுக்கு திருமணம் முடிக்கும்வரை ஆரோக்யத்தோடு இருக்கவேண்டும் என்று அத்தனை கவனமாய் பார்த்துக்கொள்வார் தன் உடலை. தற்போது மனம் அமைதியற்றுப்போக உடல் தன்போல் வலுவிழந்துவிட்டது ரங்கசாமிக்கு.     சர்கரையின் அளவும், இரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளதென்றும், மருத்துவமணையில் தங்கியிருந்து மருத்துவம் பார்க்கவேண்டும் என்றும் மருத்துவர் சொல்ல, வைத்தியம் பார்க்க சம்மதித்தாள் முல்லை.     இரண்டு நாள் கழித்து சற்றே தேறி வந்தார் ரங்கசாமி. மகளின் வருங்காலத்தை நினைத்து நிலைகொள்ளவில்லை மனம். இன்னும் தானாக […]

Readmore