Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kaaval neethaanae kaavalanae

காதல் நீதானே காவலனே..! – 5

காவல் 5:   மீண்டும் ஒரு பயணம் அவனுடன். எப்படி உணர்கிறாள் என்று சக்திக்கே தெரியவில்லை. கொஞ்சம் பாதுகாப்பாகவும் உணர்ந்தாள். அதே சமயம் அதிக பயமாகவும் உணர்ந்தாள். அவளின் எண்ணப் போக்கு எதுவுமே வருணின் கருத்தில் படவில்லை.அவனுக்கு கருத்தில் இருந்தது எல்லாம் வேறு சில சிந்தனைகள் மட்டுமே.  காரில் ஒலித்த இளையராஜா பாடல்களில் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டு வரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள் சக்தி. […]


Kaathal Neethaane Kaavalane..! – 4

காவல் 4:   போனைப் பேசிவிட்டு சக்தியைப் பார்த்துக் கொண்டிருந்த வருணின் மூளைக்குள் ஓடியது எல்லாம் சற்று முன்பு கேள்விப்பட்ட செய்திதான். அவனுடைய கணிப்பு சரியாகிப் போனதில் அவனுக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை. என்ன எதிர்பார்த்தான் சக்தியிடம்..? ஒரு இரவில் பார்த்த பெண்ணிற்காக இவ்வளவு ஏன் செய்தான் வருண்..? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அவன் போலீசாக யோசித்ததால் தான் கிடைத்திருக்கிறது.. சக்தியின் தோழி ஷிவானியின் வீட்டிற்கு செல்லும் வரை அவனுக்கும் சக்தி மேல் எந்த […]


காவல் நீதானே காவலனே..! – 1

காவல் 1:   மழைகாலம்…அன்றும் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த மழைச்சாரல், மரம் செடிகளுக்கு புத்துணர்வையும், வேலைக்கு செல்லும் மக்களுக்கு சலிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. மழை காலங்களில் சூரியனின் உதவியையும், வெயில் காலங்களில் மழைமகளின் உதவியையும் நாடுவது மனித இயல்புதானே.நிகழ்கால சூழ்நிலையை ரசிக்கும் மனநிலைக்கு மக்கள் மாறவில்லை என்பதே உண்மை. விதிவிலக்காய் சில மழைக் காதலிகளும், மழைக் காதலர்களும் உண்டு.நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம். கொடைக்கானல்…மலைகளின் இளவரசி.பல அதிசயங்களையும், பல ஆச்சர்யங்களையும், பல […]


காவல் நீதானே காவலனே..! – 2

காவல் 2:   “சென்னைல எங்க போகணும்..?” என்றான் வருண்.லேசான தூக்கத்திற்கு சென்று விட்டாள் போலும்.சட்டென்று எழுந்த மாதிரி தோன்றியது அவனுக்கு. அவள் இடத்தின் பெயரைச் சொல்ல,மனதிற்குள் குறித்துக் கொண்டான் வருண்.சென்னையை நெருங்க நெருங்க, பேய் மழை பெய்து கொண்டிருந்தது. ‘என்ன மழை இப்படி வெளுத்து வாங்குது.எப்ப ரீச் பண்றது..?’’ என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டான் வருண். “என்ன சார் இப்படி மழை பெய்யுது..?” என்றாள் சக்தி. “எஸ்..! இப்போதைக்கு மழை குறையறதுக்கான வாய்ப்பு இல்லை.முன்னாடி ரோடே […]


காவல் நீதானே காவலனே..! – 3

காவல் 3: அனைத்தையும் முடித்து வீடு வர காலை ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. சக்தியையும் கட்டாயப்படுத்தி அவன் வீட்டிற்கே அழைத்து வந்திருந்தான். அவளை அந்த நிலையில் தனியாக விடவும் வருணுக்கு மனமில்லை.வந்த வேலையை முடித்து விட்டு…திரும்பி செல்லும் போது, அவனுடனேயே கூட்டிச் சென்று திண்டுக்கல்லில் விட்டுவிடுவது என்பது அவனின் எண்ணம்.ஆனால் சக்திக்குத் தான் அதில் உடன்பாடு இல்லை. முடியாது என்று சொல்லவும்  முடியாமல், வேறு வழியில்லாமல், வருணின் பேச்சிற்கு தலையை ஆட்ட வேண்டியிருந்தது அவளுக்கு. அழகான அந்த […]