Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 21.2

மறுநாள் விடிந்த பொழுது சந்தியாவுக்கு சோதனைக் காலமாகவே விடிந்தது. வழக்கம் போல எழுந்து அலுவலகம் செல்லத் தயாரானவளுக்கு குறித்தநேரத்துக்கு காபியும், காலையுணவும் உணவுமேஜையில் எடுத்துவைக்கப்பட்டுவிட அன்னையையோ, பெரியன்னையையோ நேருக்கு நேராகப் பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லாததால் தலையைக் குனிந்தபடியே சாப்பிட அமர்ந்தாள் அவள்.   இரண்டாவது இட்லியை விண்டு வாயில் வைக்கப் போனவள் தந்தையின் தொண்டைச்செருமலில் அசையாமல் சிலையாக, அவள் அருகில் வந்து அமர்ந்தார் தேவராஜ். அவருடன் சதாசிவமும் அமர்ந்துவிட சில நிமிடங்களில் அவர்களுக்கு ஆவி பறக்க […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 21.1

சந்தியா அமைதியான முகத்துடன் அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் கிடந்த மேஜையின் அருகே நின்று கொண்டிருந்தாள். முகம் தான் அமைதியுடன் இருந்ததே தவிர மனம் சுனாமி வந்த கடலைப் போல் சீற்றத்துடன் அலை மோதிக் கொண்டிருந்தது.   சூரியாவின் பேச்சுக்கு எதிர்வினையைத் தனது பெற்றோரிடமிருந்து எதிர்பார்த்தவளுக்கு அவர்களின் யோசனையுடன் கூடிய அமைதி குழப்பத்துடன் பயத்தையும் ஒருசேர அளித்தது. குழப்பம் எல்லாம் பெயரளவுக்குத் தான், அவள் இப்போது ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பதற்கான முக்கியக்காரணம் பெற்றோர்கள் மீதான பயமே. […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 20.2

சொன்னது போலவே மாலையில் சந்தியாவின் வீட்டுக்கு அண்ணனும் தம்பியும் சென்ற போது, வாசல்பக்கம் வரும்போதே கோமதியம்மாள் சந்தியாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது இருவரின் காதிலும் விழுந்தது.   “உன் தலைமுடியை முடியாவா வச்சிருக்க? ஏதோ தேங்கா நார் மாதிரி இருக்கு…” என்று அவர் இளைய பேத்தியின் கூந்தல் பராமரிப்பின்றி காடாய்க் கிடப்பதைக் கண்டு அங்கலாய்க்கவே   சுமித்ரா “ஆச்சி! அதுக்கு அவ என்ன பண்ணுவா? இந்த சென்னையில குடிக்கிற தண்ணியில இருந்து, சுவாசிக்கிற காத்து வரைக்கும் எதுவுமே […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 20.1

சந்தியா அமெரிக்காவிலிருந்து ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டவள் அதன் பின்னர் எப்போதும் போல வழக்கமாக அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டாள். தாய் தந்தையர், பெரியப்பா குடும்பத்துடன் அவளது செல்ல ஆச்சியும் உடனிருக்க அலுவலகம் முடித்து வீட்டுக்கு எப்போது திரும்புவோம் என்று ஆவலுடன் காத்திருப்பாள் அவள்.   சூரியாவும் ஆரியாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே வந்து அவ்வபோது தலைகாட்டிவிட்டுச் சில பல அதிரசங்களையும் உள்ளே தள்ளிவிட்டுச் செல்வர். அவர்களின் வருகை தடைபட்டால் கோமதியம்மாள் யோசனையுடன் காத்திருக்கும் […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 19.2

சந்தியா வீட்டின் முன்னே கார் நிற்கவும் இறங்கியவள் காரினுள் இருந்த சூரியாவுக்கும், ஆரியாவுக்கும் டாட்டா காட்டிவிட்டு வீட்டினுள் செல்லத் திரும்ப கார் நிற்கும் ஓசை கேட்டுச் சுமித்ரா வெளியே வந்தாள்.   சந்தியாவைக் கண்டதும் முகம் விகசித்தவள் வேகமாகக் காரின் அருகே சென்று உள்ளேயிருந்த சூரியாவிடம் புன்னகையுடன் “அண்ணா! வீட்டுக்கு வந்துட்டுப் போங்க.. ஊரில இருந்து எல்லாரும் வந்திருக்காங்க.. வந்த நாள்ல இருந்து உங்களைப் பார்க்கணும்னு சொல்லிட்டிருக்காங்க” என்று கூற சூரியாவும் ஆரியாவும் காரை விட்டு இறங்க, […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 19.1

சூரியாவும் சந்தியாவும் சென்னை வந்துச் சேர இரவு பன்னிரெண்டு மணி ஆகிவிட்டது. நல்லவேளையாக ஆரியா காருடன் காத்திருந்தான். மூவரும் விமானநிலையத்தை விட்டு வெளியேறிக் காரில் அமரும் போதே சந்தியா தூக்கக் கலக்கத்தில் தான் நடந்துவந்தாள்.   ஆரியா அவளிடம் “தியா! நீ இப்போ வீட்டுக்குப் போனா சரியா வராது… பிகாஸ் உன்னோட கண்டிஷன்ல தான் இப்போ உன் அக்கா ஜெகன்மோகினியும் இருக்கும். அதை எதுக்கு வேஸ்டா நடுராத்திரியில எழுப்பிக்கிட்டு… டேய் அண்ணா தியாவை நம்ம வீட்டுக்கு வரச் […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 18.2

மறுநாள் பொழுது விடிய உறக்கம் கலைந்து எழுந்த இருவருக்குமே மனதில் ஆயிரம் கேள்விகள். அதற்கான விடை தெரியாவிட்டால் தலை வெடித்துச் சிதறும் அளவுக்கு இருவருக்குள்ளும் குறுகுறுப்பு எழவே விறுவிறுவென்று படுக்கையிலிருந்து எழுந்து வேகமாகக் குளித்து முடித்துவிட்டு ஓரளவுக்கு தெளிந்த முகத்துடன் ஆனால் குழம்பிய மனதுடன் அறைக்கதவைத் திறந்து ஒரே நேரத்தில் வெளியே வர இருவரின் அறையும் எதிரெதிரே இருந்ததால் ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்தபடி “குட் மார்னிங்” என்றனர் ஒரே குரலில்.   ஒரே சமயத்தில் காலை […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 18.1

சந்தியா நடந்த எதையும் நம்ப இயலாதவளாய் திகைத்துப் போய் நிற்க சூரியா அவளது கன்னத்தில் பதித்த முத்தத்தின் குறுகுறுப்பு இன்னும் இருப்பதாய் தோன்றும் போதே வானில் வண்ண மத்தாப்பு பூஞ்சிதறல்கள் எழ அது எழுப்பிய சத்தத்தில் தன்னைச் சமனிலைப்படுத்திக் கொண்டாள்.   கையில் தாங்கியிருக்கும் ரோஜாப்பூங்கொத்தையும் அதைப் பரிசாய் அளித்தவனையும் மாறி மாறிப் பார்க்க சூரியா ஆவலுடன் “பிரவுனி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டு அவளை மீண்டும் அதிரவைக்க கன்னத்தில் அவன் இதழ் ஏற்படுத்திய குறுகுறுப்பு, […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 17.2

சூரியா சாயாவிடம் பேச்சு கொடுக்க முயல அவள் கண்ணில் நீர் பெருகியதே அன்றி அவள் வாய் திறந்து பேசினாளில்லை. அவளது வீடு வரும் வரை இதே நிலை நீடிக்க சூரியாவால் அவளைத் தனித்துவிட இயலவில்லை. அவளுடனே வீட்டுக்குள் வந்தவன் இன்னும் அழுதுக் கொண்டிருப்பவளைத் தேற்றும் வழியறியாது தவிக்க ஆரம்பித்தான்.   படுக்கையில் விழுந்துக் குமுறியவளை எழுப்பித் தண்ணீரைக் கொடுத்தவன் “சாயா! ப்ளீஸ்… அழாதே! லிசன்..” என்றபடி அவளின் கூந்தலைக் கோதிவிட   சாயா மெதுவாகக் கேவியபடி “நீ […]


சாரலாய் தீண்டினாய் அன்பே – 17.1

காலையில் எழுந்தச் சந்தியா அன்று வானிலை எப்போதும் போல அழுது வடியாமல் சற்று பிரகாசமான வெளிச்சத்துடன் பளிச்சென்ற வானம் அவள் அறையின் பக்கவாட்டு ஃப்ரெஞ்ச் விண்டோவின் வழியே காட்சியளிக்க சோம்பல் முறித்தபடி அதை ரசித்துவிட்டு அவள் அமர்ந்திருந்த படுக்கையின் அருகே இருக்கும் மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் ஷாப்பிங் பேக்கைப் பார்த்ததும் நேற்றைய நிகழ்வுகளின் நினைவில் முகம் சுருக்கியவள் அதை எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு குளியலறையை நோக்கிச் சென்றாள்.   பல் துளக்கிவிட்டு முகத்தை டவலில் துடைத்தபடி […]