Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தானடி வானில் மதி - epi 1

Advertisement

shasha keerthi

New member
Member
First episode potachu.. Padichu parunga..
This is my first story. ..im so excited to know your comment's.

Thanks
Shasha keerthi
 
நீதானடி வானில் மதி.....
அத்தியாயம் 1
வால்பாறை..
பூனாச்சிமலை என்னும் வால்பாறை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம். சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கும் வால்பாறை "7வது சொர்க்கம்" என்று அழைக்கப்படுகிறது, அதை சுற்றியுள்ள பல சிற்றூரில் ஒன்று உருளிக்கல்...
அந்த அதிகாலை வேளையிலேயே ஊருக்குள்ளே வரும் முதல் பேருந்தின் கடைசி இருக்கையில் மலைகளின் அழகை ரசித்தவாறு மெல்லிய சாரலாய் வீசிய மழையில் மனம் மயங்கி அமர்ந்திருந்தாள் நம் நாயகி ஷண்மதி...
சிறுவயதிலேயே தந்தையின் வேலைக்காக சென்னைக்கு‌‌ இடமாறினர். அங்கேயே பள்ளி கல்லூரியை‌ முடித்த‌ ஷண்மதி மென்பொருள் நிறுவனமொன்றில் தேர்வாகியுள்ளாள்... பணியில் சேரவுள்ள இடைப்பட்ட காலம் தங்கள் ஊரில் தாத்தா பாட்டியுடன் செலவிட வருகிறாள்
அங்க என்ன‌என்ன‌ அட்ராசிட்டி‌ நடக்குதுன்னு பாக்கலாம் வாங்க
ஷண்மதி பெயர்க்கு ஏற்றார் போல வெளிப்படையான, அதிக சமூக அக்கறை கொண்ட நல்உணர்வுகளை உள்ளடக்கிய மங்கை. சராசரி உயரம் மின்னும் நிலவாய்‌‌‌ மீன்விழி கண்கள், பிறைநெற்றியில் வில்லாகிய புருவம்.. இயற்கை வரமாய்‌ மெல்லிடை தாண்டி தவழும் நீண்ட குழல்‌‌ ... மாநிறத்திற்கும் சற்று கூட தங்கமேனி மொத்ததில் எழில் கொஞ்சம் அழகி
அக்காலத்திலே பரம்பரை பரம்பரையாக வணிகம், தேயிலை உற்பத்தி, விவசாயம் செய்து அதில் அவ்வூர் மக்களுக்கு உதவிகளை செய்து தனது அன்பால் அரவணைத்து வாழ்ந்து வருபவர் முருகப்ப கவுண்டர் - முத்தழகி தம்பதியினர். இவர்களுக்கு 2மகன் 1 மகள்
மூத்தவர் ராஜசேகர் இதய‌மருத்துவர் அவர் மனைவி கண்மணி. இவருக்கு 2 பிள்ளை சக்தி வேல் ( தமிழ்நாடு காவல் துறை) , ஷண்மதி (கணினி பொறியாளர்
2.ஆதிரை அவர் கணவர் விஸ்வநாதன் வால்பாறையடுத்த சிறுகுன்றப்பர் ஊரில் தேயிலை எஸ்டேட்டில் நடத்தி வருகிறார்.இவர்களுக்கு வான்முகிலன் ( எம்.பி.ஏ மணேஜ்மண்ட் & டெக்னாலஜி ) கவின்நிலவன்(பி.இ சிவில் ) யாழிசை‌( பி.டெக் கடைசி‌ வருடம்) என‌ 3‌பிள்ளைகள்
3. குணசேகர் பக்கத்துக்கு ஊரில் உள்ள அரசு கல்லூரியில் வணிகவியல் துறை தலைவர். அவர் மனைவி பார்வதி. . இரட்டை குழந்தைகள் மலர்விழி, கயல்வழி பள்ளி மாணவிகள்
இனி....
பேருந்திலிருந்து இறங்கி ஊருக்குள் செல்லும் கிளை பாதையில் தனது டாரலியுடன்‌ சுற்றிலும் தேயிலை தோட்டங்களை ரசித்தபடி சென்றாள் ஷண்மதி. .
அந்த இளங்காலை அமைதியை கிழித்துக் கொண்டு சென்றது ஒரு புல்லட் . அதை ஓட்டியவனோ இளையராஜா‌ பாடலை பாடியபடி அவளை தாண்டிசென்று பின்‌ நிறுத்தி திரும்பிப்பார்த்து " ஓய் யார் நீ? ஊருக்கு புதுசா யார் வீட்டுக்கு வந்த " என்றான் அவன் வான்முகிலன்..
அவன் ஒருமையில் பேச , மதி முகத்தைக் சுருக்கி பதில் சொல்லது அவனை தாண்டி செல்ல , கொழுப்பாரு கேட்டா பதில்‌ சொல்லாம போறா என்னடா முகிலா உணக்கு வந்த சோதனை, வெட்கம் வேதனை அவமானம் ச்சை என மனதில் எண்ணி " ஹெலோ மேடம் பதில் சொல்லிட்டு போறது.. கேக்றோம்ல" எ
மதியோ " நீங்க யாருனே தெரியாது நா ஏன் உங்ககிட்ட சொல்லனும்... வழிய விடுங்க டைம் ஆச்சு
"டைம் ஆச்சா ஏ நில்லு அம்மணி பேசிட்டு இருக்கப்ப நிவாட்டுக்கு போற...‌யாரூட்டுக்குனு சொல்லு அங்கண ஏறக்கிவுட்றே"
" இல்ல பரவால‌, நா‌னே போய்கிறேன்"
"ஓ இட்ஸ்‌ ஓகே , மீ சேவ ‌நோ, யு கோ.. ரைட் ரைட்" என மின்னலாய் புல்லடில் பறந்து விட்டான்
பெருமூச்சு விட்டு தன்னை நிதானபடுத்தி நடையை தொடர்ந்தாள். பொழுது புலர்ந்து கதிரவன் தன் கதிர்களை‌ பரப்பி தன் வேலையை செவ்வென செய்ய மக்களும் தோட்ட வேலைக்கு தூக்கு வாளியோடு சென்று கொண்டிருந்தனர். அவர்களை‌கடந்து தன்‌ தாத்தா வீடு இருக்கும் வீதியில் நுழைந்து வீடு அல்ல அந்த பங்களாவை நோக்கி நடந்தாள்.
வீட்டை நெருங்கிய பின்பே கண்டாள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட‌ புல்லட்டை.. இது அதுல அவன் புல்லட்டே தான். இங்க ஏன் நிக்குது. ஒருவேல உள்ள இருக்கானோ.. இங்க என்ன பண்றான்.. வாசலிலே நின்று யோசித்தவளை‌ "ஓய் அம்மணி" என ஓரு குரல் தடுத்தது.. சட்டென நிகழ்வுக்கு திரும்பிய மதி 'என்ன' என பார்வை பாக்க
" இன்னும் எவ்ளோ நேர இங்கனவே நிக்றதா உத்தேசம்..‌உள்ள வாரது என்ன ஆராய்ச்சிலா முடிஞ்சூதுங்களா அம்மணிக்கு"
ஒன்றும் சொல்லாமல் வீட்டை சுற்றி பார்வையை சுழற்றி யாரேனும் உள்ளே உள்ளனரா என தேட.. அங்கே வாசலில்இருந்து வீட்டு நுழைவுவாயில் இருபக்கமும் கண்கவரும் பலவண்ண ரோஜாசெடிகள் காய்கறிகள் செடிகள் முகாணப்பட்டன அதற்கருகே ஷெட்டில் இரண்டு ஜீப் மற்றும் மேலும் இரண்டு இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. " யார தேட்ற ஏ என்னய பாத்தா ஆளா தெரியலயாக்கும்.. யார் நீ எதுக்கு வந்த பதில சொன்னா உள்ளார போலாம் . எப்டி வசதி
"நா என் தாத்தா வீட்டுக்கு வந்தேன். எங்க தாத்தா வீடு.‌நீ யாரு என்ன விடமாட்டேனு சொல்ல"
"ஏதே தாத்தாவா! எப்படி எப்படி உனக்கு‌ தாத்தா..அவரு மை தாத்தா.. மை ஒன்லி தாத்தா.. யாருக்கிட்ட, கெளம்பு கெளம்பு எங்க தாத்தாவாம்ல...‌அஸ்கு புஸ்கு
"ஏன் அவரு உனக்கு மட்டுமேனு எழுதியா குடுத்தாறு.. எனக்கும்‌ தான் இல்லனு சொல்ல சொல்லு‌ பாக்கலாம்."தாத்தா !தாத்தா
தாத்தா ! தாத்தா! மாறி மாறி கத்தியதில் வெளியே வந்தது என்னவோ முத்தழகி ஆச்சி தான். ஆச்சியை கண்டதும் " ஏ கிழவி இது யாரு வந்து அவ தாத்தா வீடுனு கத்திட்டு இருக்கா நீ கேக்க மாட்ட.." என முகிலன் கத்த, "காதான்ட கத்தாதடா கிறுக்கு பயல" " கிழவி என்ன டேமேஜ் பண்றத‌ நிறுத்து..இது யாரு என்னனு மொத விசாரி எனக்கென்னமோ நம்ம‌ முருகப்ப கவுண்டர் மேல தான் டவுட்..‌எதுக்கும்‌ நல்ல கேட்டுகோ". என, "எடு அந்த கட்டைய என்ற புருசன நீ டவுட்டு படுரியோ...‌ அவக கேட்டாக சலங்க ‌இல்லாம ஆடுவாக..‌சித்த கம்முணு‌கட..
உங்க சண்ட‌ முடிஞ்சா கொஞ்சம் வழிவிடுங்க நா‌ உள்ள‌ போகனும்‌ என மதி கூற அப்போது தான் தன் பேரனை தாண்டி பின் நிற்கும் பெண்ணை கண்ட‌ ஆச்சி தலை‌ முதல் கால் வரை கண்ணால்‌ வருடி "மதி கண்ணு எப்படி இருக்க‌ ஆத்தா? அம்மா அப்பா லா‌ எங்கே? தனியாவ‌ வந்த‌ ஒரு போன் அடிச்சு சொல்லிருந்தா இந்தா இவன அனுப்பி பிக்கு பண்ணிருபேனே சும்மாதா சுத்திட்டு கெடப்பான்.".
"ஐம்‌ குட் ஆச்சி அம்மா அப்பா வரல ஆச்சி நா தனியாதா வந்தே
"கிழவி அது பிக்கு இல்ல பிக்கப் ஆனாலும் நீ ரொம்பவே டேமேஜ் பண்ற பாத்துக்றேன் உன்னய" முகிலன் சொல்ல அதாண்ட நானும் சொன்ன‌.. நீ வா கண்ணு"என்றி
இரு‌ மொத மேடம் யாருனு‌‌‌ சொல்லிட்டு போ.
"நிசமாலுமே உனக்கு தெரியலயா என்ற‌ பேத்தி டா... உன்ற பெரிய மாமா பொண்ணு" ஆச்சி கூறி மதியை அழைத்து செல்ல இங்கு முகிலனோ மாமா பொண்ணா தன் நினைவடுக்கில் சிறுவயது மதியை எண்ணி நின்று விட்டான். எப்படி தேடியும் முகம் வர மறுக்க கடுப்புடன் உள்ளே சென்றான்.
 
Nirmala vandhachu ???
Nalla irrukku ma
Font size konjama mathalama
Romba kutti ya irrukku
 
Top