நன்றி! நன்றி! நன்றி!

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ், 🙂

இந்திய சகோதர தோழமைகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

காதலின் கதைகளில் எனக்கும் எழுத வாய்ப்பளித்த மல்லி அக்காவுக்கு நன்றிகள் பல.

ஜேம்ஸ் பாண்ட் முகமூடியை கழட்டிட்டு வர்றதுக்கு முன்னால இந்த ID இருந்து உங்க எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லலாமேன்னு தான் இந்த போஸ்ட்.

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்ன்னு சொல்லுவாங்க. இது தான் நான் எழுதிய ரெண்டாவது கதை. அதனால கதை ஜெயிக்கலைன்னு கவலை எல்லாம் ஒதுக்கீட்டு நடந்த நல்ல விஷயங்களை எல்லாம் பேசுவோம். 🥰

நான் யாருன்னே தெரியாத போதும், நீ தானே பேபி இதுன்னு கேட்ட ஒரு நட்பு.

எபி போடறியாம்மா? அப்படின்னு நான் தொலைந்து போன நிமிடங்களில் என்னை தேடிய நட்பு.

கவிதைகளால் நான் கதை எழுத கவிதையாய் அதை கொண்டாடிய நட்பு.

பாரதியின் கவிதைகளோடு கதையும் பயணிக்க அந்த வரிகளெல்லாம் என்னையும் முழ்கடித்துவிடுகிறது என பரிட்சயமாகிய நட்பு.

காதலால் என் மனுசும் தடுமாறிய மகிழ்வான நட்பு.

விமர்சனத்தோடு நிதர்சனமும் சேர்த்து சொல்லித்தந்த நட்பு.

இன்னும் இன்னும் பல நட்புக்களை நான் தேடித் கொண்டதே எனது வெற்றியாக நினைத்து உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

அடுத்த போஸ்ட்ல என்னோட சொந்த பேருல வந்து சந்திக்கிறேன் மக்களே. 🙂

அனைவருக்கும் நன்றிகள் பல. 🙏


@Admin @Vatsala ramamoorthy @Sathya velusamy
 

Advertisement

Advertisement

Back
Top