“முதல்ல உன்னோட இந்தக் கோலத்தை மாத்து டி...” எனப் பர்வீன் கூற,
“இத எப்படி மாத்துறது... இது தானே நிஜம்...” எனப் பதிலளித்தாள் இந்துமதி.
“இது தான் நிஜம்னு உனக்குத் தெரிஞ்சா போதும்... மத்தவங்களுக்கு தெரிய தேவையில்லை... சில பொறுக்கிங்களுக்கு இது பலமா போயிடுதுல...”
“சரி தான் பர்வீன்... ஆனா என்ன பண்றது...”
“முதல்ல நல்லா டிரஸ் பண்ணு... பொட்டு வை, பூ வச்சிக்கோ, வளையல் போட்டுக்கோ... உன்னை நீயே லவ் பண்ணு... அப்புறம் இன்னொரு விஷயம்...”
“இப்போ நீ சொன்னத நான் செஞ்சாலே என்னைத் தப்பு தப்பா பேசுவாங்க... இதுல இன்னொரு விஷயம் வேறவா... அதையும் சொல்லிடு...”
“பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க... உனக்கு பிரச்சினைனா அவங்களா வரப் போறாங்க? அதையெல்லாம் நீ காதுல வாங்கிக்காத... அப்படியே உன் காதுல விழுந்தாலும் வலது காதுல வாங்கி, இடது காதுல விட்டுடு...”
“அம்மா தாயே... போதும் உன் அறிவுரை... அந்த இன்னொரு விஷயம் என்ன?...”
“சொல்றேன்... திட்டாத... யோசிச்சுத் தெளிவா முடிவு பண்ணு...”
“புதிர் போடாம விஷயத்துக்கு வா டி...”
“நீ இன்னொரு மேரேஜ் பண்ணிக்கோடி...”
“ஏய்... என்னடி சொல்ற? இன்னொரு மேரேஜ்ஜா?... முடியவே முடியாது...”
“அவசரப்படாத... பொறுமையா யோசி டி... கண்டிப்பா உனக்கு இன்னொரு மேரேஜ் ரொம்ப ரொம்ப முக்கியம்... உனக்கு மட்டும் இல்ல, உன் குழந்தையோட எதிர்காலத்துக்கும் அது முக்கியம்...”
“ப்ளீஸ், என்னைப் புரிஞ்சிக்கோடி... எனக்கு மேரேஜ்லாம் வேணாம்... நானும் என் குழந்தையும் மட்டும் இருந்துப்போம்...”
“திரும்பத் திரும்ப லூசு மாதிரி பேசாத டி... அந்த மேனேஜர் மாதிரி, உன் பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி டெய்லி ஒருத்தன் உன்கிட்ட தப்பா அப்ரோச் பண்றானுங்க... ஏன்னா, அவனுங்க உன் பலவீனத்தைத் தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கப் பாக்குறானுங்க... தனியா அவனுங்களையெல்லாம் உன்னால சமாளிக்க முடியாது... உனக்குத் துணைக்கு ஆள் இல்லன்னு தெரிஞ்சிதான் அவனுங்க இப்படி பண்றானுங்க...
“இதே உனக்குப் புருஷன்னு ஒருத்தன் இருந்தா இப்படி பேசுவானுங்களா?... அதுமட்டும் இல்லாம, அவங்க உன்கிட்ட தப்பா அப்ரோச் பண்ணாங்கன்னு நீ வெளில சொன்னா கூட, அவனுங்க நீ தான் கூப்பிட்டன்னு சொல்லுவானுங்க... இந்த உலகமும் அவனுங்க மாதிரி அயோக்கியனுங்களைத்தான் நம்பும்...
“என்னால டெய்லி இங்க வந்து தங்க முடியாது இந்து... பொறுமையா யோசி...”
“சரி பர்வீன்... யோசிக்கிறேன்...”
“சரி டி... ரொம்பப் பசிக்குது டி... ஏதாவது ஆர்டர் போட்டுச் சாப்பிடலாம்...”
“நானே ஏதாவது செய்றேன்...”
“வேணாம் டி... காலைல இருந்து அழுது அழுது உன் மூஞ்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு... நீ போய் முதல்ல ஃப்ரெஷ் ஆகிட்டு வா...”
“சரி டி... பாப்பா, வா... பாத்துக்கோ...”
“சரி... இந்து...” எனப் பர்வீன் கூற, இந்து தனது அறைக்குச் சென்றாள்.
அவள் சென்ற பிறகு,
“பாவைக் குட்டி... இங்க வாங்க... நாம விளையாடலாம்...” எனப் பர்வீன் அழைக்க,
“அத்தை... தோ... தோ... வரேன்...” என மழலை மொழியில் கூறியவாறு அவள் அருகே வந்து, அவளுடன் விளையாடத் தொடங்கினாள்.
இந்து தனது அறையில் மெத்தையில் படுத்தவாறு, தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள்...
இந்துவின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதி
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், தனது 21-வது வயதில் இந்துவின் பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
அவளது கணவன் கர்ணா மிகவும் நல்லவன். சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தான். இருவரது குடும்பங்களும் உறவினர்களே. ஒரே ஊரான சின்னமனூரைச் சேர்ந்தவர்கள்.
திருமணத்திற்குப் பிறகு, வேலை காரணமாக இருவரும் சென்னையில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தனர்.
திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்த பிறகுதான் இருவரும் ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசத் தொடங்கினர்.
அப்போது ஒருநாள் இந்து, தான் வேலைக்குச் செல்ல விரும்புவதாகக் கர்ணாவிடம் கூறினாள்.
அவளது விருப்பத்திற்கு கர்ணா எந்தத் தயக்கமும் இல்லாமல் சம்மதித்தான்.
அதன் பிறகு இருவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்குள் இருந்த தயக்கம் மறைந்து, அன்பும் நெருக்கமும் அதிகரிக்கத் தொடங்கியது.
அவர்களது முதல் திருமண நாள் வந்தபோது, இந்து மூன்று மாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.
அந்தச் செய்தி இரு குடும்பங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால் சென்னைவாசம் இருவருக்குமே பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவர்களது சொந்த ஊரில் இருந்த நிலத்திலும் விவசாய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், நீண்ட நாட்கள் சென்னையில் தங்குவது அவர்களுக்கு சிரமமாக இருந்தது.
குழந்தை பிறக்கும் வரை கர்ணா இந்துவை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டான்.
குழந்தை பிறந்த பிறகு, இந்துவையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வதற்காக கர்ணா வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கினான்.
அவளுக்கும் குழந்தைக்கும் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தான்.
அவர்களின் வாழ்க்கை அப்படியே அழகாக நகர்ந்து கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கடந்தன.
அப்போதுதான் கர்ணாவுக்கு வேலை விஷயமாக மும்பை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கர்ணாவுக்கு செல்ல விருப்பமில்லை.
ஆனால் வேலைக்காகச் சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.
வேறு வழியின்றி மும்பைக்குக் கிளம்பினான்.
மும்பையில் தனது வேலையை முடித்துவிட்டு, சென்னை நோக்கி ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தான்.
ஆனால்...
அந்தப் பயணம் அவனது வாழ்க்கையின் கடைசிப் பயணமாகிவிடும் என்று அவனுக்குத் தெரியவில்லை.
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் திடீரென விபத்து ஏற்பட்டது.
பெட்டிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின.
அந்த கோர விபத்தில் கர்ணாவும் உயிரிழந்தான்.
ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைத் தாங்கி நின்றவன்...
ஒரு மனைவியின் உலகமாக இருந்தவன்...
ஒரு குழந்தையின் தந்தையாக இருந்தவன்...
ஒரே நொடியில் அனைத்தையும் விட்டுச் சென்றுவிட்டான்.
கர்ணாவின் இறுதிச் சடங்குகள் அவர்களது சொந்த ஊரான சின்னமனூரில் நடைபெற்றன.
அன்று வரை கணவனின் துணையோடு வாழ்ந்த இந்து...
அன்றிலிருந்து கணவனை இழந்த பெண்ணாக மாறினாள்.
வெறும் 23 வயது.
வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய வயதில்...
தன் வாழ்க்கையையே இழந்துவிட்டாள்.
கையில் குழந்தை...
மனதில் கணவனின் நினைவுகள்...
முன்னால் முடிவே தெரியாத பாதை...
தனது வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் இப்படிப் புரட்டிப் போடப்படும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அவள் அழுதாள்...
வேதனையில் வாடினாள்...
ஆனால், அவளுக்காக காத்திருந்த வாழ்க்கை இன்னும் முடியவில்லை.
அது அப்போதுதான் தனது உண்மையான போராட்டத்தைத் தொடங்கப் போகிறது என்பதை இந்து அறிந்திருக்கவில்லை.
சில நாட்கள் இந்து அங்கே தங்கினாள்... ஆனால், இரு குடும்பத்தினரும் அவளையும் அவள் குழந்தையையும் பாரமாகத்தான் பார்த்தனர்.
அதனால், அவள் மீண்டும் சென்னை வர முடிவு செய்தாள். யாரும் அவளைத் தடுக்கவில்லை. தனது பெற்றோரையும், மாமியார் மாமனாரையும் தன்னுடன் இருக்க அழைத்தாள்.
ஆனால், இரு குடும்பத்தினரும் அவளுடன் செல்ல மறுத்தனர்.
பெற்றோர்களோ அண்ணனின் கட்டுப்பாட்டில்...
மாமியார் வீடோ, கணவனின் அண்ணனின் கட்டுப்பாட்டில்...
கனத்த இதயத்துடனும், விதவைக் கோலத்துடனும் சென்னை வந்தாள். தன் குழந்தையைப் பகலில் பார்த்துக்கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்தாள்.
தன் குழந்தைக்காக வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். நன்றாக உடை உடுத்தாமல், அணிகலன்கள் எதுவும் அணியாமல், ஏனோ தானோவென்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவளது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால், எல்லாம் சில மாதங்கள்தான்...
அவளது இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள சில வஞ்சக நெஞ்சங்கள் அவளை நெருங்கின.
அவளது பலவீனத்தைத் தங்களுடைய பலமாக்கப் பார்த்தனர்.
இந்துவோ, அந்த வலைகளில் சிக்காமல் தப்பித்துக்கொண்டே இருந்தாள்.
ஆனால், தனிமையில் அழுது கரைந்து கொண்டிருந்தாள்...
ஏனெனில், இரவில் அவளது வீட்டு கதவைத் தட்டுவது, அவள் வீட்டின் வெளிச்சுவரில் ஆபாசமாக எழுதுவது, அவளது தொலைபேசிக்கு அழைத்து தவறாகப் பேசுவது என, சில மனிதக் கழுகுகள் அவளை வதைத்துக் கொண்டிருந்தனர்.
இன்று, அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஒரு நிகழ்வு நடந்துவிட்டது...
எதிரியின் பலம்
வழக்கம் போல இந்து காலையில் வேலைக்குச் செல்வதற்காக, தனது வண்டியை பார்க்கிங்கில் இருந்து எடுக்கச் சென்றாள்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேஷ் வேண்டுமென்றே அவள் மீது வந்து மோதினான்.
அதில் கோபமடைந்த இந்து,
“பொறுக்கி ராஸ்கல்... எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி வேண்டும்னே வந்து இடிப்ப?” என்று கூறியவாறே அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.
அதில் ஆத்திரமடைந்த சுரேஷ்,
“நீ வேணும்கிறதாலதான் இடிச்சேன். என்னடி பத்தினி மாதிரி சீன் போடுற? இந்நேரம் எவனையாவது வளைச்சுப் போட்டிருக்க மாட்ட?” என்று மிகவும் கேவலமாகப் பேசினான்.
அதைக் கேட்டதும் இந்துவின் கோபம் இன்னும் அதிகமானது.
தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றியவள்,
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் பத்தினிதான் டா! என்னைப் பத்தி தப்பா பேச உனக்கு யாருடா அதிகாரம் கொடுத்தது?” என்று ஆவேசமாகக் கேட்டபடியே, அவனை செருப்பால் அடிக்கத் தொடங்கினாள்.
இந்து சுரேஷை செருப்பால் அடிப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் அங்கு ஓடி வந்தனர்.
அவர்களில் ஒரு வயதான பெண்மணி,
“என்னாச்சு இந்து? ஏன் இவனை அடிக்கிற?” என்று கேட்டார்.
நடந்த அனைத்தையும் இந்து அவரிடம் கூறினாள்.
அதைக் கேட்ட அந்தப் பெண்மணி சுரேஷை வசைபாடத் தொடங்கினார்.
“ஒரு பொண்ணு தனியா இருக்கிறாள்னு இப்படி கேவலமா பேசுவியா? உனக்கு அறிவே இல்லையா?” என்று திட்டினார்.
ஆனால் அங்கு நின்றிருந்த சில ஆண்கள்,
“இவ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் இவளை இப்படிக் கூப்பிடப் போறான்?” என்று கூறினர்.
அதைக் கேட்டதும் அந்த வயதான பெண்மணிக்கு கோபம் வந்தது.
“உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா, அதுக்குக் காரணம் அந்தப் பொண்ணுதானா? அவன் செய்த தப்பை விட்டுட்டு இவளைப் பத்தி பேசுறீங்களே!” என்று அவர்களையும் திட்டி அங்கிருந்து அனுப்பினார்.
பின்னர் இந்து சுரேஷை பார்த்து,
“இது தான் கடைசி. இன்னொரு வாட்டி இப்படி நடந்துகிட்டா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உன்னை உள்ள தள்ளிடுவேன். ஜாக்கிரதை!” என்று எச்சரித்தாள்.
சுரேஷுக்கு அவமானமாகிப் போனது.
அங்கிருந்து கோபத்துடன் சென்றுவிட்டான்.
“வரேன் பாட்டி...” என்று அந்த வயதான பெண்மணியிடம் கூறிவிட்டு இந்துவும் வேலைக்குக் கிளம்பினாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண்மணியின் பேரன் கார்த்திக் அங்கு வந்தான்.
தன் பாட்டி தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தவன்,
“என்னாச்சு பாட்டி?” என்று கேட்டான்.
நடந்த அனைத்தையும் அந்தப் பாட்டி கார்த்திக்கிடம் கூறினார்.
அதைக் கேட்ட கார்த்திக் கோபமடைந்து,
“அவனையெல்லாம் சும்மாவே விடக்கூடாது பாட்டி. நான் போய் நாலு சாத்து சாத்திட்டு வரேன்!” என்றான்.
“வேணாம் பா...” என்று பாட்டி அவனைத் தடுத்தார்.
“நீ போய் அவன்கிட்ட சண்டை போட்டா, உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு சொல்லி, கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் வைத்து பேசுவாங்க. அது அந்தப் பொண்ணுக்குத்தான் இன்னும் கஷ்டமாகிடும்.”
“எப்படி பாட்டி அவனை அப்படியே விடுறது?”
“வேணாம் பா. இதனால அந்தப் பொண்ணுக்கு இன்னும் பிரச்சனைதான் அதிகமாகும். ஒரு பொண்ணு தனியா இருந்தாலே இந்தச் சமூகம் அவளைத் தப்பான கண்ணோட்டத்துலதான் பார்க்குது. ஆம்பளைக்கு ஒரு நியாயம்... பொம்பளைக்கு ஒரு நியாயம்... இதுதான் நம்ம ஊர் உலகம்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்தப் பாட்டி பெருமூச்சுவிட்டு,
“எல்லாம் பொம்பளைகளோட விதி...” என்று புலம்பியபடியே கார்த்திக்கை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
ஆனால்...
காலையில் நடந்த அந்தக் கொடூரத்தை மறப்பதற்குள், அலுவலகத்தில் அதைவிடப் பெரிய கொடூரம் ஒன்று இந்துவுக்காகக் காத்திருந்தது.
தன் பிள்ளையைப் பள்ளியில் சேர்ப்பதற்காக இரண்டு நாள் விடுப்பு கேட்க, மேனேஜர் அறைக்குச் சென்றாள் இந்து.
"வா... வா... இந்து... என்ன விஷயம்?" என மேனேஜர் சிவராமன் கேட்கவே,
"சார்... டூ டேஸ் லீவ் வேணும்..."
"எதுக்கு?"
"குழந்தையை ஸ்கூலில் சேர்க்க..."
"நான் வேணா ஹெல்ப் பண்ணவா? தனியா குழந்தையை வளர்க்கிறது ரொம்பக் கஷ்டம்... அதனால..." என வஞ்சகப் பார்வையுடன் கூறினான்.
"அதனால என்ன சார்? எனக்கு இன்க்ரிமென்ட் போடப் போறீங்களா?" என அவனது எண்ணம் புரிந்தும் புரியாதது போலக் கேட்டாள்.
"அது இல்ல இந்து... நீ என் ஆசைக்கு ஒத்துக்கிட்டா, உனக்குத் தேவையான எல்லாத்தையும் நான் பண்றேன்..." எனக் கூறியவாறு அவளது கன்னத்தைத் தொட முயன்றான்.
அதில் ஆத்திரமடைந்த இந்து, அவனது கன்னம் பழுக்கும் அளவிற்கு ஓங்கி ஒரு அறை விட்டாள்.
அவள் அடித்ததில் அவமானமடைந்தவன், அவளை மேலும் நெருங்க முயன்றான். உடனே இந்து தனது முழங்காலால் அவனது கால்களுக்கு நடுவில் உதைக்க, அவன் வலியில் துடிதுடித்து அலறினான்.
பின் ஆத்திரமாக,
"எதுக்குடி பத்தினி வேஷம் போடுற? இந்நேரம் எவன் கூடயாச்சும் படுத்துத்தானே இருப்ப..."
என அவன் கூற, இந்து அவனை இன்னும் இரண்டு அடி அடித்தாள்.
"நான் எப்படிப்பட்டவள்னு உனக்கு நிரூபிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. உன் ஆசைக்கு உன் கூட வர்ற பொண்ணு நான் இல்லை. இன்னொரு தடவை என்கிட்ட மட்டும் இல்ல... வேற எந்தப் பொண்ணுகிட்டயாச்சும் தப்பா நடந்துக்கிட்டா, நடக்கிறதே வேற. உன்னைப் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளிடுவேன்.
நான் அடிச்சது வெளியில் தெரிஞ்சா, உனக்குத்தான் அசிங்கம்."
"என்னை மீறி நீ இங்கே எப்படி வேலை பார்க்கிறேன்னு நானும் பார்க்கிறேன்..." என சிவராமன் மிரட்டலாகக் கூறினான்.
"இது ஒண்ணுதான் கம்பெனியா? ஆயிரம் கம்பெனி இருக்கு. போடா... நானே ரிசைன் பண்றேன். உன்னை மாதிரி கேவலமான பிறவிக்குக் கீழ வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை."
எனக் கூறிவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி, தனது சீட்டிற்கு வந்தாள்.
முதலில் ரிசைனேஷனை டைப் செய்து மெயில் அனுப்பினாள்.
பின் பாத்ரூமிற்குச் சென்று அழத் தொடங்கினாள்.
இந்துவின் முகம் சரியில்லாததைக் கவனித்த பர்வீன், அவள் பின்னாடியே பாத்ரூமிற்குச் சென்றாள்.
அங்கே இந்து கதறி அழும் சத்தம் கேட்கவே, பர்வீன் கதவைத் தட்டினாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டு கதவைத் திறந்த இந்து, பர்வீனைப் பார்த்ததும் அவள் மீது சாய்ந்து அழத் தொடங்கினாள்.
என்ன நடந்தது என பர்வீன் விசாரிக்க, இந்து காலையில் நடந்ததையும், அலுவலகத்தில் நடந்ததையும் கூறினாள்.
பர்வீன் அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
"சில ஆம்பளங்க இப்படித்தான் இருக்காங்க. நம்ம பலவீனத்தை அவங்க பலமா நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்க.
விடு இந்து... மத்ததை நாம வெளியில பேசிக்கலாம். வா... நாம லீவ் சொல்லிட்டு கிளம்புவோம். நான் இன்னிக்கு உன்கூட தங்குறேன்..." எனக் கூறி இந்துவை அழைத்துச் சென்றாள்.
இருவரும் ஹெச்ஆரிடம் ஹாஃப் டே லீவ் சொல்லிவிட்டு, அதன்பின் இந்துவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் இருவருக்குமான பேச்சுவார்த்தை அதன் பிறகுதான் நடந்தது.
யோசனையில் மூழ்கிப் போன இந்துவை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது பர்வீனின் குரல்.
"இந்து... எவ்வளவு நேரம்? சீக்கிரம் வா... ஆர்டர் பண்ண சாப்பாடு வந்துடுச்சு..."
"இதோ வரேன் பர்வீன்..." எனப் பதில் கூறியவாறு, பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவிவிட்டு வெளியே வந்தாள்.
மூவரும் சாப்பிடத் தொடங்கினர்.
இந்து பாவைக்கு ஊட்டிவிட்டு, பின் அவளும் சாப்பிட்டு முடித்தாள்.
அழுத களைப்பில் இருந்த இந்துவிற்குத் தூக்கம் வர, மூவரும் சென்று படுத்து உறங்கினர்.
மாலை 6 மணியளவில் தான் மூவரும் எழுந்தனர்.
பின்னர் டிவியைப் போட்டு விட்டு அமர்ந்தனர்.
இந்து பாவைக்குப் பாலும், அவர்கள் இருவருக்கும் டீயும் எடுத்துக்கொண்டு வர, மூவரும் அதைக் குடித்துவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த சமயம் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்க, இந்து சென்று கதவைத் திறந்தாள்.
அங்கே இருந்த சுரேஷ் வேகமாக இந்துவின் வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்தப் போக, இந்து அவனை வெளியே தள்ள முயன்றாள்.
அதைப் பார்த்த பர்வீனும் அவனை வெளியே தள்ளச் செல்ல, அவன் தன் பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து,
“ஒரு அடி நகர்ந்தாலும் குத்திடுவேன்...” என மிரட்டினான்.
“டேய்... உனக்கு என்னதான் வேணும்? ஏன்டா இப்படி பண்ற?” என இந்து கேட்க,
“நீதான் வேணும்... என்ன எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தினல்ல... உன்னை இன்னிக்கு நான் சும்மா விடப்போறது இல்ல...”
“சீ... அசிங்கமா இல்ல உனக்கு? உன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா உன் நிலைமை என்னாகும்? ஒழுங்கா வெளியே போயிடு...”
“முடியாது டி...” எனக் கூறியவாறு கதவுக்கு தாழ்ப்பாள் போடப் போனான்.
அந்த சமயம் கார்த்திக் கதவை வெளியிலிருந்து எட்டி உதைக்க, அந்தக் கதவு சுரேஷின் மீது மோதியது. அவன் வைத்திருந்த கத்தி அவனது கையையே பதம் பார்த்தது.
“ஐயோ... அம்மா...” என சுரேஷ் அலற, கார்த்திக் உள்ளே நுழைந்தான்.
“உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே?” என இந்துவைப் பார்த்துக் கேட்டான்.
“இல்ல சார்... கரெக்ட் டைமுக்கு நீங்க கதவை உதைத்தீங்க...” என பர்வீன் கூறினாள்.
“சார், எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அந்த ஆள் வைத்திருந்த கத்தி அவன் கையையே குத்திடுச்சு. நீங்க சரியான நேரத்துக்கு வந்தீங்க... ரொம்ப தேங்க்ஸ்...” என இந்து கார்த்திக்கிடம் கூறினாள்.
“போலீசுக்கு தகவல் கொடுத்திடலாம். அப்போதான் இவன் இன்னொரு தடவை யார்கிட்டயும் இப்படி பண்ண மாட்டான்.”
“சரி...” என இந்து கூற, கார்த்திக் போலீசுக்குத் தகவல் கொடுத்தான்.
சிறிது நேரத்தில் போலீசார் வந்து சுரேஷைக் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் இந்துவும் கார்த்திக்கும் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
“சரி மேடம்... நான் கிளம்புறேன்...” என கார்த்திக் கூற,
“சார், ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணிருக்கீங்க... உள்ள வந்து காபி குடிச்சிட்டு போங்க...” என இந்து அழைத்தாள்.
கார்த்திக் மறுப்பேதும் சொல்லாமல் உள்ளே வந்தான்.
“சார், உக்காருங்க... 5 மினிட்ஸ்ல காபி எடுத்துட்டு வரேன்...” எனக் கூறிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.
அதற்குள் பர்வீனும் கார்த்திக்கும் சகஜமாகப் பேசத் தொடங்கினர்.
பர்வீன் இந்துவுக்கு அலுவலகத்தில் நடந்த விஷயங்களைப் பற்றியும் கூறினாள்.
“வேலையை வேற விட்டுட்டா... இனிமேல் என்ன பண்ணப் போறான்னே தெரியல கார்த்திக்...”
“என் ஆபீஸ்ல வேக்கன்சி இருக்கு. ரெண்டு பேருமே இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுங்க.”
“ஓ... சூப்பர் கார்த்திக்!” என பர்வீன் கூறிய அந்த நேரத்தில் காபியுடன் இந்து வந்தாள்.
“என்ன சூப்பர்?” என பர்வீனைப் பார்த்துக் கேட்டாள்.
“கார்த்திக் ஆபீஸ்ல வேக்கன்சி இருக்காம். அதுக்குத்தான்...” என்றாள் பர்வீன்.
“அவருக்கு எதுக்கு சிரமம்?” என இந்து கூற,
“இதுல எனக்கு எந்தச் சிரமமும் இல்ல. நீங்க வாங்க...” எனக் கூறிவிட்டு பர்வீனுக்கு அலுவலகத்தின் இருப்பிடத்தைப் பகிர்ந்தான்.
பின்னர் மூவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்குச் சென்றான்.
மறுநாள் இருவரும் கார்த்திக் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்று இன்டர்வியூவில் கலந்துகொண்டனர். இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பிறகு இருவரும் அங்கே வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.
இந்து பழையபடி நன்றாக உடை அணியத் தொடங்கினாள். தன்னை ஒரு விதவை என்று யாரும் அறிந்துகொள்ளாதபடி பார்த்துக்கொண்டாள்.
இந்து, கார்த்திக், பர்வீன் மூவரும் நல்ல நண்பர்களாகினர்.
பாவையை நல்ல பள்ளியில் சேர்த்தனர்.
பர்வீன் அடிக்கடி இந்துவின் மறுமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தாள்.
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்துவும் மறுமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
தனக்கும் தன் குழந்தைக்கும் ஆதரவாக ஒரு ஆண் துணை நிச்சயம் வேண்டும் என்பதைப் பல்வேறு சூழ்நிலைகளில் புரிந்துகொண்டாள்.
தன்னையும் தன் பிள்ளையையும் ஏற்றுக்கொள்பவரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தாள்.
அதைப் பர்வீனிடம் கூற, பர்வீனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவளும் இந்துவுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினாள்.
மறுமணம் செய்ய விரும்புவதை இரு வீட்டாரிடமும் இந்து கூறினாள். ஆனால் அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.
கடைசியாக அவள் கேட்ட கேள்வியில் இரு குடும்பத்தினரும் கதிகலங்கிப் போயினர்.
“நான் கல்யாணம் பண்றது உங்களுக்கு பிரச்சனையா தெரியுது? நான் தனியா இருக்குறதால எனக்கு இங்கே நடக்குற பிரச்சனை உங்களுக்குத் தெரியும்.
உங்க எல்லாருக்கும் என்னையும் என் பிள்ளையையும் விட உங்க சொத்தும், உங்க குடும்பமும் தான முக்கியம்.
இங்கே எனக்குத் துணைக்கு கூட ஆள் இல்லாம, கண்டவங்களோட தப்பான பார்வை என் மேல விழும்போது எவ்வளவு துடிச்சேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.
என் புருஷனுக்குப் பதிலா நான் செத்திருந்தா, அவருக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?
அப்போ ஆணுக்கு ஒரு நியாயம்... பெண்ணுக்கு ஒரு நியாயமா?
உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காவிட்டாலும், நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்...” எனத் தன் மொத்த ஆதங்கத்தையும் வேதனையையும் கொட்டிவிட்டு போனை வைத்தாள்.
பின்னர் இந்து பர்வீனிடம் நடந்த விஷயங்களைக் கூறி வருத்தப்பட்டாள்.
அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்,
“இந்து... நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?
எனக்கு என் பாட்டியைத் தவிர்த்து யாரும் இல்ல. நீங்க என்னை ஏற்றுக்கிட்டா, நீங்க, நான், பாவை, பாட்டி... எல்லாரும் ஒரே குடும்பமா ஒண்ணா இருக்கலாம்.
யோசிச்சு சொல்லுங்க...” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் பேசியதைக் கேட்டு இந்து உறைந்து போனாள்.
ஆனால் பர்வீன் சந்தோஷத்தில் மிதந்தாள்.
ஏனெனில், பல நாட்களாகவே இந்துவும் கார்த்திக்கும் திருமணம் செய்துகொண்டால் எப்படி இருக்கும் என்று அவள் யோசித்துக்கொண்டிருந்தாள்.
அது இப்போது நிஜமாகும் வாய்ப்பு இருப்பதால் அவளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சில நாட்கள் யோசித்துவிட்டு, பின்னர் கார்த்திக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
பாட்டி மற்றும் பாவையின் சம்மதத்துடன், பர்வீன் தலைமையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இருவரும் பாவையுடனும் பாட்டியுடனும் சந்தோஷமாக வாழத் தொடங்கினர்.
கார்த்திக் இந்துவின் பலமாக ஆனான்.
இந்துவிற்குப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்குப் பிறகு பொக்கிஷமாகக் கிடைத்த வாழ்க்கை அது.
தனிமை அவளது எதிரியின் பலமாக இருந்தது...
ஆனால், அவளுக்குக் கிடைத்த துணை அவளது பலமாக மாறியது.
சுபம்...
நன்றி!
அ.பி.அம்மு“தமிழ் காதலி”
என்னுடைய படைப்புகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் கருத்துகளையும் மதிப்பீடுகளையும் கமெண்ட்டில் தெரிவியுங்கள்.
மறக்காமல் உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுத்து என்னை Follow பண்ணிக்கொள்ளுங்கள்.
மீண்டும் நன்றி!