Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - டீசர்

Advertisement

Padma Subramanian

Well-known member
Member
லயம் மாறா காதல் 💖 - டீசர்

💞💞சாரி, இன்னைக்கு எபி கொடுக்க முடியல, சோ குட்டியா ஒரு டீசர், படிச்சு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க நட்பூக்களே ! 💖 💖 🤗 🤗 🤗




பஸ்ஸில் கண்மூடி அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்தவள் தன் அருகே யாரோ அமரும் அரவம் கேட்டு இமை திறந்து பார்த்தாள். அறுபது வயது மதிக்கதக்க பெண்மணி முகம் வெளுத்து, கண் கலங்கி, கசங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். ஜன்னல் தட்டும் சத்தம் கேட்டு வெளியே பார்க்க அவரது மகன் "அம்மா.., அண்ணே ஸ்டாப்ல வந்துறேனு சொல்லிருக்கான். பயப்படாம போ.." என அவரிடம் பேசி விட்டு, " பாப்பா அவங்கள செங்கல்பட்டு வந்தா கொஞ்சம் எழுப்பி விடு. பார்த்துக்கோமா " என வேண்டுதலாய் கேட்க சரியென தலையசைத்தாள்.

பாட்டி உம்மென முகத்தை சுண்டி அமர்ந்திருக்க,

" என்ன பாட்டி, பையன் தனியா விட்டுட்டு போய்ட்டாங்கன்னு கவலையா " என்றாள் அவரிடம் சகஜமாக.

"ம்ஹ்ம்ம்.. இதுவரைக்கும் தனியா போனதே இல்லை. அவரு இவங்கட்ட என்னை விட்டுட்டு போயிட்டார். பயமா இருக்கு "என புலம்ப தொடங்கினார்.

"டார்லிங் பாட்டி, நான் தான் இருக்கேனே. டோன்ட் ஒர்ரி...," என அவரின் கைபிடித்து கூறியவளை பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.

சற்று நேரம் தன் குடும்பத்தை பத்தி பேசி கொண்டிருந்தவர், பின் குரலை தழைத்து கொண்டு அருகே இருப்பவருக்கு கேட்காதவாறு மெல்லிய குரலிலே பேச ஆரம்பித்தார்.

"நீ எங்கேடியம்மா போகனும்..,"

"நானும் உங்க ஊர் தான் பாட்டி...,"

"தனியாவா வந்த..,"

"இல்லை பாட்டி, மேலே கிருஷ் இருக்கான்..,"

"வீட்டுக்காரரா..," என்க

"இல்லை, பாய் பிரண்ட். .,"என்றாள் மெதுவே குரலை இன்னும் தலைத்து.

"எதே பாய் பிரண்டா. கலிகாலம் பொம்பள பிள்ளை அவன் கூட இப்படி வரலாமா ..,"

"நான் எங்க போனாலும் அவரும் துணைக்கு வருவாரு..,"

"என்ன பன்றார்..,"

"எல்லாரோட கணக்கையும் உட்கார்ந்து செக் பண்ணிட்டு இருப்பாரு. வேற என்ன வேலை பார்க்க போறாரு..,"

"அழகா இருப்பாரா? "

"செம்ம ஸ்மார்ட். ப்ளூ ஷர்ட்ல சூப்பரா இருக்கார். பார்த்த உடனே எல்லாருக்கும் பிடிக்கும், அவ்ளோ அழகு ..,"என்றாள் ரசனையாய்

"ஏண்டி., என்கிட்டயே இப்படி சொல்ற,..," என முறைத்து பார்த்தவர் "ரொம்ப வருஷ காதலோ? "

"ம்ம்ம்ம்...," என கண் சிமிட்ட

"அவர் வீடு எங்க இருக்கு..?"

"என்கூட தான் இருப்பாருனு சொன்னேனே..,"

"ஒரே வீட்டில இருக்கீங்களா, என்னமோ லிவிங்குன்னு சொல்ராங்களே அப்படியா..? "அதிர்ச்சியாய் கேட்க.

"அச்சோ டார்லிங், அப் டு டேட் ட்ரெண்ட்டிங் எல்லாம் தெரியுது உனக்கு, அதே ..,"என்றால் சிரித்து கொண்டே.

*************************


பார்க்கும் அனைவரும் தோழமை. பாரபட்சம் காட்டாமல் நட்பை இரு கரம் கொண்டு விரிக்கும் குணம் இளாவிற்கு. யாரிடமும் கோபம் கொள்ளாமல் சிரித்து பேசி விளையாடும் குணத்தால் பள்ளி படிப்பிலேயே நண்பர் படையோடு சுற்றி திரியும் இளா.


"தம்பி ..... ராஜா.... போன் அடிச்சிட்டு இருக்கு பாரு. ரூம்ல இன்னும் என்னடா பண்ற " போன் வந்தாலே பறந்து வந்து எடுக்கும் மகன் பதிலே கூறாமல் மௌனம் சாதிக்க, அவரே மெதுவே நடந்து ரூமில் வந்தும், ராஜா அமைதியாய் இருக்க

" என்னப்பா... கையில பால் வச்சிட்டு என்ன யோசனை உனக்கு? " அவனின் தோளை தட்டிய பின்பே சுயம் பெற்றான்.
" ம்மா.. இது மச்சியோட பால். "

" சரிடா, அதுல தூசி இருக்கு பாரு, போய் கிளீன் பண்ணு "

" ம்ம்ம் அவனையும் சேர்த்து இதை வச்சே கிளீன் பண்றேன். " முடிவெடுத்து" செல்லம், உன்னை எப்படி நான் மறந்தேன்... " செல்லமாய் பந்திற்கு அழுந்த முத்தம் பதித்தவன் அந்த கணமே அதை ஒரு கவரில் போட்டு கொண்டு இளாவின் வீட்டுக்கு பறந்தான்.


ஜாகிங் செல்வதற்காக கிளம்பி வந்தவர்கள் முன் சென்று ராஜா நிற்க, கேள்வியாய் மாணிக்கம் அவன் முகத்தை பார்த்தவுடன் " குட் மார்னிங் மாமா! இன்னைக்கு நீங்க மட்டும் போங்க. இவனை நான் இழுத்துட்டு போக போறேன்."

"ஏன்டா இந்த நேரம் மட்டும் தான் என் புள்ள என்கூட இருக்கான். இதுக்கும் வேட்டு வைக்க வந்துட்டியா நீ, ஆமா இன்னொருத்தன் எங்க, அவனை காணோம்? " மகனது சந்தோசம் அவன் நட்புகளிடம் மட்டுமே என்பதை அறியாதவரா அவர். இளா மீண்டும் மாறினால் சரி என்ற மனநிலை இப்போதெல்லாம் அதிகம் அவர்க்கு தோன்றியது. முன் போல் முறுக்கி கொள்ளாமல் இலகுவாய் அவர் பேச முற்பட்டார்.

" அவன் வேற ஊருல இருக்கான் மாமா. லீவ்ல வர்றேன்னு சொல்லிருக்கான். இப்போ நாங்க வுடு ஜூட்..." இளாவின் கையை இறுக பற்ற வர அவனோ ராஜாவின் கையை தட்டி விட்டான் வேறு ஒன்றும் கூறாமல்.

“ டேய், உன்கிட்ட ஒரு ஹெல்பா தான் கேக்குறேன். அதுவும் எனக்கில்லை, குட்டி பசங்களுக்கு, பிரண்டா தான் நினைக்கல. அடலீஸ்ட் இதையாவது பண்ணு வாடா... " கிட்டத்தட்ட இழுத்து கொண்டு தான் ஓடினான் எதிர்புறம் சாலையில் இருந்த புட்பால் கிரௌண்ட்க்கு.

அவர்கள் எப்போதும் பிராக்டிஸ் செய்யும் அதே கிரௌண்ட்டில் விடலை பையன்கள் விளையாடி கொண்டிருக்க அவர்களை நோக்கி சென்றவன்.

" தம்பிகளா! நான் சொன்ன சேம்பியன் இவன் தான். என்ன டவுட் வேணா கேளுங்க. அண்ணாத்தே அடிச்சு சொல்லி கொடுப்பாரு. " இளாவை முன்னிறுத்தி ராஜா ஒதுங்கி கொண்டான்.

கற்று கொடுக்க வந்திருக்கும் ஆசானிடம் ஆர்வமாக அவர்கள் கேள்வியை கேட்டு கொண்டிருக்க, மறுப்பேதும் கூறாமல் இலகுவாய் பதில் சொல்லும் இளாவை நோக்கி கண் அடித்த படி சென்றவனோ,

" டேய் மேட்ச் விளையாடி காட்டுனா தான் இன்னும் புரியும். ஆடி காட்டுடா. " கையோட கொண்டு சென்ற பந்தினை அவன் மீது தூக்கி போட லாவகமாய் அதை கேட்ச் பிடித்தவன் பார்வையால் அதை வருட, தான் கையொப்பம் இட்டு ராஜாவிடம் கொடுத்த தன் பந்து என்பதை அறிந்ததும் மனதில் அவனே அறியாது ஒரு இளக்கம் உருவாகியது.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? தொடும் வரை தான் ஒதுக்கம். தொட்டு விட்டால் நினைவுகள் மனதோடு உறவாடி, மூளையின் மறந்த, மறக்க நினைத்த அழகிய நினைவுகளை தட்டி எழுப்பி நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வர, இமைகளில் உவகை எட்டி பார்த்தது.

தன்னோடு உறவாடி, மகிழ்ச்சியை கொட்டி கொடுக்கும் காதலியை கையில் ஏந்தியவன் மனநிலையில் தான் அவனும் அக்கணம் நின்றிருந்தான்.

அண்ணா, ஆடுன்னா, சொல்லி கொடுண்ணா என அடுத்தடுத்து குரல்கள் செவியினை தாக்க, தடுப்பினை தாண்டி பாய துடிக்கும் அணை நீராய், காளையவன் கால்களில் பந்து விளையாடி தொடங்கியது அதிரடியாய். அவனின் ஆட்டத்தை ரசிக்க தொடங்கியவன் மனமோ கடந்த கால இனிமை தருணங்களை மீண்டும் அசைப்போட தொடங்கியது.

சீனியர்! உரக்க கத்தியப்படி மூச்சு வாங்க ஓடி வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இளாவை இறுக்கி அணைத்தான். அவனின் புன்னகை முகமும், சந்தோசத்தை வெளிப்படுத்திய விதத்திலும் முகம் மலர்ந்தவன் " லவ் சக்ஸஸ் ஆயிருச்சா " என்க.


" யெஸ். அவ எனக்கு ஓகே சொல்லிட்டா. தேங்க்ஸ் சீனியர். உங்களால தான் எல்லாம். " என்றான் மகிழ்வுடன்.

" என்னடா பண்ண "


" ஹ்ம்ம். சாருக்கு காதல் தோல்வியாம். ரெண்டு நாள் முன்னாடி நைட் ஷ்யாம் பார்க்குறதுகாக ஹாஸ்டல் போயிருந்தேன். அவன் ரூம் மேட் தான் இவன். சோகத்துல கையை அறுத்துட்டு கட்டில்ல கிடந்தான். ஹாஸ்பிடல் கூட்டி போய் காப்பாத்தினோம். " என்றவன் தொடர்ந்து

" நேத்து அந்த பொண்ணுகிட்ட பேசி இவன் லவ்வ பத்தி அவளுக்கு புரிய வைச்சேன். அதான் இன்னைக்கு துள்ளிட்டு ஓடி வர்றான். லவ் சொல்லி புரிய வைக்க முடியாதவன் எல்லாம் ஏன்டா லவ் பண்றீங்க. அவகிட்ட போய் பேசுனா முடிஞ்சி போச்சு. இதுக்கு சாகுறேன், வேகுறேன்னுட்டு." இளா அதட்டல் போட்டாலும் அந்த கணத்தின் ரத்த கரங்கள் அவன் கண் முன் இன்னும் தோன்றியது.


உண்மை காதலை ஆதரிப்பான் தான் ஆயினும் தற்கொலை முயற்சி செய்யும் முட்டாள் தனத்திற்கு கண்டிப்பாய் அவனிடம் வசவு வாங்குவது உறுதி என்பது தெரிந்ததால் யாரும் நடுவில் வாயை திறக்கவில்லை.

"டேய் மச்சான்! "என்ற குரலில் திரும்பி பார்க்க கௌதம் அவன் சகாக்களோடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.


"என்னடா இவன் நம்மள தேடி வர்றான். நம்ம ரைட்ல போனா, இவன் லெப்ட்ல போவான். சம்பந்தமே இல்லாம சனியன் சடையில பூ வச்சுட்டு நம்மள தேடி வருது. " இளாவை பார்த்து சுகுமாரன் சொல்ல

"டேய் மெதுவா பேசுடா. அவனுக்கு கேக்க போகுது." இளா அவனை அதட்ட



"கேட்டுட்டா மட்டும், அவனுக்கு முடியும் இல்லை. மூளையும் இல்லை. விடுறா விட்றா."

" மச்சான், மெக் டிபார்ட்மென்ட் பையன் நம்ம பொண்ணு மேல கையை வச்சிட்டான். டெய்லி வல்கரா வேற பேசுறானாம். நாங்க சொன்னா கேக்க மாட்றான். உன் பாஷையில் பேசி புரிய வை. அவன் கேம்பஸ்ல ரெண்டு அடி போட்டா தான் மத்தவங்க ஒழுங்கா இருப்பாங்க. வாடா " கௌதம் நட்பாக பழகா விட்டாலும் தன் பெண்களிடம் முறை தவறி நடக்க முற்பட்டதால் அவனோடு சென்று அடித்து, பிரின்சிபால் முன் சென்று திட்டு வாங்கிய கதையும் அடிக்கடி நடக்கும்.
 
Last edited:
அருமையான டீ பதிவு 😍 😍 😍 😍.
இன்னமும் பொனகிகிட்டே இருக்கானே இந்த இளா.
அப்படியென்ன தான் நடந்திருக்கும் ?
 
அருமையான டீ பதிவு 😍 😍 😍 😍.
இன்னமும் பொனகிகிட்டே இருக்கானே இந்த இளா.
அப்படியென்ன தான் நடந்திருக்கும் ?
நன்றி வைஷு குட்டி 💞💞. நடந்தது எல்லாம் நடந்திருக்கும். நடக்க இருந்ததும் நடந்திருக்கும். நடக்க இருப்பதும் நடந்திருக்கும். நடந்தது என்ன என்பதை நடக்கும் போது நாமறிவோம்.
 
நன்றி வைஷு குட்டி 💞💞. நடந்தது எல்லாம் நடந்திருக்கும். நடக்க இருந்ததும் நடந்திருக்கும். நடக்க இருப்பதும் நடந்திருக்கும். நடந்தது என்ன என்பதை நடக்கும் போது நாமறிவோம்.
😯😯😯😯😯😯🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️
நடப்பது நடப்பது நடப்பது ன்னு சொல்லறியே மச்சீ 😉 😉 😉
அப்ப நாங்க இந்த சாங்கை 👇 👇 👇 👇 பாடோனுமா?
 

Advertisement

Advertisement

Back
Top