அத்தியாயம் 4
இரவு முழுவதும் சரியாக உறங்காமலிருந்த இமைகள் பாரமாய் இருந்தன பெண்ணவளுக்கு. எப்போது அந்தப் பெண்ணின் குரல் வருகிறதோ அப்போதெல்லாம் தன் தூக்கத்தைத் தொலைக்கிறாள் பெண்ணவள்.
அந்தக் குரல் இவளின் மனதில் வலியை மட்டுமே தந்துவிட்டுச் சென்ற மாயவளின் குரல். அந்தக் குரலுக்குரிய வதனத்தை தான் சமீபமாகத் தேடிக் கொண்டிருக்கிறாள். ஆனால், எங்கும் அந்த வெண்பஞ்சு வதனம் தென்படவே இல்லை.
தன் மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டவளுக்கு அப்போது தான் நிதர்சனம் உறைக்க வேகமாய் எழுந்து தன் போர்வை, பாயைச் சுருட்டி வைத்தவள், அந்த அறையில் இருந்த குளியலறையை நோக்கிச் சென்றவள் அடுத்த அரைமணி நேரத்தில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு வந்தாள்.
அந்த அறையைவிட்டு வெளியே வரச் சமையல் அறையில் சத்தம் கேட்க அங்கே வேகமாய் வந்தாள். அங்கே அவளின் அத்தையோ குளித்து முடித்து காபி போட்டுக் கொண்டிருந்தார்.
"குட்மார்னிங் அத்தை..." என்று சிரித்தபடி வந்தாள்.
அவளின் வதனத்தைக் கண்ட தேவகியின் மனம் மகிழ்ச்சியில் திளைக்க,
"காலை வணக்கம்டா தங்கம்... இப்போதான் எழுந்தியா?" என்றாள் சிரித்தபடி.
"ஆமாங்க அத்தை... நீங்க நகருங்க நான் காபி போடறேன்..." என்றபடி அங்கே வேகமாய் வந்தாள்.
"ஆச்சுடா நான் காபி போட்டுட்டேன். நீ என்ன பண்றேன்னா வாசல்ல தண்ணி தெளிச்சு கோலம் போட்டுட்டு வா. நான் எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு வரேன்டா..." என்றாள் சிரித்தபடி.
"ம்ம்... சரிங்க அத்தை..." என்றபடி அத்தையின் பேச்சை மீறாத மருமகளாய் வேகமாய் வாசலுக்குச் சென்றவள் வாசலில் நீர் தெளித்து அழகாய் ஒரு ரங்கோலியை வரைந்துவிட்டு உள்ளே வந்தவள் மளமளவென சமையல் வேலையை ஆரம்பித்தாள்.
அதற்குள்ளாகவே அனைவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு வந்த தேவகியோ, "ஏய் சிவா! இன்னும் காபி குடிக்கலையா நீ? போ... போய்க் குடிச்சிட்டு நீ போய் காலேஜுக்குக் கிளம்பு. மீதி வேலையை நான் பாத்துக்குறேன்டா..." என்று செல்லமாய் மிரட்டியபடி வந்த தேவகியிடம் சிரித்தபடி திரும்பியவள்,
"அவ்ளோதான் அத்தை ஆச்சு... மதியத்திற்கு மட்டும் செஞ்சா போதும் அத்தை. காலையில டிபன் எல்லாம் செஞ்சு முடிச்சிட்டேன் அத்தை" என்றாள் சிரித்தபடி.
இது தான் சிவாவின் குணம். எத்தனை பெரிய வலிகள் இருந்தாலும் கூட அதை அடுத்த நாளே மறந்து விடும் வல்லமையை அந்த இறைவன் அவளுக்குக் கொடுத்து விட்டான் போலும்!
இல்லை அளவுக்கு மீறிய வலியை அனுபவித்ததால் வந்த பக்குவம் போல!
"சரி அதை நான் பாத்துக்குறேன். நீ போய் காலேஜுக்குக் கிளம்பு. இன்னைக்கு உனக்கு கேம்பஸ் இன்டர்வியூன்னு சொன்னல்ல... நீ போய் கிளம்புடா... மீதியை அத்தை பாத்துக்குறேன்" என்றார் சிரித்தபடி.
"ம்ம்... சரிங்க அத்தை நீங்கப் பாருங்க நான் போய் கிளம்புறேன்..." என்றவள் அங்கிருந்து சிட்டாய்ப் பறந்துவிட்டாள்.
போகும் மருமகளைப் பார்த்த தேவகியின் வதனத்தில் வருத்தமே மேலோங்கியது.
"கடவுளே! தேவதை மாதிரி இருக்குற பெண்ணை நல்லவன் ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுக்கணும். இவளோட அப்பா அம்மா இருந்தா இந்நேரம் பூரிச்சுப் போயிருப்பாங்க... இந்தப் பொண்ணுக்கு இந்த வயசுலேயே இத்தனைக் கஷ்டமா? கடவுளே! வேண்டாமே... எந்தங்கத்துக்கு ஏத்த ராஜகுமாரனை அனுப்பி வைப்பா..." என்று கடவுளை வேண்டிக் கொண்டவர் அவள் பாதியில் விட்ட வேலையை இவர் தொடர்ந்தார்.
***
பஞ்சுப் பொதிகை போன்ற கட்டிலில் படுத்திருந்த ருத்ராவின் விழிகளோ கலங்கிச் சிவந்து போயிருந்தது.
"நிலாக் குட்டி அண்ணனை மன்னிச்சிடுடா... நீயில்லாம அண்ணன் இன்னும் உயிரோட இருக்கேனேடா தங்கம்..." என்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
வெளியே அரக்கன் அசுரன் என்று பெயர் எடுத்தவனை இப்போது கண்டால் அவனா இவன் என்று யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் தான்.
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன் வேகமாய் எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்தவன் அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்தான்.
அங்கே அவனின் பிஏ சந்தோஷ் காத்திருந்தான். அவனைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்தவன்,
"குட்மார்னிங் சார்..." என்றான் மரியாதையுடன்.
அதற்குத் தலையசைத்தவன் அங்கே இருந்த சொகுசணையில் அமர அடுத்த நொடியே மாதையன் காபிக் கோப்பைகளுடன் அங்கே வந்தார்.
அதை எடுத்துக் கொண்டவன் கேள்வியாய் சந்தோஷின் முகத்தைப் பார்த்தான்.
"பாஸ்! இன்னைக்கு நம்ம இன்ஜினீயரிங் காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூ இருக்கு. நம்ம கம்பெனியும் அதுல இருக்கு பாஸ்... அதுக்கு நீங்க இன்னும் யாரை அனுப்புறேன்னு சொல்லவே இல்லை பாஸ்..." என்றபடி அவனின் முகத்தைப் பார்த்தான்.
காபியைக் குடித்துக் கொண்டே சற்று நேரம் யோசித்தவன், "நானே இன்னைக்கு வரேன். நானே செலக்ட் பண்றேன்னு காலேஜ்ல இன்ஃபார்ம் பண்ணிடுங்க... அதுமட்டும் இல்லாம திறமையான மாணவர்கள் மட்டும்தான் அந்த இன்டர்வியூக்கு வரணும்னு சொல்லிடுங்க சந்தோஷ்..." என்றவன் காபிக் கோப்பையை அங்கே இருந்த மேஜையில் வைத்துவிட்டு எழுந்தவன் வெளியே தன் காரை நோக்கிச் சென்றான்.
அதற்குள்ளாகவே அங்கே வந்த மாதையன்,
"தம்பி, டிபன் ரெடி சாப்பிட்டு போங்களேன்..." என்றார் தயங்கியபடி.
"இல்லை மாதையா, எனக்குப் பசி இல்லை. நீங்க வேலையைப் பாருங்க..." என்று அவரிடம் சொல்லிவிட்டு தன் காரில் ஏறினான்.
அடுத்த நொடியே அவனைத் தொடர்ந்து சந்தோஷும் அதே காரில் வந்து ஏறினான்.
நகரத்தின் அந்தக் காலை நேர நெரிசலில் கூட்டத்தோடு கூட்டமாய் மக்கள் வெள்ளத்தில் கலந்திருந்த ருத்ராவின் காரை தொடர்ந்து பின் வந்து கொண்டிருந்தது அந்தக் கருப்பு நிறக் கார்.
அதைக் கண்டாலும் பார்க்காதது போல் சாலையில் கவனம் பதித்திருந்தான் ருத்ரா.
"சந்தோஷ், நம்மோட காலேஜ்ல நல்லா படிக்கிற மாணவர்கள் இருக்கிறாங்களா என்ன?" என்றான் கேள்வியாய்.
"பாஸ்... என்ன பாஸ் அப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம காலேஜ்ல நிறையத் திறமையான பொண்ணுங்க இருக்கிறாங்க பாஸ்..." என்றான் அவசரகதியாய்.
ருத்ராவோ அவனைப் பார்த்து முறைத்தான். அவனின் முறைப்பில் தன் அவசரப்புத்தியை நொந்தவன்,
"சாரி பாஸ்..." என்றான் அசட்டுச் சிரிப்புடன்.
"அப்போ நீ பொண்ணுங்களை மட்டும்தான் பார்த்துருக்க... அப்படித்தானே சந்தோஷ்?" என்றான் அழுத்தமாக.
"அய்யயோ! அப்படிலாம் இல்லை பாஸ்... அது நீங்க கேட்டதுக்கு தான் சொன்னேன்..." என்றான் மெல்ல.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனத்தை வைத்தான் ருத்ரா.
***
இங்கே தன் அத்தையிடம் இருந்து விடைபெற்று வீட்டைவிட்டு வெளியே வந்தவளின் முன்னே நின்றாள் நந்தினி.
"ஹேய் சிவா! கிளம்பிட்டியா? உனக்காகத்தான் சீக்கிரமே வந்தேன்டி... போலாமா எல்லாமே பிரிபேரா இருக்கியாடி? எனக்குத் தான் கொஞ்சம் நெர்வஸா இருக்கு சிவா..." என்றபடி தன் தோழியின் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் நந்தினி.
"ஹேய் நந்து! எதுக்கு இப்போ இந்தப் பதட்டம் பயம் எல்லாம்? நாம நல்லாத்தானே ரெடி பண்ணிருக்கோம். எந்தக் கேள்விக் கேட்டாலும் பயப்படாம பதில் சொல்லணும் சரியா? தைரியமா வா, போலாம்..." என்றபடி தன் தோழியின் கையை இறுக்கமாய் பிடித்தபடி சந்தோஷமாய் சிரித்துப் பேசிக் கொண்டு சென்றாள் சிவா.
அவளை அப்படிப் பார்த்த இருவிழிகள் வெஞ்சினத்தில் வெந்து மடிந்தது என்றால், மற்றொரு ஜோடி விழிகளோ அவளை அதிசயமாய் பார்த்தது.
இந்த இருவிழிகளுக்கும் சொந்தம் யார் யாரோ?
***
ருத்ரயாழ் கல்விக் குழுமம் பரந்து விரிந்த கட்டிடங்களைக் கொண்டிருந்தது.
கல்லூரி வளாகம் முழுவதும் வாகை மரமும் கொன்றை மரமும் ஓங்கி வளர்ந்திருந்தன.
எங்கும் பசுமை நிறைந்த இடங்களைக் காண்பதற்கு மாணவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும். ஏனோ இங்கே படிப்பதில் அத்தனை பெருமை அங்கே படிக்கும் மாணவர்களுக்கு!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் அங்கே படிக்கின்றார்கள்.
‘கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப்புகினும் கற்கை நன்றே’
என்ற அதிவீரராமபாண்டியரின் வரிகளுக்கு ஏற்ப பிச்சை எடுத்தேனும் படிக்க நினைக்கும் மாணவர்கள் இங்கே வந்து தஞ்சமடையலாம் என்பது இங்கே எழுதப்பட்ட நியதி.
கல்லூரியின் அழகைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தது ருத்ராவின் ரோல்ஸ் ராய்ஸ் கார்.
ஏனோ இங்கே வந்தாலே அவனின் மனம் நிம்மதியடைந்து விடும். அதன் காரணம் தான் அவனுக்கு விளங்காத விடையாய் இருந்தது.
அந்த வளாகத்திலேயே பொறியியல் கல்லூரியிலிருந்து மருத்துவம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அனைத்தும் ஒருங்கே இணைந்தது தான் ருத்ரயாழ் கல்வி நிறுவனங்கள்.
பொறியியல் கல்லூரியின் முன்னே அவனின் கார் நிற்க, அவனை வரவேற்கக் கல்லூரி முதல்வரிலிருந்து போர்டு டைரக்டர் முதற்கொண்டு அனைவரும் அங்கே இருந்தனர்.
அவர்கள் கொடுத்த வரவேற்பைக் கம்பீரமாய் ஏற்றுக் கொண்டவன் மெல்ல அவர்களைப் பார்த்து,
"நீங்கப் போய் உங்க வேலையைப் பாருங்க... நான் அப்படியே காலேஜ் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்" என்றவன் முன்னே செல்ல அவனின் பின்னே சிலர் வர இருந்தனர்.
திரும்பி அவர்களை அழுத்தமாய் ஒரு பார்வை பார்க்க அதனைக் கண்ட அனைவரும் அங்கிருந்து வேகமாய் தங்களின் வேலையைப் பார்க்கச் சென்றனர்.
"சந்தோஷ், நீ வா போலாம்..." என்றபடி சந்தோஷை அழைத்துக் கொண்டு அந்த நீண்ட சாலையில் நடந்தான். சற்று தூரத்தில் ஒரு பதினோரு மாடிக் கட்டிடம் உயர்ந்து நின்றது.
அதை அண்ணாந்து பார்த்தவன் தன் இரு கைகளையும் தன் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி நடந்தான்.
அப்போது சந்தோஷின் அலைபேசி அடிக்க அதைக் கண்டவன் ருத்ராவின் புறம் திரும்பி,
"பாஸ், நம்ம ஆடிட்டர் பேசுறாரு பாஸ்... நான் என்னன்னு கேட்டுட்டு வரேன் பாஸ்..." என்றவன் அலைபேசியை ஆன் செய்து காதில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
அதைக் கேட்ட ருத்ராவும் தலையசைத்துவிட்டு வேடிக்கை பார்த்தபடி நின்றவனின் மார்பில் தோகை மயிலெனத் தஞ்சம் சேர்ந்தது ஒரு பெண்மயில்.
தன் மார்பில் பூப்போல விழுந்தவளைத் தாங்கி பிடித்தவனின் நெஞ்சமோ யாரென அவளைப் பார்த்தது.
பெண்ணவளோ கண்களை மூடியபடி அவனின் மார்பில் ஒண்டியிருக்க அவளின் வதனத்தைப் பார்த்தவனின் கண்களோ கோவைப்பழம் போல் சிவந்திருந்தது.
யார் இவள்? இவளுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?
அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம் செல்லம்ஸ்.
தீபம் ஏற்றும்...