இன்னும் சில அத்தியாயங்கள் வரும்ன்னு நினைக்கிறேன் டியர்ஸ்! அதனால் கதையை உடனே முடிக்காமல் பொறுமையாக, நிறைவாக முடிக்கலாம்னு இருக்கேன்! அதுக்கு எப்போதும் போல் உங்க ஆதரவைத் தருவீங்கன்னு நம்புறேன். தாங்க்ஸ் டியர்ஸ்
வரம் 42
அதில் இன்னும் பெரிதாகச் சிரித்தவனின் மார்பில் தனது கையை வைத்து மெல்லமாக அடி போட்டாள் பெண்ணவள்.
“ஹேய் அழகி! நானே பாவம் குத்துப்பட்டுப் படுத்துக் கிடக்கேன்! நீயும் என்னை அடிச்சா நான் எங்கே போறது? என் கஷ்டத்தை யார் கிட்டே சொல்றது?”என்று தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவளிடம் உரைத்தான் மகிழம்பூவன்.
அதைக் கேட்டவுடன் அவளது மனம் பாகாய் உருகிப் போயிற்று.
உடனே அவனது கன்னத்தில் கையை வைத்து,”சாரி பூவன்! உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு? ரொம்ப வலிக்குதா?”என்று அவனது காயத்தைக் கண்களால் ஆராய்ந்து கொண்டே அவனிடம் அக்கறையுடன் வினவினாள் சஹஸ்ரா.
உடனே,”எனக்கு ரொம்ப வலிக்குது அழகி! இங்கே பாரு எவ்வளவு பெரிய கட்டுப் போட்டு இருக்காங்க? அப்போ காயமும் பெரிசு தானே? வலியும் அதிகமாகத் தானே இருக்கும்? ம்ஹ்ம்”எனக் கூறி விட்டுப் பெருமூச்செறிந்தான் மகிழம்பூவன்.
உடனே அவனிடம் மொத்தமாகச் சரணாகதி அடைந்து விட்டவளோ,”அச்சோ! ரொம்ப சாரி பூவன்! நான் உங்களோட நிலைமையைப் பத்தி யோசிக்காமல் என்னோட விஷயத்தை மட்டுமே பேசிட்டு இருக்கேன் பாருங்க!”என்றவளோ அவனது வயிற்றுப் பகுதியில் இருந்த காயத்தை வருடிக் கொடுக்கலானாள்.
அதில் தனது உடல் சிலிர்த்துப் போனவனோ, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு அவளிடம் எதையோ யாசித்துக் கேட்பதைப் போல் இறைஞ்சும் பார்வையப் பார்த்தவனின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு,
தனது இதழ்களை மெல்ல அவனது நெற்றியில் பதித்து விட்டு விலக்கிக் கொண்டாள் சஹஸ்ரா.
அந்த இதழ் ஒற்றலில் தனது ஜென்ம சாபல்யத்தை அடைந்ததைப் போன்றதொரு பரவச நிலைக்கு ஆட்கொள்ளப்பட்டான் மகிழம்பூவன்.
ஆனால் இங்கோ அவனை நிமிர்ந்து பார்க்க விடாமல் வெட்கம் தடுத்ததால் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவனவள்.
அதைக் கண்டுப் பூரித்தப் புன்னகையுடன்,”அழகி!”என்றழைத்து அவளைத் தன்னை நிமிர்ந்து பார்க்கச் செய்து அவளது விழிகளுடன், தனது விழிகளைக் கலக்க விட்டுக் கொண்டு,
“நான் சின்ன வயசுல இருந்தே உன்னைத் தூரத்தில் இருந்து விரும்பிட்டு இருந்தேன்! இது வெறும் ஈர்ப்பு மட்டும் தான் வளர, வளர சரி ஆகிடும்னு நினைச்சேன்! ஏன்னா, உனக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது! ஆனால் நானும், அக்காவும் வளந்ததுக்கு அப்பறம் உனக்கும், எனக்கும் கல்யாணம் செய்து வைக்கனும்ன்றது எங்கம்மாவோட பெரிய ஆசைன்னு எங்கப்பா எங்க கிட்ட சொன்னாரு! அதைக் கேட்டதுக்கு அப்பறமாக எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு! ஆனால் நீ எப்போ ஊரிலிருந்து இங்கே வந்தாலும் என்னையும், அக்காவையும் கண்டுக்கவே மாட்டே! உங்கப்பா எங்களுக்குச் சப்போர்ட் பண்றாருன்னு எங்களை வெறுத்து ஒதுக்குவ! அதனாலேயே நானும் உங்கிட்ட இருந்து தள்ளி இருந்துக்கிட்டேன். அதே மாதிரி எனக்கு இன்னொரு விஷயத்தைப் பத்தி நினைச்சும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. அதை விட்டும் என்னால் வெளியே வர முடியலை! நான் உங்கிட்ட இயல்பாக வந்துப் பேசாததுக்கு முதல் காரணமும் அது தான்!”என்றவனைப் புரியாமல் குழப்பமாகப் பார்த்தாள் சஹஸ்ரா.
உடனே ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டு,”நான் ரொம்ப கருப்பாக இருக்கேன்! உன் பக்கத்தில் நிற்கும் போது நான் தெரியவே மாட்டேன்! நான் உங்கிட்ட தைரியமாக என்னோட காதலைச் சொல்ல வந்தால் கூட இந்த எண்ணம் தான் என் மூளையில் உடனே வந்து என்னை உங்கிட்ட பேச விடாமல் தடுத்து நிறுத்திடும்! அதனாலேயே உங்கிட்ட பேசுறதுக்காகக் கிடைச்ச நிறைய வாய்ப்புகளைத் தவற விட்டுட்டுக் கையாலாகாத தனமாக இருந்துடுவேன்! அப்போதெல்லாம் எல்லாத்தையும் தைரியமாக எதிர்கொள்ற நமக்கு இந்தக் கருப்பு நிறத்தால் ஏற்பட்டத் தாழ்வு மனப்பான்மையை உடைச்சு வெளியே வர முடியலையேன்னு நினைச்சு என் மேலேயே எனக்குக் கோபமாக வரும்! அதனால் தான் நான் உன் மேல் வச்சிருந்த காதலை உங்கிட்ட சொல்லாமலேயே விட்டுட்டேன்! ஆனாலும் எங்கம்மாவோட ஆசையைக் கடைசி வரைக்கும் என்னால் நிறைவேத்த முடியாமல் போயிடுமோன்றப் பயம் வேற என்னைக் கொல்லாமல் கொன்னுட்டு இருந்துச்சு! ஆனால் நம்மக் குடும்பம் எப்படியோ இதை முன்னெடுத்து நமக்குக் கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணி நம்மகிட்டே எடுத்துச் சொல்லி இப்போ நமக்கு நிச்சயமும் நடக்கப் போகுதுன்றதை நினைச்சாலே என் மனசில் இருந்த பாரமே குறைஞ்சுப் போயிருச்சு! நீ எனக்கே, எனக்குன்னுக் கிடைக்கப் போற!”என்றவனைக் கண்களில் கொலைவெறியுடன் நோக்கினாள் சஹஸ்ரா.
உடனே அவனை விட்டுத் தள்ளி வந்து விடவும், அவளது செயலைக் கண்டுப் புரியாமல் பார்த்தான் மகிழம்பூவன்.
ஆனால் அவளோ, தன்னிடமிருந்த அவனது ஐம்பொன் காப்பை,”இந்தாங்க”என்று அவனிடம் நீட்டி இருந்தாள்.
அதில் மேலும் குழப்பமடைந்து போனவனோ,”அழகி! நீ ஏன் திடீர்னு என்னை விட்டுத் தள்ளிப் போயிருக்கிற? இப்போ எதுக்கு இதை எங்கிட்ட கொடுக்கிற? இதை நீயே என் பக்கத்தில் வந்து என்னோட கையில் போட்டு விடேன்! முதல்ல எங்கிட்ட வா”என்று ஏக்கப் பார்வைப் பார்த்து தனது கரங்களை நீட்டி அவளைத் தன்னிடம் வருமாறு அழைக்கவும்,
அதற்கு எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல்,”நீங்க முதல்ல நல்லா குணமாகிட்டு வந்து எங்கிட்ட பேசுங்க. அப்போ நான் உங்க கிட்ட பேசிக்கிறேன்! அது வரைக்கும் நாம பேசிக்க வேண்டாம்!”என்று கறாராக உரைத்தவளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டிருந்தான் மகிழம்பூவன்.
உடனே,“நீ ஏன் இப்படியெல்லாம் பேசுற அழகி? நான் இப்போ என்னப் பண்ணேன்? இவ்வளவு நாளாக என் மனசில் இருந்ததை எல்லாம் உங்கிட்ட சொன்னேன். அவ்வளவு தான்! ஆனால் நீ அதையெல்லாம் கேட்டுட்டு உன் இப்படி வித்தியாசமாக நடந்துக்கிற? எனக்கு வயிறு ரொம்ப வலிக்குதே!”என்று வலியால் வருந்துவதைப் போல் துடித்துப் பேசி அவளது பரிதாபத்தைச் சம்பாதிக்க முயற்சி செய்து பார்த்தவனைக் கேலியாக இதழை வளைத்துப் பார்த்து,
“ஆஹான்! அப்படியா? உங்களுக்கு ரொம்ப வலிக்குதா? இருங்க, டாக்டரை வரச் சொல்லி இன்னும் பத்து நாளைக்கு நீங்க இங்கேயே இருக்கிறா மாதிரி சொல்லி வைக்கிறேன். நல்லா குணமாகிட்டு அதுக்கப்புறம் வாங்க. அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்தி யோசிக்கிறேன்! இப்போ நீங்க ஒழுங்காக ரெஸ்ட் எடுங்க! அப்பறம், இதை நீங்களே வச்சுக்கோங்க!”என்று அவனது கையிலிருந்த காப்பைக் காட்டிக் கோபத்துடன் மொழிந்து விட்டு அதே கோபத்துடன் அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாள் சஹஸ்ரா.
அவளது கோபத்தின் காரணத்தை அறியாமல் விழி பிதுங்கிப் போனவனோ மருந்தின் வீரியத்தால் உறங்கிப் போய் விட்டான் மகிழம்பூவன்.
அவனை அனுமதித்து இருக்கும் அறையிலிருந்து வெளியே வந்த சஹஸ்ராவிடம்,”என்னம்மா அவன் எப்படி இருக்கான்?”என்று அவளிடம் விசாரித்தார் பால்ராஜ்.
“ஹாங்! அவர் நல்லா இருக்கார் தான் மாமா. ஆனால் வயிறு தான் ரொம்ப வலிக்குதாம்! அதுக்கு டாக்டர் கிட்டே சொல்லி ஏதாவது மாத்திரை, மருந்து இல்லைன்னா ஊசிப் போட்டு அவரை வாயையே தொறக்காத மாதிரிப் பண்ணி வைக்கச் சொல்லுங்க! அப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்!”என்று அவரிடம் கூறியவளை மொத்தக் குடும்பமும் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய்ப் பார்த்தனர்.
“என்ன நீ இப்படி பேசிட்டு இருக்கிற?”என்று அவளிடம் கேட்ட வண்ணமதியைச் சினத்துடன் ஏறிட்டு,
“இங்கே பாருங்க மதி! நீங்க எங்கிட்ட என்ன வேணும்னாலும் பேசலாம்! என்னை என்னச் சொல்லி வேணும்னாலும் திட்டலாம்! என் கூட எந்த விஷயத்துக்காக வேணும்னாலும் சண்டைப் போடலாம்! ஆனால் இனிமேல் உங்கத் தம்பிக்காக எங்கிட்ட வக்காலத்து வாங்கிட்டு வந்து சண்டைப் போட்டீங்க! அவ்வளவு தான் பார்த்துக்கோங்க! நல்ல தம்பியை வளர்த்து வச்சிருக்கீங்க! கொஞ்ச நேரத்துக்கு எங்கிட்ட யாரும் வந்து பேசிடாதீங்க!”என்று அவளிடம் பொரிந்து தள்ளி விட்டு நாற்காலியில் போய்ப் பொத்தென்று அமர்ந்து கொண்டுக் கண்களைக் கைகளால் மூடிக் கொண்டாள் சஹஸ்ரா.
அவள் சம்பந்தமே இல்லாமல் பட்டாசைப் போல் பொரிந்து தள்ளி விட்டுத் தங்களுக்குக் கட்டளையிடுவதைப் போன்றுப் பேசி விட்டுத் தனியாகச் சென்று அமர்ந்ததைக் கண்டு மேலும் திகைப்பில் ஆழ்ந்து போய் விட்டார்கள் அவளது குடும்ப உறுப்பினர்கள்.
அதுவும் இல்லாமல் சிறிது நாட்களுக்கு முன்னர் இருந்து தான் தன்னிடம் இயல்பாகப் பேசிச் சிரித்தவளோ, இப்போது இப்படி அதிரடியாகத் தனக்கு மிரட்டல் விடுவதைப் போன்றுப் பேசியதைக் கண்டு ஆடிப் போயிருந்தாள் வண்ணமதி.
அதற்குப் பிறகு அவளிடம் யாருமே பேசத் துணியவில்லை.
உடனே நிலைமையைத் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டு மகிழம்பூவனின் அறைக்குள் நுழைந்ததும்,
அங்கு மருந்தின் வீரியத்தால் உறங்கி விட்டிருந்தவனைக் கண்டதுமே சத்தமில்லாமல் வெளியேறி,”அவன் தூங்குறான். கண் முழிச்சதும் எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்”என்று அனைவரிடமும் பொதுவாக அறிவித்து விட்டான் பூபாலன்.
அது தனது காதுகளில் விழுந்திருந்தாலும் கூடத் தனது கண்களைத் திறக்கவே இல்லை சஹஸ்ரா.
அவள் இந்தத் திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்றப் பயம் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டது.
ஆனால் இப்போது அவளைத் தொந்தரவு செய்தால் அவளுக்குக் கல்யாணத்தில் விருப்பம் இருந்தாலும் கூடக் கோபத்தில் கண்மண் தெரியாமல் தனது பிடித்தமின்மையைக் கூறி விடுவாள் என்ற எண்ணத்தில் அவளிடம் யாரும், எதுவும் பேசத் துணியவில்லை.
ஆனால் அவர்களது பயம் தேவையற்றது என்பதை உறுதி செய்யும் விதமாக,”இதுக்காக நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்திட மாட்டேன்! அவருக்கு உடம்பு நல்லா குணமாகித், தெம்பாக ஆனதும் நாம எல்லாரும் எங்களோட நிச்சயத்தார்த்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்! அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது!”என்று அவர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்திருந்தாள் சஹஸ்ரா.
அவளது வாக்குமூலத்தைக் கேட்டதும் தான் தங்களது தயக்கம் மற்றும் பயத்தை உடைத்துக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்டார்கள் அனைவரும்.
“சரி. நான் எல்லாரும் சாப்பிட்றதுக்கு ஏற்பாடுப் பண்றேன்”என்றுரைத்து விட்டு உணவகத்திற்குக் கிளம்ப எத்தனித்தப் பூபாலனிடம்,
“நீயே ஏன்ப்பா எல்லாத்தையும் தனியாகப் பார்க்கிற? அது தான் மாப்பிள்ளைக்கு ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரே? நம்ம எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர்றதுக்கு நானும் உன் கூட உதவிக்கு வர்றேன்”என்று எடுத்துரைத்து அவனுடன் கிளம்பிச் சென்றார் ரமணன்.
அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் உணவுப் பொட்டலங்களுடன் வந்து விடவும் அதை வாங்கி அனைவரும் உண்டு முடித்து விட்டார்கள்.
அதே நேரத்தில் தானும் உறக்கத்தில் இருந்து கண் விழித்து விட்டிருந்தான் மகிழம்பூவன்.
- தொடரும்