மனைவி - 30

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
பிரபாகரன் ஒரு கவளம் சோற்றை வாயில் வைத்தான். ஆனால், அவள் சொன்ன அந்த ஒற்றை பதில், அவன் தொண்டைக்குள் இறங்கிக் கொண்டிருந்த உணவை ஏதோ ஒரு பாரத்தைச் சுமத்தி அப்படியே நிறுத்தியது.

ஒரு சங்கடம் அவனுக்குள் உருவானது. அவனுக்குத் தெரிந்து, அவன் மனைவி அவனுக்காக ஒருநாளும் காத்திருந்தது கிடையாது. அவன் பசியை விட தன் தேவைகளுக்கே அவள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாள். இதுபோன்று பார்த்துப் பார்த்துப் பரிமாறுவதோ, பிடித்ததை ஆசையோடு சமைப்பதோ அவள் அகராதியிலேயே இல்லை.

ஆனால், இங்கே ரேணுகா... அவன் கண்கள் லேசாக கலங்கியதை மறைத்துக் கொண்டு, அவசரமாக சாப்பிட்டு முடித்தான். தட்டில் கை கழுவி விட்டு எழுந்தவன், ஒரு நிமிடம் அவளைத் திரும்பிப் பார்க்க துடித்தான். ஆனால், ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.

அவன் நகர்ந்ததும், ரேணுகா மெல்ல வந்து அவன் சாப்பிட்ட தட்டை எடுத்து, சத்தம் வராமல் கழுவி அடுக்கி வைத்தாள். அதன் பிறகு, மிச்சமிருந்த உணவை எடுத்துத் தன் தட்டில் வைத்துக்கொண்டு, யாருமற்ற அந்தச் சமையலறையின் மௌனத்தில் அவள் உண்ணத் தொடங்கினாள்.

இந்த மொத்தக் காட்சியையும் ஜன்னல் ஓரம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.

அப்பா ஏன் ரேணுகாவை நேராகப் பார்க்க தவிர்க்கிறார் என்று யோசித்தான். அதற்காக அவர்கள் இருவரையும் சந்தேக படவில்லை.,

எங்கே அவளைப் பார்த்தால் தன் வைராக்கியம் உடைந்து போகுமோ என்கிற பயம் அவனுக்கு.

ரேணுகா வேலைகளை முடித்துவிட்டு வராண்டாவிற்கு வந்தபோது, அங்கே அரவிந்த் தனியாக நிற்பதைக் கண்டாள்.

“அரவிந்த்! நீ இன்னும் தூங்கலையா? என்ன ஆச்சுப்பா?” பதற்றத்தில் அவள் குரல் நடுங்கியது. ஓடி வந்து அவன் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்தாள்.

“காய்ச்சல் ஏதும் அடிக்குதாப்பா?”

அரவிந்த் மெல்ல அவள் கையை விலக்கினான். “எனக்கு ஒன்னும் இல்ல... தூக்கம் வராம வந்தேன். நீங்க சாப்பிட்டு இருப்பீங்க, அதான் தொந்தரவு பண்ண வேணாம்னு இங்கே நிக்கிறேன்.”

அவள் கனிவோடு அவன் முகம் பார்த்தாள். “தூக்கம் வரலையா? அம்மா ஞாபகம் வந்துச்சா அரவிந்த்?”

அம்மாவா? அந்த வார்த்தை அவனுக்குள் எரிச்சலை மூட்டியது.

“அம்மாவா? நீங்க வேற... அவங்களைப் பத்தி எதுக்கு இப்போ ஞாபகப்படுத்துறீங்க?” கசப்பான குரலில் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“சாரிப்பா... சாரி அரவிந்த். இனிமேல் நான் அவங்களைப் பத்திப் பேச மாட்டேன். நீ வா... ஒருவேளை தனியா இருக்கறதால உனக்குத் தூக்கம் வரல போல. ஐஸ்வர்யா கூடப் படுத்துக்கோ. சத்தியனும் உள்ளதான் ஐஸ்வர்யா கூடத் தூங்குறான்,” என்று அவன் கையைப் பிடித்துத் தாயுள்ளத்தோடு அழைத்துச் சென்றாள்.

அவனைக் கட்டிலில் படுக்க வைத்து, மெல்லிய போர்வையை இழுத்துப் போர்த்தினாள்.

“நீங்க மூணு பேரும் கட்டில்ல படுத்துக்கோங்கப்பா... நான் ஹால்ல கீழே படுத்துக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, அவனுக்கு குடிக்கத் தண்ணீரைத் தட்டில் மூடி வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

ஹால் விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தபோது, இருளுடன் சேர்ந்து அவள் மனபாரமும் சூழ்ந்துகொண்டது.

ஒரு மெல்லிய துணியை மட்டும் விரித்து, அந்த வெறும் தரையில் சுருண்டு படுத்தாள். அவள் உடல் களைப்பால் சோர்ந்து போயிருந்தது, ஆனால் மனமோ அலைபாய்ந்தது.

பிரபாகரன் மேலே சென்று தன் மகனைத் தேடினான். அங்கே அவனைக் காணாமல் அவசரமாகக் கீழே இறங்கி வந்தான். ஹாலைக் கடந்தபோது, தரையில் ஒரு உருவம் ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டு அவன் கால்கள் தானாக நின்றன. ரேணுகா... அந்தப் பெரிய வீட்டின் தரையில், ஒரு ஆதரவற்றவளைப் போலத் தன் உடலைக் குறுக்கிப் படுத்திருப்பதைப் பார்த்தபோது பிரபாகரனின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

அவன் நெஞ்சம் விம்மியது. ஒரு சொட்டுக் கண்ணீர் அவன் கண்ணில் இருந்து தரை இறங்கியது. சத்தமில்லாமல் கதவைத் தாழிட்டுவிட்டு, அறைக்குள் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவன் ரணங்களுக்கு மருந்தாக அமைந்தது. ஐஸ்வர்யாவின் இருபுறமும் அவன் மகன்கள் ஒட்டிக் கொண்டு படுத்திருந்தனர். ஒருவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டும், இன்னொருவன் அவள் காலைக் கட்டிக் கொண்டும் உறங்குவதைக் கண்டபோது, அன்பானவர்களை அடையாளம் கண்டுவிட்டது என்பதை அவன் உணர்ந்தான்.

விளக்கை அணைத்துவிட்டு, கட்டிலின் அருகே வெறும் தரையிலேயே அவனும் படுத்துக்கொண்டான். அந்த இரவு அத்தனை எளிதாக கடந்துவிடவில்லை.

அங்கே ரேணுகாவும் தூங்கவில்லை, இங்கே பிரபாகரனும் தூங்கவில்லை. ஒருவரை ஒருவர் தேடிக்கொள்ளும் தைரியம் இருவருக்கும் இல்லை. ஆனால், அந்த இருளையும் மீறி அவர்கள் இருவரின் மனவலியும் ஒரு புள்ளியில் இணைந்து அவர்களைத் துரத்திக் கொண்டிருந்தது.

அரவிந்த் தூங்குவது போல் நடித்தபடி, தன் தந்தை கீழே படுத்திருப்பதைப் பார்த்தான். தந்தையின் கண்கள் வெறிச்சோடிப் போய் நிலை குத்தி நின்றன. அங்கிருந்து பார்த்தால் ஹாலில் படுத்திருக்கும் ரேணுகாவின் உருவம் ஒரு நிழலாகத் தெரிந்தது. தன் தந்தையும், அந்தப் பெண்ணும் ஒரே மாதிரியான வலியில்தான் சிக்கியிருக்கிறார்கள் என்பது அந்தச் சிறுவனுக்குப் புரியத் தொடங்கியது.

மறுநாள் காலை. ராதை எப்போதும் போலச் சுறுசுறுப்பாக வேலைகளில் மூழ்கியிருந்தாள். சீதா நிதானமாக அவளருகில் வந்து, “அம்மா... உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்டாள்.

ராதை அவளை ஏறிட்டாள். “உனக்கு ஹோம் ஒர்க் ஏதாவது இருந்தா எடுத்து வச்சுப் படி சீதா. அம்மாவுக்கு எந்த உதவியும் வேண்டாம். ஓரளவுக்கு எல்லா வேலையையும் முடிச்சுட்டேன். கிச்சனைச் சுத்தம் பண்றது மட்டும்தான்... ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன்,” என்று சொல்லிவிட்டுப் பாத்திரங்களை மின்னும் அளவிற்குத் தேய்த்தாள்.

குழந்தைகளுக்குப் பிடித்த ஆம்லெட்டைச் சுடச் சுடத் தயாரித்து வைத்துவிட்டு அவர்களைத் தேடி வந்தாள்.

சின்னவள் மகாவும் அதற்குள் விழித்துவிட, இருவருக்கும் பால் கொடுத்துவிட்டு, ஒரு கோப்பை தேநீருடன் ராதை அமர்ந்தாள்.

“அம்மா... அப்பா எங்களைப் பார்க்கவே இல்லமா...” மகாவின் அந்தக் குரலில் இருந்த ஏக்கம் ராதையின் நெஞ்சைக் கீறியது. குடித்துக் கொண்டிருந்த டீ அவளுக்குப் புறையேறியது.

“மகா! அம்மா நம்ம கூடக் கொஞ்ச நேரம்தான் நிம்மதியா உட்கார்ந்து பேசுறாங்க... நீ இப்படியெல்லாம் கேட்கலாமா?” சீதா தன் தங்கையைக் கண்டித்தாள். பிறகு ராதையின் அருகில் வந்து அவள் தலையை மென்மையாகத் தட்டிக் கொடுத்தாள்.

“சாரி அம்மா...” மகா உதட்டைப் பிதுக்கி பாவமாக மன்னிப்புக் கேட்டாள்.

ராதை இருவரையும் தன் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

“என்னால எதையும் உறுதியா சொல்ல முடியாது மகா. நீங்க ஒன்றும் விவரம் தெரியாத குழந்தைகளும் கிடையாது, நான் பொய் சொல்லி ஏமாத்துறதுக்கு. நடக்குறதை ஏத்துக்கோங்க... அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம வாழ்க்கை வாழப் பழகிப்போம். எது நடந்தாலும் அம்மா உங்களுக்குத் துணையா இருப்பேன். அந்த நம்பிக்கையோடு இருங்க,” என்றாள். அவள் குரலில் ஒரு உறுதி தெரிந்தது.

“லவ் யூ அம்மா!” மகா உணர்ச்சிப் பெருக்கில் அவளைக் கட்டிக் கொண்டாள்.

பிள்ளைகளுக்காகத் தன் சோகத்தை மறைத்தாலும், ராதைக்கு அவர்கள் உள்ளத்தின் வலி புரியாமல் இல்லை. அவர்கள் தந்தைக்காக எவ்வளவு ஏங்குகிறார்கள் என்பதை அவள் அறிவாள்.

“சரி, புக் எடுங்க... படிக்கலாம்,” என்று அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாள். கிளம்பும் நேரம் வந்ததும், பிள்ளைகளைத் தயார் செய்துவிட்டு அவளும் தயாராகி வெளியே வந்தாள். பிரபாகரன் சரியாகக் காருடன் வந்து நின்றான்.

“அண்ணா... நீங்களும் இன்னைக்குச் சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கீங்க போல?” அவன் அருகில் இருந்த சாப்பாட்டு பையை பார்த்து ராதை கேட்டாள்.

“ஆமா ராதை,” சுருக்கமாக முடித்துக் கொண்டான் பிரபாகரன். அது ரேணுகா ஆசையோடு சமைத்துக் கொடுத்தது என்பதை அவன் சொல்லவில்லை.

பிள்ளைகளுடன் ராதை காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். பள்ளி வாசலில், சீதாவின் தோழி ஒருத்தி தன் தந்தையுடன் பைக்கில் வந்து இறங்கினாள்.

காரில் இருந்த சீதாவைப் பார்த்துவிட்டு, “சீதா! அது யாரு? உன் அப்பாவா?” என்று பிரபாகரனைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள்.

“இல்ல... அவர் என் மாமா,” சீதா சிரித்த முகத்தோடு சொன்னாலும், அவள் கண்களில் ஒரு மின்னல் மறைந்தது.

“சாரி... நான் கூட உன் அப்பான்னு நினைச்சேன். நாங்க இதுவரைக்கும் உன் அப்பாவைப் பார்த்ததே இல்லையா... அதான் கேட்டேன்,” என்று அவள் சொல்லிட்டுப் போக, சீதாவினதும் மகாவினதும் முகங்கள் ஒரு நொடியில் கருகிப் போயின.

“நமக்குத்தான் குடுத்து வைக்கவே இல்ல... அப்பா கூட இது மாதிரி ஸ்கூலுக்கு வர்றதுக்கெல்லாம்...” மகா அழுகையோடு சொல்ல, பிரபாகரன் கலங்கிப் போனான்.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும், ஒரு தந்தையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை அவன் ஆணித்தரமாக உணர்ந்தான்.

கார் அமைதியாகக் கிளம்பியது. அந்த அமைதி எத்தனையோ கதைகளைச் சொன்னது. ‘இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’ என்று பிரபாகரன் தனக்குள் உறுதி பூண்டான்.

பிள்ளைகளை இறக்கிவிட்டு அலுவலகம் சென்ற பிரபாகரனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே வாசலில் ஸ்ரீராம் ஒரு பிச்சைக்காரனைப் போலக் கோலமிழந்து அமர்ந்திருந்தான். கலைந்த தலைமுடி, அழுக்கான ஆடை, ஒட்டிய கன்னங்கள்... அவன் உடல் அமைப்பைப் பார்த்து பிரபாகரன் பதறிப் போனான்.

“ஸ்ரீராம்! இங்க என்ன பண்ற?”

அவன் குரல் கேட்டதும் ஸ்ரீராம் திடுக்கிட்டு எழுந்தான். பிரபாகரன் காரில் இருந்து இறங்குவதையும், அந்தப் பளபளக்கும் காரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“உள்ள வா... என்னுடைய கார்தான் இது,” என்று கதவைத் திறந்து விட, ஸ்ரீராம் தயக்கத்துடன் ஏறிக்கொண்டான்.

“ஆபீஸ் முன்னாடி வச்சு எதையும் பேச வேண்டாம்னுதான் உன்னை கார்ல ஏறச் சொன்னேன். எதுக்காக என்னைத் தேடி வந்த? என்ன விஷயம்?” பிரபாகரனின் வார்த்தைகள் சாட்டையடி போல விழுந்தன.

ஸ்ரீராம் பதில் பேசாமல் கூனிக் குறுகி, தன் உள்ளங்கைகளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“நம்ம ரெண்டு பேரும் என்ன லவ்வர்ஸா? இப்படி அமைதியா உட்கார்ந்து இருக்க... எதுக்கு வந்தன்னு சொல்லு!” எரிச்சலுடன் காரை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஓட்டிச் சென்று நிறுத்தினான் பிரபாகரன்.

ஸ்ரீராம் மெல்லக் காரில் இருந்து இறங்கி, ஒரு முடிவோடு சொன்னான்: “என்னுடைய குடும்பம் எங்க இருக்கு? அவங்களை நான் பாக்கணும்!”

பிரபாகரன் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை பூத்தது. அதை மறைத்துக் கொண்டு,

“உன் குடும்பத்தை நான் என்ன கடத்திக்கிட்டா வந்தேன்? உன் அம்மா, தங்கச்சிங்க எல்லாம் அதே பழைய வீட்ல தான் இருப்பாங்க. வீட்டுக்கு போற வழியை மறந்துட்டியா? இல்ல அதைத் தெரிஞ்சுக்கத்தான் என்னைத் தேடி வந்தியா?” அவன் வார்த்தைகளில் நக்கல் தெறித்தது.

ஸ்ரீராம் ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக் கொண்டான். அவமானமும் வலியும் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தொடரும்....
 
இனி கண்டிப்பாக ஸ்ரீராம் தன் மனைவி மக்களோட ஒன்னு சேர்ந்துடுவானு நம்பிக்கை இருக்கு.

இந்த பிரபாகரன் ரேணு இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேலை சொந்த அக்கா மகளா இருக்குமோ?
 
Last edited:

இன்னும் நல்லா நாலு வார்த்தை நறுக்குன்னு கேளு பிரபா
ஆனால் பிரபாவுக்கும் ஏதோ பெரிய பிளாஷ்பேக் இருக்கும் போலவே
 
Very interesting 👌 waiting for next ud
 
Advertisement

Advertisement

Back
Top