மனைவி - 31
பிரபாகரன் நக்கல் அடிப்பது அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், இப்போது அவமானத்தை விட ஆதங்கம் மேலோங்கி நின்றது.
"என்னுடைய மனைவி... என் குழந்தைங்க... அவங்க எங்க இருக்காங்கன்னுதான் நான் கேட்டேன். தயவு செஞ்சு அவங்க இருக்கிற இடத்தை மட்டும் சொல்லுங்க..." ஸ்ரீராமின் குரல் கரகரத்தது. பிச்சை கேட்பது போலிருந்தது அவன் கெஞ்சல்.
எதற்கெடுத்தாலும் ஸ்ரீராம் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாவின் வேகத்தில் சீறுவான்.
ஆனால் இப்போது அதே வேகத்தோடு பிரபாகரனிடம் இருந்து இந்தக் கேள்வி வந்தது:
"இன்னமும் அவங்க வீடு தேடிப் போய் அசிங்கப்படுத்தவா? இல்ல உங்க அம்மா தான் சொல்லி அனுப்புனாங்களே... அந்த ரெண்டு குழந்தைகளும் உனக்கு பொறக்கலன்னு! அதைத் திரும்பவும் அவகிட்டயே போய் அது பொய்யா உண்மையான்னு கேக்கப் போறியா? இல்ல, இன்னமும் அவளைச் சாகடிக்கப் போறியா? 'குழந்தைகளுக்காகவாவது வாழணும்'னு ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தோட போராடிட்டு இருக்கற பொண்ணை, இன்னமும் கொல்லணும்னு முடிவு பண்ணிட்டியா ஸ்ரீராம்?"
ஸ்ரீராம் அப்படியே நொடிந்து போனான். காலடியில் பூமி நழுவுவது போலிருந்தது. அவனுக்கு வார்த்தைக்கு வார்த்தை தர்க்கம் பேசிப் பழக்கமில்லை. இதயத்தின் ஓரங்களில் கசியும் உணர்வுகளைக் கூட ஒரு துளி கண்ணீரால் வெளிப்படுத்தத் தெரியாத ஊமை அவன்.
அவன் ஒரு கல் சிலையைப் போல அமைதியாக நிற்பதைக் கண்ட பிரபாகரனுக்கு உள்ளுக்குள் ஆத்திரம் எரிமலையாய் வெடித்தது.
"நீ இன்னும் ஒண்ணுமே தெரியாத பாலகன் கிடையாது ஸ்ரீராம். இப்படிப் பேயடிச்சவன் மாதிரி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? வாயைத் திறந்து சொல்லுடா!"
ஸ்ரீராம் மெல்லத் தலை நிமிர்ந்தான். கண்கள் சிவந்து போயிருந்தன.
"எனக்கு... எனக்கு உங்க அளவுக்கு எல்லாம் பேச வராது. எனக்கு என் மனைவியும் என் குழந்தைகளும் வேணும். அவ்வளவுதான். அவங்களை நான் பார்க்கணும்."
"போ! இப்போ பார்த்துட்டு திரும்பவும் உன் அம்மா கிட்டயே ஓடிப் போயிடுவியா?" என ஏளனமாகச் சீறினான் பிரபாகரன்.
"இல்ல... தயவு செஞ்சு அவங்க எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க..." மீண்டும் மீண்டும் அவன் அதே மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்க,
இவனிடம் எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் பிரபாகரன் திகைத்து நின்றான். அவன் பேசும் மொழி வேறாக இருந்தது.
இறுதியில், பிள்ளைகள் படிக்கும் பள்ளியையும், ராதை வேலை செய்யும் இடத்தையும், அவர்கள் தங்கி இருக்கும் முகவரியையும் ஒரு காகிதத்தில் குறித்துக் கொடுத்து அனுப்பினார் பிரபாகரன்.
அந்தக் காகிதத்தைப் பார்த்ததும் ஸ்ரீராம் முகத்தில் ஒரு புதுத் தெளிவு. இத்தனை கால இருட்டுக்குப் பின் ஒரு மின்மினிப் பூச்சியைக் கண்ட சந்தோஷத்தோடு அவனிடமிருந்து கிளம்பினான்.
'இவன் எப்ப தான் மாறுவான் தெரியலையே! இவன் இப்படியே ஜடம் மாதிரி இருந்தா, திரும்பவும் அவன் அம்மாவும் தங்கச்சியும் சேர்ந்து அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் சிதைச்சுடுவாங்களே' என்று பிரபாகரன் அடிவயிற்றில் பயத்தோடு நின்றிருந்தான்.
அமைதிக்குப் பின்னும் பெரும் புயல் ஒளிந்திருக்கும் என்று அவன் அறியாமல் போனான். ஸ்ரீராம் உணர்வுகளைக் காட்டத் தெரியாதவனே தவிர, உணர்வுகளே இல்லாதவன் அல்ல. தனக்கு இது தேவை, இது தேவையில்லை என்று பிரித்துத் கேட்கத் தெரியாமல் போனதற்கு அவன் வளர்ந்த விதம் ஒரு காரணம். ஆனால் அவன் தனக்காகப் பேசத் தெரியாதவனே தவிர, தன்னைச் சார்ந்தவர்களுக்காகப் பேசத் துணியாதவன் கிடையாது.
பிரபாகரன் ரகசியமாக ஸ்ரீராமைப் பின் தொடர்ந்தான்.
முதலில் குழந்தைகளைப் பார்க்கத் தான் செல்வான் என்று பிரபாகரன் நினைக்க, ஸ்ரீராமோ நேராகத் தன் மனைவி வேலை செய்யும் இடத்திற்குச் சென்றான்.
அது ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட். அங்கே கிடைக்காத பொருட்களே இல்லை. ஸ்ரீராம் உள்ளே நுழையும் முன் ஒரு தொப்பியும் மாஸ்க்கும் எடுத்து கொண்டு, முகம் மறைத்து உள்ளே சென்றான்.
'இப்ப எதுக்கு இவன் திருட்டுப் பையன் மாதிரிப் போறான்?' பிரபாகரன் சந்தேகத்தோடு மீண்டும் அவனைத் தொடர்ந்தான்.
ஸ்ரீராமின் கண்கள் ஒவ்வோர் அடுக்கிலும் அலைபாய்ந்தன. அவனது இதயம் தேடும் அந்த முகம் எங்கே?
அப்போது அவள் குரல்! அவன் காதுகளில் தேனாய் வந்து பாய, மின்னல் தாக்கியது போலத் திரும்பிப் பார்த்தான்.
"அக்கா, இங்க இருக்கற பொருள் எல்லாம் அடுக்காம இருக்கு. இதெல்லாம் ஒரு ஒரு மாடியா கொண்டு போய் அந்தந்த இடத்துல அடுக்கி வைங்க," என்று அவள் வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் ஸ்ரீராம் அப்படியே உறைந்து போனான். கண்கள் பனிக்க, அந்த இடத்திலேயே சிலையாக நின்றான்.
வெள்ளைப் புடவையில் மஞ்சள் பூக்கள் கோர்த்தது போல ஒரு தேவதை. அமைதியின் சொரூபமாக நின்ற தன்னவளை, ஒரு தூணின் மறைவில் நின்று ரசித்துக் கொண்டே இருந்தான்.
'அட பிறவிப் பைத்தியமே! இப்பதான் இவன் பொண்டாட்டியையே 'சைட்' அடிக்க ஆரம்பிச்சிருக்கான். இவன் என்னைக்குப் பேசி, என்னைக்குச் சேர்ந்து, இவங்க குடும்பம் எப்படா ஒண்ணு சேரும்?' பிரபாகரன் வேதனையில் நொந்து போனான்.
'இவன் என்னதான் நெனச்சிட்டு இருக்கான்? ஏதோ டீனேஜ் பையன் மாதிரி மறைஞ்சு நின்னு பார்த்துட்டு இருக்கான். ஏதோ ஒருதலையா லவ் பண்றவன் மாதிரி நிக்கிறானே! நேராப் போய் பேசினா என்ன? இவனை இப்படியே ஒரு கட்டையைத் தூக்கிப் போட்டு அடிச்சுடலாமா?' என்று பிரபாகரன் மனதிற்குள் ஸ்ரீராமைத் திட்டித் தீர்த்தான்.
ராதை எங்கே சென்றாளோ, அங்கெல்லாம் ஸ்ரீராம் ஒரு நிழலைப் போலப் பின் தொடர்ந்தான்.
ஒருவேளை அவள் தன்னைத் திரும்பிப் பார்த்துவிட்டால், மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற பயத்தில் அருகில் இருந்த பொருட்களை எடுத்துத் தன் கூடையில் போட்டுக் கொண்டான். அது என்ன பொருள், அதன் விலை என்ன என்று கூட அவன் பார்க்கவில்லை.
'இந்தப் பைத்தியக்காரன் இப்ப எதுக்கு கிரீன் டீயும் பேபி டயப்பரும் வாங்கிட்டு இருக்கான்? எந்தப் பிள்ளைக்குப் போட்டு விடப்போறான்னு தெரியலையே!' ஸ்ரீராமின் செயலைக் கண்டு பிரபாகரன் தலையில் அடித்துக் கொண்டு அழாத குறையாக நின்றான்.
அப்போது, ஸ்ரீராமைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த பிரபாகரன், ராதையின் கவனத்தைத் தற்செயலாகக் கவர, "அண்ணா... இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்ற அவள் குரலில் அதிர்ந்து திரும்பினான்.
சற்றும் எதிர்பாராதக் கேள்வி! என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் பிரபாகரன் முழிக்க, அவன் பார்வை தூரத்தில் நின்ற ஸ்ரீராம் மீது படிந்தது.
உடனே ஸ்ரீராம் மீண்டும் அவசர அவசரமாக ஒரு பேபி டயப்பரை எடுத்துத் தன் கூடையில் போட்டுக் கொண்டான்.
'திரும்பவும் இவன் டையப்பர் தான் வாங்குறான்!' என்று பிரபாகரன் பல்லைக் கடிக்க...
"யாருக்கு டையப்பர் அண்ணா?" என்று ராதை சந்தேகமாகக் கேட்டாள்.
"டையப்பரா?" பிரபாகரன் திருதிருவென முழித்தான்.
"நீங்கதானே டையப்பர்னு சொன்னீங்க? டையப்பர் வாங்கவா வந்தீங்க?"
"ஆமாம்மா... எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கான். அவன் கூட வந்தேன். இதோ பில் போட்டுட்டு உடனே கிளம்புறோம்," என்று சமாளித்தான்.
"சரிங்க அண்ணா, டையப்பர் அந்தப் பக்கம் இருக்கு பாருங்க," என்று அவள் இடத்தைக் காட்டிவிட்டு நகர...
பிரபாகரன் வேகமாக ஸ்ரீராம் அருகில் சென்று, அவனை இழுத்துக் கொண்டு, அவன் கையில் இருந்த கூடையைப் பிடுங்கிக் கொண்டு பில்லிங் கவுண்டருக்கு வந்தான்.
"என்னை விடுங்க!" என்று ஸ்ரீராம் திமிறிக் கொண்டு நிற்க...
"இன்னும் கொஞ்ச நேரம் இதே கெட்டப்ல இங்க இருந்திருந்தா, போலீஸ் ஸ்டேஷன்ல கம்பியைத் தான் எண்ணிட்டு இருப்பே. அங்க பாரு, ஒருத்தன் உன்னையேதான் வாட்ச் பண்ணிட்டு இருக்கான். ஒழுங்கு மரியாதையா வாங்கின பொருளுக்கு பில் போடு, வீட்டுக்குப் போகலாம்."
"பில் போடணுமா? என்கிட்ட ஏது காசு?" என்று ஸ்ரீராம் கையை விரிக்க, பிரபாகரன் இடி விழுந்தது போல அவனைப் பார்த்தான்.
"என்னது? கைல காசு இல்லாமலா இவ்வளவு பொருள் எடுத்தே?"
"ஆமா, என்கிட்ட காசு இல்ல."
அவர்கள் இருவரும் முட்டிக் கொண்டிருக்கும் போதே, பில்லிங் பெண்மணி கூடையை எடுத்துப் பில் போட்டு முடித்திருந்தார்.
"2655 ரூபாய் ஆகுது சார். கேஷா? இல்ல ஜி-பே பண்றீங்களா?"
ஸ்ரீராமும் பிரபாகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அந்தப் பெண் முன் விழித்து நின்றனர்.
வேறு வழியில்லாமல் பிரபாகரன் தன் பணத்தைச் செலுத்திவிட்டு, அவன் தேவையில்லாமல் வாங்கிய பொருட்களையும் சுமந்து கொண்டு வெளியே வந்தான்.
கொஞ்சம் தூரம் தள்ளிப் போய் ஒரு நிழலில் அமர்ந்த பிரபாகரன், பையிலிருந்த பொருட்களை கீழே கொட்டிப் பார்த்தான்.
பேபி ஷாம்பூ, பேபி பவுடர், டையப்பர், பேபி ஆயில்... இதோடு நிற்காமல் கொத்தமல்லி, கருவேப்பிலை பொடி, கொள்ளு பாக்கெட், ரசப்பொடி, சாம்பார் பொடி, நாப்கின்ஸ், மிளகாய்த்தூள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
"இதெல்லாம் எதுக்குடா எடுத்த?"
ஸ்ரீராம் இப்போதுதான் தான் எடுத்த பொருட்களை உற்றுப் பார்த்தான். ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்தவன் போல மூச்சுத் திணறிப் போய் அமர்ந்திருந்தான்.
"என்ன... உன் தங்கச்சிக்கு பொறக்க போற குழந்தைகளுக்கு இதெல்லாம் அட்வான்ஸா வாங்கி வச்சிருக்கியா?" என்று நக்கலாகக் கேட்டாலும், பிரபாகரனுக்கு உள்ளுக்குள் எறிந்திருந்தது.
"இல்ல... ராதை என்னைத் திரும்பிப் பார்க்கும் போது பயத்துல... எதையோ எடுத்துப் பைக்குள்ள போட்டேன். இப்படிப் பில் போடச் சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியாது..."
பிரபாகரன் தலையில் அடித்துக் கொண்டான். "நீ வேலை செஞ்ச இடத்துல ஷாப்பிங் மால் எதுவுமே போனதில்லையா?"
"இதுவரைக்கும் போனதில்லை. இதுதான் ஃபர்ஸ்ட் டைம்."
"அப்பறம் அங்க என்னதான் பண்ணுவ நீ?"
"வேலைக்குப் போவேன்... வேலை செய்வேன்... ரூமுக்கு வருவேன்... அம்மா கிட்ட பேசிட்டுப் படுத்துத் தூங்கிடுவேன்."
அவன் சொன்னதைக் கேட்டதும் பிரபாகரனுக்குப் பகீரென்றது. ஏதோ புரோகிராம் செய்யப்பட்ட ஒரு இயந்திரப் பொம்மையைப் போல இத்தனை காலம் அவன் வாழ்ந்திருக்கிறான்.
ஸ்ரீராம் இனிதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறான் என்பதும், அவனைச் செதுக்கும் உளியாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் பிரபாகரனுக்குப் புரிந்தது.
"சரி, இன்னைக்கு நான் லீவ் சொல்லிட்டேன். வா வீட்டுக்குப் போகலாம்."
"இனிமேல் அந்த வீட்டுக்கு நான் வரணுமா? இல்ல..."
"அப்படியே ஓங்கி முகத்துல குத்திடுவேன்! உன்னை அந்த வீட்டுக்கா கூப்பிட்டேன்? நானே இனிமே அங்க போக மாட்டேன். என்கூட வா. இப்படியே பிச்சைக்காரன் மாதிரி சுத்தி யார்கிட்டயாவது அடி வாங்காதே. ஒருவேளை அடையாளம் தெரியாம ராதை கிட்டயே நீ அடி வாங்கினாலும் வாங்குவ," என்று வலுக்கட்டாயமாக அவனை அழைத்துச் செல்ல, ஸ்ரீராமின் பார்வை மட்டும் இன்னும் அந்தச் சூப்பர் மார்க்கெட் மேலேயே இருந்தது.
"12 வருஷம் இல்லாத அன்பு ஒரே நாள்ல வந்துடுச்சாடா?" பிரபாகரன் விளையாட்டாகக் கேட்டாலும், அந்த வார்த்தை ஸ்ரீராமின் இதயத்தைச் சுட்டது.
தொடரும்.....