மனைவி - 36
"ஸ்ரீராம், எப்படிப் போவ? பஸ்ஸுக்கா?" என்று பிரபாகரன் கேட்டார். ஸ்ரீராமிடம் காசு இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
"ராதை ஏதாவது காசு வச்சிருப்பா... பஸ்ல போறோம்."
பிரபாகரன் சட்டென உள்ளே சென்று பைக் சாவியை எடுத்து ஸ்ரீராமை நோக்கித் தூக்கி வீசினார்.
"நீ புதுசா ஒரு பைக் வாங்குற வரைக்கும் இதை யூஸ் பண்ணிக்கோ. இது என்னோட பைக்... நீ வாங்கி கொடுத்தது இல்ல. நான் என் உழைப்புல வாங்குனது. அதனால தயங்காம எடுத்துட்டுப் போ. டெய்லி குழந்தைகளை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போகணும், உன் பொண்டாட்டியை வேலைக்கு விடணும். புரியுதா?"
ஸ்ரீராம் அந்தச் சாவியைப் பிடித்துக்கொண்டான். "மகா குட்டி! இங்கே வெயிட் பண்ணுங்க... அப்பா போய் பைக் எடுத்துட்டு வர்றேன்," என்று உற்சாகமாக ஓடினான்.
அவன் பைக்கை எடுத்து வந்து நிறுத்த, மகா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து முன்னால் அமர்ந்து கொண்டாள். மனைவி பின்னால் அமருவாள், அவளைத் தொட்டுக்கொண்டு பயணம் செய்யலாம் என்று ஸ்ரீராம் ஆவலாகக் காத்திருக்க, ராதையோ சீதாவைத் தூக்கி ஸ்ரீராமின் பின்னால் அமர வைத்து, அவளுக்குப் பின்னால் தானும் அமர்ந்து கொண்டாள்.
ஸ்ரீராமின் இதயம் ஒரு நிமிடம் சுக்குநூறாக உடைந்தது. 'இன்னும் அவ மனசு மாறலையே' என்று ஏங்கினான்.
"ரொம்ப ஆசைப்படாத ஸ்ரீராம்! இவ்வளவு வேலை பண்ணிட்டு ரொமான்ஸ் வேற கேக்குதா உனக்கு?" என்று பிரபாகரன் கிண்டலாகச் சிரிக்க, ஸ்ரீராம் அவனை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, தன் குடும்பத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.
ஸ்ரீராம் முதல் முறையாகத் தன்னை ஒரு முழு மனிதனாக உணர்ந்தான். தன் பிள்ளைகளுடன், தன் மனைவியுடன் செல்லும் இந்த ஒவ்வொரு நொடியையும் அவன் தன் உயிருக்கு உயிராக நேசித்தான்.
பைக்கை மெதுவாகச் செலுத்தியபடியே, அடிக்கடி சைடு மிரரை அட்ஜஸ்ட் செய்தான். அந்தச் சின்னக் கண்ணாடியில் தெரிந்த தன் மனைவியின் முகத்தை ரசித்தபடியே, "ராதா... வீடு எங்க இருக்கு? வழி சொல்லு," என்று நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு உரிமையோடு கேட்டான்.
"ஸ்ட்ரைட்டா போய் லெஃப்ட் எடுங்க," என்றாள் ராதை. அவன் தன்னையே தான் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தும், அவள் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஆனால் மகா மட்டும்தான் எல்லையற்ற சந்தோஷத்தில் இருந்தாள். தன் தந்தையோடு ஊர் அறியப் பயணம் செய்யும் அந்த நிமிடங்கள், அவளுக்கு மீண்டும் ஒரு புதிய பிறவி எடுத்தது போல இருந்தது.
குடும்பத்தோடு வீட்டு வாசலில் வந்து பைக்கை நிறுத்த, வீட்டு உரிமையாளர் அம்மா அங்கே நின்றிருந்தார். அவர் ஸ்ரீராமை ஒரு மாதிரி கேள்வியாகப் பார்த்தார்.
"ராதை, இவர் யாரு?" என்று கேட்டார்.
"அம்மா, இவங்கதான் சீதாவோட அப்பா," என்று அறிமுகம் செய்து வைத்தாள் ராதை.
'என் கணவர்' என்று சொல்ல அவள் வாய் வரவில்லை. ஸ்ரீராமின் மனதுக்குள் அந்தச் சொல் ஈட்டியாகப் பாய்ந்தது.
'இந்த வலி உனக்குத் தேவைதான் ஸ்ரீராம்' என்று மனதைத் தேற்றிக்கொண்டு, சின்னவளைத் தூக்கிக் கொண்டு, பெரியவளின் கைபிடித்து மாடியேறினான்.
"எப்படியோ நீங்க ஒண்ணா சேர்ந்துட்டீங்க, அதுவே சந்தோஷம் ராதா. தனியா ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சுட்டு நீ எப்படி வளர்க்கப் போறியோன்னு நான் ரொம்பப் பயந்தேன். மனசுக்குள்ள ஆயிரம் கஷ்டம் இருந்தாலும், பெத்த புள்ளைங்களை மனசுல வச்சுக்கோ. இனி வர்ற காலங்கள் சந்தோஷமா இருக்கும்னு நம்புறேன். உன் நல்ல மனசுக்குக் கண்டிப்பா நீங்க நல்லா வாழ்வீங்க," என்று அந்த அம்மாள் நாசுக்காக அறிவுரை சொன்னார்.
ராதை வந்து கதவைத் திறக்கும் வரை குழந்தைகளுடன் வாசலிலேயே நின்றான் ஸ்ரீராம். கதவைத் திறந்ததும் உள்ளே சென்றவன், அந்த வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தான்.
ரொம்பச் சின்ன வீடுதான். கால்களை நீட்டினால் கிச்சன், ஹால், பாத்ரூம் என எல்லாம் முடிந்துவிடும். 'இந்தச் சின்ன இடத்துக்குள்ளையா என் பிள்ளைகளை வச்சுக்கிட்டு இத்தனை நாள் கஷ்டப்பட்டா?' என்று நினைக்கும் போது அவன் நெஞ்சு விம்மியது.
இப்போது அவன் கையில் வேலை இல்லை, பையில் பத்து பைசா காசும் இல்லை. இந்த நிலையில் எதையும் மாற்ற முடியாது. ஆனால், தன் உழைப்பால் மீண்டும் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் காட்டுவேன் என்கிற வெறி மட்டும் அவன் கண்களில் மின்னியது.
"மகா... சீதா... ரெண்டு பேரும் மதியம் சாப்பிட்டீங்களா?" ராதையின் குரலில் ஒருவித படபடப்பு இருந்தது.
"சாப்பிட்டோம்மா…” சீதா கூற,
"எனக்கு வயிறு இன்னும் பத்தலம்மா... பசிக்குது, ஏதாவது செஞ்சு தாயேன்," என்று மகா சிணுங்கினாள். உண்மையில் அது மகாவின் பசி அல்ல, ஓரமாக அமர்ந்திருக்கும் தன் தந்தையின் ஒட்டிய வயிற்றைப் பார்த்து அந்தப் பிஞ்சு மனம் வெளிப்படுத்திய தந்திரமான பசி.
ராதை அவசரமாகச் சமையலறைக்குள் புகுந்தாள். பாத்திரங்களைத் திறந்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலையில் வைத்த சாம்பார் அடி பிடிக்கும் நிலையில் கொஞ்சம் இருந்தது. அதை ஒரு பக்கம் சூடு பண்ண வைத்தவள், கைகள் நடுங்க அவசரம் அவசரமாகச் சேமியா பாக்கெட்டைப் பிரித்தாள்.
கேரட், வெங்காயம், பீன்ஸ் என்று கையில் கிடைத்த காய்கறிகளைப் பம்பரம் போலச் சுழன்று நறுக்கினாள். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் பொரியும் சத்தத்திற்கு நடுவே, மல்லாட்டப் பயிரை (வேர்க்கடலை) அள்ளிப் போட்டாள். அது சிவந்து மணம் வீசும் போதே நறுக்கிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் உள்ளே தள்ளி வதக்கினாள். காரத்திற்காக இரண்டு பச்சை மிளகாயைக் கீறிப் போட்ட போது எழுந்த அந்த நெடி, வீடெங்கும் பரவியது.
அவள் கைகள் இயந்திரத்தனமாக வேலை செய்வதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். பிள்ளைகளுடன் ஒரு ஓரமாக ஒடுங்கி அமர்ந்திருந்த அவனது கண்கள், தன் மனைவியின் அக்கறையில் கரைந்து போயின.
காய்கறி வதங்கியதும் தண்ணீர் ஊற்றி மூடி வைத்த ராதை, "சீதாம்மா... காலையில வச்ச சாம்பார் தான் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்களா? இல்ல சட்னி அரைக்கவா? உங்க அப்பாவுக்கு ஓகே வான்னு கேட்டுச் சொல்லு," என்றாள். அவன் முகத்தைப் பார்க்கத் துணிவில்லாமல் மகளிடம் கேட்டாள்.
அவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான், 'நான் இங்கதானே இருக்கேன்... என்கிட்டயே நேரடியா கேட்கலாமே?' ஆனால் வெளியே சொல்லவில்லை.
"எனக்கு எது இருந்தாலும் ஓகே தான் ராதா... பசிக்குது... உன் கையால எது கொடுத்தாலும் நிம்மதியா சாப்பிடுவேன்," என்றான். அவன் குரலில் இருந்த தளர்ச்சியே அவன் எவ்வளவு பெரிய பசியில் இருக்கிறான் என்பதை உரக்கச் சொன்னது.
ராதைக்கு இதயம் ஒரு நிமிடம் சுருங்கி விரிந்தது.
'தூர தேசத்துல நாயா பேயா உழைச்ச மனுஷன்... இன்னைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு இப்படி ஏங்கி நிக்கிறாரே' என்று நினைக்கும் போது, மனைவியாக அவள் மனம் கசக்கிப் பிழியப்பட்டது. அந்த வலி கண்ணீராக வர பார்த்தது, ஆனால் அதைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கிக் கொண்டாள்.
"கொஞ்ச நேரம் இருங்க..." என்று சேமியாவைப் போட்டு, பக்குவமான பதத்தில் கிளறி இறக்கி மூடி வைத்தாள். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு சாப்பாடு ரெடி ஆயிடும் எனச் சொல்லிவிட்டு, மின்னல் வேகத்தில் தட்டுக்களையும் தண்ணீர் எடுத்து வந்து அடுக்கினாள்.
தாயின் கஷ்டம் உணர்ந்த சீதா, ஓடிப் போய் உதவினாள். தண்ணீர் செம்புகளை எடுத்து வைத்தாள். சாம்பார் கிண்ணத்தை மெல்ல நகர்த்தி வைத்தாள்.
"சீதா... வாணலியைத் தொடாதடா... சுட்டுடப் போகுது. நீ போய் உட்காரு, நான் எடுத்துட்டு வரேன்," என்று பதறிய ராதை, சூடான சேமியாவை எடுத்து வந்தாள். பிள்ளைகள் தட்டில் கொஞ்சமாக வைத்துவிட்டு, கணவன் தட்டில் மலையென அள்ளி வைத்தாள். நிறைய காய்கறிகளைத் தேடிப் பிடித்து அவன் தட்டில் போட்டு, அதன் மேல் சாம்பாரை ஊற்றி முதலில் அவனிடம் நீட்டினாள்.
"மகா... பசிக்குதுன்னு சொன்னியே, சாப்பிடுடா," என்றாள் ராதை.
"அம்மா... எனக்கு அதிகமா வேணாம், கொஞ்சமா போதும்," என்றாள் மகா.
"என்னடி இது? கொஞ்சமா போதும்னு சொல்லவா பசிக்குதுன்னு என்னையே சமைக்க வச்ச?" என்று ராதை சற்றே அங்கலாய்ப்பாகக் கேட்க,
மகா மெல்லிய குரலில் சொன்னாள், "அப்பா பசியில இருக்காங்கம்மா... அதான் உன்னை சமைக்கச் சொன்னேன். அப்பா காலையில இருந்து சாப்பிடவே இல்லை போலிருக்கு."
மகள் சொன்னதைக் கேட்டதும் ஸ்ரீராம் கண்கள் அப்படியே கலங்கிப் போயின. தன்னை இவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கும் மகளைப் பார்த்து அவன் நெஞ்சு பூரித்துப் போனது.
'உண்மையான உறவுன்னா இதுதானே?' என்று எண்ணினான்.
பார்த்த சில மணி நேரங்களிலேயே தன் தந்தை பசியோடு இருப்பதை உணர்ந்த மகள், பிணக்கு இருந்தாலும் கணவனுக்காக அள்ளி அள்ளி வைத்த மனைவி... 'இப்படிப்பட்ட சொந்தங்களை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு, எவனோ யாரோவுக்காக நான் ஜடமா வாழ்ந்திருக்கேனே' என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன், பசிக்கு மிச்சம் வைக்காமல் வெறித்தனமாக உண்டான்.
அவன் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்த போதே ராதைக்கு உள்ளம் துடித்தது. 'எவ்வளவு பசி அவருக்கு' என்று நினைத்து, மீண்டும் மீண்டும் அள்ளி வைக்க, அவன் எதையும் மறுக்காமல் சாப்பிட்டான்.
பெற்ற தாயாக இருந்தாலும் மகனுக்கு வேண்டியதைச் செய்ததில்லை. நேரம் அறிந்து அவனுக்குச் சோறு போட்டதில்லை. மகள்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தாயை, இத்தனை நாட்களில் அவன் கவனித்திருந்தான்.
'என்ன இருந்தாலும் மனைவிக்கு நிகர் மனைவி தான்' என்ற உண்மை அவன் மண்டையில் சுத்தியலால் அடித்தது போல உறைத்தது.
பாதி வயிறு நிறைந்த பிறகுதான் அவனுக்குச் சுயநினைவே வந்தது.
'அச்சோ... பிள்ளைகளை கவனிக்கலையே' என்று மனதிற்குள் குட்டிக் கொண்டவன், ஒரு கை நிறைய அள்ளி முதலில் மூத்த மகளுக்கு ஊட்டி விட, அவளும் ஆசையாக வாங்கிக் கொண்டாள். அடுத்தது இளையவளுக்கு... அவளும் மறுக்காமல் உண்டாள்.
கடைசியாக, 'நடக்காதுன்னு தெரிஞ்சாலும் ஒரு அல்ப ஆசை'யுடன் ஒரு கவளம் அள்ளி மனைவி ராதை பக்கம் நீட்டினான்.
அவளோ, ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, "இப்ப எதுக்கு இது?" என்பது போல அங்கிருந்து எழுந்து சென்றாள்.
"அப்பா... அம்மாவுக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, எல்லாம் சரியாயிடும்," என்று மகா தந்தைக்கு ஆறுதல் கூறினாள். அந்தப் பிஞ்சு முகத்தை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன், மீதமிருந்ததை உண்டு முடித்தான்.
"ராதை... நான் சாப்பிட்டுட்டேன், நீ வந்து சாப்பிடு," என்றான்.
"நான் அப்புறமா சாப்பிட்டுப்பேன். உங்களுக்காகத்தான் செஞ்சது, எல்லாத்தையும் நீங்களே சாப்பிடுங்க. நான் வந்து சுத்தம் பண்ணிக்கிறேன்," என்று கூறிவிட்டுத் துணிகளைத் துவைக்கச் சென்றாள்.
ஸ்ரீராம் சும்மா இருக்கவில்லை. தானாகவே எழுந்து சென்று பாத்திரங்களை எடுத்துச் சென்று சிங்க்கில் போட்டுத் தேய்க்கத் தொடங்கினான்.
சீதா அவசரமாக ஓடி வந்தாள். "வைங்கப்பா... நான் கழுவிக்கிறேன்."
மகளைத் திரும்பிப் பார்த்த ஸ்ரீராம், "இந்த வேலை எல்லாம் உனக்குத் தெரியாதுடா... அப்பா செய்றேன்," என்றான்.
"இல்லப்பா... நான் செய்வேன். மாமா வீட்ல நான் தான் டெய்லி தேய்ப்பேன். நீங்க போங்க... நான் சுத்தமாவே கழுவுவேன்," என்று சீதா எதார்த்தமாகச் சொன்ன அந்த வார்த்தை, ராதை மற்றும் ஸ்ரீராம் இருவர் இதயத்தையும் இரண்டாகப் பிளந்தது.
தொடரும்....