மனைவி 44
தோல்வியுற்று, உடல் தளர்ந்து வீடு வந்து சேர்ந்த தாயைக் கண்டதும் இரு மகள்களும் பதறினர். 'அம்மா... அண்ணா வரலையா?' என்று மீண்டும் அதே கேள்வியை ஆவலாகக் கேட்க,
"அவன் வரமாட்டேன்னு சொல்லிட்டான்டி! அவனுக்கு அவன் பொண்டாட்டி, பிள்ளைங்கதான் முக்கியமாம்... பெத்த நான் அவனுக்கு முக்கியம் இல்லையாம்! நாயை விடக் கேவலமா என்னை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டுட்டான்!"
அண்ணனை எப்படியாவது சண்டை போட்டாவது இழுத்துட்டு வர வேண்டியதுதானே?" என்று ஆதங்கப்பட்டாள் ஒருத்தி.
நம்மள வேணாம்னு உதறித் தள்ளிட்டான்.
பெத்து வளர்த்து ஆளாக்கி விட்ட மாமிசம்... என்னை நடுத்தெருவுல நிக்க வச்சு வேடிக்கை பார்க்குது. அவன் நல்லாவே இருக்க மாட்டான், நாசமாப் போவான்! அந்த குடும்பமே உருப்படாமப் போகும். என்னையும் என் பிள்ளையையும் பிரிச்ச அந்தச் சண்டாளி... அவ சீரழிஞ்சு சின்னாபின்னமாப் போவாள்!"
இப்படி வாய்க்கு வந்தபடி சாபமேல் சாபமிட்ட அந்தத் தாய்க்கு, தன் பக்கமிருக்கும் பிழை எள்ளளவும் தெரியவில்லை
இவர்கள் மூவரை விட அசோக் தான் பேரிடி விழுந்தது போல் உறைந்து போயிருந்தான். கையில் ஒரு பைசா காசில்லாமல், ஊர் சுற்ற வழியின்றி, பூங்காவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு ஸ்ரீராம் வந்தாலாவது மறுபடி பழையபடி ராஜ வாழ்க்கை வாழலாம் என்று ஒரு நப்பாசை இருந்தது. இப்போது அவனது அந்தப் பேராசை எல்லாம் சுடுகாட்டு மண்ணாய் போனது.
குடும்பமே ஒரு மரண வீடு போல துக்கத்தில் ஆழ்ந்திருக்க, அடுத்த இடியாக பிரபாகரன் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதை நீட்டிய வழக்கறிஞர், அலரைப் பார்த்து ஏளனமாகப் பேசத் தொடங்கினார்.
"நீங்க அமைதியா கையெழுத்துப் போட்டுட்டா, மியூச்சுவலா பிரிஞ்சுடலாம். உங்களுக்குத் தேவையான நஷ்ட ஈட்டைப் பிரபாகரன் சார் கண்டிப்பா தருவாரு. நான் அவரோட பர்சனல் பிரண்ட், அதனாலதான் ஒரு மரியாதைக்கு இதை நேரா வந்து கொடுக்கிறேன்.
"எனக்கு பிரபாகரனை ரொம்ப வருஷமா தெரியும். ரொம்ப நல்ல மனுஷன் அவன். அவன் செஞ்ச ஒரு பெரிய தப்பு என்ன தெரியுமா? உங்களைக் கல்யாணம் பண்ணதுதான்! மனுஷ வாழ்க்கையில எல்லாருக்கும் ஒரு சறுக்கல் இருக்கத்தான்
"அலர்... மாமா போன் எடுத்தாங்களா?" மலர் விம்மலுடன் கேட்டாள்.
"இல்ல..." அலரின் குரலில் விரக்தி தாண்டவமாடியது.
"திரும்பப் பண்ணு அலர்... ப்ளீஸ்!"
"பண்ணுனா மட்டும் எடுத்துடவா போறாரு அந்த மனுஷன்? அந்த ஆளு இனிமேல் நமக்கு எந்த ஹெல்ப்பயும் பண்ண மாட்டாரு மலர். நம்மதான் எப்படியாவது அண்ணனைத் தேடணும். அண்ணன் எங்க இருக்காருன்னு மட்டும் கண்டுபிடிச்சிட்டா போதும், எல்லாம் சரியாயிடும்."
"ஆனா எப்படி கண்டுபிடிப்ப?" மலர் நம்பிக்கையற்று வினவினாள்.
"நான் யோசிக்கிறேன்... நீ இப்போதைக்கு அம்மாவைப் பாத்துக்க. நான் வீட்டுக்குப் போயிட்டு கொஞ்சம் பணம் எடுத்துட்டு வரேன்," என்று வேகவேகமாகக் கிளம்பிய அலர், வீடு வந்து சேர்ந்ததும் பதட்டத்துடன் தாயின் பழைய பையைத் தேடினாள். பையின் அடியில் கசங்கிய காகிதமாய் பிரபாகரன் கொடுத்திருந்த ஸ்ரீராம் தங்கியிருக்கும் வீட்டு முகவரி இருந்தது.
"ஒருவேளை இதுதான் அண்ணன் தங்கியிருக்கிற இடமா இருக்கும்..." மனதிற்குள் கணக்குப் போட்டவள், பீரோவைத் திறந்து இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேராக அண்ணனைத் தேடி அந்த முகவரிக்கு விரைந்தாள்.
ஆனால், அங்கே போனால் வீடு பூட்டியிருந்தது. ஏமாற்றத்தில் அவள் திகைத்து நின்றபோது,
"யாருமா நீ? இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்று வீட்டு உரிமையாளர் அதட்டலாகக் கேட்டார்.
"ஸ்ரீராம்னு ஒருத்தர் இங்க இருக்காரா?"
"இருக்காரு... மேல வீட்டுலதான் இருக்காரு. உனக்கு என்ன வேணும்?"
"அவர் என்னோட அண்ணன் தான். எங்க அம்மா திடீர்னு மயங்கிட்டாங்க, ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கோம். அவரை அழைச்சிட்டுப் போலாம்னு வந்தேன்."
"அவங்களா? அவங்க இப்பதான் ஃபேமிலியா வெளில போனாங்கம்மா. எப்ப வருவாங்கன்னு தெரியாது."
"ஐயோ... ஒருவேளை அண்ணன் வந்தா நீங்க கொஞ்சம் சொல்றீங்களா? நான் உடனே ஹாஸ்பிட்டல் போகணும்," என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
"சரி சொல்றேன்," என்றவர் அவளை ஒரு மாதிரியான சந்தேகப் பார்வையால் அளவெடுத்தார்.
"அலர்... அண்ணா எங்க இருக்காருன்னு தெரிஞ்சுதா?"
"தெரிஞ்சது மலர்... ஆனா இப்போ அவரு வீட்ல இல்ல. வீட்டு ஓனர்கிட்ட சொல்லிட்டு வந்துருக்கேன். சரி, உன் வீட்டுக்காரர் எங்க போனாரு மலர்? இந்த நேரத்துல கூட நம்ம கூட இருந்து ஒரு ஹெல்ப் பண்ணக்கூடாதா?"
மலர் அப்போதுதான் உணர்ந்தாள், அசோக் தன்னுடன் இல்லை என்பதை.
"அக்கா... பதட்டத்துல நான் ஏன் போன் கூட எடுத்துட்டு வரலன்னு தெரியல. இந்த மனுஷன் எங்க போய் தொலைஞ்சாருன்னு தெரியலையே! எதுக்கும் பிரயோஜனம் இல்லை இவரை வச்சுக்கிட்டு. இப்போ இந்த நேரம் பார்த்து எங்க ஓடுனாருன்னு தெரியலையே," என்று ஆற்றாமையில் வெடித்தாள்.
"இப்போ புலம்புற நேரம் கிடையாது மலர். அப்புறமா பேசிக்கலாம். நான் போய் முதல்ல பில் கட்டிட்டு வரேன்."
"அலர்... வீட்ல பணம் இருக்குதா?"
"பணம் இருக்குது மலர்... ஆனா இப்படியே செலவு பண்ணிட்டு இருந்தா இருக்குற சேவிங்ஸும் கரைஞ்சுடும். அதுக்குள்ள அண்ணனை எப்படியாவது சம்மதிக்க வச்சே ஆகணும்."
"எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை அலர்... அண்ணா நம்ம கூட வருவார்னு தோணல," என்று மலர் சந்தேகத்தை எழுப்பினாள்.
"லூசு மாதிரி உளறாத மலர்! அம்மாவுக்கு இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு தெரிஞ்சாலே அண்ணன் தன் கோபத்தை எல்லாம் உதறித் தள்ளிட்டு ஓடி வந்துருவாரு." அலர் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்தும் ஸ்ரீராம் வரவில்லை.
மீண்டும் அண்ணனை தேடி கிளம்பினாள். அவனை இவர்கள் விடுவதாக இல்லை..
அவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் அதிகாலையிலேயே கிளம்பி விட்டான். ராதை மட்டும் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
"அண்ணா..." என்ற குரல் கேட்டதும் ராதை திடுக்கிட்டுத் திரும்பினாள். அலரை அந்த நேரத்தில் அவள் எதிர்பார்க்கவே இல்லை.
'எங்க வீட்ல இருந்தவரைக்கும் ஒரு நல்ல புடவை கூட இல்லாம வேலைக்காரி மாதிரி இருந்தா. இப்போ என்னவோ இந்த வீட்டுக்கு ஓனர் மாதிரி பந்தா பண்றா! எல்லாம் என் அண்ணனோட காசு. நாங்க அங்க கஷ்டப்படும்போது இவங்க மட்டும் இங்க சந்தோஷமா இருக்கிறதா? நான் விடமாட்டேன். என் அண்ணனை உங்ககிட்ட இருந்து பிரித்து அழைச்சிட்டு போறேன். நீ கடைசி வரைக்கும் தனியாவே கிடந்து சாவு,' என்று அந்த இக்கட்டான சூழலில் கூட அவளது தீய எண்ணம் வேலை செய்தது.
ராதையிடம் பேசப் பிடிக்காமல் கீழே இறங்கிப் படியில் அமர்ந்திருந்தாள் அலர்.
அதே நேரம் இவளை பார்த்த வீட்டு ஓனர்,.
"இங்க எதுக்கு மா உக்காந்து இருக்க?"
"நேத்து அண்ணன்கிட்ட சொன்னீங்களா நீங்க?"
"ஆமாம்மா... நீ வந்த விஷயத்தை ஸ்ரீராம்கிட்ட சொன்னேன்.
அலருக்கு அந்த வார்த்தை இடியாக இறங்கியது. அண்ணனுக்குத் தெரிந்தேதான் வரவில்லையா?
சில நிமிடங்களில் ஶ்ரீராம் அங்கே வந்தான்,
அண்ணனைக் கண்டதும் அலர் ஓடிச் சென்றாள். "அண்ணா... அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம் அண்ணா!" என்று கதறினாள்.
"அதுக்கு நான் என்ன பண்ணனும் அலர்?" ஸ்ரீராமின் குரலில் எந்தச் சலனமும் இல்லை, அது ஒரு வறண்ட பாறையைப் போலிருந்தது.
ஒன்றை வார்த்தையில் அவள் நம்பிக்கை அடிபட்டு போனது.
"நீ என்னன்னா யாரோ மூணாவது மனுஷன் கேட்கிற மாதிரி கேட்கிற?"
"நீங்க எனக்கு மூணாவது மனுஷங்கதான். எனக்கு என் மனைவி, என் குழந்தைங்க தான் முக்கியம். ஒரு நல்ல அண்ணனா என்னால முடிஞ்சதை எல்லாம் உங்களுக்குச் செஞ்சுட்டேன்.
இதுவரைக்கும் நான் சம்பாதிச்சுக் கொடுத்ததை எல்லாம் எப்படியும் நீங்க திருட்டுத்தனமா சேர்த்து வச்சிருப்பீங்க. அதை வச்சு அம்மாவைக் காப்பாத்துற வழியைப் பாரு. எனக்கு லீவு கிடைக்காது, நான் வேலைக்குப் போகணும்."
பேரிடியாக அவள் தலையில் இறங்கியது அவன் வார்த்தைகள்,
'அம்மாவுக்காகத்தான் நான் வாழ்கிறேன்' என்று சொன்ன அதே அண்ணனா இது?
கோபத்துடன் அலர் மருத்துவமனை வர,
"அலர், அண்ணனைப் பாத்தியா? அண்ணன் என்ன சொன்னாரு? வருவாருன்னு சொன்னாரா?"
"அவன் இனி நமக்கு அண்ணன் இல்லைன்னு அவரே சொல்லிட்டாருடி! அம்மாவுக்கு இனிமே புள்ளையே கிடையாதுன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டான்.
சரியான பொண்டாட்டி தாசன் இதுக்குத்தான் அவனை வெளிநாட்டிலிருந்து இங்க வர வைக்க வேணாம்னு அப்பவே அம்மாகிட்ட சொன்னேன்." என அண்ணன் என்றும் பாராமல் மிகவும் கீழ்த்தரமாக திட்டினாள்.
"நிஜமாவேவா?" மலர் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.
"இனிமேல் என் வீடு தேடி கூட வராதீங்கன்னு விரட்டிட்டான்டி!"
"இனிமேல் நாம என்ன பண்றது அலர்? அம்மாவுக்கு யாரு இருக்கா?" என்று விம்மினாள்.
"இப்போதைக்கு அம்மாவுக்கு ஒன்னும் பெரிய உயிராபத்து இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு. ஹாஸ்பிடல்ல இருந்து முதல்ல வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவோம். அப்புறம் என்ன பண்றதுன்னு நிதானமா யோசிப்போம்," என்று கல் நெஞ்சோடு கூறினாள் அலர்.
கண்கள் விழித்ததும் முதல் கேள்வியாக மகனைத் தான் கேட்டார்.
"அம்மா, நீ ஹாஸ்பிடல்ல சாவுக்கும் வாழ்வுக்கும் நடுவுல போராடிட்டு இருக்கேன்னு தெரிஞ்சும், அந்த ஸ்ரீராம் வந்து உன்னைப் பார்க்கலையம்மா! 'நம்மளை இனிமே வேணாம்'னு சொல்லிட்டான் அலர் கோவமாக கூறினாள்.
"எல்லாமே போச்சு... அந்த ராதை என் மகனை மொத்தமா வசீகரம் பண்ணி மயக்கிட்டா. பெத்தவளை விட அந்தப் பொம்பளை தான் அவனுக்குப் பெருசாப் போயிட்டா... என் மகன் எனக்கு இல்லைன்னு ஆகிடுச்சே, நான் என்ன பண்ணுவேன்?" என்று மருத்துவமனை என்றும் பாராமல் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழத் தொடங்கினார் கலை.
அவரை இருவரும் போராடி சமாதானம் செய்தனர்
மறுபுறம், ராதை தன் கணவனை ஒருவிதமான அவநம்பிக்கையுடன் பார்த்தாள். "நிஜமாவே உங்க அம்மாவுக்கு உடம்பு முடியலையா? நீங்க போய் பார்த்துட்டு வாங்க. அவங்க தேடுவாங்க " என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்.
ஸ்ரீராமுக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை. அவர்களை பற்றி ராதை பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவள் தன்னைப் பற்றியும், தன் குழந்தைகளைப் பற்றியும், அவர்கள் எதிர்காலத்தைப் பற்றியும் மட்டுமே பேச வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான்.
"அவங்களைப் பத்தி இப்ப நமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? வேலைக்கு கிளம்பிட்டியா? டைம் ஆகுது, போலாமா?" என்று எதற்கும் பிடிகொடுக்காமல் பட்டும் படாமல் கேட்டான்.
அவன் பேச்சில் இருந்த அந்தத் தவிப்பை உணராத ராதை, "எனக்கு என்ன கிடக்கு" என்கிற வீம்பில் பையைத் தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டு விறுவிறுவென வெளியே நடந்தாள்.
அவள் கோபமாக போவதையே ரசித்துப் பார்த்தான் ஸ்ரீராம்.
தொடரும்....