மனைவி 49.
வீடு வந்ததும், பிள்ளைகள் இருவரும் குதூகலத்துடன் அவன் இருக்கையைப் பிடித்து விளையாடிக் கொண்டே படிகளில் ஏறினர்.
"பார்த்து வாங்கடா... சறுக்கிடப் போறீங்க!" என்று அந்த நிலையிலும் பிள்ளைகளை ஒரு தந்தையாகக் கவனித்து அழைத்து வந்தான்.
ராதை கதவைத் திறக்க, பிள்ளைகளுடன் உள்ளே நுழைந்தவனின் பார்வை மட்டும் ரதியையே சுற்றியது. தேன் கூட்டையே சுற்றிச் சுற்றி வரும் தேன் வண்டுகளைப் போல, மனைவி எங்கே சென்றாலும் அவன் கண்கள் அவளைப் பின்தொடர்ந்தன.
மறுபுறம்... கலை ஆசிரமத்தின் ஒரு மூலையில் அழுது அழுது ஓய்ந்து போயிருந்தார். சுற்றியிருப்பவர்கள் என்னென்னவோ பேசிப் பார்த்தும், அவர் யாரிடமும் பேசவில்லை. "தனிமை" என்னும் ஒரு இருண்ட போர்வையைத் தன்னைச் சுற்றிப் போர்த்திக் கொண்டார்.
அவரது நடவடிக்கை ஒவ்வொன்றும் காட்டுமிராண்டித்தனமாக மாறியிருந்தது. யாராவது உணவு கொண்டு வந்து கொடுத்தால் கூட, அதை அப்படியே தூக்கி எறிந்தார். மனதளவில் முற்றிலும் சிதைந்து போன ஒரு மனிதராக அவர் மாறிப் போயிருந்தார்.
"அசோக்... நீங்க போய் கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வர்றீங்களா?" என்று மலர் தயக்கத்துடன் கேட்டாள்.
"என்னையெல்லாம் கடைக்குக் கூப்பிடாதே... வேணும்னா நீயே போயிட்டு வா!" என்று முகத்தில் அடித்தார் போலக் கூறிவிட்டு, செல்போனை நோண்டியபடி மல்லாக்கப் படுத்துக் கிடந்தான் அசோக்.
மலர் கணவனைத் திட்டியபடியே கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள். தனியாக வந்த பிறகு அவன் நடவடிக்கையில் வாழ்க்கை கடந்து போனது அவளுக்கு.
திடீரென, "நீங்க அசோக் வைஃப் தானே?" என்று ஒருவன் அவளை வழிமறித்துக் கேட்டான்.
ஒரு முன்பின் தெரியாதவன் வழிமறித்ததும் அவளுக்கு உடல் நடுங்கியது.
"ஆமா... நான் தான் அவர் வைஃப். நீங்க யாரு?"
"நான் யாருன்னு கூட உனக்குத் தெரியாதா? உன் புருஷன் எவ்வளவோ உன்கிட்ட மறைச்சு வச்சிருக்கான்னு தெரியலையே! உன்ன மாதிரி ஒரு முட்டாள நான் பார்த்ததே இல்ல. சரி அதெல்லாம் விடு... உன் புருஷன் என்கிட்ட 7 லட்சம் கடன் வாங்கிருக்கான். கடனும் கொடுக்க மாட்டேங்குறான், வட்டியும் தர மாட்டேங்குறான்.
ரொம்ப நாளா என்னை ஏமாத்திட்டு இருக்கான். பேங்க்ல வேலை செய்றேன்னு சொல்லிப் பொய் சொல்லி என்கிட்ட காசு வாங்கிட்டான். விசாரிச்சு பார்த்தா, அவன் எங்கேயும் வேலை செய்யல. நீ கட்டித் தர்ற லஞ்ச் பாக்ஸை எடுத்துட்டு எங்கேயாவது சுத்திட்டு, தின்னுட்டு திரிஞ்சிருக்கான்!"
அந்த ஆள் பேசப் பேச, மலருக்குத் தலை சுற்றியது. "இல்ல... நீங்க யாரையோ தப்பா நினைச்சுப் பேசுறீங்க. என் வீட்டுக்காரர் அப்படிப்பட்டவர் கிடையாது!" என்று அவள் இன்னமும் நம்பிக்கையுடன் சொன்னாள்.
"நான் ஏம்மா பொய் சொல்லப் போறேன்? உன் பேரு மலர் தானே? உன் புருஷன் பேரு அசோக் தானே? இதோ பாரு..." என்று அவன் தன் போனை ஆன் செய்து அசோக்கின் புகைப்படத்தைக் காட்டினான்.
அதைப் பார்த்ததும் மலரின் விழிகள் அப்படியே நிலை குத்திப் போயின. தன் கணவன் தான் இது என்று உறுதியான அந்த வினாடி, அவள் நடுரோட்டில் கதறி அழுதாள்.
"அழுவதெல்லாம் அப்புறம் வச்சுக்கோ... முதல்ல அவன் எங்க இருக்கான்னு சொல்லு!" என்று அவர் அதட்ட,
உடல் நடுங்க மலர் "வீட்லதான் இருக்காரு" என்று கூறினாள்.
அவன் வண்டியிலேயே அவளையும் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். ஹாலில் அமர்ந்திருந்த அசோக், வண்டிச் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான்.
கடன் கொடுத்தவனை கண்டதும் அலறியடித்துக்கொண்டு பின்வாசல் வழியாக ஓடத் தொடங்கினான்.
"என்னங்க... நில்லுங்க! அசோக் நில்லு!" என்று இருவரும் கத்தினர். ஆனால் அவன் எதையும் காதில் வாங்கவில்லை.
தன் மனைவியை அப்படியே நடுரோட்டில் விட்டுவிட்டுத் தப்பித்து ஓடினான். அவனைத் துரத்தி பார்த்தும் அவர்களால் பிடிக்க முடியவில்லை.
மலர் வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தாள்.
"அழுறது அப்புறம் இருக்கட்டும்மா... என்னோட ஏழு லட்சத்தை செட்டில் பண்ணு. எனக்கு வட்டி கூட வேணாம், முதல் கிடைச்சா போதும். இவன்லாம் ஒரு மனுஷன்னு நம்பிப் பணம் கொடுத்துட்டு, இவன் பின்னாடி அலைஞ்சு என் செருப்பு தேஞ்சது தான் மிச்சம். இந்த மாதிரி யார் கிட்டயும் ஏமாந்தது கிடையாதே. இப்பவே என் காசை எடுத்து வை!" என்று அவர் வாசலில் நின்றபடி கத்தினார்.
"என் புருஷன் கடன் வாங்கினதை நான் எப்படி நம்புறது?" என்று மலர் கேட்க,
அந்த ஆள் தன் வண்டிப் பெட்டியில் இருந்த கடன் பத்திரத்தை கொண்டு வந்து நீட்டினார்.
கணவன் மனைவி இருவரின் போட்டோவுடன் அவள் கையெழுத்தும் சேர்த்து போட்டு இருந்தான் அசோக்.
அதைப் பார்த்ததும் மலரின் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. கணவன் தன்னை இத்தனை வருடங்கள் ஏமாற்றிய வலியோடு, இப்போது இந்த ஏழு லட்சமும் தன் தலையில் விடிந்துவிட்டதே என்று தவித்தாள்.
"அவர் தான் உங்க கண்ணு முன்னாடியே ஓடிட்டாரே... என்கிட்ட காசு இல்ல... நான் எதை வச்சுத் தருவேன்?" என்று கண்ணீரோடு கெஞ்சினாள்.
"காசு இல்லையா? உங்க வீட்ட வித்த காசுல ஆளுக்குக் கொஞ்சம் பிரிச்சு எடுத்துட்டுத் தானே வந்தீங்க? உங்களைப் பத்தின எல்லா டீடைலும் எனக்குத் தெரியும். நீ எங்க இருக்கன்னு தெரியாமத்தான் இவ்வளவு நாளா அலைஞ்சேன். இல்லைன்னா உன் அண்ணனைத் தேடிப் போயிருப்பேன்.
அவனைத் தேடிப் போய் என்ன பண்றது? அவனே உங்ககிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டு அனாதையா சுத்திட்டு இருக்கான். மரியாதையா காசை எடுத்து வை... இல்லைன்னா போலீஸ் ஸ்டேஷன் தான்!"
அவர் சத்தம் போடப்போட மலருக்கு அழுகை அதிகமானது. ஸ்ரீராமின் மொபைல் நம்பரும் அவளுக்குத் தெரியவில்லை. அன்னையிடமும் பேச முடியாத நிலை. அக்கா எங்கிருக்கிறாள் என்று தெரியாமல், ஒரு அனாதையாக நடுரோட்டில் நிற்பது போன்ற வலி அவளை வாட்டியது.
ஏற்கனவே கணவன் ஒரு லட்சத்தைச் செலவு செய்திருக்க, மீதமிருந்த சில லட்சத்தில் ஏழு லட்சத்தை எண்ணிக் கொடுத்தாள்.
பணத்தை எண்ணி கொடுத்து விட்டு இன்னொரு பையை எடுத்தவள் பேரதிர்ச்சியில் உறைந்து போனாள்.
அதில் இருந்த பாதி பணத்தை காணவில்லை.
“என் பணத்தை எடுத்துட்டு போயிட்டார் என அவள் அழ.”
"உங்களை மாதிரி ஒரு லூசு குடும்பத்தை உலகத்துலேயே பார்க்க முடியாது. உங்களை நல்லா வாழ வைக்கணும்னு உங்க அண்ணன் வெளிநாட்டுல நாய் படாத பாடுபட்டான். ஆனா அந்தப் பணத்தை வச்சு நீங்க எல்லாம் கூறு கெட்டுப் போயிட்டீங்க!" என்று சாடிவிட்டு அவர் சென்றார்.
கையில் மிச்சமிருந்த கொஞ்சப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மலர் திகைத்து நின்றாள்.
ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்லாமல், அந்த வீட்டில் ஒரு அனாதையாக சுருண்டு கிடந்து அழுதாள். அன்று ராதையை துடிக்கத் துடிக்கக் கொடுமைப்படுத்திய காலங்களில், இவர்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? தாங்கள் செய்த பாவங்களுக்கு இவ்வளவு மோசமான தண்டனை கிடைக்கும் என்று!
சாவு கூட ஒரு நொடி வலிதான். ஆனால் சாவைக் காட்டிலும் கொடுமையான வலி, ஒவ்வொரு நொடியும் இப்படித் துடித்துச் சாவதுதான். அந்த நரகத்தை தான் இப்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஸ்ரீராமை ஏமாற்றி வாழ்ந்ததன் வலி இப்போது மலருக்குப் புரிந்தது.
இரவு... எப்போது பிள்ளைகள் தூங்குவார்கள் என்று ஸ்ரீராம் காத்திருந்து காத்திருந்து அவன் கண்களே பூத்துப் போயின. ஆனால் அந்த இரண்டு பிள்ளைகளும் ஸ்ரீராமுடன் விளையாடிக் கொண்டே இருந்தனர், தூங்குவதற்கே வழியில்லை.
நேரம் 11 மணி ஆகிவிட்டது. "இனிமேல் தாங்காது!" என்று முடிவு செய்தவன்,
"சீதா, மகா... ரெண்டு பேரும் படுங்க. நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும்... லேட் ஆகுது பாருங்க. தூங்குங்க... வாங்க அப்பா தூங்க வைக்கிறேன்" என்று ஒரு வழியாக அவர்களை தட்டிக். கொடுத்துத் தூங்க வைத்தான்.
ராதை அனைத்தையும் ஒரு மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் தூங்கும் முன்னே அவளும் தூங்குவது போலப் படுத்துக் கொண்டாள். அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்த ரதியின் இடுப்பில் ஸ்ரீராம் மெல்லக் கிள்ளினான். அவளோ ஒன்றும் தெரியாதது போல பிள்ளைகளை தட்டிக் கொடுத்தாள்.
பதறி அடித்து எழுந்தவள், கணவனின் அந்தச் சிறு பிள்ளைத் தனத்தைக் கண்டு செல்லமாக முறைத்தாள்.
கத்த முடியாது என்பதால் அமைதியாக இருந்தாள். "தூங்கக் கூடாது!" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரகசியமாகக் கூறினான் ஸ்ரீராம்.
எப்படியோ போராடி பிள்ளைகளைத் தூங்க வைத்தவன், அடுத்த நொடி அப்படியே தாவிக் குதித்து மனைவி மடியில் விழுந்தான்.
அவன் செய்த காரியத்தில் ராதை கலகலவெனச் சிரித்தாள். அந்த நள்ளிரவில் அவள் சிரிப்புச் சத்தம், அமைதியைக் கிழித்துக் கொண்டு ஸ்ரீராமின் காதுகளுக்குத் தேவதையின் சலங்கைச் சத்தமாக ஒலித்தது.
அவள் சிரிப்பை ரசித்தபடி, அவள் மடி கொடுத்த சுகத்தை அனுபவித்தபடி கிடந்தவன், "இந்த நொடியே இப்படியே இவளுக்குள் புதைந்து விடமாட்டோமா?" என்று ஏங்கினான்.
கொஞ்ச காலமாகவே அவனுக்கு ஊரில் ஒரு பட்டம் உண்டு -
"பொண்டாட்டி தாசன்!" அதில் என்ன தவறு இருக்கிறது? தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதால் இந்தப் பட்டம் கிடைக்கும் என்றால், அந்தப் பட்டத்தோடே நான் வாழ்கிறேன் என்று முடிவு செய்தான்.
கணவனின் நிலையைக் கண்டு ராதையின் கைகள் தானாக அவன் தலையை வருடின.
அவளின் கையைப் பிடித்துத் தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவன்,
"ஐ லவ் யூ டி ரதி... காசு பணம் இல்லனாலும், ஆடம்பர வாழ்க்கை இல்லனாலும், இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்கேன். அதுக்கு நீ மட்டும் தான் காரணம். இத்தனை வருஷம் கைநிறையச் சம்பாதிச்சப்ப கூட நான் இவ்வளவு நிம்மதியா இருந்தது இல்ல. வாழ்க்கை வெறுமையா இருந்துச்சு. அப்போ நீ என்கூட இருந்தும் என்னால உன்னை முழுசா உணர முடியல..."
"லவ் யூ ரதி... இனிமே உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நான் பிரிஞ்சு இருக்க மாட்டேன். எந்தக் காரணத்துக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னை உனக்கு அடிமைச் சாசனமா எழுதிக் கொடுத்துட்டேன்னு நினைச்சுக்கோ!" என்று உணர்ச்சியோடு பேசியவன், அவள் வயிற்றில் முகம் பதித்து அவளைத் தன் உயிரோடு இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
அவனின் மூச்சுக் காற்றும், மீசையின் குறுகுறுப்பும் அவளை நிலைகுலைய வைத்தது. "
கணவன்" என்ற உரிமையில் அவள் அந்த நொடியைத் இயல்பாக கடக்க முயன்றாலும், ஒரு புதுப்பெண்ணைப் போல நாணத்தால் சிவந்து போனாள்.
வாழ்வில் மிகவும் சந்தோஷமான, ஆனந்தமான தம்பதிகளாக அவர்கள் மாறினர். பெயரளவில் கணவன் மனைவியாக வாழ்வதை விட, உணர்வுபூர்வமாக உயிரும் உடலுமாகத் தங்களை ஒப்படைத்து வாழ்வது காதலால் மட்டுமே சாத்தியம்.
இவர்களைப் பிரிக்க வேண்டும் என்று நினைத்த மூவரும் இன்று பிரிந்து போனார்கள். தனித்தனியே வாழ்வின் சந்தோஷங்களை இழந்து, உறவுகளை இழந்து அனாதையாக நிற்கிறார்கள்.
ஸ்ரீராமையும் ராதையையும் அனாதையாக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இன்று அவர்களோ தங்கள் குடும்பத்துடன் உயிரும் உடலுமாக வாழ்கிறார்கள்.
பெற்ற மகனாக இருந்தாலும் அவன் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைக்கும் தாய்மார்களுக்கு, என்றுமே அவர்களின் மருமகள்கள் எதிரியாக தான் தெரிவார்கள்.
ஆனால் மனைவி தாயாக முடியும்... தாய் ஒருபோதும் மனைவியாக முடியாது! இந்த நிதர்சனம் புரியும் போது தான் அந்த குடும்பம் உண்மையான சொர்க்கமாகும்.
விருப்பு வெறுப்புகளை
தாண்டி குடும்பத்துக்காக வாழ்ந்தால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் நான் எனக்கு என்ற சுயநலம் வந்தால் தானும் அழிந்து போகணும்.
நன்றிகள்.
கதைக்கு கருத்து கூறிய அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.