சிதறாத முத்தங்கள் - 28(முடிவுற்றது)

Advertisement

Sastika

Active member
Member
1000275221.jpg
‘பகல், இரவு பொழுதுகளில் காதலர்கள் தனித்து சந்தித்து கொள்வது’



பகற்குறி, இரவு குறியீடு - 28



எளிமை என்ற வார்த்தையை அறியாதவர்கள் போல அமர், ஸ்ரேயா திருமணத்தை நடத்தினார்கள் அவனின் பெற்றோர். கொச்சி நகரமே அதிரும் வகையில் செண்டை மேளங்கள் முழங்க, கேரளா மரபின் மெருகோடு இணைவு நிறைவேற்றப்பட்டது. களவு மணம், கற்பு மணம் என இரு நிலைகளையும் அனுபவித்திருந்தனர் இக்காதலர்கள்.



மாதங்கள் எவ்வித சுமையின்றி, அவர்கள் காதலில் கரைந்து சென்றன. கண்ணாவை அவன் அன்னையிடம் ஒப்படைக்கும் வரை, அகிலனின் பொறுப்பில் வளர வேண்டும் என அப்ஸரா உறுதியாக கூறியிருந்தாள்.



இதற்கிடையில், ஹரிதா-ராகுல், மாளவிகா-மாதவன் ஆகியோரின் திருமணங்கள் ஒரே மேடையில் நடைபெற நாட்கள் குறிக்கப்பட்டிருந்தன.



மலையாள பிரதேசம் குளுமையை தத்தெடுத்திருக்க, கிஞ்சித்தும் அக்குளிரை பொருட்படுத்தாமல் கையில்லாத பனியன், அரை கால் சட்டை ஒரு காலை சோபாவிலும், மற்றொரு காலை தரையிலும் வைத்து தாளம் பயில விட்டான் அமரன். எப்போதும் போல் அவன் முன் மேஜையில் மூடப்பட்ட உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



வீட்டு கூடத்திற்குள் வந்த திரிபுரசுந்தரி, “என்ன அமர்? எதுக்கு சீக்கிரம் வர சொன்ன?” என்றவர் பார்வை அடுக்கி வைத்திருந்த உணவு பாத்திரங்கள் மேல் விழ, “மறுபடியும் ஆரம்பிச்சோ? ஸ்ரேயா மோலேக்கு ஃபுட் வேஸ்ட் பண்ணா புடிக்காது” என மகனுக்கு நினைவுபடுத்தினார்.



“என் லைப்பே வேஸ்ட்டா போகுது, அது உங்க கண்ணுக்கு தெரியல.” முகத்தில் தாடி முளைத்து முன்பைவிட வசீகரமானவனாக இருந்தான்.


“கல்யாணத்துக்கு முன்னாடி மொட்டை அடிச்சுட்டு சுத்துன, இப்ப தாடி வளத்துட்டு சுத்துற.. இப்ப என்னாச்சுனு தேவாதாசு மாதிரி தாடி வளத்து வைச்சுக்கிட்டு இப்படி பேசுற?” மகனின் தோற்றத்தை எப்போதும் போல் ரசித்தாலும், அவரின் திருப்தி இன்மையை சுட்டிக்காட்டினார்.


“பேசாம..! எங்க உங்க செல்ல மருமக..?”


“ஏன் அவ கடையில இருப்பா? நான் கார்மென்டஸ்ல இருந்தேன், நீ வர சொல்லவும் நேரா இங்க வந்துட்டேன்.”


“ஏம்மா.. புதுசா கல்யாணம் ஆனவங்கள ஹனிமூன் அனுப்பாம, இப்படி பிரிச்சு வச்சா நல்லாவா இருக்கு.”


“அடேய்.. கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாசம் ஆயி, நேத்து கல்யாணம் பண்ணி இன்னைக்கு பிரிச்ச மாதிரி பேசுற! நீ தான மருமக வரவும் அவளையும் கூப்பிட்டு ஷோரூம் போக சொன்ன? அவ படிச்ச படிப்புக்கு தனி ஸோரூம்ல ராணியா வலம் வந்துக்கிட்டு இருக்கா, ஸ்ரேயா ராசிக்கு வேற கூட்டம் குமியுது..” மருமகள் பெருமை பேசினார்.


“ஆமா சொன்னேன்.. அதுக்காக அங்கேயே பிடிச்சு வச்சுக்குவீங்களா..? இன்னைக்கு லஞ்சுக்கு வரேன்னு சொன்னா.. இன்னும் வரல, அவளுக்காக வெயிட் பண்ணி.. பண்ணி.. வந்த பசியே யூ டர்ன்ல போயிருச்சு..” பசித்த வயிற்றில் இரண்டு தட்டு தட்டினான்.


“ஒ.. இது நீங்க சாப்பிட எடுத்து வச்சதா.. வந்துருவாடா..” மேஜையின் மீது இருந்த உணவு எதற்கென கண்டு கொண்டார்.


“எப்ப?”


“நீ எனக்கு போன் பண்ணதுக்கு பதிலா அவளுக்கு பண்ணியிருக்கலாமே..”

“அவகிட்ட பேச மாட்டேன்..!” என போய் கோபம் காட்டினான்.


“அட போடா.. காமெடி பண்ணிக்கிட்டு, மோல் வந்தவுடனே அவ பின்னாடியே போயிருவ, மொத்தமே நாலு மணி நேரம்தான் ஷோரூம்ல இருக்குறா, அதுல பிரிச்சு வச்சுட்டோமோ..!” மகனின் அலும்பில் அலுத்துக் கொண்டார்.


“மா.. ரொம்ப டேமேஜ் பண்றீங்க..”


“உண்மைய சொன்னேன்.. எந்த விஷயம்?” அவரை வரவைத்ததுக்கான காரணத்தை கேட்டார்.


“புதுசா இரண்டு டிசைனர் அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன், அவங்கள வச்சு மூணு மாசம் சமாளிங்க, நாளைக்கு நாங்க மாலே போறோம். நியாயமா பாத்தா நீங்க எங்கள அனுப்பிச்சு வைக்கணும், எங்க?”


“திரி மந்த் மோல் இல்லாம இருக்க மாட்டேன், நீ வேணா போ..” என மகனை விரட்டினார்.


“இது நல்லா இருக்கே, இளம் காதல் ஜோடிய பிரிக்கிறமா.. என்னோட பொண்டாட்டிய கூப்பிட்டுப்போக யார் பெர்மிஷனும் தேவையில்ல, பை..” என்று முகத்தை திருப்பியவனிடம்,


“அட.. சும்மா சொன்னேன்டா, உடனே முகத்த திருப்பாத.. பேக்கிங் நைட் வந்து பண்ணித் தாரேன்”


“தேவையில்ல நானே பண்ணிட்டேன்..”


“அட.. அவ்வளவு பொறுப்பு வந்துருச்சா? செல்ல மோனே..” என செல்லம் கொஞ்சினார்.


“அமரா… அமரா… டேய்…” சுற்றிலும் இருள் மூழ்கி, காற்றும் மந்தமாக இருந்தது, அந்த அமைதி அவளை ஏனோ நடுங்கச் செய்தது.


“பேசுடா… ஒருமாதிரி அமைதியா இருக்கவும், பயமா இருக்கு…” அவளது வயிற்றில் கன்னம் பதித்து, முகில் மறைவில் ஒளிவீச காத்திருக்கும் வளர்நிலவுக்காக காத்திருந்தான்.


அப்போதும் மெளனமே ஆட்சி செய்ய, “அதுசரி… என்னோட கனவுல வந்த மாதிரி அப்படியே ஊஞ்சல் ரெடி பண்ணிட்ட… நான் ஜஸ்ட் இப்படி இருந்துச்சுனு தான் சொன்னேன். நீ பெர்பெக்ட்டா அப்படியே ரெடி பண்ணிட்ட… சூப்பர்டா…” என்று சாய்வாக படுத்திருந்தவள், பாதி உடலைத் தூக்கி அவனது நெற்றியில் இதழ் பதித்தாள்.


அவனோ அதை ரசித்து, சிலாகித்து, அவள் வயிற்றில் ஆழமாக முத்தமிட்டான். நிலவின் ஒளி வீசத் தொடங்க, சட்டென எழுந்தவன், மறைத்து வைத்திருந்த பரிசை அவளிடம் தந்தான்.


“ஏய்…! அமரா, என்னடா திடீர்னு…?”
பரிசைத் திறந்து பார்க்காமல், “எதுக்கு? என்ன?” என்ற கேள்விகள் அவளிடம் படையெடுத்தன.



“ஃபயர் ப்ளை, பதட்டப்படாம மெதுவா திறந்து பாரு…” மெல்ல தலையசைத்தவள் அதை திறந்து பார்க்க, உள்ளே ஒரு சிப்பி தெரிந்தது. அதை கையில் எடுத்து ஆனந்தமாக ரசித்தாள்.


“ம், திறந்து பாரு…” அவளின் சிறு அசைவையும் அந்நொடி மனதில் ஆழமாக பதித்தான்.


சிப்பிக்குள்ளே இளம்சிவப்பு கலந்த வெள்ளை நிறத்தில் பெரிய கோலிக்குண்டு அளவு முத்து அழகாக இருந்தது. அதை பார்த்தவளின் மகிழ்ச்சி கண்களில் பிரதிபலித்து, தேகமெங்கும் பரவியது. அமரின் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் குதித்தாள்.

“சக்கரக்கட்டி, போதும், நிறுத்து. இந்த மாதிரி நேரத்துல குதிக்கக் கூடாதுமா…!”


“எந்த மாதிரி நேரத்துல…?” அறியாத பேதையாக குறும்புடன் கேட்டாள்.


“ம்… இந்த சிப்பிக்குள் மறைஞ்சு இருந்த முத்து மாதிரி, இந்த குட்டி தொப்பையில் நம்மோட உயிர் வளர்ந்து வருது…!” அமர் நிறுத்தி நிதானமாக சொல்ல,


“டேய்… சும்மா சொல்லாத. எனக்கே எந்த டிஃபரன்ஸும் தெரியல… நீ அடிச்சுவிடாத!” ஸ்ரேயா நம்பாமல் கேட்டாள்.


“உனக்கு டேட் தள்ளிப் போய் ஐம்பது நாளாச்சு… நம்ம பாப்பா உனக்குள் வந்துருச்சு மா…!” அவள் சிரித்தபடியே அவனை லேசாகத் தட்டினாள்,

“நீ இருக்கியே, எப்படிடா உறுதியா சொல்ற?” சின்ன வெட்கம் பிடித்து, பின் ஆர்வமும் சேர்ந்து கேட்டாள்.


அவனோ அவள் கையை மெதுவாகப் பிடித்து, “தெரியும், உன்னோட திடீர் உடல் சோர்வும், சில முரணான நடவடிக்கையும் காட்டிக் கொடுத்துச்சு. நீ மனசு சொல்லுறதை கேளு…” என தாய்மை பாடம் எடுத்தான்.


அவள் முகத்தில் இருந்த சிரிப்பு மெதுவாக மங்க, ஒரு புதுமையான பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வு அவளை ஆட்கொண்டது.

“நிஜமா இருக்குமா…?” அவள் குரல் மெலிந்தது.


அவன் அவள் நெற்றியில் குளிர்ந்த முத்தமிட்டு,
“நிஜமா இருக்கும்…! ஐ மேட் சூர் யூ கேரிங் அவர் பேபி” என்றான். அவள் அமைதியாக அவன் மார்பில் தலையசைத்து படுத்துக்கொண்டாள். அந்த அமைதியில் இருவருக்கும் இடையே சொல்லாத ஆயிரம் வார்த்தைகள் சுற்றிக் கொண்டிருந்தன.

சில நொடிகள் கழித்து அவள் மெதுவாக, “அமரா.. தேங்க்ஸ்டா,”


“இது பர்ஸ்ட் டிரைடி, அடுத்து.. அடுத்து ப்ராசஸ் இருக்கே, சோ தேங்க்ஸ் இல்லாம ஸ்டாரங்கா லவ் ஹக் வேணும் சக்கரக்கட்டி” காதல் தீவிரவாதியாகக் கேட்டான்.

அவனை தேகம் இறுக்க இறுக்கி அணைத்தாள்.


“ரொம்ப ஹாப்பியா இருக்க போல, மெதுவா மூச்சுவிடு.. பாப்பா பாவம்ல..!” அவளை மெல்ல தன்னிடம் இருந்து விலக்கி மென்மையாக தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.


“என் லைஃப்ல என்னை நேசிக்கிறவங்களும், எனக்காக துடிக்கிறவங்களும் இருந்தாங்க டா… ஆனா இருந்தும் என் மனசுல ஒரு வெறுமை தான் இருந்துச்சு. எதையோ தொலைச்ச மாதிரி வாழ்ந்துகிட்டு இருந்தேன்.


அது என்ன உணர்வுன்னு அப்போ எனக்கே புரியல டா… சொல்லவும் தெரியல, ஆனா உன்னை பார்த்த பிறகுதான் எல்லாமே மாறிருச்சு… அந்த வெறுமையை நீ போக்கிட்ட, காதலும், காமமும் மங்கிப் போயிருந்த எனக்குள்ள மீண்டும் நம்பிக்கை கொடுத்து… என்னை முழுமையாக்கிட்ட. இப்போ நான் ஒரு முழு பெண்மையை உணர்றேன்னா, அதுக்கு காரணம் நீ தான். உனக்குள்ள என்னைய முழுசா நிறைச்சு வைச்சுக்கிட்ட டா. ஐ லவ் யூ அமரா.”


நிலவு மேலேறிக் கொண்டே இருந்தது,
அதன் ஒளியில், இன்னொரு சிறிய உயிரின் கனவும் மெதுவாக உருவம் எடுத்து கொண்டிருந்தது.

அலைகள் இசைபாட


அவளின் விழிகளில் மின்னும் சாயல்,

அவன் நெஞ்சைத் தொட்டது

சொல்லப்படாத வாசங்களில்

மெளனத் தொனிகளில்

மனங்கள் கூடி

ஒரே மூச்சில்

ஒரே நடையில்

கரையைக் கடந்து சென்றது


இரு உயிர்கள்.’

“மா.. இன்னைக்குமா!” சிணுங்கினாள்.

“ஆமாடா.. பிள்ள பிறந்த ஒரு மாசத்துக்கு இப்படி மூலிகை மருந்தும், எண்ணெய் குளியலும் செஞ்சா உடம்பு வலுக்கும் மோலே..” கேரளா போஸ்ட் நேட்டல் ஆயுர்வேத மசாஜிடன் சில கசுக்கும் கசாயங்களும் சேர்த்து ஸ்ரேயாவின் தேக ஆரோகியத்துக்கான பக்குவம் பார்த்தார் திரிபுரசுந்தரி.

“மா.. குளியல் நல்லா இருக்கு, அத தினமும் பண்ணிக்கிறேன், பட் இந்த பொடி சாப்பிட்ட பிறகு, என்ன சாப்பிடாலும் டேஸ்ட் போக மாட்டேங்குதுமா, ப்ளீஸ்..”

“அச்சோ, இத வேண்டாம்னு சொல்லாத, இதுதான் கர்ப்பவாய் புண் ஆத்தும், இன்னும் ஒருவாரம் மட்டும் பொறுத்துக்கோ, அப்புறம் இந்த மருந்து தேவைப்படாது” அக்கரையான பேச்சும், அனுசரனையான கவனிப்பாலும் ஸ்ரேயாவை மெருகேற்றினார்.

“அடுத்து வேற கஷாயம் தர போறிங்க அப்படித்தான?” ஸ்ரேயா கேட்ட தினுசில் இருவருக்கும் கிளுகிளுவென்று சிரிப்புதான் வந்தது. பெண் மகவை பெற்று இருந்த ஸ்ரேயாவின் தேகம் தேறி வர, திரிபுரசுந்தரி மிக நேர்த்தியாக பக்குவம் பார்த்தார்.


தங்கள் பேத்தியின் பெயர் சூட்டும் விழா திருப்தியாக நிறைவடைந்திருக்க அச்சிறு மழலை தூங்கும் அழகை கையில் ஏந்தி ரசித்துக் கொண்டிருந்தார் ஜெயமோகன், அமர்நாத்தின் தந்தை.


“ஐயோ.. தூங்குற பாப்பா கையில வச்சு அழகு பாக்கலாமா?” என குறைபட்டுக் கொண்டே வந்த திரிபுரசுந்தரி, தன் பேத்தியை தூக்கி தொட்டிலில் இட்டார்.


அழுத்தமாக தன் மனைவியை பின்னிருந்து அணைத்துக் கொண்டார். “என்னங்க..!” சிறு பிள்ளையாக தேம்பியவரை திரும்பி முகம் நிமர்த்தி கேட்க, “உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?”

“அப்படி எல்லாம் இல்லங்க..!”


“சும்மா சொல்ற, என்னால உன்ன புரிஞ்சுக்க முடியல, இன்னைக்கு பேத்திக்கு உத்ரானு பெயர் வைக்கும்போது, மருமக என்ன பாத்த பார்வை சொல்லுச்சு, இனிமேல் உத்ரானா இந்த வீட்டுல பேத்தியா மட்டும்தான் இருக்கணும்னு சொல்லாம சொல்லிருச்சு. உன்னோட வேதனை புரிஞ்சுக்காம போயிட்டேன்.


நீயாச்சும் என்கிட்ட சொல்லிருக்கலாம்.! ஆனா அந்த நெருக்கத்தையும் நான்தான் கொடுக்காம போயிட்டேன் போல..” என்று தன்னவளின் இத்தனை வருட மனக்கசப்பை புரிந்து கடந்த கால நிகழ்வுக்கு மன்னிப்பு யாசித்தார். இனி உத்ரா அவ்வீட்டின் செல்ல தேவதையாக வலம் வருவாள்.

மெருகேறிய அவளின் அழகில் சொக்கி அவளை ஆளும் எண்ணமின்றி தாய்மை பெருக தன் சக்கரக்கட்டியை நெஞ்சில் தாங்கினான் அமர்.

“அமரா.. இப்பயெல்லாம் அகி மாமா ஸ்ருதியோட அடிக்கடி தீவுக்கு போறார்டா..”

“அப்படியா?” அவளின் ஏக்கம் அறிந்தும், தெரியாதவன் போல் கேட்டான்.

“உனக்கு தெரியாத மாதிரி கேக்குற பாத்தியா? உத்ரா பாப்பா பிறந்ததிலிருந்து நீ என்னை கண்டுக்கவே மாட்ற..!”


“எத.. கண்டுக்காதவன் தான் இப்படி மடி மேல் உட்கார வச்சு ஊட்டி விடுவானாக்கும்..”

“எனக்கு தீவுக்கு போகணும் அமரா..”

“போலாமே.. இன்னும் ஒரு மூணு மாசம் மட்டும், உன்னோட உடம்பு தேறவும், போகலாம்..”

“நான் நல்லா இருக்கேன்டா..!”

“ரொம்ப நல்லா இருக்க, யார் இல்லனு சொன்னா. ஆனா உப்புக்காத்து இப்ப இருக்க நிலைமையில உடம்புக்கு ஒத்துக்காது, கொஞ்ச நாள் போகட்டும் உத்ரா பாப்பாவும் வளந்துருவா அப்ப போகலாம்..”


“போடா..” என முகம் திருப்பியவளை, அவள் முகம் திருப்பி கண்ணோடு கண் பார்த்து, “ஐ லவ் யூ சக்கரக்கட்டி..” என்றவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.


அவள் மனம் ஏங்கிய தீண்டலும்


உணர்வும் ஒருவனிடமே சரணடைந்தபோது,

தனக்கான காதலாக வித்தைக்காரன்

மென்மையாக தன்னுள் ஏந்திக் கொண்டான்.’


முடிவுற்றது!!
 
நைஸ் எபிசோட் 🤩 🤩
லிங்கேஷ் வராமல் கதை முடிந்து விட்டது 😮😮😮

அருமையான கதை 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️ ♥️ ♥️
 
நைஸ் எபிசோட் 🤩 🤩
லிங்கேஷ் வராமல் கதை முடிந்து விட்டது 😮😮😮

அருமையான கதை 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️ ♥️ ♥️
Thanks for lovely review dear ❤️ ♥️♥️♥️🙏🙏🍫🍫
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top