பட்டம் பெற்ற மன்னவா
பெண் பார்வையை
புரியவில்லையா...
பயந்து பார்க்கும் மான்விழி
புருஷன் தானே
பரிதவிப்பு எதற்கு.....
முறைத்துக் கொண்டே
மச்சான் சுத்தினா எழில்
மனைவியோடு
மனம் விட்டு பேசுவது
முடியுமா நிலவா???
நிகழாத ஆசையால்
நெஞ்சம் சில நேரம்
நொந்தாலும்
நிழலாய் நீயிருக்க
நான் தனியில்லை
நானிருக்க
நீயும் வெறுமையில்லை....
நேற்றைய பாவம்
நீங்காத கர்மவினை
நிறைவேறாத ஏக்கம்
நாளை புண்ணியமாக
நிறைவடையும் என
நம்பி தெய்வத்தின் பாதத்தில்
நிரந்தரமாக
நாம் சரணடைவோம்....
நேரம் வரும்வரை
நம்பிக்கையை மட்டும்
நெஞ்சில்...
மறந்தது எல்லாம் இன்று மீண்டும் நினைவு திரும்ப
மறைந்த கருவின் நிஜம்
மனதை ரணமாக்க....
மனம் முழுவதும் குற்றவுணர்வு
மழையாக பொழிய
மீளாத இழப்பின் வலி
மனத்தை வதைக்க...
மனைவியின் கண்ணீரின் அர்த்தம்
மனக்கண் முன் வர
மங்கையின் தவிப்பு புரிய
மூச்சு முட்டியது
மரண வேதனை போல மனதை வாட்டியது....
இழந்த நினைவுகளை
இதயத்தில் பற்றிக்கொண்டு
இழப்புகளை எண்ணி
இரவெல்லாம்
இமைகள் நனைய
இனி கரைய வேண்டாம்....
இன்னல்கள் இல்லாத
இனிய வாழ்வே
இலக்காகட்டும்
இனியவளே.....
இதற்கு
இறுதிப் புள்ளியாய்
இந்த முயற்சி....
இந்தச்
சிறு பிரிவை
இதயம் கனத்தாலும்
இயன்றளவு
இலகுவாய் ஏற்றுக்கொள்...
இன்றைய
இடைவெளியே...
சிறுபிள்ளை போல்
சின்ன விஷயத்தில்
சிணுங்கும் சரிபாதியே....
சில நொடிகளில்
சினத்தைச் சிதறவிட்டு
சமாதானம்
செய்ய மனம் தவிக்க...
சொல்லுக்கு சொல்
சண்டையிட்டாலும்
சிறிது நேரத்தில்
சேர்ந்து பேசிவிடும்
சுபாவ மனைவியே....
சீற்றம் காட்டும்
சிறுபிள்ளை போல
செய்யும் உனை
சற்று நோக்கினால்
சினம் வருவதில்லை...
காலை நெருங்குகிறேன்
மாலை தவிர்க்கிறேன்
வேளைக்கு மூளை மாறும்
வேலையாக நான் இருக்க
பாலையாக தோய்ந்த நிலை
சோலையாக வேண்டி நிதம்
ஓலை அனுப்புகிறேன்
சிலையாகிய ஆண்டவனிடம்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.