Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 25 2

Advertisement

Admin

Admin
Member


“சரி வா” என்று அவரை கிளப்பினான். அதை பார்த்திருந்த சுவாமிநாதன், நானும் வாசுகியும் வர்றோம்” என்று விட,

“எதுக்கு?” என்றான்.

“அங்கையை கூப்பிட” என்றார்.

“நீங்க எதுக்கு கூப்பிடணும், வேணும்னா நான் கூப்பிட்டுக்குவேன்”

“அப்புறம் எதுக்குடா சண்டை போட்ட?”

“என்னை கூட நீங்க கூப்பிடுங்கன்னு சொல்லலையே. அதுதான் என் வருத்தம்”

“சும்மா வர்றதுன்னா வாங்க. கூப்பிடவெல்லாம் வேண்டாம். அவளும் சரி நீங்களும் சரி எனக்கு ரொம்ப முக்கியம், உங்க ரெண்டு பேர் மரியாதையும் உங்களை விட எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்” என்று நிறுத்தினான்.

அவர் புரியாமல் பார்க்க,

“விடுங்க பெரியப்பா உங்களுக்கு புரியாது, சும்மா வர்றதுன்னா வாங்க, ஆனா அவ சண்டை போடுவா பெரியப்பா. அன்னைக்கு கோவில்ல உங்க கிட்ட சண்டை போட தான் வந்தா. அதான் கை ஓங்கிட்டேன்” என்றான்.

“எனக்காக என் மகன் கை ஓங்கினானா” அதுவே அப்படி ஒரு பெருமையை கர்வத்தை கொடுக்க, “எதுக்கு சண்டை போடுவா அங்கை” என்றார்.

“அதுவா நான் இளைச்சி போயிட்டேன் இல்லையா? நீங்க என்னை சரியா பார்ததுக்கலைன்னு சண்டை போட வந்தா” இதை அவன் சொன்ன போது அவனுக்கு ஒரு பெருமை, ஒரு கர்வம்.

“பரவாயில்லைடா, சண்டை பிடிச்சிக்கலாம்” என்று அவர் கிளம்ப,

நாச்சி “நானும் வரேன்” என, தமிழ்செல்வன் மட்டும் தனியாய் நிற்க “டேய், நீ தனியா இருந்து என்ன பண்ண போற, வாடா” என்ற அண்ணனின் அழைப்பில் அவரும் கிளம்பினார்.

இப்படியாக அவர்கள் அங்கே போய் சேர்ந்த போதே ஏழரை மணியாகியது.

ராஜன் வருவான் என்று தெரியும், ஆனால் இப்படி மொத்த குடும்பமும் வரும் என்று அங்கை எதிர்பார்க்கவில்லை.

இவனை தனியாய் எதிர்பார்த்திருக்க எல்லோரும் வரவும், அவளுக்கு வரவேற்க கூடத் தோன்றவில்லை ராஜனை தான் விழிஎடுக்காமல் பார்த்திருந்தாள். அவனோ கவனமாய் தவிர்த்தான்.

ரதி அப்பாவை பார்த்ததும் தளிர் நடையிட்டு வர, அவளை தூக்கி உச்சி முகர, அவளோ அப்பாவின் முகத்தோடு முகம் முட்டினாள். இரண்டு நாள் தாடியிருக்க, அது அவளின் முகத்தை குத்தும் என கவனமாய் தவிர்த்தவன், “பட்டு குட்டி” என்று அவளை சற்று தள்ளி பிடித்து கொஞ்சினான்.

ராஜலக்ஷ்மியும் கரிஷ்மாவும் வரவேற்று “அங்கை” என்று அவளை அழைக்க, நாச்சி அதனை புரிந்தவராக,

“அவ எங்க வீட்டு பொண்ணு, எங்களை எதுக்கு வரவேற்கணும் உங்க வீடு இது” என்று பேசினார்.

“அதானே” என்று அம்மா போலவே சொன்ன ராஜலக்ஷ்மி, “அப்புறம் ஏன் உங்க வீட்டு பொண்ணை இங்க விட்டு வெச்சிருக்கீங்கலாம்” என்றார் பட்டென்று.

அங்கே ஒரு கனமான அமைதி, வந்ததில் இருந்து அங்கையை பார்ப்பதை தவிர்திருந்தான் ராஜன். அவளோ அவனை தவிர யாரையும் பார்க்கவில்லை. கோபமான பார்வை தான்.

எப்படியும் வருவான் என்று தெரிந்ததால் பளிச்சென்று தன்னை அழகு படுத்தி புடவையில் வேறு இருக்க, அவனானால் பார்க்க கூட இல்லை.

ராஜியின் இந்த வார்த்தைக்கு கூட ராஜன் அங்கையை பார்க்க வில்லை.

ஆனால் வீடு மொத்தமும் ராஜராஜனை பார்த்தது. அவனோ மடியில் இருந்த மகளில் லயித்திருந்தான். அவனின் கையில் இருந்த மொபலை மகள் பிடிங்க முயற்சிக்க அவன் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்.

அங்கே இருந்த அமைதி அப்படியே இருக்க, பிறகே நிமிர்ந்தான்.

எல்லோரும் அவனை பார்ப்பதை பார்த்து “என்ன கிழவி?” என்று நாச்சியை பார்த்து கேட்க,

“ஒன்னுமில்லை” என்ற பதில் அங்கையிடமிருந்து வந்தது.

“என்ன ஒன்னுமில்லை?” என்று நாச்சி கேட்க,

“பேசாம இருங்க பாட்டி, என்னை இதை விட யாரும் அசிங்கப் படுத்த முடியாது. நீங்கல்லாம் சொல்லி இவர் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா?” என்று விட்டாள்.

“அம்மாடி இது என்ன பூதம் வரும் என்று நினைத்தால், பூகம்பம் வருகிறது” என்று நொந்து போன ராஜராஜன்,

அப்படியே பாட்டியிடம் பாய்ந்தான், “என்ன கிழவி? என்ன உன் பிரச்சனை?” என,

“ஏன்டா இன்னம் என் பேத்தியை வீட்டுக்கு கூப்பிடலை”

“என்ன பேசற நீ? அவ வீட்டுக்கு வர்றதுக்கு அவளை யார் கூப்பிடணும். அவ வரலையா அதுக்கு காரணம் இருக்கும். நான் கூப்பிடலையா அதுக்கு காரணம் இருக்கும். அது எங்களுக்குள்ள.

உங்களை யாரு பஞ்சாயத்து பண்ண சொன்னா? அதுக்கு வந்து இருந்தீங்கன்னா, தேவை கிடையாது , நீங்க கிளம்புங்கன்னு என்னால சொல்ல முடியாது. நான் கிளம்புறேன்” என்று மகளை தூக்கி எழுந்து நின்று விட்டான்.

“ராஜா, என்ன இது? பேசாம உட்காரு!” என்று சுவாமிநாதன் அதட்ட,

“பாட்டி நீங்க பேசவே கூடாது, வாயை மூடிட்டு இருங்க” என்று அங்கையும் அதட்டினாள்.

அதன் பிறகு அங்கே பொதுவான பேச்சுக்கள், மனோ வந்திருக்க வில்லை.

எல்லோருக்கும் என்ன உணவு கொடுப்பது, வீட்டில் செய்யவா? கடையில் சொல்லலாமா? என்று ராஜியும் கரிஷ்மாவும் பேசி நிற்க,

தில்லை ரதியின் மீது பார்வையை வைத்திருந்தார்.

ராஜராஜனோ யாரிடமும் ரதியை விடாமல் அவனே வைத்திருக்க, எப்போதும் போல ஸ்ருஷ்டி அத்தையினிடத்தில், அவளின் முந்தானையை பற்றியபடி செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க,

அப்போது தான் ஏதோ வகுப்பிற்கு போய்விட்டு விகாஸ் உள்ளே நுழைந்தான்.

ராஜராஜனை பார்த்தவுடன் பையை எரிந்து விட்டு ஓடி வந்தவன், “ஏன் இவ்வளவு நாளா வரலை? அத்தையே இங்க தான் இருக்காங்க. நீங்க ஏன் வரலை, டெய்லி நீங்க வருவீங்கன்னு அத்தை சொன்னாங்க, இன்னைக்கு கூட மதியமே வருவீங்கன்னு சொன்னாங்க, ஆனா நீங்க இப்போ தான் வர்றீங்க” என்று கேள்வி கேட்டு நின்றான்.

அங்கை அவனை எதிர்பார்த்திருந்ததை எல்லோர் முன்னும் போட்டுடைத்தான்.

இப்போது அங்கை அவனை பார்க்கவில்லை, அவள் வேறு புறம் திரும்பிக் கொள்ள, ராஜன் அங்கையை பார்த்தான்.

“மாமா, பதில் சொல்லுங்க”

“ஏன்டா உங்க அத்தை கேட்க சொன்னாளா?” என்று ராஜன் கேட்க,

“அவங்களுக்கு கேட்கணும்னா அவங்க கேட்பாங்க. நான் ஏன் கேட்கணும்” என்று விகாஸ் சொல்ல, ராஜன் சத்தமாய் சிரித்து விட்டான்.

“வெச்சு செய்யறீங்க டா என்னை”

“என்ன செய்யறோம்?” என்றான் அதற்கும்.

“டேய், போதும் விடுடா”

“அதெல்லாம் முடியாது, ஏன் வரலை?”

“அதுதான் இப்போ வந்துட்டேன் தானே”

“இப்போ வந்துட்டீங்க, ஆனா முன்ன ஏன் வரலை?”

அவனின் கேள்வியில் எல்லோரும் அசந்து நிற்க,

ராஜன் பதில் சொல்ல முடியாதவனாகி கண்களால் அங்கையை “காப்பாற்றி விடு” என்பது போல வேண்ட,

அதனை எல்லோரும் பார்த்தனர். அங்கை அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்தபடி அவனின் அருகில் வந்தவள், ரதியை தூக்கி தில்லையிடம் கொடுத்து,

ஸ்ருஷ்டியை ராஜனிடம் விட்டு, “விக்கி அம்மா நிறைய ஐடம்ஸ் செய்யறாங்க. நீ உன்னோட மெனுவை சொல்லிட்டு வா” என்று அவனை அனுப்பி அவளின் ரூம் உள்ளே சென்று விட்டாள்.

செல்லும் அவளின் முதுகை தான் பார்த்திருந்தான்.

சரியாய் அந்த நேரம் மனோ வந்து விட, அவன் வீட்டினனாய் எல்லோரையும் பார்க்க, ராஜன் மெதுவாய் எழுந்தவன், ஸ்ருஷ்டியை மனோவிடம் கொடுத்து அங்கையின் அறையை நோக்கி சென்றான்.

இவனை எதிர்பார்த்திருந்தவள் போல இருந்தவள் இவன் உள்ளே நுழைந்ததும், “நீங்க மட்டும் வருவீங்கன்னு தான் நினைச்சேன்” என்று சொல்ல,

அவளை முறைத்து நின்றான்.

“நிஜம்மா நீங்க மட்டும் வருவீங்கன்னு தான் நினைச்சேன், பாருங்க முந்தானை சொருகி தான் இருக்கேன், ஒன்னும் தெரியாது” என்று சொல்ல,

அதற்கும் அப்படியே தான் நின்றான்.

“நான் அதுக்கு தான் இருந்த இடம் விட்டு அசையலை” என்றாள் மீண்டும்.

முறைத்தபடி அருகில் வந்தான்.

அவள் அப்படியே நிற்க,

அவளின் எதிரில் நின்றவன், கைகளை அவளின் முதுகின் புறம் சென்று அதனை தொட்டு “எதுக்குடி இவ்வளவு லோ கட்” என்றான்.

“உன்னை யாருடா எல்லோரையும் கூட்டிட்டு வர சொன்னா, சொல்லிட்டு வர மாட்டியா?”

வாய் அவளை கேள்வி கேட்டு கொண்டிருந்தாலும் கைகள் அவளின் லோ கட் ப்ளௌசில் இருந்த கயிற்றை அவிழ்க்க, அவள் ஏதோ பேச நினைத்தாலும் அவளின் வாயில் வெறும் காற்று தான் வந்தது.

அவனுக்கு இப்படி உடை அணிந்தால் பிடிக்காது. அதற்காகவே ரெடி மேட் ப்ளோவ்ஸ் பின் புறம் வெறும் கயிறு மட்டுமே இருக்க அதனை அணிந்திருந்தாள். முந்தானையை முழுவதுமாய் முதுகை மறைத்து சொருகி இருந்தால், மற்றவர்களுக்கு தெரியாது. ஆனால் அவள் திரும்பி நடக்கவுமே ராஜன் கண்டு கொண்டான்.

அவர்களின் சண்டை எல்லாம் பின்னுக்கு போய் இப்போது அவளின் உடை முன் நின்றது.

“சொல்லுடி” என்று உடல் உரசி நிற்க,

அவள் பதில் பேசாமல் கையை எடுத்துவிட முயன்றாள்.

“என் கையை எடுத்து விட்டா என் கையோட உன் ப்ளௌசும் வரும் பரவாயில்லையா?” என்று கேட்.டு நின்றான்.

“என்னை பார்க்க பிடிக்கலைன்னு யாரோ சொன்னாங்க?”

“அதுவா வார்த்தை கொஞ்சம் மாறிப் போச்சு, உன் முகத்தை பார்க்க பிடிக்கலைன்னு சொன்னேன்” என்று அசராமல் பதில் சொல்ல,

அங்கை முறைத்து நிற்க, “முகத்தை தவிர வேற எல்லாம் பார்க்க பிடிக்கும்” என்று வாய் ஜாலம் பேச, கைகள் அவளின் முதுகில் வேறு ஜாலங்கள் செய்ய,

அங்கைக்கு கால்கள் நடுங்க துவங்கியது, கீழே விழாமல் இருக்க அவனை தன் பிடிக்க வேண்டும்.

“என்ன? பேசற என் வாயை கடிக்கணும் போல தோணுதா? கடிச்சிக்கோ!” என்றான் அதற்கும்.

கடிக்கும் முடிவில் இருந்தாளோ என்னவோ அதற்குள் “அத்தை” என்றபடி விகாஸ் உள்ளே நுழைந்து விட்டான்.

வேகமாய் அங்கையை மறைத்து ராஜராஜன் நின்று “என்ன விகாஸ்?” என,

“பாட்டி உங்களுக்கு வெஜ் சமைக்கவா நான் வெஜ் சமைக்கவா கேட்டாங்க” என்று நிற்க,

“முதல்ல உன்னை சாப்பிட விட சொல்லுடி” என்று அங்கைக்கு கேட்குமாறு முனுமுனுத்தவன்,

“டிரெஸ்ஸை மாத்திட்டு வெளில வா” என்று அவளிடம் வார்த்தைகளை கடித்து துப்பி,

“வா நானே சொல்றேன்” என்று விகாஸை கூட்டிக் கொண்டு வெளியே செல்ல,

கட்டுக்குள் வர முயற்சித்து அப்படியே அமர்ந்து விட்டாள் அங்கை.





ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்






















 
:love: :love: :love:

முதுகுல என்ன இருக்கு??? ஜன்னல் வச்ச ஜாக்கெட்டா :p:p:p
அச்சச்சோ ஒண்ணுமே இல்லையா???
நல்ல midnight எபி :p:p:p அதான் நடுசாமத்துல வந்திருக்கு.......

நல்ல NV பிரியாணி சொல்லுடா விகாஸ் :p:p:p
மாமா பார்க்கும் வரைதான் வீராப்பு.........
பார்த்தால் ஒரு மார்க்கமாத்தான் இருப்பார்.........

சின்னப்பையன் கிட்ட புலம்ப போய் அவன் எல்லோர் முன்னாடியும் சொல்லிட்டானே........
இதுக்கு பேசாமல் மாமாகிட்ட பேசுடானு சொல்லிருந்தால் முன்னாடியே பேசிருப்பான்........ மிஸ் பண்ணிட்ட அங்கை......

சலக்கு சலக்கு சேலை அத கட்டிக்கிட்டாளே
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாளே ;););)
 
Last edited:
Top