Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻



அத்தியாயம் 22
ஜனங்களை அளவிற்கு அதிகமாக ஏற்றி ஓவர் லோடில் ஒரு பக்கமாக சாய்ந்து ஊர்ந்த பல்லவன் பஸ்கள், மாருதி ஹூண்டாய் பொலிவினோ ஆடி என்று வகைவகையாய் கார்கள், பைக்குகள் ஸ்கூட்டர்கள் என்று வாகனங்களின் வரிசையான அணிவகுப்பில் அண்ணா சாலை அந்த மாலை நேரத்துக்கே உரிய நெரிசலில் களை கட்டியிருந்தது.

அந்த நெரிசலிலும் காரை லாகவமாக செலுத்திக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீராமைப் பார்த்தான் நந்தகுமாரன்.



"காலேஜ் டேஸ்ல வெளிநாட்டுக்கெல்லாம் போகமாட்டேன்.நம் நாட்டு மக்களுக்குத் தான் சேவை செய்வேன்னு நீ சபதமெல்லாம் எடுத்ததா ஞாபகம். ஆனால் இப்போ என்னடான்னா நீயும் மத்தவங்க மாதிரி…"



நந்தகுமார் முடிக்கும் முன் ஸ்ரீராம் கோபத்துடன் இடைமறித்தான்.



"நான் என்ன அமேரிக்காவில் செட்டிலாயிடப் போறதாவா சொன்னேன்? இல்லையே பணம் சம்பாதிக்கத் தானே போறேன். நவீன வசதிகளோட ஒரு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் உருவாக்க தேவையான பணம் கணிசமாய் கையில் சேர்ந்ததும் திரும்பி வந்துடப் போறேன்.என்னை நீ நம்பலையா நந்து?"



"நம்பறேன் ராம். ஆனால் இதை விட பெட்டரா ஒரு ஜடியா நான் சொன்னால் நீ ஒத்துப்பியா?"



"கோ அஹெட்.."என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.



"ராம் உனக்கு ஆட்சேபணையில்லேன்னா தேவகி நர்ஸிங்ஹோமை நாம ரெண்டு பேரும் சேர்ந்து விரிவுபடுத்தலாமே.இப்பவும் அங்கே எல்லா கேஸஸும் தான் ட்ரீட்மென்ட் பண்றோம்.என்ன அங்கே திறமையான சர்ஜன்ஸ் ஜாஸ்தி இல்லை. அதுவும் ந்யூராலஜி டிபார்மென்ட்க்கு உன்னை மாதிரி ஒரு டேலன்டட் யங்ஸ்டர் இருந்தால் நல்லாயிருக்கும். என்ன சொல்றே ராம்?"



நந்தகுமாரன் நினைத்தது போலவே ஸ்ரீராம் கழுவுகிற நீரில் நழுவுகிற மீ.9னாய் மழுப்பினான்.



"ப்ச்சு! நான் அமெரிக்காவுக்கு சம்பாதிக்க மட்டுமே போக நினைக்கல நந்து.இன் பாஃக்ட் ஐ வான்ட் டு கெட் எக்ஸ்பீரியன்ஸ். ப்ரெய்ன் சர்ஜரியில் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலைஸ் பண்ண ஆசை."



"அது தான் உண்மையான காரணமா?"



"வெல் உண்மையான காரணம் என்னன்னா தொழிலையும் நட்பையும் நான் இணைத்துப் பார்க்க விரும்பலன்னு தான் சொல்லனும். உன் நர்ஸிங்ஹோமில் பத்தோடு பதினொன்றாய் நானும் ஒரு சர்ஜனாக இருக்க என் சுயகௌரவமும் தன்மானமும் இடம் கொடுக்காது.

காம்ப்ளெக்ஸ் உருவாகலாம்.ஆ ன் டாப் ஆஃப் இட் அஸ் எ டாக்டர் என் வேலைக்கான க்ரெடிட் முழுக்க முழுக்க எனக்கே கிடைக்கனும்னு நான் எதிர்பார்க்கறதில் ஏதும் தவறிருக்கா, சொல்லு. ஐ வாண்ட் டூ எஸ்டாபிளிஸ்

மைசெல்ஃப். இப்படிப் பேசறதால் நான் ஒரு சுயநலக்காரன்னு நீ நினைக்கலாம். அடிப்படையில் நாம் அனைவருமே சுயநலவாதிகள் தான். இந்த உண்மையை ஒத்துக்காதவன் சுத்த ஹம்பக்

தன்னையும் தன் சுகத்தையும் கவனிக்காமலா ஒருவன் மத்தவங்க. சுகப்பட உதவி செய்யப் போறான்? ந்நோ வே.."



"ஓகே ஒகே! நீயும் சுயநலவாதினு சொல்லாமல் சொல்றே. அப்படித்தானே?"



"எக்ஸாக்ட்லி. காம்ப்ளெக்ஸால ஒரு நல்ல ப்ரெண்ட்ஸிப்பை கெடுத்துக்க நான் விரும்பலெ நந்து. இப்போதைக்கு நாம நல்ல ப்ரெண்ட்ஸ். ப்ரொபெசனையும் ப்ரெண்ட்சிப்பையும் மிக்ஸ் பண்ணாமல் பயணித்தால் நம்ம லைஃப் சீராக போகும்னு நான் நினைக்கிறேன். வாட் டூ யூ ஸே?"



"அக்ரீட்.."என்று சிரித்த நந்தகுமார், விஷமமாய் விசாரித்தான்.

"மச்சான் ! ஜானகி கிட்ட எப்ப மாட்டிக்கறதா உத்தேசம்?"



"நீ எப்போ அந்த சுஜாதா கிட்ட மாட்டிக்கிறாயோ அப்போ…"



குறும்பாக கண் சிமிட்டினான் ஸ்ரீராம்.



"ரியலி யூ ஆர் லக்கி நந்து. எனக்காக ஜானகி கூட அப்படி கேரிங்கா இருக்க மாட்டா. ஆனால் இந்த சுஜாதா மை குட்நெஸ்! இன்னிக்கு மட்டும் இருபது முறையாவது உனக்கு போன் பண்ணியிருப்பா. நீ ரவுண்ட்ஸ் போயிருக்கே ஆபரேசன் தியேட்டரில் இருக்கேனு நான் தான் அவளுக்கு அப்டேட்ஸ் கொடுக்க வேண்டியிருந்ததே தவிர நீ அவளை கணடுக்கற மாதிரி தெரியல அது தான் ஏன்னு எனக்குப் புரியல."



நந்தகுமாரனுக்கும் புரியத்தானில்லை. தன்னிடம் என்ன விசேஷத்தைக் கண்டு இந்த சுஜாதா இப்படி நிழலாகப் பின் தொடர்கிறாள் என்று அவனுக்குப் புரியவேயில்லை. அவள் தம்பி சுரேஷைப் பார்க்க என்று தேவகி நர்ஸிங்ஹோமிற்கு வந்தாளோ அன்று சிறு தூரலாய் ஆரம்பித்த அவளுடைய அன்பும் காதலும் இன்று அடைமழையாய் பொழிய ஆரம்பித்திருப்பது உண்மை. அவள் தம்பி டிஸ்சார்ஜ் ஆனபின் வீட்டிற்கே வர ஆரம்பித்தவள் சில நாள் பழக்கத்திலேயே தேவகியை சுலபமாக வசீகரித்து விட்டது நந்தகுமாரனை கவலையில் ஆழ்த்தியது.



ராதாவைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் அம்மாவிடம் சொல்ல தக்க சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த நந்தகுமாரனுக்கு, சுஜாதாவின் இடையூறு பெரிய. தலைவலியாக இருந்தாலும் ஸ்ரீராமின் வருகை மனசுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அவனுமே சுஜாதாவைப் பற்றியே பேசவும் எரிச்சலுடன் பேச்சை திசை திருப்பினான்.



"காலையில் சுந்தரம் சாரோட ரொம்ப நாழி பேசிண்டிருந்தியே. அப்படி என்ன பேசினிங்க ரெண்டு பேரும்?"



"கல்யாண வயசில் பெண்ணை வைத்திருப்பவர் வேறு எதைப் பற்றி பேசுவார்? எல்லாம் ராதா கல்யாண விஷயமாகத்தான். நந்து நடுவில் இந்த சுஜாதா மட்டும் குறுக்கிடலேன்னா நான் ராதாவை உனக்குத் தான் ப்ரபோஸ் பண்ணியிருப்பேன். ரியலி ஸி இஸ் எ ஜெம்…"



ராதாவை தான் விரும்புவதை நண்பனிடம் சொல்லிவிடலாமா என்று நந்தகுமாரன் யோசித்த வேளையில், எதிரில் சாலையோரமாக கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஜானகியையும் ராதாவையும் பார்த்து விட்ட ஸ்ரீராம் காரை நிறுத்தச் சொன்னான்.



காரை நிறுத்திய நந்தகுமார் சற்றே சாய்ந்து கதவைத் திறந்து விட்டு கெட் இன் என்று முறுவலிக்க, ஜானகி தயக்கத்துடன் தோழியின் முகம் பார்த்தாள்.

ஸ்ரீராம் உரிமையுடன் அவர்களை அதட்டி காரினுள் அமர வைத்தான்.



"என்ன ராதா முன்னெல்லாம் என் கிட்ட வாய் ஓயாமல் பேசி வம்புக்கிழுப்பாய்.இப்போ பேச்சையே காணாம்.என்ன விஷயம்?"



"அவளுக்குத்தான் பேசறதுக்கு இப்போ வேற ஆள் கிடைச்சாச்சே. உங்க கிட்ட எப்படி பேசுவா?"



ஸ்ரீராமின் கேள்விக்கு ஜானகி கிண்டலாய் பதிலளித்தாள்.



"ஸ் …ஜானா சும்மாயிருக்க மாட்டியா நீ?"



வெட்கத்துடன் அதட்டிய ராதாவைப் புரியாமல் பார்த்தான் ஸ்ரீராம்.



"வேற ஆள் கிடைச்சாச்சா? என்ன சொல்றே ஜானா நீ?"



"ஏன் உங்க ப்ரெண்ட் எதுவும் சொல்லலையா?"



"யாரு நந்துவா? இவன் எதுவும் சொல்லலையே..ஏன் என்ன விஷயம்? நீ தான் சொல்லேன்.."



"உங்க அருமை நண்பரும் என் ஆருயிர் தோழியும் உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரு காரியத்தைப் பண்ணிகிட்டிருக்காங்க.."



"கடவுளே! புதிர் போடாமல் விஷயத்துக்கு வா ஜானா. டோன்ட் பீட் அபவுட் த புஷ். எனக்கு சுத்தமா புரியல.."



"உங்களுக்கு எது தான் புரிஞ்சது? லவ் இஸ் நத்திங் தென் எ பயாலஜிக்கல் நெஸஸிட்டினு அடிக்கடி சொல்லிங்களே. அதைத் தான் இப்போ இவங்க ரெண்டு பேரும் பண்ணிட்டிருக்காங்க"



"வாட்?..... "அதிர்ச்சியில் ஸ்ரீராம் அலறி விட்டான்.



"என்னால நம்பவே முடியலையே. ஜானா நீ நிஜமாத் தான் சொல்றியா? நான் வந்து ரெண்டு நாளாச்சு. இந்த இடியட் என்கிட்ட. இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலே. இன்பாக்ட் அந்த சுஜாதாவைத் தான் இவனோட இணைச்சு நான் கேலி பண்ணிட்டிருந்தேன். அப்படியும் தான் ராதாவை விரும்பறதா இவன் ஒரு வார்த்தை சொல்லலே. ராதா அழுத்தம்..லேசுல சொல்ல மாட்டாள்னு எனக்குத் தெரியும். ஆனால் இவன்? மை காட்! ராதாவைத் தெரிஞ்சுண்டதாகவே இவன் காட்டிக்கல ஜானா.அடே பாவி! காலேஜ் ட்ராமாஸ்ல கூட நீ நடிச்சதில்லையேடா.இப்போ எப்படிடா இவ்வளவு அழகா நடிச்சு என்னை ஏமாத்தினே?"



"எல்லாம் சகவாசதோசம் தான்..ராதாவோட பழகறாரே. அவளோட அழுத்தம் அவருக்கும் வந்திருக்குமாயிருக்கும்."



"அதுசரி ராதா பையன் காதலிக்கறதோட நிறுத்தியிருக்கானா இல்ல ஏதாவது வால்தனமும் பண்ணியிருக்கானா?"



கோபத்திலும் வெட்கத்திலும் முகம் சிவக்க ராதா தலை குனிய, நந்தகுமார் நண்பனின் தொடையில் நறுக்கென்று கிள்ளினான்.



"என்னடா கிடைச்சது சான்ஸ்னு வெச்சு செய்றியா? ஐ நோ மை லிமிட்.அதை நிச்சயமா தாண்ட மாட்டேன்."



'எல்லை தாண்ட மாட்டாராமே. பொய்யைப்பார். அன்று இரவு என்னை உதடு வீங்க வைத்தது எந்த எல்லைக்குட்பட்டு செய்த காரியமாம்?'



ராதா மனதிற்குள் நந்தகுமாரனை செல்லமாக அர்ச்சனை செய்ய, ஸ்ரீராம் கேட்டான்.



"அப்படின்னா சுஜாதா …அம்மா வேற என்னவோ ப்ளான் பண்ணிட்டிருக்காங்க அவங்களுக்கு ராதாவைப் பற்றி உங்க காதலைப்பற்றி தெரியுமா?"



"இந்த விஷயத்தில் நான் உன்னைத் தான் நம்பியிருக்கேன் ராம். நீ தான் அம்மாவிடம் எடுத்துச் சொல்லி அப்ரூவல் வாங்கனும் ப்ளீஸ்…"



நண்பனின் கோரிக்கையை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்ற உண்மை ஸ்ரீராமிற்கு அப்பொழுது தெரியவில்லை.
 
தோழமையும்
தொழிலும் வேறு.....
தெளிவாக இருக்கும் நட்பு
திடமாக மறுக்கும் ஶ்ரீராம்...

தங்கள் காதலுக்கு
தன் நண்பனின் உதவியை
தயக்கமாக கேட்டிட .....
தடங்கல் இருந்தால் சரி
தடையாகி போகும் என்று யார் கூறுவார்????
😭😭😭😭😭
 
ஶ்ரீராமின் வெளிப்படையான பேச்சு வெகு அழகு. எதார்த்தமானதும் கூட🤩🤩🤩

ஶ்ரீராம் ஜானகி இல்லேன்னா, இந்த காதல் புறாக்கள் 100எபி ஆனாலும் தங்கள் காதல் விவகாரத்தை வெளியிலேயே சொல்லியிருக்க மாட்டாங்க🙄🙄🙄🙄

சென்னை சாலை நெரிசலில் - தனிமனித
சுயநலம் தவறே இல்லை என,
சம்பாஷனைகள் நிதர்சனங்களை உணர்த்தியது!

சாலையோரம் கிட்டிய தேவிகளின் தரிசனத்தில்,
சிநேகிதர்களின் காதல் விவகாரம் அம்பலமாகியது!
 
ஶ்ரீராமின் வெளிப்படையான பேச்சு வெகு அழகு. எதார்த்தமானதும் கூட🤩🤩🤩

ஶ்ரீராம் ஜானகி இல்லேன்னா, இந்த காதல் புறாக்கள் 100எபி ஆனாலும் தங்கள் காதல் விவகாரத்தை வெளியிலேயே சொல்லியிருக்க மாட்டாங்க🙄🙄🙄🙄

சென்னை சாலை நெரிசலில் - தனிமனித
சுயநலம் தவறே இல்லை என,
சம்பாஷனைகள் நிதர்சனங்களை உணர்த்தியது!

சாலையோரம் கிட்டிய தேவிகளின் தரிசனத்தில்,
சிநேகிதர்களின் காதல் விவகாரம் அம்பலமாகியது!
கவிக்குயில்கள் என்னை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்காமல் விட்ட ஒரே எபிசோட் இதுவாகத் தானிருக்கும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றிமா..💖
 
தோழமையும்
தொழிலும் வேறு.....
தெளிவாக இருக்கும் நட்பு
திடமாக மறுக்கும் ஶ்ரீராம்...

தங்கள் காதலுக்கு
தன் நண்பனின் உதவியை
தயக்கமாக கேட்டிட .....
தடங்கல் இருந்தால் சரி
தடையாகி போகும் என்று யார் கூறுவார்????
😭😭😭😭😭
கவிக்குயில் வெகு தெளிவு.நான் தான் இப்போ குழப்பத்தில் 😳
 
Top