Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 23

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE


அத்தியாயம் 23

அன்று குளித்த பின் அணிந்து கொள்ள வேண்டிய உடையை எடுப்பதற்காக வார்ட்ரோபைத் திறந்த நந்தகுமாருக்கு ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது

வழக்கமாக ஒரு ஒழுங்கின்றி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அவன் ஆடைகள் அன்று மிக நேர்த்தியாக குர்தா பேன்ட் ஸ்லாக் என்று வகைப்படுத்தப்பட்டு சீராக அடுக்கப்பட்டிருந்தது.

தேவகி துணிகளை தெருமுனை இஸ்திரிகாரரிடம் கொடுத்து இஸ்திரி பண்ணி வைப்பதை நந்தகுமார் தான் பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வான்.

ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக தேவகியே சட்டை பேன்ட் சாக்ஸ் என்று செட்டாக எடுத்து வைத்திருந்தாள்.



'ம்..பரவாயில்லையே. அம்மாவுக்கு இப்படியெல்லாம் பொருத்தமா செட்டா எடுத்து வைக்க தெரியுமா என்ன? காம்பினேஷன் பார்த்து மேட்சிங்கா வெச்சிருக்காங்க.ரியலி குட்…'



மனதிற்குள் பாராட்டியபடி உடையை அணிந்து கொண்டான் நந்தகுமார்.

கருப்பு ஷூட்டும் க்ரீம் கலர் ஸ்லாக்கும் வெகு பாந்தமாக பொருந்தி அவன் சந்தனநிறத்தை மெருகேற்ற ஆண்மையின் கம்பீரத்துடன் சமையலறையினுள் வந்து நின்றவனைப் பார்த்து பிரமித்துப் போனாள் தேவகி



"என்னம்மா அசந்து போய்ட்டே? நானில்ல உன்னை பார்த்து ஆச்சரியப்படனும்? எனக்கு கூட இவ்வளவு அழகா மிக்ஸ் அன்ட் மேட்ச் பண்ணத் தெரியாது.ஆனால் நீ ரொம்ப தேர்ந்த டிசைனர் மாதிரி மேட்சிங்கா எடுத்து வெச்சிருக்கே.ரியலி குட்…."



மகிழ்ச்சியுடன் பாராட்டியவனை பார்த்து புன்னகைத்தாள் தேவகி.



"நீ பாராட்டியதை நான் அப்படியே சுஜாதா கிட்ட சொல்லிடறேன்.ரொம்ப சந்தோஷப்படுவா.ஏன்னா நேத்திக்கு உன் வார்ட்ரோபை சீர் பண்ணி அடுக்கி வெச்சது அவ தான்."



"என்னது?..."என்று அதிர்ந்தான் நந்தகுமார்

.

"என்னம்மா நீ? உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?அந்த பொண்ணை எதுக்கு இந்த வேலையெல்லாம் பண்ணச் சொல்றே?"



"நான் என்னடா பண்ணட்டும்? நேத்திக்கி நான் தான் உன் வார்ட்ரோப் ஒழிச்சு சுத்தம் பண்ணின்டிருந்தேன்.அந்நேரம் ஆத்துக்கு வந்தவ நானும் உதவி பண்றேம்மானு சொல்லி அவளே ஓத்த பொம்மனாட்டியா எல்லாத்தையும் சீர்பண்ணி அடுக்கிட்டா.

உனக்கெதுக்கு இந்த சிரமமெல்லாம்னு நான் சொன்னால் அவ கண்ணுல ஜலம் வந்துடறது. ஏன் என்னை அந்நியமா நினைக்கறேள்.மகளா நினைக்கப்டாதானு அழறா.தாயில்லாப் பொண்ணுடா.பாவமில்லையா?"



"ஐயோ அம்மா! புரியாம பேசறியே.அவ அழுதா நீ உடனே சரினு சொல்லிடுவியா? என்னவோ ஆம்படையானுக்கு ஆத்துக்காரி பண்ற மாதிரி இந்த பொண்ணு எனக்கு பண்ணினால் என்னனு அர்த்தம் பண்ணிக்கறது? ஹைலி இடியாட்டிக்! அவ உனக்கு மகளாயில்ல மருமகளா வரத் தான் ப்ளான் பண்றா.."



"வரட்டுமே. அவ மருமகளா வரனும்னு தானே நானும் ஆசைப்பறேன்.அதில் என்ன தப்பு கண்டுட்ட நீ "



"என்ன தப்பா? கடவுளே! நான் சொல்ல வர்றதை…."

நந்தகுமார் மேலே எதுவும் பேசுமுன் இடைமறித்தாள் தேவகி.



"சும்மா கத்தாதே நந்து! சுஜா தான் என் மருமகள்னு நான் முடிவு பண்ணிட்டேன்.



"அதெப்படிம்மா நீ முடிவு பண்ணினால் போறுமா? அவளை எனக்கு பிடிக்க வேண்டாமா?"

வேகமுடன் கேட்ட மகனை வெறித்தாள் அன்னை.



"ஏன்…ஏன் பிடிக்கல? சுஜாவுக்கு என்ன குறை? படிப்பில்லையா அழகில்லையா இல்ல அந்தஸ்தில் தான் மட்டா?"



கோபமாய் கேட்ட அன்னைக்கு பதிலேதும் சொல்லாமல் வெறுமனே சாப்பிட்டு கை கழுவினான் நந்தகுமார்.



"நாம இதைப் பற்றி இன்னொரு நாள் சாவகாசமா பேசலாம். எனக்கு இப்போ நர்ஸிங்ஹோமுக்கு கிளம்ப நேரமாச்சு."



ஸ்ரீராம் வரும் வரை அந்த மாத மெடிகல் ஜர்னலை பார்க்க நினைத்து அதை தான் வழக்கமாய் வைக்கும் டீபாயில் தேடியபொழுது பின்னாலிருந்து தேவகியின் குரல் கேட்டது.



"அங்கேயிருந்த புத்தகமெல்லாம் சுஜா ஷெல்ப்ஃல அடுக்கி வெச்சிருக்கா.."

கஷ்டப்பட்டு தன் கோபத்தை அடக்கிக் கொண்டான் நந்தகுமார்.ஆனாலும்

"ஹெல் வித் யூ அன்ட் யுவர் சுஜா "

என்று கத்த வேண்டும் போல் ஒரு வெறி வந்தது வாஸ்தவம்.

'சுஜா சுஜா சுஜா! எதற்கெடுத்தாலும் சுஜாவா? யார் இந்த சுஜா? அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? அவன் மேல் அவளுக்கென்ன அப்படியொரு அக்கறை? ஓ ஹெல்! அறையை சீர் செய்வதில் ஆரம்பித்து உடை எடுத்து வைப்பது வரை அத்தனை உரிமைகளையும் அவனைகேட்காமலேயே எடுத்துக் கொண்டாகிவிட்டது.இன்னும் படுக்கை தட்டிப் போடுவது தான் பாக்கி.

கடவுளே! இதை இப்படியே வளர விட்டால்

என்ன ஆகும்?'



பயத்தில் பதட்டத்தில் நந்தகுமாருக்கு வியர்த்துக் கொட்டியது.மெடிகல் ஜர்னலை புக் ஷெல்பில் தேடி எடுக்கக் கூட தோன்றாமல் அப்படியே சோபாவில் சரிந்து உட்கார்ந்து தலையை கைகளில் தாங்கிகொண்டான்.



"சாரிடா..ரொம்ப நாழி காக்க வெச்சுட்டேனா? ஈவ்னிங் ஊருக்கு கிளம்பறதால திங்ஸெல்லாம் பாக் பண்ணி வெச்சுட்டு வர நேரமாயிடுச்சு.சரி வா.கிளம்பலாம்.."



ஸ்ரீராம் வந்து உலுக்கியதில் தான் நந்தகுமார் சுயநினைவிற்கு வந்தான். நண்பனின் முகத்தில் தெரிந்த கலக்கமும் குழப்பமும் ஸ்ரீராமை திகைக்க வைக்க, அதனாலேயே கிசுகிசுப்பாக கேட்டான்.



"என்ன நந்து? எனிதிங் ராங்?"



"நத்திங். வா காரில் போகும் போது சொல்கிறேன்."



காரில் காலையில் வீட்டில் நடந்த விஷயங்களை நந்தகுமார் சொல்ல ஸ்ரீராம் சட்டென்று கேட்டான்.



"ஏண்டா இன்னிக்கே அம்மாகிட்ட ராதா பற்றி சொல்லிடறது பெட்டரில்லையா?"



"ப்ச்சு..அம்மாவோட ரீயாக்க்ஷன் நிச்சயமா எனக்கு சாதகமாயிருக்காதுடா.இந்த வீட்டுக்கு குடி வந்த கொஞ்ச நாளிலேயே அம்மா தன் அபிப்ராயத்தை சொல்லிட்டா.

ராதா ராசியில்லாதவளாம். மூலநட்சத்திரத்தில் பிறந்தவளாம்.டாமிட்! எனக்கு சத்தியமா இதிலெல்லாம் நம்பிக்கையில்ல.ஆனால் அம்மா நம்பறாளே.நான் ராதாவை விரும்பற விஷயம் அம்மாவுக்கு தெரியாது. தெரிஞ்சா வீட்டையே மாத்த சொல்லி கெடுபிடி பண்ணுவாளோன்னு பயமாயிருக்கு.என்னால ராதாவைப் பார்க்காமல் இருக்க முடியாதுடா…"



"சரிடா…அப்போ இதுக்கு என்ன தான் வழி?"



நந்தகுமார் பதில் சொல்லவில்லை.

பெற்றோரிடம் பட்டவர்த்தனமாக காதலை பகிரும் பிள்ளைகள் மத்தியில் நந்தகுமார் போன்ற பிள்ளைகளும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஸ்பாவத்தில் நந்தகுமார் மிகவும் மென்மையானவன்.தன் பேச்சால் செய்கையால் எவரையும் நோகச் செய்ய மாட்டான்.அப்படிப்பட்டவன் தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக அவனுக்க எல்லாமுமாக இருக்கும் தேவகியிடம் ராதாவின் மீதான தன் காதலைச் சொல்லி அவள் விருப்பத்திற்கு மாறாக நடக்க துணிவானா? அதற்கான திடமும் தைரியமும் அவனிடம் நிச்சயமாக இல்லை



இன்னும் எத்தனை காலத்திற்கு நான் காத்திருக்க வேண்டும்?

அவனைப் பார்க்கும்பொழுதெல்லாம் ராதாவின் பார்வையில் தெரியும் கெஞ்சல்

அதை விட ஜானகி வெளிப்படையாகவே கேலி செய்வாள்.



"சரியான அம்மாகோண்டுவா இருக்கிங்களே டாக்டர் .வர்ற பேஷண்டோட ஹார்ட்பீட்டை கவனிச்சா மட்டும் போதாது சார்.கொஞ்சம் உங்க ஸ்வீட் ஹார்ட்டையும் கவனிங்க.நீங்க யோசிச்சு ஒரு முடிவெடுக்கறதுக்குள்ள ராதா கிழவியாயிடுவா போலயே."



ஸ்ரீராம் வேறு உசுப்பேற்றுவான்.

"பெட்டர் நவ் தென் நெவர் நந்து. இப்படியே நாளை கடத்தறது சரியில்ல.உன் காதலை அம்மாவிடம் உடனே சொல்றது தான் உத்தமம்."



ஆனால் நந்தகுமார் எதற்கும் அசைந்தானில்லை.பொறுத்து பொறுத்து பார்த்த ஸ்ரீராம் தானே பூனைக்கு மணி கட்ட தீர்மானித்தான்.ஆனால் அவன் முடிவெடுத்த நேரம், சாதாரண கை கால் குடைச்சல் என்று ஆரம்பித்த சுகவீனம் தேவகியை டைபாய்ட் காய்ச்சலில் கொண்டு விட, போதாத குறைக்கு சுஜா வேறு தேவகிக்கு துணையாக அல்லும் பகலும் அவள் அருகிலேயே இருக்க, ஸ்ரீராமிற்கு நண்பனின் காதலை தேவகியிடம் எடுத்து சொல்ல சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

நண்பனின் வாழ்க்கைக்கு ஒரு வழி பண்ணாமலேயே ஸ்ரீராம் அமேரிக்கா கிளம்பிச் சென்றது விதியின் விளையாட்டா?
 
Top