Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தேவி மனோகரனின் காதலதிகாரம் இரண்டு எனது பார்வையில். வானதி சி.ஏ . படித்துக் கொண்டு இருக்கும் பொழுது இளங்கோ உடன் காதல். வானதி அப்பாவின் எண்ணம் மகள் சி.ஏ. முடிக்க வேண்டும் என்று ஆனால் அதற்கு முன் காதல் திருமணம், குழந்தை என்று ஆனதில் அவளது அப்பாவின் காலத்தில் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியாது போய்விடுகிறது. இரண்டாம் குழந்தை வந்த பிறகு அப்பாவின் நினைவு நடுத்தர வயதில் குடும்பத்திற்காக ஒடும் கணவன் இளங்கோ. வேலை, வீட்டு வேலை குழந்தைகள் என்று வானதி பார்க்க இருவரின் புரிதலான வாழ்க்கையில் சிறு மனச் சுணக்கம் வானதிக்கு.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி இருக்கும் நிலையில் மாமனாரின் உடல் நிலைக்காக தங்களுடன் அழைத்து வந்து இருக்கும் பொழுது வானதி இளங்கோ இருவரும் தங்கள் காதலைக் கொண்டு மீண்டும் தங்கள் வாழ்வில் காதலை நிரப்பி அன்பால் புதுப்பித்துக் கொள்வது என்று அழகான நடுத்தர வயது காதலை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார் தேவி மனோகரன். எப்பொழுதும் போல தேவியின் அழகான எழுத்து நடையில் நம்மை ஈர்க்கிறார். வானதி அம்மா, அண்ணன், அண்ணி அர்ச்சனா, இளங்கோவின் குடும்பத்தினர் என்று எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது.
 
அழகான விமர்சனம். அன்பும், நன்றியும் சித்ரா மா ♥️♥️♥️
 
@Devi Manogaran உங்களோட எல்லா கதைகளுமே என்னோட favourite தான்....ஆனா இந்த கதை எனக்கு தனி தான்.....சொல்ல தெரியலை.....மனசுக்கு ரொம்ப நெருக்கமா, நிறைவாக feel ஆகுது
 
@Devi Manogaran உங்களோட எல்லா கதைகளுமே என்னோட favourite தான்....ஆனா இந்த கதை எனக்கு தனி தான்.....சொல்ல தெரியலை.....மனசுக்கு ரொம்ப நெருக்கமா, நிறைவாக feel ஆகுது
Very glad to hear that Sathya sis ♥️🤗🤗

உங்க கமென்ட்ஸ் ஓவ்வொரு அத்தியாத்திற்கும் ரசிச்சு வாசிச்சேன் சத்யா சிஸ் ♥️
 
Top