Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அகம் சேர்ந்தாய் அதிசயனே அறிமுகம்

Advertisement

A S A

Member
Member
ஹாய் நட்புக்களே நான் தான் உங்கள் அகம் சேர்ந்தாய் அதிசயனே கதையின் எழுத்தாளர். அதன் சுருக்கம் தான் இந்த A S A. கனவுப் பட்டறை கதை தொழிற்சாலையில் பெயரை வெளிப்படுத்தாமல் எழுதும் இந்த கதைக்கு உங்க சப்போர்ட்டை அள்ளி அள்ளி கொடுங்க, ஒருவேளை என்னை கண்டுப்பிடிச்சிட்டாலும் உங்களுக்குள்ளேயே வச்சுக்கோங்க, திங்கள் கிழமை முதல் எபியோடு சந்திப்போம்

கதையைப்பற்றி சொல்லணும்னா கல்லூரி படிப்பை முடித்து சில கனவுகளுடன் இருக்கு நாயகிக்கு ஏற்படும் பிரச்சனை என்ன? நாயகன் பிரச்சனைக்கு காரணமாவானா? இல்லை தீர்த்து வைப்பானா? கதையைப் படித்து தெரிஞ்சுக்கோங்க, இப்போ முதல் எபியிலிருந்து சிறு துளிகள்.

அன்னை இப்படி ஒரு முடிவை எடுத்தது நயந்தினிக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? அவள் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பாமல் தான் இந்த ஷாப்பிங்கிற்கும் வர மறுத்தாள். அதிலும் ஊரில் வேறு கடையே இல்லாதது போல் அவர்கள் அழைத்து வந்த கடையை பார்த்து அவளுக்கு மேலும் கடுப்பானது. அது அவனுக்கு சொந்தமான கடை அல்லவா, அதிலும் அவன் பேர் கொண்ட கடை அல்லவா,

“இங்கே எனக்கு எதுவும் பிடிக்கல,” என்று எதுவும் வாங்காமல் செல்லலாம் என்று பார்த்தாலும்,

“புது கலெக்‌ஷன்ஸ் நிறைய வந்திருக்கு மேம், இருங்க காட்றேன்.” என்று கடை ஊழியர் குடோனில் இருந்து நிறைய கொண்டு வந்து காட்ட, அதெல்லாம் நன்றாக இருந்ததால் அவளும் போனால் போகுது என்று அங்கேயே எடுத்துக் கொண்டாள்.

அவளுக்கு பிடித்த ராகவி அக்காவின் திருமணம் என்றாலும், அவள் அந்த திருமணத்திற்கு போக விரும்பாததற்கு முதல் காரணமே, அந்த திருமணத்திற்கு கண்டிப்பாக அவன் வருவான். அப்போதே அவன் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவான். இப்போ அவன் ரேஞ்சே வேற, இப்போ அதுக்கும் மேல இருப்பான். அவனைப் பார்க்க அவளுக்கு சுத்தமாக விருப்பமில்லை. அந்த திருமணத்தில் கலந்து கொண்டால் அவனை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும், அதனால் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்தாள். அன்னையிடம் ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு கண்டிப்பாக வீட்டில் இருந்துவிட வேண்டும்,

ஏனென்றால் இந்த திருமணத்தில் கலந்து கொள்வது விக்கிக்கும் பிடிக்காது. இந்த திருமணத்திற்கு சென்று விக்கியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பது தான் அவள் இந்த திருமணத்திற்கு போக மறுப்பதற்கு இரண்டாவது காரணம். என்ன காரணங்கள் கூறி திருமணத்திற்கு போகாமல் தவிர்ப்பது என்று அவள் அப்போதிலிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். இதில் பத்து நாட்களும் அங்கு தங்கவிருப்பது அவளுக்கு தெரிந்தால் என்ன பிரளயங்கள் ஆக காத்திருக்கிறதோ தெரியவில்லை.
 
Top