Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 12

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 12

தன்னை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த மாந்தளிரின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்த வர்த்தன்,

"ஆமா மாது உன்னை எங்ககிட்ட ஒப்படைச்சது சிபியோட அப்பா அம்மா தான்.. அதுவும் அவங்க உயிர் போற கடைசி நொடியில.. சிபி ஏன் உன் மேல கோபமா இருந்தான்னு எப்பவாது யோசிச்சிருக்கியா.. நாங்க உன்னை பேத்தி அவனை பேரன்னு சொல்றேமே அது எந்த வழியிலன்னு யோசிச்சிருக்கியா.. இல்லை நாங்க யாரும் உன்னை அப்படி யோசிக்க விட்டதில்லை.. ஏன் தெரியுமா என் மகனும் மருமகளும் கேட்டுகிட்ட ஒரு விஷயம் கடைசி வரைக்கும் மாந்தளிர் அனாதைன்னு அவளுக்கு தெரிய கூடாதுங்குறது தான்.. அது தான் உன்னை எங்க சொந்த பேத்தியை விட அதிகமா வளர்த்தோம்..

ஆனா சிபிக்கு அவனோட அப்பா அம்மா இறந்ததற்கு நீயும் ஒரு காரணம்னு தெரியும்.. எப்படின்னு பாக்குறியா..

நீ அவங்க கைக்கு கிடைச்ச நாள் அவங்களோட கல்யாண நாள்..

அப்போ சிபி ஏதோ ஸ்கூல் எக்ஸ்கர்சன்னு சொல்லி வெளியே போயிட்டான்.. எங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிகிட்டு சந்தோஷமா கோவிலுக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனவங்களை நாங்க பார்த்தது அவங்களோட கடைசி நிமிடங்களில் தான்..

என் பையனுக்கு மருமகளுக்கும் ஆக்ஸிடெண்ட் சொல்லி கால் பண்ணாங்க.. ரெண்டு பேரும் பதறி அடிச்சி ஓடிவந்து பார்த்தா ரெண்டு பேரும் ஒரே அறையில உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க..

எங்களை பார்த்ததும் என் மருமகள் சொன்ன விஷயம்,

"சிபியை நல்லா பாத்துக்கோங்க மாமா.. எனக்கு தெரியும் எங்களை விட நீங்க அவனை நல்லா பாத்துப்பிங்க..

மாமா அத்தை எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும்.." சொல்லிட்டு வெளியே பார்த்து

சார் பாப்பாவை கொண்டு வாங்கன்னு ஒரு சத்தம் போட்டா.. அப்போ ஒருத்தர் உன்னை ரெண்டு வயசு குழந்தையா கொண்டு வந்து கொடுத்தாங்க..

மாமா இது என் தோழியோட பொண்ணு.. பேரு மாந்தளிர்.. இவளோட உயிருக்கு ஆபத்து.. என் கண்ணு முன்னாடியே என் தோழியையும் அவளோட கணவரையும் கொண்ணுட்டாங்க.. இவளை காப்பாத்த போன எங்களையும் கொன்னுட்டாங்க..

என் தோழியோட கணவர் நேர்மையான ஐ ஏ எஸ் ஆபிசர் மாமா.. அவரோட எதிரிகளால தான் இது நடந்தது..

நடந்த எதையும் நாம மாத்த முடியாது.. ஆனா இந்த பச்சை மண்ணு அவங்க கைக்கு கிடைச்சா இதோட வாழ்க்கையே சின்னா பின்னாமாக்கிடுவாங்க.. அதுவும் பொம்பளை புள்ளை மாமா.. எங்க ஆ ஆ ஆயுசு முடிய போகுது.. இந்த பொண்ணையும் உங்க பேத்தியா வளர்ப்பீங்களா மாமா.." என்று மரணத்தின் பிடியில் யாசகமாய் கேட்கும் தன் மருமகளிடம் முடியாது என்று சொல்ல முடியாம தான் உன்னை வாங்கினோம்..

ஆனா உன்னோட அந்த கள்ளமில்லா சிரிப்பும் உன் அம்மாவை தேடி நீ அழுத அழுகை முழுசா எங்களை உன் பக்கம் சாய வச்சிடுச்சி..

உன்னை எங்ககிட்ட ஒப்படைச்சிட்டு எம்மருமகளும் மகனும் இந்த உலகத்தை விட்டை போயிட்டாங்க.. அந்த நேரம் தன் அப்பா அம்மாவை தேடி வந்த சிபிக்கு அவங்களோட இழப்பு பெருசா பாதிச்சிது.

அதுவரைக்கும் கோபம்னா என்னன்னு தெரியாதவன் கோபபட்டான்.. ஆத்திரப்பட்டான்.. யாரோ அவங்களோட இழப்புக்கு நீதான் காரணம்னு சொன்னதை வச்சி உன்னையும் வெறுக்க ஆரம்பிச்சான்.

வயசான எங்களுக்கும் பொம்பளை புள்ளை நீதான் பெருசா தெரிஞ்ச.. அவன் பையன் அவனை கவனிச்சிப்பான்.. ஆனா நீ உன்னை அப்படியே விட எங்களுக்கு மனசு வரலை.. அதுவும் சிபிக்கு கோபத்தை தான் கொடுத்துச்சி.. அவனை விட நீ பெருசான்னு அவனுக்கு கோபம்.. அதிலேயே சின்ன வயசுல லண்டன் படிக்க போயிட்டான்..

எங்களுக்கு அவனோட கோபம் புரிஞ்சாலும் கொஞ்சம் வயசுக்கு அப்புறம் எல்லாம் மாறும்னு நம்பினோம்.. ஆனா எங்களோட நம்பிக்கை கடைசி வரைக்கும் பொய்யாகிடுச்சி..

அவ மாறலை உன் மேல இருந்த கோபம் இன்னமும் போகலை.. ஆனா அந்த கோபத்தை போக்க வைக்க உன்னால முடியும்.. நீ இப்போ அவனோட பொண்டாட்டி.. அவனை நீ அரக்கன்னு தப்பா நினைச்சிட்டு இருக்க.. ஆனா அவன் அரக்கன் இல்லை..

இப்போ இருக்கற இந்த சமுதாயத்துல நடக்கற அட்டூழியங்களை அழிக்கற பரமாத்மா.. நீ கேட்டியே தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பாருன்னு.. இப்போ எந்த கடவுளும் நேர்ல வரதில்லை.. தெய்வம் மனுஷ ரூபம்ன்னு சும்மாவா சொன்னாங்க.. அதுக்காக என்பேரன் பன்றது சரின்னு நான் சொல்லவரலை.. ஆனா அவனை திருத்தி நேர் வழிக்கு கொண்டு வர வித்தை ஒரு மனைவிக்கு கண்டிப்பா தெரியும்..

உனக்கு எங்க மேல உண்மையான பாசம் இருந்தா என் பேரனோட சேர்ந்து வாழப்பாரு.. எங்களுக்குன்னு இருக்கறது அவனும் நீயும் தான்..

இதோ இந்த மாதுவும் சிபியும் தான் எங்க வாழ்க்கையோட ஆதாரம்..

இன்னும் ரெண்டு நாள்ல சிபி ஆஸ்திரேலியா கிளம்புறான்.. எங்களோட சநுதோஷமும் நிம்மதியும் உனக்கு முக்கியம்னா எங்க பேரனோட பொண்டாட்டியா நீ போகனும்.. அவனோட சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கனும்.. எங்க கொள்ளு பேரனையோ பேத்தியையோ நாங்க பாக்கணும்.. இது எங்களோட நியாயமான ஆசை.. அது நிறைவேற்றுவது உன்னோட கையில இருக்கு..

ஆனா இப்பவும் சொல்றேன்.. இந்த உண்மை உனக்கு தெரிஞ்சாலும் தெரியலைன்னாலும் இந்த வர்த்தனோட பேத்தி நீதான்.. அதுல எப்பவும் எந்த மாற்றமும் இருக்காது.. அது போல இப்படி நடந்தா நாங்க சந்தோஷபடுவோம்னு சொன்னேனே தவிர இப்படித்தான் நடக்கனும்னு நாங்க கட்டளை விதிக்கலை.. இனி முடிவு உன் கையில்.. தாட்சா வா நாம போகலாம்.. நம்ம பேத்தி யோசிச்சி முடிவெடுக்கட்டும்..

இது நடந்தாலும் நடக்கலைனாலும் அவ நம்ம பேத்தி தான் அதுல எந்த விதமான மாற்றமும் இல்லை.." என்று மாந்தளிரிடம் கூறி விட்டு தன் துணைவியை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார்.

அவர்கள் அங்கிருந்து சென்றதையும் உணராமல் வர்த்தன் சொல்லி சென்ற உண்மையில் பெண்மனம் மிகவும் அடிவாங்கியது.

இத்தனை நாளும் தான் அனாதை இல்லை.. தனக்காக தன்னுடைய தாத்தா பாட்டி இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் இருந்தவளுக்கு இன்று நீ ஒரு அனாதை எங்கள் வீட்டு பெண்ணுக்காக உன்னை நாங்கள் வளர்த்தோம் என்று பெரியவர்கள் கூறி சென்ற பின்பு வஞ்சியவளுக்கு ஒன்றும் புரியவில்லை தான்.

ஆனால் சற்று யோசித்த பின்பு புரிந்த விஷயம் அவளை சிபியுடன் அயல்நாடு செல்ல அனுமதித்தது.

இங்கு வரும் பெரியவர்கள் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி தான் வந்தாள்.. அவர்கள் மேல் கோபம் வரவில்லை நிதர்சனம் புரிந்தது.

தன்னை அன்று அவர்கள் வளர்க்காவிட்டால் இன்று தன்னிலை எப்படி வேணாலும் மாறியிருக்கலாம்.. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தன் மேல் பாசம் வைத்து உயிராய் வளர்த்தவர்களுக்கு நன்றி கடனாய் அவர்களின் குடும்பத்தை தழைக்க வைப்பது என்று முடிவு செய்த பின்பு பெண்ணவளுக்கு சிபியின் கோபம் பின்னே சென்று விட்டது.

இது நன்றிக்கடனுக்காக வாழப்போகும் வாழ்க்கை.. இதில் பயத்தை துடைத்தெறிந்து வாழ்ந்தால் தான் தன்னை வளர்த்தவர்களுக்கு பெருமை.

ஆகையால் தான் சிபிக்கு தானே ஒவ்வொன்றும் தன் கரங்களால் செய்தால்.

ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள் போலும் நன்றிக்கடனுக்காக வாழப்போகும் வாழ்க்கை எப்படி நிலையாகும் என்று..? காதலால் வாழும் வாழ்க்கை வாழ்வின் எல்லை வரை நிலைத்து நிற்கும்.. ஆடவனின் காதலை புரிந்து கொள்ளாமல் பெண்ணவள் எடுத்த இந்த முடிவு அவளின் கணவனுக்கு தெரிந்தால் அவனின் உள்ளம் என்ன பாடுபடுமோ..?

பழைய நினைவிலிருந்து மீண்டு வந்தவள் தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க முயலும் போது ஒரு வலுவான கரம் அவளின் தோளை அழுத்தி பிடித்து விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்தது.

" தளிர் மா என்ன இது எவ்வளவு நேரம் இப்படி அழப்போற.. இங்கே பாரு அவ உன்னை எதுவும் செய்யலை.. அவனோக போராடி நீ மயங்கிட்ட.. நீ இந்த சிபிக்கு சொந்தமானவ.. என்கிட்ட இருந்து உன்ன யாராலும் பிரிக்க முடியாது.. இதை பாரு அதை பத்தி சுத்தமா நினைக்காத கண்ணம்மா.. நீ இப்படி இருக்கறதை என்னால பாக்க முடியலை டி.." என்றான் மென்மையாய்.

வஞ்சியவளோ தன்னிடமா இத்தனை இதமாய் பேசுகிறான் என்பதை நம்ப முடியாமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

அதிலும் அவனின் தளிர் , கண்ணம்மா என்ற இரண்டு விதமான வித்தியாசமான அழைப்பு பெண்ணவளின் நெஞ்சாங்கூட்டுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

தன்னை தான் பார்க்கிறாள் என்று உணர்ந்தவனுக்கு வேறு எதுவும் பேச தோன்றாமல் இதுவரை அவள் பார்த்திருந்த நிலவை ஆடவன் பார்க்க ஆரம்பித்தான்.

சற்று நேரம் அவனையே பார்த்திருந்த வஞ்சி மனம் என்ன நினைத்ததோ தன் அருகில் நின்றிருந்த ஆடவனின் மார்பில் தலையை சாய்த்து கொண்டு இறுக கண்மூடி கொண்டாள்.


அவள் என்னவோ தலைசாய்ந்து விட்டாள் தான் ஆனால் ஆடவனின் கண்கள் தான் நம்பமுடியாமல் அவளை விழிவிரித்து பார்த்தான்.

ஆனால் அடுத்ததாக அவள் செய்த செயலில் தான் ஆடவன் மொத்தமாய் பெண்ணவளிடம் தொலைந்து போனான்.

ஆம் அவனின் மார்பில் சாய்ந்தவள் மெதுவாய் அவனின் இரண்டு கால்களுக்கு இடையில் அமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் தோள் மேல் போட்டு தன்னை இன்னமும் அவனுக்கு நெருக்கமாய் அணைத்து கொண்டவள் நிம்மதியாய் அவன் மார்பில் சாய்ந்து துயில் கொண்டாள்.

அதே நேரம் அவர்களின் வீட்டு அவுட்ஹவுஸில் இருந்த தமிழ் குடும்பத்தின் வீட்டிலிருந்து ஒலித்தது அந்த பாடல் ,

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்..
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா..
நான் வாடும் நேரம் உன் மார்போரம் தான்..
நீ என்னை தாலாட்டும் தாயல்லவா..
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்..

உன்னால் தானே உண்டானது..

ஏனோ இத்தனை வருடங்களாய் மனதில் சுமந்திருந்த காதலை உணர்ந்த ஆடவனுக்கு அன்று தான் நிம்மதியாய் இருந்தது.

ஆடவன் வாய்விட்டு இன்னும் தன் காதலை சொல்லவில்லை.. ஆனால் இன்று வஞ்சியவள் தன்னை நெருங்கியதில் மிகவும் ஆனந்தம் கொண்டான்.

ஆனால் அவளின் உள்ளத்தில் காதல் பூத்துவிட்டதா..? என்று கேட்டாள் இன்றும் அவனுக்கு விடைதெரியாது.. அவனுக்கு மட்டுமல்ல இதோ அவனின் மார்பில் சுகமாய் சாய்ந்திருந்த பெண்ணவளுக்கும் தெரியாது..

பார்ப்போமே பெண்ணவள் காதலை உணரும் உணர்த்தும் தருணத்தையும்.


அடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பட்டூஸ்.
 
Top