Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் இரண்டு

Advertisement

venba

New member
Member
ஹாய் சிஸ்/ப்ரோஸ்...
என்னுடைய முதல் அத்தியாயத்திற்கு வந்த ரிப்ளை வரவேற்பிற்கு நன்றி... இதோ அடுத்த அத்தியாயம்..

அத்தியாயம் 2:

மஞ்சளுக்கு பேர் பெற்ற மாவட்டம் ஈரோடு மாவட்டம். அங்கு வீரப்பன் சத்திரம் என்ற ஊரில் மக்கள் தங்கள் வாயில் கை வைக்கும் வகையில் “இனியா இல்லம்” வீடு பெரிதாய் வீற்றிருந்தது. அந்த வீடும் ஈரோட்டின் புகழ் பெற்ற “இனியா சில்க்ஸ்” என்ற துணி மாளிகையும் முத்துவேல் குடும்பத்திற்கு உரியது.

சர் என்று வேகமாக வந்த கார் பிரமாண்டமாய் எழுந்து நின்ற அந்த வீட்டின் முன் நின்றது. காரின் கதவு சட்டென்று திறக்க அதில் இருந்து கோபமாய் இறங்கினான் இந்தர். முகம் கோபத்தில் ஜிவு ஜிவு என சிவந்திருக்க அவனது நீண்ட கால்கள் வேகமாக வீட்டின் உள் வந்தது. வந்த வேகத்தில் அங்கிருந்த சேர் ஒன்றினை தள்ளி விட்டவன் அப்படியே அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.

சேர் விழும் சத்தம் கேட்டு கிட்சனில் இருந்து வேகமாக ஓடி வந்தார் அம்சவேணி.முத்துவேலின் மனைவி. இல்லத்தரசி. தலை குனிந்து இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று பின்னி அமர்ந்திருந்த மகனைக் கண்டதும்,” இந்தர்… என்னப்பா என்ன ஆச்சு” என்றவர் அவன் அருகில் செல்ல கீழே விழுந்து கிடந்த சேரின் மேலும் பார்வை சென்றது. கைகளை பிரிக்காமல் பார்வையை மட்டும் உயர்த்தி அவரைப் பார்த்தவனின் பார்வை அம்சவேணிக்கு புரியவில்லை. ஆனால் அவனது முகம் அதில் தெரிந்த பாவம் மனதில் பயமூட்ட ஒரு அடி முன்னாடி வந்தவர்,”என்னாச்சு இந்தர். ஏதாவது பிரச்சனையா…..அப்… அப்பாக்கு” என்று திணற ,”அப்பா” என்ற வார்த்தை இந்தரை கொதிக்கவைத்தது.

அமர்ந்திருந்த சேரினை காலால் எட்டி உதைத்து தள்ளிய இந்தர், ”எப்படிமா….எப்படி இப்படி இருக்கீங்க” என்று கோபம் கொந்தலிக்க கொந்தலித்தான். அவனது கோபத்தினை கண்டவர் துணிகளை வாங்குவதற்காக வெளியூர் சென்றிருக்கும் கணவனுக்கு என்னவோ என்ற எண்ணம் மனதை ஆட்ட, ”இந்தர் ஏன் இவ்ளோ கோபம்… எனக்கு படப்படப்பா வருதுப்பா.. அப்பாக்கு எதுவுமா” என்று பதட்டத்துடன் கேட்டார்.

அவரது பதட்டத்தை கவனித்த இந்தர் தலையை வலது இடது புறமாய் ஆட்டி, ”எப்போதும் உங்களுக்கு உங்க கணவன் தான் முக்கியம் ஏன்மா… நான் நெர்வஸ்ஸா இருக்கேன்னு உங்களுக்கு தெரியுது.. கோபம் புரியுது. அப்போ எனக்கு ஏதாவதுன்னு யோசிக்க மாட்டிங்களா… சரி என்னை யோசிக்க வேணாம். ஆனா துரத்திவிட்டிங்களே ஒரு ஜீவன்.. அதுவும் ஒரு காலத்தில் உங்க உயிரா இருந்த ஒரு உயிர். அவளுக்கு ஏதாவதுன்னு யோசிக்க மாட்டிங்களா” என்று தன் எல்லை மீறி கத்தியிருந்தான்.

அவனது கத்தலை அதிர்வுடன் உள் வாங்கியவர் இனியாவிற்கா என கலங்கும் கண்களுடன் அவனை பார்க்க, “என் பேபிக்கு ஒரு பேபி பிறந்திருக்காம். அவளோட கணவர் சொல்றார். ஆனா பாருங்கம்மா என்னால அத சந்தோஷத்தோட கொண்டாட முடில… மனசு போட்டு அழுத்துது.” என தன் நெஞ்சை நீவியவனுக்கு உண்மையாகவே நெஞ்சை எதுவோ ஒன்று அழுத்தியது.

தன் தாயைப் பார்த்து ஆட்காட்டி விரலும் நடு விரலும் சேர்த்து சிறிது என்ற அளவை காண்பித்து,” அவளால சின்ன சின்ன வலிக்கூட பொறுக்க முடியாதும்மா… எப்படி இந்த வலி தாங்குனா தெரில… அவளோட இந்த பிரிஷியஸ் டைம்ல நீங்களும் இல்ல நானும் இல்ல… அவ எவ்ளோ நம்மல தேடுனான்னு கூட நமக்கு தெரியாது… ஆனா உங்களுக்கு அந்த கவலைலாம் இல்ல… உங்களுக்கு உங்க உலகத்துல உங்க புருஷனும் நீங்களும் மட்டும்தான். அப்புறம் உங்களுக்கு எதுக்கு பொண்ணு பையன்…” என்று கத்தியவன் அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைக் கண்டுக்கொள்ளவே இல்லை. இவரை நம்பி தானே அன்று நாம் சென்றோம் என்ற கோவம் இன்றும் அவனுள் கொழுந்துவிட்டு எறிந்துக்கொண்டு இருந்தது.

அவரது பார்வையை தவிர்த்தவன்,”நான் போவேன் என் பேபியை பார்க்க நான் போவேன். ஒரு அம்மாவா உங்க கடமை செய்யனும் நினைச்சா நான் தடுக்கல… ஆனா நீங்க வரலனாலும் பிராப்ளம் இல்ல. என் பேபிக்கு நானே அப்பாவா அம்மாவா இருந்திட்டு போறேன்” என்று வேகமாக தனது அறைக்குள் முடங்கினான்.

அலை அடித்து ஓய்ந்தது போல் வீடே அமைதியாக இருக்க, அம்சவேணி அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக்கொண்டே இருந்தது. மனம் பாரமாய் கனத்தது. இப்பொழுதா அவருக்கு மனம் கனத்தது. இல்லையே, என்று தன் மகள் தலையில் அடியுடன் உதட்டில் ரத்ததுடன் அந்த வீட்டில் இருந்து கிளம்பினாளோ அன்றிலிருந்து அவருக்கு மனம் பாரமாகி போனது.
மகள் பற்றி எத்தனை எத்தனை கனவுகள். காதல் வேண்டாம் என்று எத்தனை அறிவுரைகள். கணவர் பெருமைக்காக படிக்கவைகின்றாரே தவிர ஜாதி இனம் தான் அவருக்கு முக்கியம் என்று எத்தனை மகளுடன் பேசியது. எல்லாம் அழிந்ததே …. ஒரே மகள் செல்ல மகள் செல்வத்தில் உருண்டு வளர்ந்தவள்.

எங்கே எப்படி இருக்கிறாள் என்று அறியாமல் எத்தனை நாட்கள் இரவில் கணவரிடம் கண்ணீர் பொழிந்திருப்பார். மெல்ல கண்களை துடைத்தார். மெதுவாக ஆனால் திடமாக எழுந்து தனது மொபைலில் கணவருக்கு அழைத்தார். சிறிது நேரம் பேசினார். அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ மகிழ்வுடன் மதியம் இனியாவைக் காண இந்தருடன் அவரும் கிளம்பினார்.


.................................................................

குளூரப்பட்ட அந்த அறையில் ஃபன் சத்தம்மட்டும் நிறைந்திருந்தது. குகன்மித்ரனின் மனம் முழுவதும் பழையதைக் கிளறி வடுவை மேலும் ஆழமாக்கி வலியை வேதனையை வழங்கியது. அருகில் மனைவியும் மகளும் உறக்கத்தில் இருக்க மெதுவாக எழுந்து இனியாவின் அருகில் சென்றான். அவள் படுக்கை அருகில் சேர் ஒன்று இழுத்துப்போட்டு அமர்ந்து அவள் அருகில் மிகஅருகில் தலைவைத்து இறுக்கி கண்களை மூடிக்கொண்டான்.

ரணமான மனம் சாந்தம் அடைவது போல் இருக்க ஒரு கை அவனது தலையை மென்மையாக தடவ சட்டென்று தலை நிமிர்ந்துப் பார்த்தான். கண்கள் மொத்த டையர்டையும் காண்பித்து வறண்ட இதழ்களுடன் சோபையாக சிரித்தாள் இதழினியா.

“இதழ்….” என்று குகன் எழ,

“என்னாச்சு கலெக்டரே…. ஏன் இவ்ளோ சோகம்… ம்???” எனத் தலை லேசாக தூக்கிக் கேட்க,

“ம்ம்ம்ம்…. ஆமா… மித்து மித்துன்னு உன் குரல் கேட்காம… உன் வாசம் இல்லாம… உன் மூச்சுக்காத்து என்மேல படாம… ஊகும்… முடில இதழ்…” என்று அவளது கன்னம்மேல் கன்னம் வைத்து மெதுவாக மென்மையாக உரசினான்.

“க்கூம்.. இப்படி சொல்றவர் தான் நிறைமாச கர்பிணினு கூட பார்க்காம மானாடு பார்க்கனும்னு கிளம்பி போனாராமா…????” என்றவள் குரலில் வலி வந்தப்பின் அவனை எவ்வளவு தேடினாள் என்ற தேடல் இருக்க, மித்துவிற்கு கண்கலங்கியது.

“டேய் இதழ்மா… எனக்கு எப்படிடா தெரியும்… உனக்குதான் இன்னும் நாள் இருக்கே…. அதுனாலதான் நான் போனேன்….. நான் கலக்டர்டா தங்கம்…. போய் தான் ஆகனும்… நம்ம குட்டிமா இந்த அப்பா அம்மாவ தனியா விட்டுட்டு போறாருன்னு உன்னைப் பார்க்க சீக்கிரம் வந்துட்டா போல…” என அவளது கண்களைப் பார்த்து கூறியவன் அவனை இழுக்கும் மூக்கின் மீது சிறு சிறு முத்தம் வைத்தான்.

அவனது முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவள் ,”ம்ம்ம் குட்டிமா யாரு மாறி இருக்கா….”

“என் தங்கக்குட்டி யாரு மாறின்னா ? எனக்கு தெரிலியே….”

“ம்ம்ம்ம்” என இரு புருவங்களையும் சுருக்கி காய்ந்து போயிருந்த உதடுகளை கோபம் போல் வளைத்து முறைத்து பார்த்தாள் இனியா.

தலை கலைந்து கண்கள் சோர்வாக இருந்தாலும் பிள்ளைப்பெற்ற மகிழ்ச்சி முகம் முழுவதும் இருக்க அவளது அந்த பொலிவும் மகிழ்ச்சியும் குகனைக் கட்டிப்போட்டது. இதுவரை இருந்த வருத்தம் மறைந்து மனைவியும் மகளும் மட்டுமே மனதில் இருந்தனர்,

அந்த உதடுகளில் பட்டும்படாமல் தொட்டும்தொடாமல் முத்தம் வைத்தவன்,” என் தங்கப்பொண்ணு என் தங்கக்குட்டி என் இதழ் மாறி தான். அவ வேற யாருமாறி இருப்பா…. அப்படியே நீ தாண்டி என் இதழ்” என்று மீண்டும் ஒரு முத்தம் வைக்க, மிளிர்ந்து மகிழ்ச்சியில் திளைத்த முகம் இப்பொழுது வெக்கத்தில் சிவந்தது.

“அச்சோ க்யூட்டா இதழ்….” என்று அடுத்து அவன் குனிவதற்குள் “ங்கா….” என்ற ஒலி அவர்களை கலைத்தது.

“அதுசரி இப்போவே எங்கள பிரிக்கிற பார்த்தியா…” என்று சிரிப்புடன் எழுந்தவன் குழந்தையை தூக்கி இனியாவிடம் தந்தான்.

கொஞ்சநேரம் ஆச்சுல நீ பீட் பண்ணு. செக்யூரிட்டி கூப்பிடுறார் நினைக்கிறேன். நான் போய் பார்த்திட்டு வரேன்” என்று குழந்தையை இனியாவிடம் தந்தவன் அவளது உச்சந்தலையில் முத்தம் பதித்துவிட்டு விலகிச்சென்றான்.

தன்னைவிட்டு விலகி செல்லும் கணவனை பெருமை காதல் பொங்க பார்த்தவள் குனிந்து குழந்தையையும் பார்த்தாள். அவளுக்கு குழந்தை அப்படியே மித்துவின் சாயலாக தெரிய தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

“பார்த்தியா பேபி… இவ்ளோநாள் என்னை தங்கப்பொண்ணுன்னு கூப்பிட்டு இப்போ அது நீயாம்…” என்றவளுக்கு சிறு பொறாமைகூட இல்லை பெருமையும் மகிழ்ச்சியும் மட்டுமே….

வெளியே வந்த குகனின் போன் அடிக்க அவசரமாக அதை எடுத்தவனுக்கு மனம் படபடவென் அடித்துக்கொண்டது.

“குகன்னா நாங்க வந்துட்டோம். எந்த ரூம் சொல்டா “

“மேலவா. திர்ட் பிளோர். நான் முன்னாடியே நிக்கிறேன்”

“சரி இரு.”

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக மாற குகனுக்கு வியர்த்து கொட்டியது. இந்த இரண்டு வருடமும் தாயை காணாமல் இருந்தாலும் தனது தம்பி கோபி மூலம் அவன் அவரைப்பற்றி அறிந்தே இருந்தான். இருப்பினும் தன் மீதுள்ள கோபம் மறைந்து பார்க்க வரும் தாயைக் காண பெரும்போராட்டம் நிகழ்ந்தது குகனுள்.

லிப்ட் திறக்க மனம் படபட என அடித்துக்கொண்டது. இதோ அவன் இந்த நொடி வராதா என்று ஏங்கிய நொடி அவன் கண்முன் வந்து நின்றது. லிப்ட் திறந்து அவன் அம்மா காவேரி வர, “ம்மா…” என வேகமாக ஓடி வந்து இறுக்கி கட்டி அணைத்துக்கொண்டான்.

காவேரிக்கும் இரண்டு வருடங்கள் கழித்து தன் மகனைக் கண்டதும் கண்கள் கண்ணீர் மழை பொழிய, குகனின் கண்களும் கண்ணீர் சிந்தியது.

“டேய் அண்ணா… போதும்போதும். உனக்கு பொறந்த பேபி பார்க்க வந்தா நீயே பேபிமாறி அழுதிட்டு இருக்க… ஹான்??” என்று காவேரி பின்னால் இருந்து கோபி குரல் வர, சட்டென்று தாயின் தோளில் இருந்து தலை நிமிர்த்திய குகன் “வாடா படவா…” என்று உள்ளே அழைத்துச் சென்றான். அங்கிருந்து இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு கலெக்டரின் தாய் தம்பி என புரிந்து அமைதியாக இருக்க அவரைப் பார்த்து புன்னகை புரிந்தவர்கள் அறைக்குள் நடந்தனர்.

குகன் கோபியின் கைகளில் அழுத்தம் கொடுத்து “தேங்க்ஸ்டா” என்று அழுத்த, திருப்பி நன்றாக அழுத்தியவன் “ம்ச்ச். இட்ஸ் மை கடமை ப்ரோ.. நீ எங்க ஃபுயூச்சர் நல்லா இருக்கனும்னு நிறையா பண்ணிருக்கிற ப்ரோ… இது சின்ன விஷயம் தான்” என்று முறுவலித்தான்.

கதவை நாசுக்காக தட்டிவிட்டு அறையின் உள்ளே நுழைந்தார் காவேரி. குழந்தைக்கு பால் குடுத்துவிட்டு கொஞ்சிக்கொண்டிருந்த இனியா சத்தியாமாக காவேரியை எதிர்ப்பார்க்கவில்லை.

அதிர்ந்த முகத்துடன் இனியா இருக்க காவேரிக்கோ பழைய நியாபகங்கள் அணிவகுத்து நின்றது.

“இந்த பொண்ணு நமக்கு வேணாம் குகன். இந்த பொண்ணு இந்த பொண்ணோட குடும்பம் எதுவும் வேணாம்””

இத்தகைய அம்மாவின் வார்த்தைகளை எதிர்ப்பார்க்காத குகன் அவசரமாக இனியாவை திரும்பி பார்க்க கண்களில் கண்ணீருடன் கீழ்உதடு கடித்து அழுகையை கன்ட்ரோல் செய்கிறாள் என்று வலியுடன் உணர்ந்தான்.

தாயிடம் திரும்பியவன்,”ம்மா…. என்னம்மா….உங்ககிட்ட இருந்து இது நான் எதிர்ப்பார்க்கல ம்மா.. நான் இனியாவ அவ வீட்டிலிருந்து கூட்டிட்டு வந்துட்டேன். இப்போ போய் அவ வேணாம் சொன்னா…. எப்படிம்மா…. “

கண்களில் கோபம் ஏற,”யார கேட்டு கூட்டிட்டு வந்த குகன் நீ. உனக்கு இவ வேணாம் வேணவே வேணாம். இவ குடும்பம் எப்படிபட்ட குடும்பம்ன்னு தெரிஞ்சும்..”என்றவருக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

“ம்மா…. நான் இனியாவைதான் விரும்புனேன்மா. அவங்க குடும்பத்தை இல்லை… அவங்க எப்படி இருந்தா நமக்கு என்ன…”

“டேய்…. அறிவுன்னு ஒன்னு இருக்கா… இல்லியா… கலெக்டர் தான நீ... நான் அவளையே வேணாம் சொல்றேன். “ என்றவர் குகனின் அருகில் ஆவேசமாக வர,

அவரின் ஆவேசத்தில் இதழினியா பயந்து குகனின் சர்ட்டை இறுக்கி பிடித்தாள். அவளது கைகளை இரு கைகளாலும் பிடித்துக்கொண்ட குகன், “ம்மா… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…. இவ இல்லாம…...உகூம்” என்று தலையை இடது புறமாக ஆட்ட,

“ஓ அவ்ளோ தூரம் போயாச்சா… அப்போ என் வீட்டில உனக்கு இடம் இல்லை. வெளிய போய்டுங்க…” என்றவருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிய முகம் குடுக்காமல் திரும்பிநின்று கொண்டார்.

இதை கேட்டு அதிர்ந்து நின்றது குகன் மட்டுமின்றி கோபியும். “ம்மா……..” என்று கோபி அழைக்க,” அவங்கள போக சொல்லு கோபி…” என்றவர் திரும்பவே இல்லை. கோபி பாவமாக குகனைப் பார்க்க,

குகனோ,”அம்மாவ பார்த்துக்கோ கோபி…” என்று இனியாவை கைப்பிடித்து வெளியே சென்றுவிட்டான்.

அம்மாவின் கண்ணீரைத்துடைத்த கோபி, ”ஏன்மா… ஏன் இப்படி… “ என்றவனுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் திணற, கோபிக்கு கிஞ்சித்தும் அன்னை ஜாதிக்காக மறுத்திருப்பார் என்ற எண்ணமில்லை.

“உன் அண்ணனுக்குதான் நாம் வேணாம்ன்னு போயிட்டானே… குகனுக்கு அந்த பொண்ணு தான் முக்கியம். அந்த பொண்ணு நல்லவளா இருந்தாலும்….. அவ குடும்பம்… அது ஒரு காட்டுமிராண்டி குடும்பம்….. உங்களுக்குல்லாம் தெரியாதுடா…. அந்த பொண்ணு முகம் பார்த்தல்ல….. அவங்க பொண்ணையே இந்த அடி அடிச்சிருக்காங்க…. உங்க அண்ணன் அவங்க கைல கிடச்சா…“ என்று கூறும்பொழுது முற்றிலும் உடைந்தார்.

“அது என்னால கற்பன கூட பண்ணமுடில கோபி… வேணாம் அவங்க இங்க இருந்தா அவங்களுக்குதான் ஆபத்து. அவனுக்கு நார்த்ல தான போஸ்டிங்க். அதுனால போகட்டும்…”என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பிறகு இரண்டு வருடங்கள் ஆகிற்று கோபி அவனது அம்மாவை சாமாதானம் செய்ய….

இதோ இனியாவைப் பார்த்ததும் காவேரியின் முகம் பழயதை கிளற இனியாவிற்கும் அதே சிந்தனைதான்.

“ம்மா உள்ள வாங்கம்மா” என அவர் பின்னாடியே வந்த குகன் அவரது தோளின் மேல் கைவைத்து உள்ளே அழைத்துச் சென்றான்.

காவேரி அங்கிருந்த சேரில் உட்கார, கோபியோ பாத்ரூம் சென்று ரெப்ரஷ் ஆகிவந்தான்.

குகன் இனியாவை பார்த்தவன் அவளது அதிர்ந்த முகத்தை கவனிக்காது,”தங்கப்பொண்ணு பால் குடிச்சாசா… “ என குழந்தையை தாயிடம் தந்தான்.

குழந்தையைக் கண்டவருக்கு தன்னைப்போல் கண்கள் கலங்க…

“அடடா… இது சரியாப்போச்சு… அவன்கிட்ட இருந்து மெசேஜ் வந்ததுல இருந்து “திருப்பி கால் பண்ணுடா… இன்னும் நாள் இருக்கே… அதுக்குள்ள எப்படி ஆச்சு… எப்படி இரண்டு பேர் மட்டும் சாமலிப்பாங்களோ… அப்படி இப்படின்னு என்ன கொலையா கொன்னுட்டு இப்போ என்னாடானா கண்ணுல தண்ணிவிட்டுட்டு இருக்கீங்க..” என்று வந்த கோபி குழந்தையை கொஞ்சினான்.

தாயையும் மனைவியையும் கண்டவன் பெருமூச்சுவிட்டு கோபியிடம் “வாடா டீ வாங்கிட்டு வரலாம்.சொன்னா செக்யூரிட்டி வாங்குவாங்க… ஆனா நம்ம வேலையை நாமளே பார்ப்போம்.” என கோபி கேட்கப்போகும் கேள்விகளுக்கு விடையும் கூறினான் குகன்.

அவனைப் பார்த்து சிரித்த கோபி “நீ மாறவே இல்லடா” என்று இருவரும் கீழ் தளத்தில் இருந்த கேன்டீன்க்கு சென்றனர்.

நிசப்தம் அந்த அறையை நிறைக்க தூங்கும் குழந்தையை பார்த்திருந்த காவேரி மெதுவாக பிள்ளை பெற்று எடுத்தவளை பார்த்தார்.

கைகளில் போட்டிருந்த ஊசியை தடவிக் கொண்டிருந்தவளின் கண்களில் மிரட்சியிருக்க அதை பார்த்தவர் மனம் கனத்தது.

தன்னுடைய மருமகள் தன்னுடைய குகனின் மனைவி… தனக்கு அடுத்த சந்ததி குடுத்த மகராசி என்று தோன்ற,

“என்… என்ன… என்னை மன்னிச்சிடுமா” என்று வாய் திறந்து மனம் திறந்து மன்னிப்பு கேட்டார் காவேரி.

அவரது மன்னிப்பில் மேலும் அதிர்ந்த இனியா,”ஐயோ ஆண்டி… மன்னிபுலாம் பெரியவார்த்தை..” என்ற பதற,

“இல்லமா… எப்பவுமே ஜாதி மதம் இனம் எதுவும் பெருசில்ல என் பசங்க முன்னாடி.. குகன் எங்க குலவிளக்கு… எங்க குடும்பத்தோட ஆணிவேர். அவன் யார காதலிச்சு இருந்தாலும் நான் சரின்னு சொல்லியிருப்பேன்.

ஆனா உன்ன… நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலமா….

கல்யாணம் இரண்டு பேரோட முடிறது இல்லமா… இரண்டு குடும்பத்த சேர்த்து இருக்கிறது.

எனக்கு உங்க குடும்பம் மேல மரியாதை மதிப்புவிட பயம் அதிகம். நீ ஒத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் அவங்கலாம் ஜாதி மதத்துக்குதான் முதல் பிரிபரன்ஸ் தரவங்க…

அவங்க வாரிசு நீ… அதுவே என்ன வேணாம் சொல்ல வச்சுது…அடுத்த காரணம் உனக்கு விழுந்த அடி.

உனக்காவது அடியோடு நிருத்தியிருக்காங்க….

ஆனா அவன் அவங்ககையில கிடைச்சா.. உடம்புல உயிர் தங்காது… “ என்று சொல்லும் பொழுது அங்கிருந்த இரு பெண்களின் கண்களும் கண்ணீர் நிறந்தது.

ஒரு கையால் சேலை கொண்டு துடைத்தவர் “அதான் உள்ளுக்குள்ள ஒரு எண்ணம். திடமா. அவனுக்கு நீதான்னு முடிவு பண்ணிட்டான். அப்போ அவனுக்கு எதுவும் ஆகாம சந்தோசமா வாழட்டும்னு தான் நான் வெளிய போக சொன்னேன்.

அங்கேயே இருந்திருந்தா அவங்க உங்கள விட்டிருக்க மாட்டாங்க..

கண்டிப்பா எனக்கு தெரியும் என் பையனுக்கும் அது புறிஞ்சுறுக்கும். அதான் நான் போன்னு சொன்னதும் அமைதியா போயிட்டான். ஆனா உனக்கு… அதுவும் வாசலோட அனுப்பிவிட்டது… கன்சீவா இருக்கன்னு தெரிஞ்சும் பார்க்காம இருந்தது எல்லாத்துக்கும் மன்னிச்சிடுமா… “ என்றவரின் குரலில் வருத்தம் மேலோங்கி இருந்தது இனியாவிற்கு புரிந்தது.

தாய் மகனின் புரிதல் அவளுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இந்த இரண்டு வருடத்தில் என்னால உங்க அம்மாவும் நீங்களும் தனியா இருக்கிறமாறி ஆயிடுச்சே என்று அவள் வருந்திய பொழுதெல்லாம் அப்படி இல்ல இதழ் அது நாம அங்கையே இருந்தா எதாவது ஆபத்து வருமோன்னுதான் அம்மா அப்படி பண்ணாங்க. மத்தபடி உன்ன பிடிக்காம இல்ல என்ற கணவரின் குரல் அவள் காதில் ஒலித்தது. இனியாவிற்கு தன்னைப்போல் அவளது குடும்பமும் நியாபகம் வந்தது. அவர்கள் தன்னை புரித்துக்கொள்ளவில்லை என்ற கவலை மேல் ஒங்க,

மீண்டும் ஒரு மௌனம். இரு பெண்களும் அன்னாளுக்கே சென்று வந்தனர். அந்த தவிப்பில் வேதனையில் வருத்தத்தில்,

“அது உங்களைத்தப்பு சொல்லமுடியாது ஆண்டி. ஏன்னா என் குடும்பம் நடந்துகிட்டதும் அப்படிதான… “எனக் கூறிய இனியா மீண்டும் அமைதியாகி போனாள்.

பழையது கிளறகிளற இன்று இருக்கும் மகிழ்ச்சி அழியும் என்று அறிந்த காவேரி எண்ணத்தின் ஓட்டத்தை திசைமாற்றும் பொருட்டு“ எப்போடா பால் குடுத்த குட்டிக்கு” என்றார்.

அவரின் எண்ணம் புரிந்த இனியாவும்,”நீங்க வரதுக்கு கொஞ்சநேரம் முன்னாடிதான் ஆண்டி.. “ என்ற பதிலில் இருவரும் ஒருவாறு தேற்றிக்கொண்டனர்.

இருவருக்கும் குகன் என்பவனின் சந்தோசம் அமைதி முக்கியம். காவேரிக்கு குகனின் சந்தோசம் இனியா என்று புரிய… இனியாவிற்கோ குகனின் அமைதி காவேரி என்று புரியத்தான் செய்தது. அந்த புரிதல் அவர்களது உறவை மேம்படுத்தி அழைத்துச்செல்லும்…

வாழவே....





 
“ம்ம்ம்ம்…. ஆமா… மித்து மித்துன்னு உன் குரல் கேட்காம… உன் வாசம் இல்லாம… உன் மூச்சுக்காத்து என்மேல படாம… ஊகும்… முடில இதழ்…”

ப்பாஹ்.... வலியின் இனிமையை கூட அழகா வார்த்தைப்படுத்தறீங்க....
🥹 🥹 🥹 🥹 🥹 🥹 🥹 🥹 🥹 🥹 🥹 🥹 🥹
 
நைஸ் எபிசோட் ரைட்டர் ஜி ❤️
பையன் வீட்ல சமாதானம் ஆகிட்டாங்க... பொண்ணு வீட்ல எப்ப வருவாங்க 🤷 சீக்கிரம் கூட்டிட்டு வாங்க ரைட்டர் ஜி.....
 
Top