அத்தியாயம் – 17
மயக்கம் தெளிந்து எழுந்த வஞ்சிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை பின்பு சூழ்நிலை பிடிபட விரைந்து துளசியிடம் சென்று பார்க்க சோர்ந்து கண்களுடன் வலி தாங்காமல் தலையை இடமும் வளமும் ஆட்டி கொண்டு இருந்தாள்.
எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் இத்தனை விரைவில் எதிர் கொள்ள வருமென்று எண்ணவில்லை.வஞ்சி கொண்டான் துரிதமாகச் செயல் பாட்டன் மருத்துவரை அழைத்து வர சென்று விட்டான்.கபிலன் “ஐயோ நான் என்ன பண்ணுவேன்” என்று அழுக மாலாவும் அழுது கரைந்தால்
வஞ்சி “அக்கா பாப்பாக்கு சுடு தண்ணி வச்சு எடுத்துட்டு வாங்க…. மது குழந்தைகளுக்குச் சாப்பிட குடுத்து உன் அறையில வச்சுக்கோ நாங்க இங்க பார்த்துகிறோம்”
“சரி அண்ணி” என்றவள் குழந்தைகளைக் கவனிக்கச் செல்ல “மாமா வெளில இருங்க” என்றவள் துளசியை மாலாவின் உதவியுடன் சுத்த படுத்தினாள் கண்ணில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது சுத்தம் செய்யச் செய்ய உதிர போக்கு நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
அதில் அதிர்ச்சியுற்ற மாலா “என்ன வஞ்சி இது”
“என்ன பண்ணுறதுனு தெரியலாக்க கை, கால் சுகம் கொண்ட நமக்கே அந்த நேரம் வலியை தாங்க முடியாது இது எப்படி தாங்குமோ தெரியலையே பிள்ளை சோர்ந்து போச்சு பாருங்க”
ஐயோ! கடவுளே என்று கதறி அழுதார் மாலா மனதை குற்ற உணர்வு என்னும் வாள் கூர் போட்டது.இருவரும் அவளைச் சுத்தம் செய்து வேறு உடை மாற்றி விட்டு படுக்க வைக்கவும் பெண் மருத்துவர் வரவும் சரியாக இருந்தது.
வந்தவர் ஆண்களை வெளியில் நிற்க சொல்லிவிட்டு துளசியைப் பரி சோதித்தார் வஞ்சி அவருக்குப் பரிச்சியம் என்றதால் “வஞ்சி இங்க வச்சு மருத்துவம் பண்ண முடியாது ஹாஸ்பிடல் கொண்டு போறது நல்லது” என்றவர் மருத்துமனைக்கு அழைத்துச் சில ஆணைகளைப் பிறப்பிக்க அதற்குள் வஞ்சி கதறி விட்டாள்.
பின்பு டாக்டர் கபிலனிடம் திரும்பி “இவளுக்குப் பார்க்கிற டாக்டரையும் வர சொல்லுங்க கபிலன் அப்போதான் அவளுக்குச் செட் ஆகுற மருந்தை கொடுக்க முடியும்”
சரி என்றவன் அந்த மருத்துவரை அழைத்து விடயத்தைச் சொல்ல அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விட்டது.உடையவன்,கபிலன்,வஞ்சி கொண்டான் மூவரும் துளசியை ஆம்புலன்ஸில் படுக்க வைக்க வஞ்சி கொண்டானும், வஞ்சியும் துளசியுடன் சென்றனர் மீது உள்ளவர்கள் காரில் வர மது மட்டும் வீட்டினில்.
துளசியின் நிலையைக் கண் கொண்டு காண முடியாமல் தனது ஆற்றாமை முழுவதையும் கணவன் மேல் காட்டி கொண்டு இருந்தாள் வஞ்சி அவனது தோளில் அடித்தும், அவனது நெஞ்சில் குத்தியும் எப்படியாவது காப்பாத்துங்க என்று கதிரியவளை என்ன சொல்லி தேற்றுவது.
அவனுக்கு அந்தச் சக்தி இருத்தால் செய்து முடித்திருப்பனே கண் முன் அவனது உடன் பிறப்புப் படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டு இருப்பானா என்ன.அவள் அழுது விட்டாள் அவனால் முடியவில்லை கண் மூடி கல்லானான்.மருத்துவமனை வர விரைவாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மருத்துவம் செய்தனர்.
மருத்துவர் வெளியில் வரவும் கபிலன் அவரிடம் விரைந்து வந்தவன் “என்ன ஆச்சு டாக்டர் பாப்பா எப்படி இருக்கா”
“கபிலன் முன்னவே சொன்னேன் உதிர போக்குக் கொஞ்சம் குறைஞ்ச தான் சொல்ல முடியும் அதுவும் முழுமையா முடியாது பொண்ணு நிலை வேற எதுவும் சொல்லுறதுக்கில்ல” என்றவர் விலகி செல்ல பெண்கள் இருவரும் அழுது கரைந்தனர்.
சூழ்நிலை இறுக்கம் கூடி கொண்டே போகத் தனது தாய் மாமனை அழைத்து வர சென்று விட்டான் உடையவன் அவனுக்குப் பெரியவர்கள் உதவி வேண்டும் என்று தோன்றியது.
அடுத்து ஒரு மணி நேரத்தில் குடும்பமே அங்குத் தான் இருந்தது அதில் சம்பாவியும் வந்திருந்தாள் எதார்த்தமாகத் தாய் வீடு வந்தவள் செய்தியைக் கேட்டவுடன் கிளம்பி விட்டாள் அவளையும் மனசாட்சி விட்டு வைக்க வில்லை.
உடையவன் மட்டுமே தன்னை நிலை படுத்திக் கொண்டான் சிறியவனாக இருந்தாலும் மூன்று பெண்களுக்கும் தகப்பனாக இருந்தான் அல்லவா.விஜ்யலக்ஷ்மி கபிலனை கட்டி கொண்டு அழுக வஞ்சி கொண்டான் கைகளைப் பிடித்தவாறே அமர்ந்து கொண்டார் வெங்கடேசன்.
இரவு வரை இருந்தவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்தான் வஞ்சி கொண்டான் சாம்பவி தனியாக வந்து அவனிடம் மன்னிப்பு வேண்ட "நீ எதுவும் யோசிக்காத பார்க்க போனா எல்லாருமே தான் காரணம் பிள்ளையை வச்சுக்கிட்டு இருக்காதா கிளம்பு” என்றான் முதல் மனைவி என்றது போய் இப்போது மாமன் மகளாகவே பாவித்தான்.
வஞ்சிக்கு தான் இவர்களது உரையாடலை பார்த்து பத்தி கொண்டு வந்தது வஞ்சி எதையும் வெளி படையாகப் பேசி பழக்க பட்டவள் இல்லையா அதனால் சாம்பவி சென்றவுடன் வஞ்சி கொண்டானை பிலு பிலுவென்று பிடித்து விட்டாள் “என்ன ஒன்னுமே நடக்காத மாதிரி நீங்களும் உங்க மாமன் மகளும் பேசிக்கீறீங்க” கோபத்தில் அவள் குரல் சற்று ஓங்கி ஒலிக்க அங்கே இருந்த வெங்கடேசனும்,விஜியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்
“ப்ச்.. வஞ்சி”
“பேசாதீங்க எப்படி முடியுது ? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா ? உள்ள குத்தலை கூலி வேலை பார்க்கிறதுங்க கூடப் பிள்ளைகளை நோவாம பார்க்க ஏங்கி நிக்குதுங்க ஆனா இங்கன பணமிருந்தும் என்ன பண்ணி வச்சு இருக்கீங்க எல்லாம்.புள்ள எப்படி துடிக்குதுனு பார்த்தீங்களா மனுஷங்களாடா நீங்க எல்லாம்”
அவளது கூற்று நியாயம் என்றாலும் துளசியை அவர்களால் முடிந்த வரையில் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். இதனை எப்படி வஞ்சிக்கு புரிய வைப்பது என்று தான் தெரியவில்லை விஜிக்கும் சற்று ஆச்சிரியமாகத் தான் இருந்தது அவளது பாசத்தை எண்ணி.வெங்கடேசன் பேசவே இல்லை பேசவும் முடியாது மற்ற ஆண்களின் நிலையம் அது தான்.
விடிய விடிய தனது ஆதங்கத்தை முழுதும் வித விதமாகப் பேசி வஞ்சி கொண்டானை ஒரு வழி செய்து விட்டாள் அத்தனையும் தாங்கி நின்றான் மனிதன் அவனுக்கும் துளசியும் குழந்தை தான் தன் மகளை விட அவளைத் தான் அதிகம் நடுவான்.
விடிந்தும் துளசியின் நிலை கவலை கிடம் என்று சொல்லிவிட்டனர் அனைவருக்கும் நிதானம் வந்தது அண்ணன்கள் மூவரும் துளசியை அடிக்கடி சென்று பார்த்து வந்தனர் வஞ்சியும் மாலாவும் கூட …
வஞ்சி “பாப்பா என்ன பண்ணுறாங்கனு தெரியல நீ போய்ப் பார்த்துட்டு குளிச்சிட்டு வந்துரு” என்க வஞ்சியும் தலையை ஆட்டிவிட்டு சென்றாள்
அங்கே மது மட்டுமே அவளும் துளசியை பார்க்க வேண்டுமே அதனால் வீடு வந்து சேர்ந்தாள் இரவெல்லாம் தூங்காமல் அழுது கரைந்திருப்பாள் போலும் முகமெல்லாம் வீங்கி இருந்தது வஞ்சியைப் பார்த்ததும் ஓடி சென்று அனைத்துக் கொண்டு அழுதாள்
அழுகாத மது... அழுகாதடா..... இதைத் தவிர வார்த்தைகள் வரவில்லை வஞ்சியிடம்.
***********************
சரியாக இருபது நாட்கள் மருத்துமனையில் தான் கழிந்தது ஆண்கள் ஒருவர் மாறி ஒருவர் இருந்து கொண்டு இருவரை தொழில் பார்க்க செய்தனர் தினமும் வந்து பார்த்து சென்றனர் தாய் மாமன் குடும்பம் செய்தி வெளியில் கசிய ஓர் இரு சொந்தங்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர்.
துளசி படும் வதையைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை அழுது அழுது வெறுத்து நின்றவர்கள் பிள்ளையின் வலி உணர்ந்து அவளது இறுதிக்காகவே வேண்ட தொடங்கிவிட்டார்.
பொதுவாக இது போல் குழந்தைகளுக்குக் கையும் காலும் நீட்டி மடக்கச் சிரமாக இருக்கும்.இடுப்புப் பகுதியில் அசைவிருந்தாலும் எழுந்து செல்ல முடியாது. முதுகு தண்டு சரியான வளர்ச்சியில் இருக்காது அல்லவா அப்படி இருக்க இதில் பருவம் எய்தினாள் எண்ணி கூடப் பார்க்க முடியாத நரகம்.
ஒவ்வொரு நாளும் அவளுக்குக் கொடுக்கும் மருந்தும் மாத்திரையும் பார்க்கும் போகுது குருதி பெருகும்.உடலில் ஊசி குத்தாத இடமுண்டா என்று தேடி பிடித்துப் பார்க்க வேண்டும் போலும் நிரம்பு கிடைக்கவில்லை என்று அங்கங்கே குத்தி வைத்திருந்தனர் பார்க்க பார்க்க தாங்க முடியவில்லை எல்லாருக்கும்.
சரியாக இருபது நாள் கடந்த நிலையில் மறு நாள் பிறக்க போதுமடா சாமி இப்பூமியில் நான் பெண்ணாகப் பிறந்தது என்று எண்ணினாலோ என்னமோ அனைவரையும் மறந்து தனது வலிகளுக்கு விடுதலை கொடுத்து மீளா துயிலுக்குச் சென்று விட்டாள் துளசி.
சரியாகக் காலை ஆறு முப்பதுக்குத் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்று விட்டாள் .செவிலி வெளியில் ஓடி போய் டாக்டரை அழைத்து வர அவர் வந்து பார்க்கும் போது அனைத்தும் முடிந்து இருந்தது.
வஞ்சிக்கு அழுக கூடத் தெம்பில்லை எல்லாருக்கும் அதிர்ச்சி குறைவு தான் அந்த அளவிற்கு இருபது நாட்கள் தனது இறப்பை அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உணர்த்தி அவர்களைத் தேற்றி வைத்திருந்தாள் துளசி கடைசியாகப் பேசிய வார்த்தை எண்ணிய எண்ணம் எதையும் வெளி படுத்த முடியாத அந்த ஜீவன் கண்ணை இறுக்க மூடி கொண்டது.
வஞ்சி தான் புலம்பினாள் "ஐயோ!... அக்கா!.... என்னால முடியலக்கா அழுக கூட முடியலையே…. புள்ள என்ன யோசுச்சு இருப்பா…. கடைசியா என்ன பேசி இருப்பா…. ஐயோ!... பேச கூட முடியாதே அவளால…. துடிச்சு போச்சே என் புள்ள என் புள்ள” என்று மாரில் அடித்து அழும் அந்தத் தாய்மையை என்னவென்று சொல்ல.
அடுத்து மருத்துவர் செய்ய வேண்டியதை ஆண்களுக்கு அழைத்துச் சொல்ல தாய் மாமன் பொறுப்பைச் சரியாகக் கையில் எடுத்துக் கொண்டார் வெங்கடேசன். வீடு விஜியின் வசம் சொந்தங்களுக்கு அழைத்துச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் வேறு.
அதற்கு முன் மதுவிடம் சொல்லி வீட்டை ஒழுங்கு படுத்த சொல்ல அவளோ கதறி தீர்த்தாள்.அழுது புரண்டாலும் மாண்டோர் மீள்வது உண்டோ என்ற கூற்று எத்தகைய உண்மை.
இதோ மூன்று அண்ணன்கள் புடை சூழ மகா ராணியைப் போல் மருத்தவமனையில் இருந்து பிறந்தகம் வந்தாள் துளசி.யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை அத்தனைப் பேரும் நொறுங்கி இருந்தனர் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது இறப்பு தான்.
வஞ்சியைத் தான் சமாளிக்க முடியவில்லை வந்த சொந்தங்கள் கூட ஆச்சிரியமாகவும் சந்தேகமாகவும் பார்த்தனர்.அவர்களது எண்ணமும் யோசிக்க உள்ளது போலும்.குறுகிய காலப் பழக்கத்தில் இந்த அன்பு சாத்தியமா? நேர்மையான குணமும் தூய்மையான அன்பும் கொண்டவருக்கு சாத்தியம் என்பதை எப்படி சொல்வது.
மாலாவை நெருங்கி சொந்தங்களுக்குத் தெரியும் அவளது பழக்கம் எது வரை என்பதும் தெரியும் ஆனால் இச்சிறு பெண்ணின் செயல் அவள் வடிக்கும் கண்ணீரும் கதறலும் அவர்களது எண்ணத்தை இரு வேறு எண்ணங்களாக பிரித்து பார்க்க வைத்தது.
Last edited: