Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம்-1

Advertisement

உங்களுடைய "என்றென்றும்
நீயே நானாக வேண்டும்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சித்ராதேவி விஸ்வா டியர்
 
Last edited:
வணக்கம் தோழிகளே
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நான் என்னுடைய கன்னி முயற்சியாக
நாவல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
இதற்கு வாய்ப்பு அளித்த மல்லி மேமிற்கு
நன்றி. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


என்றென்றும் நீயே நானாக வேண்டும்

அத்தியாயம்- 1


புத்தாண்டு கொண்டாட்டம் கோலகாலமாக அந்த வீடே கொண்டாடிக் கொண்டிருந்தது. விதிவிலக்காக நம் நாயகி சுப்ரஜா மட்டும் அமைதியாக இருந்தாள்.உடனே அமைதியான பொண்ணு என்று நினைச்சிடாதிங்க அடாவடியான பொண்ணுங்க, அவ இருக்கும் இடம் கலகலவென இருக்கும். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் .அவளுக்கு அதில் துளி கூட விருப்பம் இல்லை.அதான் இந்த மௌனமான போராட்டம்.
தோட்டத்தில் கல் மேடையில் அமைதியாக அமர்ந்து இருந்த சுப்ரஜாவை நோக்கி வந்தாள் நீரஜா.

நீரஜா சுப்ரஜாவின் ஒரே தமக்கை. அக்காவாக மட்டும் இல்லாமல் எல்லாமுமாக இருந்தவள்,
இன்று சுபியின் கவலைக்கு காரணமாகி விட்டாள்.

சுபி என அழைத்தபடியே வந்தமர்ந்த நீரஜா,
சுபியின் கையை மெல்ல பிடித்து " சுபிம்மா அக்கா எது செய்தாலும் உன் நல்லதுக்கு தான்டா நீ சந்தோஷமாக இருக்கனும்". என் கல்யாணத்துல பிரிஞ்ச குடும்பம், உன் கல்யாணத்துல ஒன்னு சேரனும், நீ எப்பவும் என்னோடவே இருக்கனும், என்று தான் இந்த முடிவை எடுத்தேன். உன்னை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கு. நீ பழைய சுபியா மாறனும், கலகலவென நீ இருக்கிற இடம் இருக்கனும். அம்மாவும் , அப்பாவும் உன்னை நினைத்து வருத்தப்படுறாங்க, நீ வந்து உள்ளே வந்து எல்லோரிடமும் இரண்டு வார்த்தை பேசு.வாடா அத்தை வேற உன்னை கேட்டாங்க‌ என்றாள் நீரஜா.

நீ போக்கா நான் வரேன் என்ற சுபி,"சென்ற வருட புத்தாண்டு கொண்டாட்டத்தை நினைத்து பார்த்தாள்.."

ஈஸ்வரன் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும்.
ஈஸ்வரன், பார்வதி தம்பதிகளுக்கு இருமகள்கள்.
மூத்தவள் நீரஜா, இளையவள் சுப்ரஜா.
ஈஸ்வரனின் தமக்கை பத்மா,அவரது கணவர் சுகுமாரன்.இருமகன்கள் - நவின், கவின் இரட்டையர்கள்.

எல்லோரும் சேர்ந்து ஈஸ்வரனின் வீட்டையே ரெண்டாக்கினர்.
ஆனால் இப்போது அவளால், அவர்களோடு சேர முடியாமல், போய் விட்டது .பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே சென்றாள் சுபி.

உள்ளே சென்ற சுபி, தன் அத்தை , மாமாவிடம் சென்று வாழ்த்து கூறி விட்டு பிறகு ஓரமாக அமர்ந்து தன் ஃபோனில் கவனத்தைச் செலுத்தினாள்.அழுத்தமான காலடி ஓசையில், மெல்ல நிமிர்ந்தவள் திகைத்து எழுந்து நின்றாள்.

கவின் தன் கூரிய விழிகளால் அளவிட்டவாறே, "happy new year" சுப்ரஜா என்றான். சுபியும் பதிலுக்கு வாழ்த்தி விட்டு அவ்விடம் விட்டு அகல முயன்றாள்.
ஒரு நிமிடம் சுப்ரஜா என்ற கவின், இது தான் உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு தருகிற மரியாதையா ,என் அண்ணன் வந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது,வெல்கம் பண்ணியா என,
"சுபியோ மனதிற்குள் அண்ணனா உனக்கு ரெண்டு நிமிடத்திற்கு முன்பு தான பிறந்தான்
என்னவோ ஏழெட்டு வருடம் முன்பு பிறந்தவன் மாதிரி பேசுற,நானே முன்பெல்லாம் பேர் சொல்லி தானே கூப்பிடுவேன்.அது மட்டும் தெரிஞ்சது நான் தொலைஞ்சேன், கடவுளே! என்னை காப்பாத்து எனக் கூறிக் கொண்டாள்"
சுப்ரஜா ஒன்றும் கூறாமல் அமைதியாக இருப்பதை பார்த்து, சுப்ரஜா உன் அக்கா வீட்டுக்காரரை எப்படி வேண்டும் என்றாலும் நடத்திக்கோ, ஆனால் என் அண்ணனுக்கு உரிய மரியாதையை நீ கொடுத்துதான் ஆக வேண்டும் என அழுத்தமாக கூறினான்.

வா என அவள் கையை பிடித்து அழைத்து சென்றான். நவின்,நீரஜா இருக்குமிடம் அழைத்துச் சென்றான்.
நவீன்" சுபியை பார்த்து சுப் என ஆரம்பித்து பிறகு அவள் முறைப்பதை பார்த்து, மெல்ல இருமி பேச்சை மாற்றி சுபி எப்படி இருக்க என வினவ"

சுபியோ நல்லா இருக்கேன் அத்தான். புத்தாண்டு வாழ்த்துக்கள் அத்தான். எனக்கு கொஞ்சம் தலைவலி நான் போய் ஓய்வு எடுக்கிறேன் நீங்க என்ஜாய் பண்ணுங்க அத்தான், என்று வார்த்தைக்கு வார்த்தை அத்தான் போட்டு அங்கிருந்த மூவருக்கும் அதிர்ச்சியை பரிசளித்து விட்டு சென்றுவிட்டாள்.

கவினோ" நம்மளை ஒருமுறையாவது கூப்பிட்டாளா இவனை மட்டும் இப்படி கூப்பிடுறாளே" என மனதிற்குள் நினைத்து விட்டு
நவினை யோசனையாக பார்த்துக்கொண்டே அவ்விடம் விட்டு அகன்றான்.
நவினோ " என்னையா அத்தான் என்று சொன்னாள், என் சுப்பம்மா என்னை மன்னித்து விட்டாளா" என மனதிற்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டே நிமிர, அங்கே காளி அவதாரம் எடுத்துக்கொண்டு நின்றாள் நீரஜா.

நீரஜாவோ நான் அத்தான் என்று கூப்பிட்டால் பட்டிக்காட்டு மாதிரி இருக்கு பேர் சொல்லி கூப்பிடு என்று சொல்லி விட்டு, இன்னைக்கு மச்சினிச்சி கூப்பிடவும் சந்தோஷபடுறமாதிரி தெரியுதே என நவினை,அடிக்க வர அவன் ஓட இவள் துரத்த.. அந்த இடமே களை கட்டியது.
இன்னும் நீங்கள் இருவரும் சின்ன குழந்தைகளா என பத்மா அதட்டிக்கொண்டே வர
இருவரும் அப்படியே நின்று விட்டனர். நான் இல்லை மா, நான் இல்லை அத்தை என இருவரும் ஒரு சேர கூற, பத்மாவோ சரி,சரி விடுங்க அப்பா கூப்பிடுகிறார் கிளம்புங்க என்றார்.

நீரஜா "வரேன் மா, வரேன் பா" என்று பார்வதியின் தோளில் சாய்ந்து கொண்டு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்…

நீரஜா வருத்தப்படும் அளவுக்கு நீரஜாவின் மாமியார் வீடு அவ்வளவு தொலைவு கிடையாது,
அடுத்த வீடு தான் பத்மாவின் வீடு.

ஈஸ்வரன் , பத்மாவின் தந்தை இருவருக்கும் ஒரே மாதிரியாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். தொழிலிலும் இருவருக்கும் பங்கு உண்டு. சென்னையில் பல இடங்களில் உள்ள கிருஷ்ணா சில்க்ஸின் உரிமையாளர்கள் ஆவார்.
ஈஸ்வரன், சுகுமாரன் இருவரும் குறிப்பிட்ட பிராஞ்சுகளை கவனித்து கொண்டனர்.
தொழிலில் இருவருக்குமிடையே எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது.

நவீன், கவின் இருவரும் காலேஜ் வரை ஹாஸ்டலில் தங்கி படித்தனர். லீவுக்கு வரும் போது கவின் ஸ்போர்ட்ஸ் என்று வெளியே சென்று விடுவான். நவினோ தங்கள் வீட்டிற்கு வரும் நீர‌ஜா, சுப்ரஜாவுடன் கொட்டம் அடிப்பான்.

நவீன் எம்பிஏ வை இங்கிருந்தே படித்தான். கவின் வெளிநாட்டிற்கு சென்று படித்துவிட்டு வந்தான்.

இப்போ இவர்களும் பிஸினஸில் களம் இறங்கி விட்டனர்.

நவீன், நீரஜா திருமணத்தால் இரு குடும்பமும் சில நாட்கள் பிரிந்து இருந்தனர்.இப்பொழுது தான் மீண்டும் சேர்ந்தனர்.

சுப்ரஜாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நவீனும் , அவளும் நெருங்கிய நண்பர்கள். எல்லா சேட்டைகளையும், ஒன்றாகவே செய்து வாங்கி கட்டிக் கொள்வார்கள். நவீன் செய்த தவறை அவளால் மன்னிக்க இயலவில்லை.

அதனால் தான் அவள் ரூமுக்கு சென்று விட்டாள்.
ஆனால் கவின் அவளை அப்படியே விடாமல், எல்லோரும் விடைபெறும் போது எங்க அத்தை சுபி என வினவ?
பார்வதியோ "அவள் அறைக்கு சென்று விட்டாள் மாப்பிள்ளை" நான் போய் அழைச்சிட்டு வரேன் என…

இல்லை அத்தை நான் போய் சொல்லிவிட்டு வரேன் என கூறிய கவின் மாடிப்படியை இரண்டிரண்டு படிகளாக தாவிச் சென்றான்.

அவன் செல்வதையே எல்லோரும் அதிசயமாகப் பார்த்தனர்.

ஏனென்றால் அவன் அழுத்தமான பேர்வழி. எல்லாமே சரியாக இருக்கனும். சிறு தவறையும்
சகிச்சுக்க மாட்டான். இப்பொழுது பார்ட்டியில் பாதியிலே போனதற்கு என்ன பாடுபடுத்தபோறானோ என பத்மாவும்,சுகுமாரனும் வருங்கால மருமகளை நினைத்துக் கவலைப்பட்டனர்..

அங்கு கவினோ சுபியின் அறை கதவை தட்ட, கதவோ நன்கு மூடாமல் இருந்ததால் திறந்துக்கொண்டது.

கதவின் மேல் சாய்ந்து கொண்டு கவினோ, சுபியின் ஆட்டத்தைப் பார்த்து கொண்டிருந்தான்.
ஆம் தலைவலி என்று கூறிய சுபி" இந்த இரவு போதுமா நண்பனே " என்ற பாடலை ஃபோனில் அலற விட்டுக்கொண்டு ஆடினாள்.
ஆடிக்கொண்டே திரும்பிய சுபி, கவினைப் பார்த்து ஜெர்க்காகி நின்றுவிட்டாள்.

கவின் மெல்ல அடியெடுத்து உள்ளே வந்து ஃபோனில் பாட்டை நிறுத்தி விட்டு,சுபியை நெருங்கினான்.
சுபியோ பேந்த பேந்த விழித்துக்கொண்டு அப்படியே நின்றாள்.
அவளைப் பார்த்து வந்த சிரிப்பை உள்ளுக்குள் அடக்கியவன் , அவளை நெருங்கி தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப் எடுத்து வியர்வையை துடைத்தான்,வா கீழே எல்லோரும் கிளம்பி தயாராக இருக்காங்க. உன்னிடம் சொல்லி விட்டு போவதற்காக காத்திருக்கிறார்கள் என்று விட்டு சென்றான்.
அவன் பின்னே அமைதியாக சுப்ரஜாவும் சென்றாள்.
இந்த அமைதிக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தங்களுக்குள்ளே யோசித்தவாறு நின்று கொண்டிருந்தனர் நவீனும், நீரஜாவும், ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் தான் சுபியைப் பற்றி நன்கு தெரியும். இந்த அமைதிக்கு பின் நிச்சயமாக புயல் உண்டு…
அதில் கவின் சிக்கி சின்னா பின்னம் ஆகாமல் இருந்தால் சரி என மனதிற்குள் நினைத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவ்விருவரும் புறப்பட்டு தயாராக இருந்தனர்.

கவின், சுப்ரஜாவை அழைத்துக் கொண்டு தன் பெற்றோரிடம் சென்றான்.
பத்மாவும், சுகுமாரனும் அவளிடம் சென்று போய்ட்டு வரோம் மா. இன்னைக்கு போல என்றும் சந்தோஷமாக இருக்கனும் என்று வாழ்த்தி விட்டு புறப்பட்டனர்.

கவினோ சுப்ரஜாவின் காதருகில் சென்று ரகசியம் பேசுவது போல் சென்று "சுப்ரஜா உன் டான்ஸ் சூப்பர் என ரசித்து கூறி விட்டு, திருமணத்திற்கு பிறகு நம் வீட்டில் தினமும் கச்சேரி தான் என கண்ணடித்து கூறி விட்டு நகர்ந்து கொண்டான்".

சுப்ரஜாவோ வந்த கோபத்தை கஷ்டபட்டு அடக்கிக் கொண்டாள்.சற்று அருகிலே பார்வதி வேறு நின்று கொண்டிருந்தாள்.தான் பார்வையில் கோபத்தை காட்டினால் கூட, இன்றைய பொழுது அவ்வளவு தான்.தன் மாப்பிள்ளை புராணத்தை ஆரம்பித்து விடுவார்.ஓ நோ கண்ட்ரோல் யுவர்செல்ஃப் சுபி என தனக்குள் கூறி கொண்டு அமைதியாக இருந்தாள்.

கவின் தன் அத்தையிடம்" நாளைக்கு என்னோட பிரண்ட்ஸ்காக சின்ன பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கேன்" சுப்ரஜாவை அனுப்புகிறிர்களா என..
பார்வதி " அதுக்கென்ன மாப்பிள்ளை தாரளமாக கூப்பிட்டு போங்க"
ஆமாம் பார்ட்டி எங்க, எப்போ ஏற்பாடு பண்ணியிருக்கீங்க என வினவ?
நம்ம வீட்டுல தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன் அத்தை...நாளைக்கு ஈவினிங் அத்தை என்றான் கவின்.

சரிப்பா என்ற பார்வதி தன் மகளைப் பார்க்க, அவளோ என்னால் வர முடியாது என அனைவருக்கும் முன் கூற,

கவினின் முகம் மெல்ல இறுகியது.சுப்ரஜா முன் வந்து பழசெல்லாம் இன்னும் நீ மறக்கலை ரைட்…
அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட … ம் சொல்லு இப்படி எல்லாருக்கும் முன்பு அவமானப்படுத்தவா சொல்லு… ஏதாவது சொல்லு ஏன் இப்படி மௌனமா இருக்கிற என கவின் கர்ஜிக்க…

சுப்ரஜா மெல்ல நடுங்கிய குரலை பயன்படுத்தி,
நான் கல்யாணம் முடிந்து முறைப்படி தான் நான் அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பேன்.

வேறு எண்ணம் எனக்கு இல்லை. உங்களை அவமானப்படுத்த நான் நினைப்பேனா என கவினை ஆழ்ந்து நோக்க,கவினோ அவளின் அடிப்பட்ட பார்வையில் விக்கித்து நின்றான்.

அந்த கண்கள் "நீ என்னை அந்த நிலையில் தானே நிறுத்தின என கேள்வி கேட்க" ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நின்றான் கவின்.

அன்று தாங்கள் இருவரும் எந்த தவறும் செய்யாமல், சூழ்நிலையால்
அவளை வருத்தப்பட வைத்து, அவளை அவமானப்பட வைத்து, நிலைகுலைந்து அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வைத்த சூழ்நிலைக்கு யார் போறுப்பேற்க முடியும்.

எந்த தவறும் செய்யாமல் தண்டனை அவளுக்கு.. அந்த தண்டனையை அவளுக்கு அளித்த குற்றவாளியாய் அவனும் இருக்க.. விதியையின்றி யாரை நொந்து கொள்ள இயலும்…..

தொடரும்…...
.
Super chithu congrats da
 
Top