அத்தியாயம் -1
சென்னையின் இரவு எப்போதும் தூங்காத நகரம் போல பரபரப்பாகத்தான் இருந்தது. சாலையெங்கும் வண்டிச் சத்தம், உயரமான கட்டிடங்களின் விளக்குகள், எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் — அந்த நகரத்துக்கே தனி உயிர் இருந்தது.
அந்த நகரத்தின் நடுவில் இருந்த பிரமாண்டமான வீட்டில் உள்ளே இரண்டாவது மாடி பால்கனியில் நின்றிருந்தாள் நீள்மதி. ஒரு கையில் காபி கோப்பை. இன்னொரு கையில் கைப்பேசி. ஆனால் அவளது பார்வை மட்டும் மேலே இருந்த வானத்திலேயே நிலைத்திருந்தது.
“மதி… காபி ஆறிடும். முதல்ல குடி…” என்று அவளது தோளில் தட்டினாள் நிவேதா.
அதற்கும் அசையாமல், விழிகளை மட்டும் திருப்பி தோழியை முறைத்துவிட்டு மீண்டும் வானத்தையே பார்த்தாள் நீள்மதி.
“அட எதுக்கு இப்போ ஸ்கைல இருக்க ஸ்டார்ஸ் எண்ணிட்டு இருக்க? காபி குடிக்கிற எண்ணமே இல்லாம?” என்று நிவேதா எரிச்சல் கலந்த கிண்டலுடன் கேட்டாள்.
“நிவி… கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்று சலிப்பாகக் சொன்னாள் நீள்மதி.
“ஏன் டி? காலைல இருந்து மூஞ்சி தூக்கி வச்சிருக்க. என்னாச்சு?”
“ஒன்னுமில்லை…”
“ஒன்னுமில்லையா? அப்போ அந்த போனையே ஏன் பத்து நிமிஷத்துக்கு ஒருதடவை பார்த்துட்டே இருக்க?”
அதற்கு பதில் சொல்லாமல் கைப்பேசியைப் பார்த்தவள், மெதுவாக உதட்டை சுளித்தாள்.
“ரிஷவனுக்கு காலையிலிருந்து போன் பண்ணுறேன். எடுக்கவே இல்ல… ஒரு மெசேஜ் கூட பண்ணல…” என்றாள் புலம்பலாக.
“அய்யோ பாவம்… ஒரு நாள் பேசலன்னு இவ்வளவு கவலையா?” என்று நிவேதா கிண்டலாகச் சிரித்தாள்.
“உனக்கு எல்லாம் புரியாது…”
“ஹா ஹா… காதல் வந்தவங்க எல்லாரும் இதே டயலாக்தான் பேசுவாங்க,” என்றாள் அலட்சியமாக.
“நிவி…” என்று அவளை முறைத்தாள் நீள்மதி.
“பின்ன என்ன டி? நேத்து என்கிட்ட என்ன சொன்ன? ‘இவன் என்னோட பர்சனல் ஸ்பேஸ்ல கூட ரொம்ப தலையிடுறான்… எனக்குன்னு தனியா இடமே விட மாட்டான்… சில நேரம் மூச்சு முட்டுற மாதிரி இருக்கு’ன்னு நீ தானே புலம்பின?” என்றாள் நிவேதா எரிச்சலாக.
“அது… அப்போ கோபத்துல சொன்னேன்…”
“அதான்! கோபம் வந்தா அவன் மூச்சு முட்டுற மாதிரி இருப்பான். ஆனா ஒரு நாள் பேசலன்னா இப்போ உலகமே நின்ன மாதிரி இப்படி உட்கார்ந்திருப்ப .”
“அவர் எப்போவும் அப்படி இல்ல… ஏதோ என்னோட கோவம் இப்படி சொல்லிட்டேன்.”
“உனக்கு அவன் எப்பவும் நல்லவன்தான் தெரியும். ஆனா காதல்னு வந்ததும் கண்ணுமண்ணு தெரியமா இருக்கக்கூடாது. கொஞ்சமாவது யோசிச்சு நடந்துக்கணும் மதி.”
“ஆமா… நீ மட்டும் ரொம்ப அனுபவப்பட்டவ மாதிரி பேசுற!” என்று நீள்மதி முறைத்தாள்.
“அனுபவம் வேண்டாம். வெளியிலிருந்து பார்க்குறவங்களுக்கு சில விஷயம் சீக்கிரம் புரியும்…” என்றாள் நிவேதா அர்த்தமாக.
அந்த நேரத்தில் நீள்மதியின் கைப்பேசி ஒளிர்ந்தது.
திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவுடன் அவளது முகம் உடனே மாறியது.
“ரிஷவன்…” என்று மெதுவாக சொல்லிக்கொண்டே அவசரமாக அழைப்பை ஏற்றாள்.
அதைப் பார்த்த நிவேதா எரிச்சலாக பெருமூச்சு விட்டாள்.
“ஹலோ…” என்றாள் நீள்மதி.
“என்ன பேபிமா… மார்னிங்ல இருந்து போன் பண்ணலன்னு என்மேல கோபமா இருக்கியா?” என்றான் ரிஷவன் மென்மையான குரலில்.
“நான் கோபப்படுறதால என்ன ஆகப் போகுது? நீங்க எப்போதும் போல ‘வேலை’ன்னு சொல்லிடுவீங்க… நான் அதையும் நம்பிடுவேன்…” என்றாள் நீள்மதி கோபமாக.
“மதி… அப்படி சொல்லாதமா. உண்மையாவே வேலை அதிகம். இல்லனா உன்கிட்ட பேசாம இருப்பேனா?”
“ஹ்ம்ம்…”
“கோபமா இருக்கியா இன்னும்?”
“தெரியல…”
அவளது குரலில் இருந்த ஏமாற்றத்தை உணர்ந்தவன்...
“நீ இப்படி பேசுறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மதி…”
“ஏன்?”
“ஏன்னா… உன் குரல் சரியில்லனா என் நாளே சரியில்லாத மாதிரி தோணும்.”
அந்த வார்த்தையில் நீள்மதியின் முகம் மெதுவாக மலர ஆரம்பித்தது.
“பொய் சொல்லாதீங்க…”
“நிஜமா சொல்றேன். உன்னோட பேசாம ஒரு நாளே போகாது எனக்கு.”
“அப்படியா? நம்பிட்டேன்…” என்றாலும் அவளது குரல் மெலிந்துவிட்டது.
“உண்மைதான் மதி. உன்னை பார்த்த நாளிலிருந்தே, நீ தான் என் வாழ்க்கையோட ஒரு பகுதி மாதிரி ஆகிட்ட.”
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை மெதுவாக அவனிடம் இழுத்துக்கொண்டே போனது.
ஆரம்பத்தில் அவனை அவ்வளவாக விரும்பவில்லை நீள்மதி. ஆனால் அவன் தினமும் அவளிடம்,
“உன்னை இழந்துட்டா நான் முழுசா உடைஞ்சு போயிடுவேன்…”
“உன்ன தவிர வேற யாரையும் என் வாழ்க்கையில நினைக்க முடியாது…”
என்று உணர்ச்சிகரமாக சொல்லிச் சொல்லியே அவளது மனதை கரைத்திருந்தான்.
அதிலும்…
அவளைப் பார்த்தாலே கண்களில் காதலை நிரப்பிக்கொண்டு பேசும் அவனின் பார்வை, அவளை முழுவதுமாக அவனிடம் சாய்த்துவிட்டது.
“சரி… இப்போ இப்படி பேசிப் பீல் பண்ண வைக்காதீங்க…” என்றாள் நீள்மதி மெதுவாக.
“அப்போ சிரிச்சு பேசு.”
“முடியாது…”
“மதி…”
“ஹ்ம்ம்?”
“நீ சிரிக்கலன்னா எனக்கு தூக்கமே வராது.”
அதை கேட்டவள் முழுவதுமாக இளகிவிட்டாள்.
“அப்படியா?” என்று சின்ன சிரிப்போடு கேட்க,
“ஆமாம்… உன்னோட இந்த சிரிப்புதான் என்னோட நாளுக்கே எனர்ஜி டானிக்,” என்றான்.
“அது சரி…” என்று சிரித்தவள், “நாளைக்கு வெளிய வருவீங்களா இல்லையா?”
“கண்டிப்பா வருவேன். உனக்காக நேரம் எடுக்காம இருக்க முடியுமா?”
“லேட்டா வந்தீங்கனா பேசவே மாட்டேன்…”
“அய்யோ அம்மா… நேரத்துக்கு முன்னாடியே வந்து நிக்கிறேன்…” என்றான் சிரித்தபடி.
அழைப்பு முடிந்ததும், கைப்பேசியை நெஞ்சோடு அணைத்தபடி சின்ன புன்னகையுடன் நின்றாள் நீள்மதி.
அதைப் பார்த்த நிவேதா தலையை ஆட்டிக்கொண்டாள்.
“பாரு! நான் இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டு இருந்தது எல்லாம் ஒரு போன் கால்ல தூக்கி போட்டுட்ட.”
“நிவி…”
“இல்ல மதி. நான் உன்னை பயமுறுத்த சொல்லல. ஆனா காதல்னு சொல்லிட்டு ஒருத்தன் பேசுற ஒவ்வொரு வார்த்தையிலயும் கரைஞ்சுட்டே போனா, கடைசில கஷ்டப்படுறது நீ தான்.”
அவள் பேசுவதை கேட்ட நீள்மதி சற்று அமைதியாகிவிட்டாள்.
0
அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து நின்றது வெள்ளை நிற விலையுயர்ந்த காரின் சத்தம்.
அதிலிருந்து இறங்கினார் செந்தாமரை. எப்போதும் போலவே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைதான். ஆனால் அவரின் கம்பீரத்திற்கு எப்போதும் குறைவில்லை.
உயரமான உருவம். இறுக்கமான முகம். கம்பீரமான பார்வை. அவர் வீட்டுக்குள் வந்தாலே அங்கிருந்தவர்கள் எல்லாம் தானாக அமைதியாகிவிடுவார்கள்.
அவருடன் இறங்கிய பி.ஏ-வை வெளியே அலுவலக அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கோபம் நிறைந்த முகத்தோடு சில நொடிகளில் வீட்டுக்குள் நுழைந்தார் வருவாய் துறை அமைச்சர் செந்தாமரை.
“மதி…” என்ற செந்தாமரையின் குரல் கேட்டவுடனே நீள்மதியின் முகமே மாறிவிட்டது. உடலுக்குள் குளிர்காய்ச்சல் ஓடியது போல உணர்ந்தாள்.
“அப்பா வந்துட்டாரு…” என்றவள் அவசரமாகச் சென்று சோபாவில் அமர்ந்தாள்.
அவர் வந்தவுடனே மெதுவாக கையில் ஒரு டீ கப்போடு, எதையும் லேசாக எடுத்துக்கொள்ளும் புன்னகையோடு வந்தார் மீனாட்சி.
“மதி எங்கே?” என்ற செந்தாமரையின் குரல் வீட்டையே உறைய வைத்தது.
“அவ மேல இருக்கா… ஆனா நீங்க கத்தாதீங்க… முதல்ல டீ குடிங்க…” என்று மீனாட்சி சாந்தமாகச் சொன்னார்.
ஒரு நொடி செந்தாமரை அவரைப் பார்த்தார்.
“நான் கத்தல.”
“அப்படின்னா வீடு ஏன் இப்படி நடுங்குது?” என்று மீனாட்சி மெல்ல சிரித்தார்.
அந்த ஒரு வரியிலேயே வேலைக்காரர்களுக்குக் கூட வந்த சிரிப்பை, செந்தாமரையின் ஒரு பார்வை அடக்கிவிட்டது.
“உன்னை வந்து பேசுறேன்… இரு…” என்று கூறிவிட்டு மாடிப்படி ஏறி, மகளின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார்.
சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த மகளைப் பார்த்தவர்,
“இன்னிக்கு எங்க போயிருந்த?” என்று நேராகக் கேட்டார்.
“நிவியோட வெளியே…” என்றாள் தடுமாறியபடி.
“மதி…”
அவர் குரல் இப்போது இன்னும் கனமாகியது.
“நிவியோட மட்டும் தானா?”
அந்த கேள்வியிலேயே நீள்மதியின் முகம் மாறியது.
சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நிவேதா மெதுவாக எழுந்தாள்.
“அங்கிள்… நான் கிளம்பறேன்…”
அதற்குள் நீள்மதியின் அறைக்குள் வந்துவிட்ட மீனாட்சி,
“இப்ப நீ கிளம்பினாதான் நல்லது… இல்லனா நீயும் விசாரணை லிஸ்ட்ல சேர்ந்துருவ…” என்றாள்.
அவரை ஒரு பார்வை பார்த்த செந்தாமரை,
“நீ எதுக்கு இப்ப மேல வந்த?” என்று கேட்டார்.
“உங்களுக்கு டீ கொடுக்கத்தான். இவ்வளவு சூடா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, கூலா கூல் டிரிங்ஸ் எடுத்துட்டு வந்திருப்பேன்…” என்றார் மீனாட்சி.
“ப்பா… உன்னோட… சரி, வச்சிட்டு போ…”
“முடியாது. நானும் இந்த வீட்டோட உறுப்பினர் தான். என் முன்னாடியே கேளுங்க…”
மீண்டும் அவரிடம் பேச முடியாமல் தலையசைத்துக் கொண்ட செந்தாமரை, திரும்பி நிவேதாவை நோக்கி,
“உக்காரு,” என்றார்.
அந்த குரலில் நிவேதா மீண்டும் அமர்ந்துவிட்டாள்.
உள்ளுக்குள், ‘அம்மா தாயே… நான் ஏன் இங்க வந்தேன்…’ என்று கதறினாள்.
மீண்டும் “மதி…” என்று அழைத்தார் செந்தாமரை.
“ரிஷவன் யார்?”
அந்த கேள்வியில் நீள்மதியின் இதயம் ஒரு நொடி நின்றது போல ஆனது.
அருகே நின்ற மீனாட்சி மெதுவாக முணுமுணுத்தாள்.
“ரிஷவனா? நல்ல பெயரா இருக்கே… ஹீரோ மாதிரி…”
“மீனாட்சி!” என்று செந்தாமரை கடுமையாகப் பார்த்தார்.
“மன்னிச்சிடுங்க… இப்போ ஹீரோவா இருக்காரா இல்ல வில்லனா இருக்காரான்னு இன்னும் தெரியலங்க…” என்று அவள் சாந்தமாகச் சொன்னார்.
செந்தாமரை மீண்டும் மகளை நோக்கினார்.
“நான் கேட்டதுக்குப் பதில் சொல்.”
“நான்… அவரை விரும்புறேன்…” என்றாள் நீள்மதி மெதுவாக.
“அவன் நல்லவன் இல்ல,” செந்தாமரை கடுமையாகச் சொன்னார்.
“அப்பா… அவர் அப்படிப்பட்டவர் இல்ல—”
“நான் விசாரிச்சேன்.”
அவள் வார்த்தையை முடிப்பதற்குமுன்னே கூறினார்.
மீனாட்சி மெதுவாகச் சொன்னாள்,
“நீங்க விசாரிச்சதா… இல்ல உங்க ஆளுங்க விசாரிச்சதா? ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு தெரியுமா?”
செந்தாமரை சற்றே திரும்பி, “மீனாட்சி… இப்போ அமைதியா இருக்க போறியா இல்லையா?” என்ற கோபமான குரலைக் கேட்டும் சற்றும் பயப்படாமல்,
“சரி சரி ஓகே… நீங்க உங்க வீட்டு சட்டசபையில கேட்க வேண்டிய கேள்விய கேளுங்க. எதிர்க்கட்சியான நான் இப்போ அமைதியா டீ குடிக்கிறேன்…” என்று அவள் மீண்டும் கப்பை எடுத்தார்.
அவரை கடுப்பாக பார்த்துவிட்டு மதியின் புறம் திரும்பியவர்,
“அவன் உன்னை காதலிக்கல. உன் பணத்தைக் காதலிக்கிறான்.”
“இல்ல! அவர் அப்படிப்பட்டவர் இல்ல!” என்று நீள்மதி உடனே எதிர்த்தாள்.
“இந்த காலத்துல பணத்துக்காக காதலிக்கிறவங்கதான் அதிகமா சிரிச்சு பேசுவாங்க மதி… கவனமா இரு…” என்று சிறிது யோசனையுடன் சொன்னார் மீனாட்சி.
“ஓகோ… ஆல்ரைட்…” என்று செந்தாமரை ஒரு நொடி மகளை ஆழமாகப் பார்த்தார்.
அந்த பார்வையில் கோபம் மட்டும் இல்லை… எச்சரிக்கையும் இருந்தது.
பின் எதுவும் பேசாமல் கீழே இறங்கி சென்றுவிட்டார்.
அந்த பார்வை சொல்லாமல் சொன்ன செய்தி, நீள்மதிக்குள் ஒரு விதமான குளிரை பரப்பியது.
செந்தாமரை கீழே இறங்கி சென்றதும் அறை முழுக்க சில நொடிகள் அமைதியாக இருந்தது.
அந்த அமைதியையே முதலில் உடைத்தது மீனாட்சிதான்.
“ஹ்ம்ம்… சரி… சி.பி.ஐ ஆபிசர் போயிட்டாரு. இப்போ லோக்கல் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கலாம்…” என்று சொல்லிக்கொண்டே சோபாவில் அமர்ந்தார்.
“அம்மா…” என்று நீள்மதி எரிச்சலானாள்.
“முதல்ல அந்த ரிஷவன் யாரு என்னன்னு டீடெயில் சொல்லு.. அவனோ போட்டோ காட்டு,” என்றார் சிறு கண்டிப்போடு.
கண்டிப்பு என்றே இதுவரை காட்டாதவரின் குரலின் மாறுபாட்டில், “அம்மா!” என்று நீள்மதி அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“ஏன்? நான் விசாரிக்க கூடாதா? இல்லை, எனக்கு சொல்ற அளவுக்கு உனக்கு நான் அவ்வளவு முக்கியமா படலையா?”
“சாரிமா… உங்களுக்கு தெரிஞ்சா உடனே அப்பாக்கு போய்டும் விஷயம்னுதான் இன்னும் சொல்லல. அப்பா இப்படி ஹர்ஷா பிஹேவ் பண்ணுவாங்கன்னு பயந்தேன். எப்படியோ அது நடந்துடுச்சி…” என்றாள் சோகமாக.
“உங்க அப்பாக்கு தெரியாம இந்த வீட்டுல மட்டுமில்ல, வெளிய கூட உன்னால எதையும் மறைக்க முடியாது நீள்மதி,” என்றார் சிறு எச்சரிக்கையாக.
அதிலிருந்த உண்மையில் முகம் வெளிறிப் போய் இருந்தவளை கண்டு மனம் பொறுக்காமல்,
“சரி சரி… அவனோட போட்டோ குறைந்தபட்சம் போலீஸ் ஸ்டேஷன்ல போட்டோ ஒட்டுற அளவுக்கு கூட உன்கிட்ட இல்லையா?” என்றார் கண்ணடித்து.
“ம்மா! இதுக்கு அப்பாவே எவ்ளோவோ மேல்…” என்றாள் கோபமாக.
“சரி… முதல்ல அவன் என்ன வேலை செய்றான்?”
“பிசினஸ்…”
“ஹ்ம்ம்… இப்ப எல்லாரும் அதுதான் சொல்லுவாங்க. ‘பிசினஸ்’ன்னா என்ன பிசினஸ்?”
“அம்மா…” என்றவளை பார்த்தவரின் பார்வை கண்டு, தலை தன்னாலே கவிழ்ந்து,
“என்னன்னு எனக்கு சரியா தெரியலம்மா…” என்றாள்.
“ஏன்? இந்த காலத்துல இதெல்லாம் கேட்கணும். நாளைக்கு நியூஸ்ல ‘அமைச்சரின் மருமகன் கைது’ன்னு வந்தா நம்ம குடும்பமே மீமாகிடும்,” என்றார் நக்கல் தொனியில்.
அதைக் கேட்ட நிவேதாவுக்கு சிரிப்பு வந்தது.
“ம்மா… அவர் நல்லவர்மா…”
“அது எல்லா காதலிக்கும் பொண்ணுங்க சொல்லுற டயலாக். அடுத்தது ‘அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாது’ன்னு சொல்வ.”
நிவேதா உடனே மீண்டும் சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
அதில் நிவேதாவை நோக்கி திரும்பி ..
“ஏன் நிவி? நீ தான் இந்த கதையோட அசிஸ்டன்ட் டைரக்டரா? இல்ல இந்த மேடமேவா?”
“ஆண்ட்டி! நான் எதுவுமே பண்ணல! ஆரம்பத்திலிருந்தே வார்னிங் பண்ணிட்டே தான் இருக்கேன். இவதான் என்னோட பேச்சு கேக்க மாட்டேங்கறா…” என்றாள் ஆதங்கமாக.
“ஹ்ம்ம்…” என்று நீள்மதியைப் பார்த்தவரின் தோளில் மெதுவாக சாய்ந்தபடி
“நானும் வேண்டாம்னுதான் நினைச்சேன்ம்மா… பட் இப்போ லவ் பண்ணிட்டேன். சோ, கமிட் ஆகிட்ட பிறகு விலகுறது நம்பிக்கை துரோகம் தானம்மா…"
"நீங்கதான் அப்பாட்ட பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும். என் மேல ரொம்ப கோவமா இருக்காரு…” என்றாள்.
மீனாட்சி ஒரு நொடி அமைதியாக இருந்தார்.
“உன் மேல கோவம் இல்ல மதி… அவர் மேலதான்.”
“அவர் மேலயா?”
“ஹ்ம்ம்… நீ அழுதா அவர் தாங்கிக்க மாட்டாரு. அதான் இப்படி கோபமா பேசுறாரு.”
அதை கேட்ட நீள்மதியின் கண்கள் மெதுவாக கலங்கின.
அதே நேரத்தில்…
சென்னையிலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பூம்பொழில் கிராமம் முழுவதும் மழை வாசம் பரவியிருந்தது.
வயல்களுக்கு நடுவே இருந்த பெரிய வீட்டின் முன் நின்றிருந்தான் கார்முகிலன்.
கருமையான நிறம். அடர்ந்த மீசை. நீல நிற பருத்திச் சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து, அமைதியாக இருந்தாலும் கம்பீரமாகத் தோன்றும் பார்வை.
“டேய் முகிலா! மாட்டை பிடிச்சு கட்டுடா!” என்று கத்தினான் முத்துக்காளை.
“நீயே போய் கட்டுடா…” என்றான் கார்முகிலன் அமைதியாக.
“அது என்னைப் பார்த்தாலே உதைக்குது டா!”
“உன்னை மாதிரி மூஞ்சி இருந்தா யாரையும் உதைக்கும்…” என்றான் அவன்.
உடனே அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
“டேய்! நண்பனுக்காக இதைக் கூட செய்ய மாட்டியா?”
“அவனவன் வேலையை அவனவனே பண்ணணும். அடுத்தவன் பண்ணிக் கொடுத்தா சோம்பேறி ஆகிடுவான்…” என்றான் கார்முகிலன்.
“பாக்குறேன் டா… உன் பொண்டாட்டி வந்தப்புறம் இதே டயலாக் பேசுறியான்னு!”
“அவளும் அவளோட வேலையை அவளேதான் பண்ணிக்கணும்.”
“பாவம் டா உன் வருங்கால பொண்டாட்டி!”
“அவளுக்குத்தான் பாவம். என்ன மாதிரி நல்லவனை சமாளிக்கணுமே!” என்றான் பெருமையாக.
அங்கே மீண்டும் சிரிப்பு வெடித்தது.
அந்த நேரத்தில் உள்ளிருந்து அவன் தாய் காவேரி குரல் கொடுத்தார்.
“முகிலா! உனக்குப் பொண்ணு கொடுக்கணும்னு உன் மாமா போன் பண்ணிருந்தார்… பார்க்கவா டா?”
உடனே முகம் சுளித்தான் கார்முகிலன்.
“அம்மா… முதல்ல இந்த மாட்டை கட்டுறேன். அப்புறம் எனக்கு கல்யாணம் கட்டலாம்…”
“எப்படி தான் கல்யாணப் பேச்சை எடுக்கலாம்னு காதை இங்கயே வச்சி இருப்பாங்க போல…” என்று முணுமுணுத்தவனை பார்த்து சுற்றியிருந்தவர்கள் சிரிப்பில் வெடித்தனர்.
ஆனால் அவன் அறியவில்லை…
இன்னும் சில நாட்களில்,
நகரத்து புயலாய் ஒருத்தி அவன் வாழ்க்கைக்குள் வரப்போகிறாள் என்பதை…
தொடரும்.....

Last edited: