Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 25

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“சூப்பராக இருக்கு!” என்று அவற்றை வெளியே எடுத்துக் கவனமாக கையாண்டு பார்த்தார்கள் அந்தப் பெண்மணிகள்.

அவர்களுக்கு, ஒவ்வொன்றையும், பொறுமையாகவும், தெளிவாகவும், எடுத்துரைத்துக் காண்பித்தாள் ருத்ராக்ஷி.

அவற்றையெல்லாம் பார்வையிட்டு முடித்ததும்,”ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிட்ட, எப்படி ஆரம்பிக்கப் போறன்னு நினைச்சோம்! இதையெல்லாம் பார்க்கும் போது, நீ பொறுமையாக, விவேகமாகத் தான், யோசிச்சு முடிவெடுத்து இருக்கன்னுப் புரியுதும்மா” என்றார்கள் அனைவரும்.

“நன்றிங்க” என்றவள், அடுத்து அவர்களுக்கான சைவ விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தாள்.

“அதான், என் பையன் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டானே ம்மா! நாம எத்தனைப் பேர், எவ்வளவு அளவுன்னு, மட்டும் சொல்லிடுவோம். அவன் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடுவான்” என்று அவளுக்கு உறுதி அளித்தார் கவிபாரதி.

“நாம் லிஸ்ட் போட்டுக் கொடுக்கிறேன் ம்மா” என அங்கேயே அமர்ந்து, உணவிற்கு உரிய ஆள் எண்ணிக்கை மற்றும் அளவையும் கணக்கிட்டு, ஒரு தாளில் எழுதி, அவரிடம் கொடுத்து விட்டாள் ருத்ராக்ஷி.

அதைப் பெற்றுக் கொண்டவர், வீட்டிற்கு வந்து மகனிடம் ஒப்படைத்தார் கவிபாரதி.

“எப்போ விருந்து நடக்கப் போகுது ம்மா?” என்று அன்னையிடம் கேட்டான் ஸ்வரூபன்.

“நாளைக்கு எல்லாரையும் முறைப்படி அழைச்சிட்டா, அதுக்கு அடுத்த, இரண்டு நாளிலேயே விருந்து வைச்சிடலாம்னு பேசியிருக்கோம் ப்பா” என மகனிடம் தெரிவித்தார் கவிபாரதி.

“சரி ம்மா. அப்போ நான் டவுனுக்குப் போய், ஆளுங்களைக் கூப்பிட்டு வர்றேன்” என்று மறுநாளே, விருந்து சமைப்பதற்காக ஆட்களைத் தேடி வெளியூருக்குச் சென்று விட்டான் அவருடைய மகன்.

இதை ருத்ராக்ஷியிடம் கூறியவரோ,”நாம போய், மத்தவங்களை விருந்துக்கு மட்டும் அழைச்சிட்டு வந்துருவோம் மா. மத்ததெல்லாம் என் பையன் பார்த்துப்பான்” என்று அவளுடன், மிருதுளாவையும் சேர்த்துக் கொண்டு, தங்களுடன் இணைந்து, வேலை பார்க்கப் போகும் பெண்மணிகளின் வீட்டிற்குச் சென்று, அவர்களை விருந்திற்கு வந்து உணவருந்தி விட்டுச் செல்லுமாறு முறையாக அழைப்பு விடுத்து விட்டு, வந்தார் கவிபாரதி.

அதைப் பொறுப்பாக, செய்து முடித்து விட்டு, விருந்து சாப்பாட்டைப், பரிமாறுவதற்கான இடத்தையும், தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டனர்.

இதற்கிடையில், நூலகத்தின் உரிமையாளரான துரைமுருகனிடம், தனது யோசனையைப் பற்றி முன்னரே கூறி, இந்த வேலையை விடப் போவதில்லை என்ற வாக்குறுதியும் அளித்திருந்தாள் ருத்ராக்ஷி.

“உன்னோட முன்னேற்றத்துக்கு என்னோட வாழ்த்துகள் ம்மா” என்று அவளை மனதார வாழ்த்தினார் துரைமுருகன்.

இந்த விருந்தை, நடத்தி முடித்து விட்டுத், தன் ஊருக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தில் இருந்தாள் ருத்ராக்ஷி.

தன் அண்ணன் மற்றும் அண்ணியின் நிச்சயத் தேதி, நெருங்கி விட்டதால், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் முக்கியமாக, ஜவுளிகள் மற்றும் மோதிரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இவளைத் துரிதமாக கிளம்பி வருமாறு கோரிக்கை விடுத்து இருந்தார்கள் காஷ்மீரனும், சந்திரதேவ்வும்.

அதனாலேயே, முடிந்தவரை, அனைத்து வேலைகளையும், விரைவாக முடிக்கச், சித்தமாக இருந்தாள் ருத்ராக்ஷி.

வெளியூரிலிருந்து சமையல்காரர்களை அழைத்து வந்து விட்டிருந்தான் ஸ்வரூபன்.

அவர்களிடம், உணவுப் பட்டியலைத், தந்து விட்டனர் ருத்ராக்ஷி மற்றும் மிருதுளா.

அதற்கானப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்து விட்டான் ஸ்வரூபன்.

“எங்களுக்கும், விருந்து சாப்பாடு கிடைக்குமா?” எனத் தங்கையிடம் குறும்புடன் கேட்டான் காஷ்மீரன்.

“உங்களுக்கு இல்லாததா? நீங்களும் , அப்பாவும், வாங்க ண்ணா, வந்து சாப்பிடுங்க” என்று அவனையும், தந்தையையும், உணவுண்ண அழைத்தாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா” என்றான் அவளது தமையன்.

ஆனால், அவனும் சரி, சந்திரதேவ்வும் சரி, இன்று வரை, இருவரும், அந்த ஊருக்குள் அடியெடுத்து வைத்ததும் கிடையாது, தாங்கள் அங்கே வந்தால்,
அவளுடைய அமைதியான, வாழ்க்கைச் சூழல், பாதித்து விடும் என்று கூறி விட்டப் பிறகு, அவர்களை வற்புறுத்துவதை விட்டு விட்டாள் ருத்ராக்ஷி.

“நீ ஊருக்கு, வரும் போது சொல்லிடு. எப்பவும் போல, நானே பஸ் ஸ்டாண்டுக்கு வந்துப் பிக்கப் செய்துக்கிறேன்” என்று அவளிடம் உரைத்தான் காஷ்மீரன்.

“விருந்து முடிஞ்ச, அடுத்த நாள் கிளப்பிடுவேன் ண்ணா” எனக் கூறினாள் தங்கை.

“ஓகே ம்மா” என்றவன், மேலும் அவளுடன் பேசி விட்டு வைத்தான் காஷ்மீரன்.

“அக்கா, நீங்களும், உங்க ஹஸ்பெண்ட்டோட வந்துருங்க” என்று மிருதுளாவின் இல்லத்திற்குச் சென்று அழைத்தாள் ருத்ராக்ஷி.

“கண்டிப்பாக வந்துட்றோம்” என்று அவரும், அவரது கணவரான வித்யாதரனும், அவளிடம் உறுதி அளித்தனர்.

இவளும், கவிபாரதி மற்றும் மிருதுளாவும் தான், மற்ற பெண்களின் வீட்டிற்குப் போய், அழைப்பு விடுத்து விட்டு வந்தனர்.

ஆனால், இவ்விருவரையும் கூட, முறையாக வரவேற்பது தன்னுடைய கடமையாகும், என்றெண்ணிய ருத்ராக்ஷியோ, முதலில், தன் வீட்டு உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டில் வசிப்பவரான மிருதுளாவை அழைத்து விட்டவள், அதற்கடுத்து, கவிபாரதியின் இல்லத்திற்குப் போனார்கள் இருவரும்.

“உட்காருங்க ம்மா” என்று அவர்களை வரவேற்று, அமரச் சொன்னார் கவிபாரதி.

அவர்களுக்குத் தன்னால் தயக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவர்களுக்காகச் சிற்றுண்டி மற்றும் குடிக்கப் பானமும் மட்டும், கொண்டு வந்து, கொடுத்து விட்டு, ஒதுங்கி நின்று விட்டான் ஸ்வரூபன்.

”எடுத்துக்கோங்க” என்று அவர்களிடம் கூறி, அதை உண்ணச் சொன்னார் கவிபாரதி.

அவரது வார்த்தைக்காக, கொஞ்சமாகச் சிற்றுண்டியை ருசித்து விட்டுப், பானத்தையும் பருகினார்கள் ருத்ராக்ஷியும், மிருதுளாவும்.

பின் தாங்கள் வந்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தனர்.

“நாம மூனு பேரும் தான், எல்லாரோட வீட்டுக்கும் போய் அழைச்சிட்டு வந்தோம். அதே மாதிரி, உங்களையும் வந்து கூப்பிட்றது தான் முறை! அதனால், நீங்களும், உங்கப் பையனும், சேர்ந்து, இந்த விருந்தில் கலந்துக்கனும்னுக் கேட்டுக்கிறோம் மா” என்று தாய், மகன் இருவரிடமும் வேண்டிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“நிச்சயமாக கலந்துக்கிறோம் டா” என்று தீர்க்கமாக கூறினார் கவிபாரதி.

அவரைத் தொடர்ந்து,”கண்டிப்பாக வர்றோம் ங்க” என்றான் அவரது மகன் ஸ்வரூபன்.

இப்போதும், அவனது கண்களில் தெரிந்தக் கனிவும், அதனுடன் சேர்த்து வேறெதுவோ ஒன்று இவளது மனதை அசைத்துப் பார்க்கவும்,”சரிங்க. நாங்கப் போயிட்டு வர்றோம்” என்று கூறி விட்டு, மிருதுளாவுடன் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

இப்போது தான், இந்த உணர்வு எல்லாம் தோன்றும், ஊருக்குச் சென்றதும், அங்கேயே அவனைப் பற்றிய நினைவுகளுக்கு முழுக்குப் போட்டு விடலாம் என்ற உறுதியுடன் தான் இருந்தாள் ருத்ராக்ஷி.

ஆனால், அதற்கு முன்பாகவே, தன்னுடைய நேசத்தை, அவளிடம் வெளிப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல் திரியும், ஸ்வரூபனை அவ்வளவு எளிதில் அவளால் மறந்து விட முடியுமா?

- தொடரும்
 
இரண்டு ஊரிலும் ரொம்ப பிஸியான ஆளு தான் ருத்ரா 🤩🤩🤩🤩

ஸ்வரூபா பார்த்துக்கிட்டே இருக்காமல் சீக்கிரம் காதலை சொல்லுடா 😉😉😉😉😉
 
இரண்டு ஊரிலும் ரொம்ப பிஸியான ஆளு தான் ருத்ரா 🤩🤩🤩🤩

ஸ்வரூபா பார்த்துக்கிட்டே இருக்காமல் சீக்கிரம் காதலை சொல்லுடா 😉😉😉😉😉
Adhe dha sis... Thank you so much ❤️
 
Top