Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை இறுதி

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே ஒரு சிறு பகிர்வு,

இந்தக் கதையை இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்பது என் எண்ணம் சில பல காரணங்களால என்னால் அவ்வாறு எழுத முடியவில்லை என்னால் முடிந்த அளவிற்கு எழுதி முடித்து விட்டேன் படித்துப் பார்த்து என் குறைகளை ஏமாற்றும் நிறைகளைச் சொல்லுங்கள்.எனக்கு ஒரு புதிய அனுபவத்தை இக்கதை மூலம் கொடுத்த மல்லிகா அக்காவிற்கும் இத்தளத்திற்கு நன்றிகள் கோடி.


அன்பு விதை – 14



“வினை விதைத்தவன் விணை அறுப்பான்

தினை விதைத்தவன் திணை அறுப்பான்”.



அதே போல் அன்பு விதைத்தவன் அன்பை மட்டுமே அறுவடை செய்வான் அதற்குச் சான்று தான் இந்தத் திருவேங்கடம் மற்றும் சுசீலா தம்பதியரின் குடும்பம்.



திருவேங்கடத்தின் அப்பா கருணை இல்லம் மூலம் தனது முதல் விதையை விதைத்தார். அது இன்று மூன்று தலை முறையாக விருச்சமாக வளர்ந்து செழித்து நிற்கிறது.



பிள்ளைகளுக்குக் கருணையும் அன்பையும் சொல்லி வளர்த்ததால் என்னவோ. அவர்களும் அதனையே பின் பற்றினர் இதோ இப்போது அழகான குடும்பமாய்.மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கூற்று உண்மை தானோ.



அதோ இதோவென்று நான்கு வருடங்கள் ஓடி ஐந்தாவது வருடத்தில் மூன்று ஜோடிகளும் அடி எடுத்து வைக்கின்றனர்.முதலில் மனோ - வேணி தம்பதியினருக்கு தான் குழந்தை பிறந்தது படிப்பையும்,வாழ்க்கையும் சரி விகதமாகப் பார்க்க கத்து கொண்டாள் வேணி.



அவ்வப்போது சிறு பிள்ளை தனம் எட்டி பார்த்தாலும் அதனை அழகாகக் கையாண்டான் மனோ.தெத்து பல் தெரிய சிரிக்கும் குழந்தையை அள்ளி கொண்டு வேர்க்க விறுவிறுக்க அந்த மருத்துவமனையில் வந்து கொண்டு இருந்தால் வேணி மனம் முழுவதும் பதட்டம்.



அவளுக்கு முன்னாள் ஒரு வயது மகனுடன் நீலா. அவள் முகத்திலும் பயம் சற்று தூக்கலாகத் தான் இருந்தது.பெரியவர்கள் அனைவரும் வேண்டுதலோடு இருக்க.அருணும்,விக்னேஸ்வரனும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.



"என்ன ஆச்சும்மா உள்ளார கூட்டிட்டு போய்ட்டாங்களா” ஒரு வித பரபரப்புடன் வேணி கேட்க.



“இல்லடாம்மா அதுக்கு முன்னாடி ஸ்கேன் பண்ணனும் குழந்தை நல்ல இருக்கானு பார்க்கணும் ஒரே அடம் உன் அண்ணி சமாளிக்க முடியல அதான் ஸ்கேன் பண்ண கூட்டிட்டு போய் இருக்காங்க”.



என்ன சொல்லுவது என்று தெரியாமல் வேணியிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.ஆம் மீனாவுக்குத் தலை பிரசவம் தைரியமாக வளைய வரும் லலிதாவே பயந்து போய்த்தான் அமர்ந்திருந்தார். அந்த அளவிற்குப் படித்திருந்தால் மகள்.



நீலாவும் வேணியும் சற்று தள்ளி அமர்ந்து பேசி கொண்டு இருக்க விக்னேஸ்வரன் அருணிடம் பேசி கொண்டு இருந்தான்.



“என்ன மச்சான் நீயே பயந்தா எப்புடி”



“ப்ச்... பயமா இருக்கு ரொம்பக் கான்சியஸா இருக்கா சமாளிக்க முடியல இந்த விஷயத்துல ரொம்பச் சென்சிடிவ் மச்சான்.அவள மாதிரி குழந்தை பிறந்துடுமோனு பயம் அவளுக்கு. அதான் ரொம்பக் முரண்டு புடிக்கிறா”



“தேவ இல்லாத பயம்டா பேபி நல்ல இருக்கு. இவ தான் ரொம்ப அலட்டிக்கிறா.கொஞ்சமாவது யோசிக்குதான்னு பாரு படித்த முட்டாள்” தங்கையை எண்ணி காய்ந்தான் தமயன்.



“விடு விடு சரியாயிடும்” மனைவியை விட்டுக்கொடுக்காது அருண்.



ஸ்கேன் முடித்து விட்டு வலியுடன் முகத்தில் வேர்வை துளிர்க்க வந்தவளை அனைவரும் பதற்றத்துடன் நெருங்கினர் “என்னம்மா ரொம்ப வலிக்குதா” சுசீலாவிற்கு மருமகளின் நிலை பயம் கொள்ளச் செய்தது.



மூன்று பிள்ளைகளைப் பெற்றவர் ஆயிற்றே புரியாதா அந்த வலி “ஆமா அத்தை வலி தாங்கள” அதையும் மென்மையாகச் சொன்ன மனையாளை காதலாகப் பார்த்தான் அருண்.



இதே வேறு பெண்ணாக இருந்தாள் அதிகப்பசம் அழுது புலம்பி கணவனைத் திட்டி ஒருவழி செய்திருப்பாள் ஆனால் மீனா வழியைக் கூடக் காட்டாது கல்லு போல் இருந்தாள்.



உடனே மருத்துவர் பரப் பரபாகச் “சிஸ்டர் இந்தப் பொண்ண லேபர் வார்டுக்கு கூட்டிட்டு வாங்க” என்று கட்டளையிட தனது தாய்- தந்தையும் அருணையும் ஒரு நொடி பார்த்தவள் அவர்களுடன் சென்றாள்.



சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஓர் அழு குரல் வீறிட்டு கேட்டது.செவிலி ஓர் பெண் குழந்தையைத் தூக்கி வந்து கொடுக்க லலிதான் முதலில் வாங்கினார்.வாங்கியவர் குழந்தையை நன்கு பரிசோதித்தார்.



அவரது மனநிலை புரிய அனைவரும் அமைதியாக இருந்தனர்.கை கால்கள் காது என்று அனைத்தையும் தொட்டு பார்த்தவர் விழியில் நீர் நிரம்பி வழிந்தது.அருண் அவரது காலத்தைக் காண சகியாமல் அத்தை என்ன பொண்ண கொடுங்க என்று கை நீட்ட



நடப்பு புரிந்து தெளிந்தவர் சிறு சிரிப்புடன் பூ செண்டை தகப்பனிடம் கொடுத்தார்.பொதுவாகக் குழந்தை பிறந்தால் அது கண் விழித்துப் பார்க்க ஒரு மாதம் ஆகுமாம்.ஆனால் எப்போதோ பிறக்கும் போதே விழித்துக் கொண்டு பாக்குக் கண்களை உருட்டி உருட்டி பார்க்கின்றது.



அதே போல் தகப்பனை பார்த்து பார்த்துக் கண்களை மூட அந்தச் செய்கையின் அழகை ரசித்துப் பார்த்தான்.



சில வருட வாழ்க்கையில் மீனாவை அழகாகக் கையாண்டான் அருண் எப்பொழுதெல்லாம் கோபம் கொண்டு மூர்க்க தனமாக அவளை வதைத்து கொண்டாலும் .அவளது இயலாமையை உணர்ந்து அன்பு என்னும் ஆயுதம் ஏந்தி தன்னுள் சுருட்டி கொண்டான்.



மற்ற ஜோடிகளும் தங்களது இணையைப் புரிந்து கொண்டு செயல் பட்டனர் இதை விட என்ன வேண்டும் பெற்றவர்களுக்கு.மூன்று மக்களின் திருமண வாழ்க்கையும் சங்கடமான சூழ்நிலையில் இருந்ததை எண்ணி திருவேங்கடம் - சுசீலா தம்பதியினர் உள்ளுக்குள் மருகி இருந்தனர்.



ஆனால் சிறு துடுப்பாகத் தங்களின் பேச்சை புரிந்து கொண்டு நீந்தி இப்போது கரை சேர்ந்ததை எண்ணினால் அத்தனை நிம்மதி அவர்களுக்கு.

எப்பொழுதும் போல் லலிதா தி பெஸ்ட் அம்மா வழமை போல் மகளுக்கு அறிவுரை இப்போது பேத்தியும் அவர் வசமே தன்னம்பிக்கையான பெண்.



அது மட்டுமா ஒற்றுமையோடு இளையவர்கள் கை கோர்த்துக் கருணை இல்லத்தை இன்னும் சிறப்பாக நடத்தி வந்தனர்.மீனாவின் தலையீடு சற்று அதிகம் தான் இங்குத் தன்னைப் போல உள்ள சிறியவர்களிடம் பெண் சற்று கூடுதல் கவனத்துடன் இருந்தாள்.



திருவேங்கடத்திற்குப் பரம திருப்தி வேறு என்ன வேண்டும் மூன்று தலை முறையாக அன்பை மட்டும் அடி தளமாகக் கொண்டு உயர்ந்து நிற்கிறது கருணை இல்லம்



மக்களே இவ்வுலகில் கோடி கொடுத்தாலும் கிடைக்காதது அன்பு மட்டுமே விலை மதிப்பற்றது தூய்மையான அன்பு .எனவே அன்பை விதைப்போம் அடுத்தத் தலை முறை அதனைப் பேணி விருச்சமாகவளர்ந்து செழிக்கட்டும்.



முற்றும்
 
அருமையான கதை. இன்னும் கொஞ்சம் கொண்டு செல்ல நேரம் இல்லை என்பதால் ஏற்றுக் கொள்கிறோம்.
 
ரொம்ப அருமையான கதை
மீனா லலிதா சிறப்பு
 
Top