Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 1

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 1

நவம்பர் 5 - நேரம் காலை 5.45.

“ஹலோ சார் 100-ங்கால???.....’’.

போலீஸ் கண்ட்ரோல் ரூமிலிருந்து - “ஆமாம் சார் சொல்லுங்க ....’’

“சார் இங்க புலியூர் காடு கிட்ட ஒரு கார் நிக்குது சார்.... உள்ள ஆளே இல்ல சார்.....’’

“பக்கத்துல யாராவது இருக்கங்களானு பாத்திங்களா?.....’’

“சார் இந்த கார் ரொம்போ நாலா இங்க தான் சார் நிக்குது அதான் சார் போன் பண்ணன்…’’
.
“சரி சார் நாங்க பத்துக்குறோம்…’’

ஹிஸ் ஹிஸ் ஹிஸ் ஹிஸ் ( போலீஸ் வயர்லெஸ் சத்தம் )

“புலியூர் பெட்ரோல் கம் இன்...... புலியூர் பெட்ரோல் கம் இன்…’’

“புலியூர் பெட்ரோல் இன் லைன் சார்... சப் இன்ஸ்பெக்டர் சத்தியா ரிப்போர்டிங் சார்…’’

“சத்தியா…புலியூர் காட்டுல ஒரு கார் தனியா நிக்குதுனு இன்போர்மஷன் வந்து இருக்கு, செக் பண்ணிட்டு லைனுக்கு வாங்க…’’

“ஓகே சார்…’’

தமிழ் நாடு கேரளா கர்நாடகா மூணு நாட்டிற்கும் நடுவில் ஆள் அரவமே இல்லாமல் இருக்கும் காடு, வாகனங்கள் கூட எப்போதாவது ஒன்னு ரெண்டு-னு வரும்.எப்போதாவது தான்...நேரம் காலை 6.20... புலியூர் காடு 6கி.மீ சுற்று வட்டத்தை கொண்டது, விடியற் காலை மங்கிய சூரிய ஒளியில் தரையெங்கும் மஞ்சள்பொடியை தூவியது போல காடு பார்ப்பதற்கு மஞ்சள் வண்ணத்தில் காட்சி அளித்தது, இது இலைஉதிர் காலம் என்பதனால் மரங்கள் இலைகள் இன்றி நின்றுகொடு இருந்தது. காட்டிற்கு நடுவே கருப்பு மையினால் கொடு போட்டதை போல ஒரு தார் சாலை, அகலம் தோராயமாக 10 அடி இருக்கும். காட்டின் மையத்தில் தார் சாலையின் ஓரமாக ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அது ஒரு சிவப்பு கலர் மெர்சிடிஸ் பென்ஸ் ராகம் w123. ரோட்டின் இறுதியில் மங்கலாக ஏதோ அசைவது போல இருந்தது, பெட்ரோல் பைக் தான் அது. பைக் நின்றுகொண்டிருந்த காரை நெருங்கியது காரின் பக்கவாட்டில் பைக்கை பார்க் செய்து விட்டு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியா இரங்கினார் காரை நோக்கி சிறிது தூரம் நடந்த பின்

“மணி வண்டி பையில இருக்க டார்ச்ச எடு…’’

எடுத்துக்கொண்டு ஓடினர் உடன் வந்த கான்ஸ்டபிள் மணி. டார்ச்சை ஆன் செய்து காரின் உள்லே பார்த்தவாரு

“மணி சைடுல யாராச்சும் இருக்கங்களானு பாரு…’’

கார் நின்றுகொண்டிருந்த திசைக்கு நேர் எதிராக இரங்கி ஓடினார் மணி, தன் வயதை விட சிறியவராக இருந்தாலும் உயர் அதிகாரியாச்சே

“சார்... இங்க யாருமே இல்ல, நல்லா பத்துடன்…’’

“யோவ் இந்த சைடு பொய் பாரு யா... எல்லாத்தையும் உனக்கு சொல்லணும்….’’

நைட் ஷிப்ட்டின் கடுப்பில் இருந்தார் சத்தியா “ஷிபிட் முடியுற நேரத்துல தான் அத பாரு இத பாருனு தாலியை அறுப்பானுங்க…’’ முணுமுணுத்தபடி காரை டார்ச்சை ஆன் செய்து ஆராய தொடங்கினார்.

“சார் ........ சார்…!!!’’

காரில் இருந்து 70 அடி தூரத்தில் இருந்து மணி அலறினார் “இங்க வந்து கொஞ்சம் பாருங்கலான் .... சீக்கிரம் வாங்க சார்…’’

“இருய....’’


நேரம் காலை 9.30.. சைரன் சவுண்டுடன் போலீஸ் ஜீப் ஒன்று நின்றுகொண்டிருந்த காரின் பின்னால் வந்து நின்றது. மணி ஓடிச்சென்று காரின் கதவை திறக்க இரங்கினார் இன்ஸ்பெக்டர் நவீன். கஞ்சி போட்டு அயர்ன் செய்த காக்கி யுனிபார்ம் பாலிஷ் செய்ய பட்ட ஷூ 6அடி உயரம் பார்த்தவுடனே உயர் அதிகாரி என அனைவர்க்கும் புரிந்து விடும் தோற்றம். தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பாதி சாப்பிட்டு மீதம் இருந்த பைவ்ஸ்டார் சாக்லேடை வாயில் போட்டு கொண்டு

“இன்போர்ம் பன்னது யாருயா…’’
“யோவ் இங்க வாய ஐயா கூப்புட்றாரு…’’ மணி கூப்பிட அழுக்கு லுங்கி முண்டாபணியன் தலையில் இருந்த துண்டை கக்கத்தில் வைத்தவாறு 45 வயது மிக்க ஒருவர் வந்தார்.

“நீதான் பாத்தியா…’’ என்றார் நவீன்

“ஆமாங்கய்யா…’’

“எப்போ பாத்த…’’

“காலைல ஒரு 5.30...5.45 இருக்குங்காய…’’

“இதுக்கு முன்னாடி எப்போ பாத்த…’’

“ஒரு நாலஞ்சு நாளைக்கு முன்னால பாத்தங்கய இன்ணைக்கும் பாத்தனா அதான்யா ஒடனே போன் பண்ண…’’

“உனக்கு இங்க என்ன வேலை இது ரிசெர்வ் ஏரியானு தெரியாதா?…’’

“ஐயா எங்களுக்கு தேன் எடுக்குறது தான்ய பொழப்பு தேன் எடுக்கத்தான் யா வந்தன்…’’

“சத்தியா... இவர்கிட்ட அட்ரஸ் வாங்கிட்டு அனுப்புங்க, எப்போ ஸ்டேஷன் கூப்புட்டாலும் வரணும் புரியுதா... வெளியூர் எங்கையும் போகக்கூடாது சரியா…’’ சதியாவிடம் அட்ரெஸ்ஸை வாங்கும்படி செய்கை காட்டிவிட்டு நடந்து சென்று காரை உற்று நோக்கினார் காரை தடவி கையில் இருந்த தூசியை பார்த்து

“கார்ல இருக்க தூசிய பாத்தா நாலஞ்சி நாலா நிக்குற மாரி தெரியலையே... ம்ம்.... எவிடென்ஸ் 2 எங்கய்யா…’’

“ஐயா அங்க இருக்குயா…’’ காட்டினுள் கை காட்டியவாறு மணி நகர்ந்தார், ரோட்டில் இருந்து நகர்வத்துக்குமுன்

“சத்தியா...காரோட நம்பரை வெச்சி ஓனர் யாரு அட்ரஸ் என்னனு சீக்கிரம் விசாரிச்சு சொல்லு…’’

காட்டை நோக்கி நடக்க ஆரமித்தார், தடவியல்துறையை சார்ந்தவர்கள் அங்கு இருக்கும் கால் தடங்களை ஆராய்ந்து கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு டூ நாட் என்டர் றிப்பணை தாண்டி

“அடுத்த எவிடென்ஸ் எங்க யா…’’
“அங்க இருக்குயா...’’ இன்னும் சிறிது உள்லே காட்டினார் மணி, அங்கு தரையில் ஒரு வட்டத்தினுள் நரையே முக்கோணங்கள் வரைய பட்டு அந்த வட்டத்தை சுற்றி நிறைய சிறிய வட்டங்கள் வெள்ளை மஞ்சல் சிவப்பு பொடிகளால் வரையப் பட்டு ஒவ்வொரு வட்டத்தினுள்ளும் உண்டிவில்லில் உல்ல கவண் போன்ற அமைப்பினால் ஆன மரம் தரையில் அடிக்க பட்டு அனைத்திலும் பூனையின் தலை சொருவப்பட்டிருப்பதை பார்த்து விட்டு

“என்ன எழவு யா இது... அடுத்து…’’

“அதோ அங்க யா…’’ இன்னும் சிறிது உள்லே இருந்தது அங்கு வண்டிகளை போத்த உதவும் நீள வண்ண தார் பாய்யால் ஏதோ போற்ற பட்டு இருந்தது

“மணி அத தீரயா…’’

மூன்று பிணங்கள்….
 
சத்யா மணி ரெண்டும் பெரும் என்ன கண்டுபிடிச்சாங்க.... அதை நவீன் வந்த பிறகு தான் சொல்லுறாங்களா .... கார் உள்ள என்ன இருந்துச்சு... எதோ அசைந்த மாதிரி இருந்துச்சுனு சத்யா பாப்பானே....

மூன்று நாடு இல்ல மாநிலம் மாத்திடுங்க
 
சத்யா மணி ரெண்டும் பெரும் என்ன கண்டுபிடிச்சாங்க.... அதை நவீன் வந்த பிறகு தான் சொல்லுறாங்களா .... கார் உள்ள என்ன இருந்துச்சு... எதோ அசைந்த மாதிரி இருந்துச்சுனு சத்யா பாப்பானே....

மூன்று நாடு இல்ல மாநிலம் மாத்திடுங்க
Editing nadakuthu pola, சத்தியா பைக் தான்
அப்படி சொல்லி இருக்கிறீர்கள்
 
:D :p :D
உங்களுடைய "அரக்கன் (ஒரு
இரக்கமற்றவன்)"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நவீன் பிரபு தம்பி
 
Last edited:
Top