Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 13

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 13/21

“எஸ் சார் விக்டீம் சாகுறதுக்கு முன்னாடி கொக்கேய்ன் அதிகமா யூஸ் பண்ணி இருக்காங்க பிளட்ல கொக்கேய்ன் லெவல் அதிகமா இருக்கு, அப்புறம் விக்டீம் கொறஞ்சது நாலு நாலாவது சாப்புடாம இருந்து இருக்கணும் ஏன்னா டிரம்மில் இருந்த ஆசிட் சொலுஷன்ல எந்த உணவுப் பொருளும் இல்ல மோஷனும் இல்ல…”


“வேற…”


“அவ்ளோதான் எங்களுக்கு கிடைச்ச எல்லா டீடெயில்சையும் சொல்லிட்டேன்…”


நவீன் தன் நெத்தியை தன் வலது கைகளால் சொரிந்து கொண்டு “ஏன் அவுங்க சாப்புடாம இருந்தாங்க எப்புடி இவுங்களுக்கு கொக்கேன் கிடைச்சிச்சி ஒரே கொழப்பாம இருக்கே…. முணுமுணுத்தார்…”


“சார் நா சொல்லலாமா என்றார் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன்…”


“சொல்லு…”


“காமெராவுல பார்த்தவரைக்கும் ஆண்டனிதான் காரை டிரைவ் பண்ணிட்டு வந்திருக்காரு, இங்கே வந்து தான் அண்டனி அவருடைய மனைவி குழந்தை மூணு பேரும் கொல்லப்பட்டு இருக்காங்க, ஏன்னா அவங்கள அங்கேயே கொன்னு பாடிய இங்க வரைக்கும் எடுத்துட்டு வர்ரது கஷ்டம், வர வழியில நிறைய செக்போஸ்ட் இருக்கு. சோ 100% அவங்க இங்க தான் கொல்லப்பட்டிருக்காங்க பாரென்சிக் ரிபோர்டும் அத தான் உறுதி படுத்துது…

அடுத்தது விக்டீம்க்கு இங்கே வந்துதான் கில்லர் தன்னை கொல்ல போறதே தெரிஞ்சிருக்கணும் ஏன்னா இவ்ளோ பெரிய முட்டாளாக இருந்தாலும் தன்னை கொலை செய்ய போறவன் கூட இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டாங்க, அப்படி தான் கொலை செய்யப்படபோறது தெரிஞ்சா யாரா இருந்தாலும் கில்லரை தாக்கீட்டு தப்பிக்க முயற்சி செய்வாங்க இது அந்த கில்லர்க்கும் தெரியும் அதுனால விக்டீம் தப்பிக்க முயற்சி செய்ய கூடாதுனு அவுங்களுக்கு சாப்பாடு குடுக்காம வெச்சி இருந்துருக்கணும், சாப்பாடு கேக்கும்போதெல்லாம் அவுங்களுக்கு கோக்கேன் குடுத்து ஹை ஆகி வெச்சி இருந்திருக்கணும், இங்க வந்து கூட எந்த சூஸ்நிலைளும் அவுங்க தப்பிக்க கூடாதுனு மறுபடியும் கோக்கேன் குடுத்து ஹை ஆக்கி அப்புறம் கொன்னு இருக்கணும், ஒரு வேலை கில்லர் இங்க வந்து கோக்கேன் குடுக்காம விஷம் வெச்சி அவுங்கள கொன்னு இருந்தா பாரென்சிக் ரிப்போர்ட்ல தெரிஞ்சி இருக்கனும் சோ அவுங்கள கோக்கேன் குடுத்து சுயநினைவு இழக்க வெச்சிட்டு கொன்னு இருக்கான். இது தான் நடந்து இருக்கணும்…”


நேரம் கடந்தது... நேரம் மதியம் 3

போலீஸ் ஜீப் வந்தது காரினுள் ஜோசப் டி.என்.ஏ டெஸ்ட்க்காக வரவழைக்க பட்டிருந்தார், சாம்பல் நிற பேண்ட் , கசங்கிய வெள்ளை சட்டை சிறைக்காத தாடி, வாடிப்போன முகம் எதற்காக இங்கு அழைத்து வந்தார்கள் என்று பயம்வேறு. இன்ஸ்பெக்டர் நவீன் வேன் அருகில் நின்று கொண்டு புகை பிடித்து கொண்டிருந்தார், நவீனை நோக்கி நடந்து வந்தார். ஜோசப் வருவதை கண்டு நவீன் தன் பாதி பிடிக்காத சிகிரெட்டை தூக்கி வீசினார்...


“என்ன சார் எதுக்காக என்ன இங்க வர வெச்சி இருக்கீங்க…” குரலில் நடுக்கம்


சற்றே யோசித்த வாறு... “இங்க பாடி கிடைச்சி இருக்கு…”


முழுவதும் சொல்வதற்கு முன் கண் கலங்கினார் ஜோசப், “என்னயா சொல்லுறீங்க…”


“அது உங்க பொன்னானு செக் பண்ணனும் அதுனால தான் உங்கள வரவழைச்சன்…”


“ஐய்யா... அப்புடி சொல்லாதீங்க அது என் புள்ளைங்கள இருக்கது…” ஜோசப் கண்ணில் நீர் கொட்டியது....


“அழுவாதீங்க ஜோசப்.... எங்களுக்கும் கான்போர்ம்மா தெரியல அது உங்க பொண்ணு மாப்புளை தானான்னு…”


“காட்டுங்கய்யா நா பாக்குறேன்…”


“ஜோசப்…” தயங்க படி நவீன்... “பாக்க முடியாது ஆசிட்ல கரஞ்சி... எலும்பு கூட....”


ஜோசப் சரிந்தார்..... பேச்சி மூச்சி இல்லை....

“சத்தியா தண்ணி எடுத்திட்டு வா…”



மூஞ்சில் தண்ணி தெளிச்சவுடன் மீண்டும் சுயநினைவுக்கு வந்தார் ஜோசப், கண்களில் கண்ணீருடன்..


“என் புள்ளைங்க முகத்தை கூட பாக்கமுடியாம போய்டுச்சே... யாருக்கு நாங்க என்ன தோரகம் செஞ்சோம்... என் உயிரை எடுத்துக்கிட்டு என் புள்ளைங்கள காப்பாத்தி இருக்க கூடாத அந்த கடவுள்... காணாம போனவங்க வீட்டுக்கு வந்துடுவாங்கனு வாசலையே பாத்துகிட்டு உகந்துட்டு இருக்க என் பொண்டாட்டிகிட்ட என்ன சொல்லப்போறன்.... என் புல்லங்க முகத்தை கூட பாக்க முடியாத பாவி அய்ட்டனே…” அழுது புலம்பினார் ஜோசப்.


டி.என்.ஏ டெஸ்ட்க்காக வேனுக்குள்ளே அழைத்து செல்லப்பட்டார், தலையை தொங்க போட்டவரே அமர்ந்திருந்தார், டெஸ்ட் முடிவுகளில் இரந்து போனவர்கள் அன்டனி, மேரி மற்றும் அவர்களது குழந்தை என உறுதியானது... ஜோசப் மீண்டும் அனுப்பிவைக்க பட்டர்....

வருத்தம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது …




சிறிது நேரம் மௌனம்...

சத்தியாவின் கைபேசி ஒலித்தது…


“சொல்லுங்க…”


“ஆமா நா தான் பேசுறேன் சொல்லுங்க…”


“அப்புடியா…!!”


“அட்ரஸ் சொல்லமுடியுமா…” சத்தியா அட்ரெஸ்ஸை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டார்


“நேர்ல போன அவுர பாக்க முடியுமா…”


“ஓகே தேங்க்ஸ்…” அழைப்பை துண்டித்தார் சத்தியா.


“சார்… சேலம் பருத்திக்காட்டு ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் வந்துச்சி... ஒரு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதரி ஒரு கேஸ் அங்க நடந்ததாகவும், அந்த கேஸ் டீடெயில்ஸ் லாம் ஒரு பயர் ஆக்சிடன்டுல மிஸ் ஆய்டுச்சுன்னும் இன்போர்மேஷன் வந்துச்சி... இந்த கேஸ்ச டீல் பண்ண இன்ஸ்பெக்டர் இப்போ வேலைல இல்ல, அவுரோட அட்ரஸ் மட்டும் தான் கிடைச்சிச்சி... இந்தாங்க…”

“சரி நாம உடனே அங்க போகலாம் எதாவது இன்போர்மஷன் கிடைக்கும்…”


“டீம்... நானும் சாத்தியவும் சேலம் போறோம்... கில்லர் பத்தின இன்போர்மஷனை சேகரிக்க... நீங்க அந்த கில்லர் ஓட்டிட்டு போன காரை ஐடென்டிபை பண்ணுங்க எதாவது இன்போர்மஷன் கிடைச்ச எனக்கு இன்போர்ம் பண்ணுங்க.... எந்த இன்போர்மஷனும் ப்ரீஸ்க்கு போக கூடாது…”


சேலத்தை நோக்கி கிளம்பின்னர்கள் நவீனும் சந்தியாவும்


நவம்பர் 9 காலை 6 மணி

சேலம் ஆத்தூர் பக்கத்தில் ஒரு கிராமம் மணிமங்கலம் 8 மணிநேர பயணத்தின் பின் ஒரு வழியாக தொலைபேசியில் குறிப்பிட்ட அட்ரஸுக்கு சென்றடைந்தனர். வீட்டின் வெளியே போர்டு கலைவாணன் இன்ஸ்பெக்டர் (ரிட்டயர்டு) சத்தியா அழைப்பு மணியை அழுத்தினார், மூன்று முறை அழைப்பு மணியின் அலறலுக்கு பிறகு கதவு திறந்தது, ஏறக்குறைய 50 வயதிருக்கு ஒரு அம்மா கதவை திறந்து

“யாருப்பா…. யாருவேனும்?…”


“அம்மா கலைவாணன் சார்ர பாக்கணும்…”


“நீங்க…”


“போலீஸ் மா… ஒரு முக்கியமான விசயமா சார பாக்கணும்…”


“சரி வாங்க… உள்ள உக்காருங்க…. நா அவர்கிட்ட சொல்லுறன்…”


சாதாரண வீடு எந்த வசதியும் இல்லாமல் இருந்ததை வைத்தே கலைவாணன் நேர்மையானவர் என்ற முடிவுக்கு வந்து விடலாம், அவ்ளோ எளிமை.


“ஏங்க… உங்கள பாக்க யாரோ வந்து இருக்காங்க… போலீஸ்…”



“தம்பி… கொஞ்சம் இருங்கய்யா… அவுங்க இப்போ தான் எழுந்தரிக்குறாங்க…”


“பரவலா மா…”


இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
Last edited:
கலைவாணன் கூட நிறைய தகவல் சேகரிச்சசு இருப்பார்னு தோணுது. அது நாவினுக்கு use ஆகும். :love: :)
 
Top