Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 16

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 16/21

“நா சொல்லுறத மட்டும் செய்யுங்க…”


“ஹ்ம்ம்…”


“குட்… சேவூற்றில் சுற்றிக்கொண்டிருந்த சக்கரத்தை காட்டி, அதையே உத்து பாருங்க…”


“இமைக்காதீங்க…”


“நல்லா உத்து அதோட மைய புல்லிய பாருங்க…”


“மூச்சை மெதுவா இழுத்து விடுங்க...”


“உங்க இமைகள் கொஞ்ச கொஞ்சமா வலிக்கஆரமிக்கும்…”


“உங்களுக்கு தூக்கம் வர மாதரி இருக்கும்…”


“உங்க பார்வை மங்க ஆரமிக்கும்…”


3….


2….


1……


“அவளோ தன்…”


“மிஸ்டர் கலைவாணன் நா பேசுறது கேக்குதா?…”


ஹ்ம்ம்… ( வலுவில்லாத ஹ்ம்ம் )

“இன்னைக்கு என்ன டேட்னு சொல்ல முடியுமா?…”


“நவம்பர் 8…”


“குட் … ஒரு மாசத்துக்கு முன்னாடி போங்க…”

.

“இன்னைக்கு என்ன தேதினு சொல்ல முடியுமா?…


“அக்டோபர் 3…”


“அப்புடியே ஒரு வருசத்துக்கு முன்னாடி போங்க…”


“ஜனவரி மாசம் 21ஆம் தேதி நடந்தது நினைவுக்கு வருதா?…”


“ஹ்ம்ம்…” ( காத்து மட்டும் தான் வந்தது )


“காலைல 9 மணி என்ன நடக்குதுன்னு சொல்ல முடியுமா?…”


“நா வீட்டுல சண்டை போட்டுட்டு ஸ்டேஷனுக்கு கிளம்புறேன்…”


“அப்புடியே சந்திரம் 6 மணி ஆகுது…. என்ன நடக்குதுன்னு நியாபகம் இருக்குதா?…”


“ரவி ஆளுங்கள அர்ரெஸ்ட் பண்ணி உள்ள வெச்சதுனால ஸ்டேஷன் வெளிய ரவி ஆளுங்க நின்னு பிரேசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க…”


“அப்புடியே 7 மணிக்கு வாங்க… என்ன நடக்குது?….”


“ஸ்டேஷனுக்கு கல்வராயன் மலைல தடை செஞ்ச இடத்துல ஆளுங்க நடமாடம் இருக்குனு போன் வந்ததுனால அங்க போயிடு இருக்கன்… நவீன் கையை அசைத்து அது தான்னு செய்கை செய்தார்…


“அப்புடியே 9 மணிக்கு வாங்க இப்போ எங்க இருக்கீங்க?…”


“ஸ்டேஷன்….” “சூர்யா….” “குழந்தை தலை…” கலைவாணனுக்கு வேர்க்க அரமித்தது, “சூர்யா…” “சூர்யா…” பெனாத்தினார் கலைவாணன்


“சூர்யா பாக்க எப்புடி இருக்காரு?… உங்களுக்கு தெரியுறாரா?…”


“ஹ்ம்ம்…”


“அவுர நல்லா அடையாளம் தெரியுதா?…”

“ஹ்ம்ம் …”


“அவர் சூர்யா தானா?…”



“ஹ்ம்ம்…”


“உங்களுக்கு நல்லா நியாபகம் இருக்கா?...” கலைவாணனின் காதருகில் சென்று கேட்டார் டாக்டர் லதா


“ஹ்ம்ம்…”


“சரி மெல்ல நிகழ்காலத்துக்கு வரலாம்…. மெல்ல…. மெல்ல கண்ணா திறங்க…”



3….


2…


1….


“ஒப்பேன் யுவர் ஐஸ்…” கண்களை மெதுவாக திறந்தார் கலைவாணன்


“மிஸ்டர் கலைவாணன் ஒன்னும் இல்ல… மூச்சை சாதாரணமா இழுத்து விடுங்க… யு ஆர் பெர்பெக்டிலி ஆல்ரைட்…. சூர்யா முகம் நியாபகம் வந்ததா?…” மெதுவாக கேட்டார் டாக்டர் லதா….


ஆமாம் என்பது போல மேலும் கீழுமாக தலையை அசைத்தார் கலைவாணன்….


“நவீன் இப்போ கேளுங்க அடையாளம் கரெக்டா சொல்லுவாரு…சார்… அவர் சொல்லுறமாரி வரையுங்க…” என்றார் டாக்டர் லதா படம் வரைபவரை பார்த்து…


அரை மணி நேரத்தில் கில்லர் சூர்யாவின் படம் தயாரானது… “சார் வரைஞ்சாச்சு…” படம் வரைபவர் நவீனிடம் கலைவாணன் கூறியதை வைத்து வரைந்த படத்தை காட்டினார்.


தலைமுடி காதைத்தாண்டி கன்னம் வரை நீண்டிருந்தது, மீசையும் தாடியும் சுத்தமாக எடுக்கப்பட்டு 30தில் இருந்து 35 வயதுக்குள் பார்பதற்க்கே இவானா கொலை செய்திருக்க முடியும் என்பதுபோல் அப்பாவி முகம்.


“மிஸ்டர் கலைவாணன் கண்டிப்பா இவன் தானா?…” கணினியில் இருந்த படத்தை காட்டி கேட்டார் நவீன்.


“ஆமாம் சார்… அதே முகம்… அவனே தான்… ரொம்போ ஆபத்தானவன்… சீக்கிரம் புடிச்சிடுங்க…”


“ஹ்ம்ம்…” என்றார் நவீன்.



படத்தை பிரிண்ட் எடுத்து பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்து சிறிது வினாடி யோசித்த பின்பு


“சத்தியா…”


“சார்…”


டேபிளில் இருந்த ஒரு வெள்ளை பேப்பரில் தமிழ் நாட்டின் படத்தை தோராயமாக வரைந்து வட்டமிட்டு சுட்டிக்காட்டியபடி


“கலைவாணன் சொன்னபடி பாத்தா கல்வராயன் மலை பாரஸ்ட் ஏரியால ஒரு மர்டர் நடந்திருக்கு, அடுத்து புலியூர் பாரஸ்ட் ஏரியால அடுத்து ஈரோடு அவுட்டர்ல இருக்க பரசூர் பாரஸ்ட், மூணும் வேவ்வேற இடம், விக்டீம் வீட்டு பக்கத்துலையோ இல்ல இந்த பாரஸ்ட் பக்கத்துலையே இல்ல விக்டீம் போன சர்ச் பக்கத்துலையோ தான் கில்லர் ஏதோ ஒரு ஹோட்டல்லயோ, லாட்ஜ்லயோ, காட்டேஜ்லயோ ரூம்லயோ தங்கி இருந்து விக்டீம் கிட்ட பேசி பழகி இருக்க வாய்ப்பு அதிகமா இருக்கு… நம்ப டீம்-ம விட்டு எல்லாஇடத்துலையும் தேட சொல்லுங்க ஒரு வேலை அப்புடி அவன் தங்கி இருந்தது கான்போர்மாச்சினா, இப்பையும் அவன் எதாவது ஒரு ஊர்ல எதாவது ஒரு ஹோட்டல்லயோ லாட்ஜ்லயோ காட்டேஜ்லயோ ரூம்லயோ தான் தங்கிட்டு இருப்பான் இத வெச்சே அவனை ஈஸியா புடிச்சிடலாம்…. சீக்கிரம் தேட சொல்லு…”


“எஸ் சார்…” என்றபடி தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து வேனில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன்க்கு கால் பண்ணி அனைத்தையும் விளக்கமாக கூறி தேடும் படி சொன்னார் சத்தியா.


இதனிடையில் நவீனுக்கு ஒரு சந்தேகம், “சூர்யா அங்க தங்கி இருந்தா சரி, அப்புடி இல்லனா…” நவீன் தன் போனை ஆதித்யாவுக்கு டைல் செய்தார்…



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
சூர்யா பேஸ் கிடைச்சிருச்சு. இனி சூர்யா கிடைக்கணும். :oops: (y)
 
Top