Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 21

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 21

நவீன் சூர்யா தங்கியிருந்த ஹோட்டலை அடையவே மணி இரவு 8 ஆனது. நவீன் அங்கு செல்வதற்கு முன்னரே நவீனின் டீம் சூர்யா தங்கி இருந்த ரூமை அலசி ஆறாய்ந்திருந்தது. ஹோட்டல் மேனேஜரை லாபியில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்த சத்தியா இன்ஸ்பெக்டர் நவீன் வருவதை கண்டு நவீனிடம் விரைந்தார்

“சார்… சூர்யா ரூம்க்கு வந்து 5 நாள் ஆகுது அதாவது நவம்பர் 8 அன்னைக்கு நைட் 10 மணிக்கு வெளிய பொய் இருக்கான் சீ.சீ.டி.வி காமெரால பாத்து கன்போர்ம் பணியாச்சி அதுக்கு அப்புறம் அவன் வரல”...



“ஹ்ம்ம்… அவன் தங்கி இருந்த ரூம் எங்க இருக்கு?…”


“மேல… ரெண்டாவது மாடி, ரூம் நம்பர் 307…”


“ஹ்ம்ம்… வேற எதாவது எவிடென்ஸ்?…”


“சூர்யா ரூம்ல அவனோட பிங்கர்ப்ரிண்ட்ஸ் கிடைச்சி இருக்கு அதோட ஒரு டைரி கிடைச்சி இருக்கு… அவனுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கும் போல, அது 2020 டைரி முழுசா படிக்க நேரம் இல்ல சோ கடைசி பக்கத்த படிச்சன்…”


“எதாவது கிடைச்சிச்சா…”


“டேனியல்… ஒரே ஒரு பெரு,அப்புறம் அதே பேஜ்ல இன்னைய தேதி எழுதி இருக்கு, இத தவிர வேற எதுவும் இல்ல… இந்த பெயரை வெச்சி டேட்டா பேஸ்ல செக் பண்ணி பாத்தோம் கோடைகாணல்ல மொத்தம் 84 டேனியல் இருக்காங்க எப்புடி எல்லாரையும் ரீச் பன்னுறதுனு தெரியல…”


“அந்த டைரிய காட்டு…”


சத்தியா தன் கையில் இருந்த டைரியை நீட்டினான், நவீன் டைரியில் எழுதி இருந்த கடைசி பக்கத்தை கவனித்தார் டேனியல் அப்புறம் ஈன்றாய தேதி 13/11/2020 வேறேதுமில்லை…

குழப்பத்துடன் சூர்யா தங்கி இருந்த அறையை அடைந்தார்கள், டூ நாட் என்டர் ரிப்பானை விலகி ரூமினுள் நுழைந்தார்கள் அங்கு தடயம் சேகரித்து கொண்டிருந்தவர்களிடம்


“எதாவது இம்போர்ட்டண்ட் கிளு கிடைச்சிதா?…”


ஆஷா தன் முகத்தில் இருந்த மாஸ்க்கை இரக்கி “சில பிங்கர்ப்ரிண்ட்ஸ் கிடைச்சி இருக்கு அது சூர்யாவோடது தாணு கான்போர்மா சொல்ல முடியல, ஏன்னா நம்மகிட்ட சூர்யாவோட பிங்கர் ப்ரிண்ட்ஸ் சாம்பிள் இல்ல… அடுத்தது சூர்யா கிட்ட கொக்கேன் இருந்து இருக்கு… காபோர்டுல சிந்தி இருக்கு… அப்புறமா முக்கியமான எவிடென்ஸ் இது…” செவுத்தில் பித்தளை பாத்திரம் உரசிய தடம்.


“இது காப்பர் வெஸ்ஸல் இருந்துக்கான அடையாளம் சோ சூர்யாகிட்ட ஆசிட் இருக்கு…”


சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குறுக்கிட்டார் சார்… “ரூம் கிளீன் பண்ணவந்த பையன் பாத்து இருக்கான் நவம்பர் 8 சூர்யா ரூம்ல இல்லாத டைம்ல ஸ்பேர் கி யூஸ் பண்ணி உள்ள வந்து கிளீன் பண்ற அப்போ பாத்து இருக்கான், அவன் சொன்ன சைஸ் வெச்சி பாத்தா அது கொறஞ்சது 3 இல்ல 4 லிட்டர் அளவுக்கு ஆசிட் இருக்கும். அதுக்கு அப்புறம் 10ஆம் தேதி திரும்ப வந்து கிலீன் பண்ற அப்போ அங்க இல்ல.

சீ.சீ.டி.வி கேமெரால பாக்கும்போது சூர்யா ஒரு பேகு மாட்டிட்டு பொய் இருக்கான் அதுல கொடு பொய் இருக்கலாம்…”



“ஆசிட், கோக்கேன் டைரில இருந்த இணைய தேதி இதெல்லாம் வெச்சி பாத்தா அந்த டேனியல் இல்லனா அவர் பேமிலிய இன்னைக்கு கொள்ளணும் கூட அவன் பிளான் பண்ணி இருக்கலாம் இல்லையா?… என்றார் நவீன்


“இருக்கலாம் சார்…” என்றார் சத்தியா


“இன்னைக்கு கொல்லனும்னா மக்கள் நடமாட்டம் இல்லாதப்போ தான் கொள்ளணும் அப்போ 11 மணிக்கு மேல தான் கொள்ளணும், இதுக்கு முன்னாடி கொலை நடந்த டைம் நைட் 12ல இருந்து 12.30 க்குள்ள டைம் எக்ஸாக்ட்டா தெரியல நமக்கு சோ 11.30க்குள்ள அவனை புடிச்சாகனும்

நவீன் தன் கை கடிகாரத்தை பார்த்தார் நேரம் 8.30 நமக்கு இன்னும் 3மணி நேரம் தான் இருக்கு அதுக்குள்ள சூர்யாவா புடிக்கும்…”


“ஆனா 84 டேனியலையும் ரீச் பண்ணவே அந்த மூணு மணி நேரம் பாத்ததே சார்…” என்றார் சத்தியா


“நோ சத்தியா... எதாவது பண்ணியே ஆகணும் இல்லனா டேனியலையும் அவர் பேமிலியையும் இழந்துடுவோம்…”


சிறிது நேர யோசனைக்கு பிறகு “சூர்யா என்ன வெச்சி இருந்தான் பைகா கரா?…”


“சூர்யா கைல ஹெல்மெட் வெச்சி இருந்தான் கண்டிப்பா பைக் தான்…” என்றார் சத்தியா…


“என்ன பைக்னு எதாவது தெரிஞ்சிதா?…”


“இல்ல சார்… பைக் பார்க்கிங்ல கேமரா எதுவும் இல்ல. ஆனா சூர்யாக்கு இந்த ஹோட்டலுக்கு வழி காட்டுனது பக்கத்துல மைனரோட்ல இருக்க ஒரு கடைல வேலை செய்யுற ஒரு சின்ன பையன் பெரு முருகன், மேனேஜரை விசாரிக்கும்போது தெரிஞ்சிது, அந்த பையன் பாத்து இருக்குறதுக்கு நறிய சான்ஸ் இருக்கு, அந்த பையனை அழைச்சிட்டு வர சொல்லி மதனை அனுப்பி இருக்கேன்…”


“ஹ்ம்ம்… சீக்கிரம் மதனுக்கு போன் பண்ணி என்ன அச்சினு கேளு…”


சத்தியா தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்துக்கொண்டு ரூமை விட்டு வெளியில் ஓட மதன் ரூமினுள் நுழைந்தான்…


“எங்க அந்த பையன்?…” என்றார் சத்தியா


“தொ… வெளில நிக்கவெச்சி இருக்கன்…”


“உள்ள கூப்புடு…”


சிறுவன் முருகன் ரூமினுள் நுழைந்தான்.


“சத்தியா சூர்யாவோட போட்டோவை குடு… தம்பி இந்த ஆளை பாத்து இருகியா?…”


“பாத்து இருக்கன் சார்… ஒரு நாள் நம்ப கடைல தான் வந்து சாப்பிட்டு எனக்கு கூட 20ருபாய் குடுத்தார் சார்… என்கிட்டே ரூம் கேட்டாரு நான் தான் இந்த ஹோட்டலை காட்டுனேன் சார்…”


“தம்பி அவர் என்ன பைக் வெச்சி இருந்தார்னு பாத்தியா?…”


சிறிது நேர யோசனைக்கு பிறகு “என்பில்டு சார்… புல்லட்…. செம மாசா இருந்துச்சி சார்…”


“தம்பி அந்த வண்டி நம்பர் இல்ல கலர் இல்ல எதாவது அடையாளம் எதாவது நியாபகம் இருக்கா?…”


“சார் அது சாம்பல் கலர் சார்…. பழைய மாடல்… சௌன்டே செமயா இருந்துச்சி, புது வண்டிலலாம் அந்த மாறி சத்தம் வராது…” தன் தலையை சொரிந்த படி “நம்பர்…. ஹான் 1496 சார்…”


“எப்புடி சொல்லுற?…”



“என் பொறந்த நாள் சார் 14ஆம் தேதி வருஷம் 96 பாத்ததுமே சந்தோசமா இருந்துச்சி சார்… மேல இருக்க நும்பெறலாம் தெரியல…”


“சூப்பர் டா… தன் பாக்கெட்டில் இருந்த புர்ஸ்சை எடுத்து 2000ருபாய் குடுத்து, வெச்சிக்கோ டா…”


“வேணாம் சார்…”


“லட்சுமி யாரு டா…” முருகனின் கையில் பச்சை குதியிருந்தது


“தங்கச்சி சார்… அப்பா அம்மா இல்ல… நானும் தங்கச்சியும் மட்டும் தான்…”


“இந்தா இந்த காசை வெச்சிக்கோ…” காசை புன்னகையோடு வாங்கிக்கொண்டு புறப்பட்டான்…


“செம கிளு சத்தியா, கிரே கலர் புல்லட் நம்பர் 1496 நோட் பணிக்கோ பக்கத்துல இருக்க எல்லா சிக்னல் கேமெராலையும் செக் பண்ண சொல்லு... சீக்கிரம்…”


சத்தியா வேனுக்கு விரைந்தார்.


அரை மணி நேரத்துக்குள்ள சூர்யாவின் பைக்கை கேமராவில் கண்டறிந்தார் ஆதித்யா, 7ஆம் தேதி சூர்யா பக்கத்தில் இருக்கும் சர்ச்க்கு சென்றியிருப்பதை கண்டு புடித்து அந்த சர்ச்க்கு விரைந்தார்கள். நவீன் சர்ச் பதறியரிடம் நடந்ததை சொல்லி விசாரணை மேற்கொண்டார் சூர்யாவின் போட்டோவை காண்பித்து


“இவனை பாத்து இருக்கீங்களா?...”


“இல்ல நவீன்…”


“உங்க சர்ச்ல டேனியல்னு யாராவது இருக்காங்களா?…”


“ஒரு நிமிஷம் இருங்க…”


பாதர் தன் உதவியாளர் ஒருவரிடம் சர்ச் மெம்பெர்ஸ் விபரங்கள் அடங்கிய ரெஜிஸ்டெரை கொண்டுவர சொன்னார், ரெஜிஸ்டெரை புரட்டிய அவர்


“மொத்தம் எங்க சர்ச்ல 6 டேனியல் இருக்காங்க அவங்களோட அட்ரஸ் இதுல இருக்கு, இது உங்களுக்கு உதவியா இருக்கும் இத வெச்சி எப்புடியாச்சும் டேனியல் மற்றும் அவர் குடும்பத்தை காப்பாத்துங்க, கர்த்தர் எப்போதும் உங்களுக்கு துணையா இருப்பார்…”


“டீம்… நாம இப்போ 6 டீமா ஸ்ப்ளிட் ஆகி ஒவொருத்தர் ஒவொரு அட்ரெஸ்க்கு போகலாம் எல்லா பேமிலியும் ஸெபா இருக்காங்களான்னு செக் பண்ணுங்க உடனே எனக்கு இன்போர்ம் பண்ணுங்க குயிக்…. சப் இன்ஸ்பெக்டர்ஸ் எல்லாகிட்டையும் பிஸ்டல் இருக்குல?…”


“எஸ் சார்…”


கான்ஸ்டபிள் மூவரை பார்த்து “உங்க மூணு பேருல யாருக்கு பிஸ்டல் ஹாண்டில் பண்ண தெரியும்?…”


“எனக்கு தெரியும் சார...” என்றார் ரிஷி.


“சத்தியா வேன்ல இருக்க ஒரு பிஸ்டல்ல எடுத்து ரிஷி கிட்ட குடு…”


கான்ஸ்டபிள் மூவரை பார்த்து “நீங்க மூணு பெரும் இந்த அட்ரஸ் போங்க… அர்ஜுன், ஆதித்யா நீங்க ரெண்டு பெரும் இந்த அட்ரஸ்... ஜெய், பிரேம் நீங்க இந்த அட்ரெஸ்.... சத்தியா நீ இந்த அட்ரஸ்… அப்புறம் நா இந்த அட்ரஸ் போறன் முக்கியமா நீங்க அந்த அட்ரஸ் ரீச் பண்ணதும் லோக்கல் ஸ்டேஷனுக்கு இன்போர்ம் பண்ணி இன்ணைக்கு அந்த பேமிலிக்கு ப்ரொடெக்ஷன் குடுக்க சொல்லுங்க, சர்ச்ல ஒர்க் பண்ணுறவங்க பைக் எடுத்துக்கோங்க சீக்கிரம் எனக்கு அப்டேட் பண்ணுங்க…”


நவீன் குறிப்பிட்ட அனைவர்களும் விரைந்தகர்கள்....


“காவ்யா நீங்க சூர்யாவோட பைக் இப்போ எங்க இருக்குனு ஸ்பாட் பண்ண ட்ரை பண்ணுங்க அப்புறம் லோக்கல் போலீஸ்க்கு இன்போர்ம் பண்ணி எல்லா வண்டியையும் செக் பண்ண சொல்லுங்க…”



“எஸ் சார்…”


நவீனும் தான் வந்த ஜீப்பில் புறப்பட்டார்… நேரம் கடந்தது


நேரம் இரவு 10.45

நவீன் சென்ற அட்ரஸில் இருந்த டேனியலை விசாரித்துக்கொண்டு இருக்கும் போது நவீனின் போன் ஒலித்தது…


“சார் நான் ஜெய் பேசுறன்…”


“சொல்லு…”


“சார் இந்த அட்ரெஸ்ல இருந்த டேனியல் வீடு பூட்டி இருக்கு, பக்கத்துல விசாரிச்சதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் கிளம்புனதா தெரியுது… அப்புறம் முக்கியமான விஷயம் அவுங்க ஒரு வாரமா வீட்டை விட்டு வெளியே வரலையாம் யாரோ ஒரு நபர் மட்டும் தான் அப்போ அப்போ வந்து போறதா சொல்லுறாங்க…”


“ஜெய் சீக்கிரம் அவுங்க என்ன கார்லா போனாங்கனு கண்டுபுடி, எதாவது ஐடென்டிபிய் பண்ணி காவ்யா கிட்ட இன்பார்ம் பண்ணி தேடச்சொல்லு, இப்போ நீ இருக்க அட்ரஸ்ச எல்லாருக்கும் அனுப்பி எல்லாரியும் அங்க வர சொல்லு சீக்கிரம்….


இரவு 11.00 மணி காணாமல் போன டேனியலின் வீட்டிற்கு அனைவரும் கூடினர், கதவை திறந்து இவர்கள் காணாமல் போனதுக்கு சூர்யாதான் காரணமா என்று உறுதிப்படுத்தும் பணியில் அனைவரும் இறங்கினர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது அதே பைபிள் தரையில் அதே வித கோலங்கள் சுவற்றில் அறையப்பட்ட பூனை தலைகள்.


“ஷீட்…. தூக்கிட்டான்…” நவீன் கத்தும் சத்தம் பக்கத்து வீட்டிலுருக்கும் அனைவர்க்கும் கேக்கும் அளவுக்கு இருந்தது.


“ஜெய்… கார் டீடெயில்ஸ் கிடைச்சிதா?…”


“எஸ் சார்… சுசிகி டிசையர்… நீல கலர்… TN57Z பழனி ரெஜிஸ்டரேஷன் நம்பர்6161…”


“காவ்யா சீக்கிரம்…”


பூம்பாறை ஊருக்கு செல்லும் வழியில், குணா குகையை தாண்டி ரோட்டிலிருந்து ஒற்றை அடி பாதை செல்லும் வரை சென்று காரை நிறுத்தி இறங்கி நடக்க அரமித்தனர் டேனியல் குடும்பமும் சூர்யாவும், தேவையான அனைத்தையும் முன்னரே ஏற்பாடு செய்து வைத்திருந்தான் சூர்யா.


“டேனியல்... இந்தாங்க இந்த மண்வெட்டியை வெச்சி நீங்களும் உங்க மனைவியும் சேர்ந்து தரைல அதோ அந்த இடத்துல பள்ளம் தோண்டுங்க 5அடி ஆழம் 3அடி அகலம்…”


சிறிதும் யோசிக்காமல் தோண்ட தொடங்கினார்கள்… 6 நாட்களாக உண்ணாமல் மெலிந்த தேகத்தோடு ஒட்டிய கண்களோடு இருந்தார் டேனியல். சூர்யா தரையில் அமர்ந்து அவன் வைத்திருந்த பைபிளை படிக்கச் துடங்கினான்…

25 நிமிடங்களுக்கு பிறகு தோண்ட முடியாமல் டேனியலின் மனைவி மயக்கமாகி கீழயே விழுந்து விட்டால், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் டேனியல் தொடர்ந்து தோண்டிக்கொன்டே இருந்தார், இதை பார்த்த சூர்யா டேனியலின் மனைவியின் கையை பிடித்து இழுத்து தூரம் போடு விட்டு பள்ளம் தோண்ட ஆரமித்தான்.

“கடைசியா டேனியலோட கார் 11.20க்கு குணா குகைய தாண்டுன சீ.சீ.டீ.வீ புட்டேஜ் மட்டும் தான் இருக்கு அதுக்கு அப்புறம் எதுவும் இல்ல சார்…” என்றால் காவ்யா நவீனிடம்.



“அப்போ சீக்கிரம் அங்க போகலாம்… சத்தியா பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணி நறிய போர்ஸ் ரெடி பண்ணு…”


“சார்… நாம இறங்கி தேடுற அளவுக்கும் அது சின்ன இடம் இல்ல, இரங்கி தேட ஆரமிச்சா நாம முழுசா தேடி முடிக்கவே ஒரு வாரத்துக்கு மேல ஆகும் அந்த அளவுக்கு அது பெரிய ஏரியா… என்றால் காவ்யா


அப்போ போர்ஸ் இரக்கி தேடுறது அந்த அளவுக்கு வேலைக்கு ஆகாது வேற என்ன வழி இருக்கு… வேற என்ன வழி இருக்கு… டேனியல் குடும்பத்தை காப்பாற்ற வேற வழிகளை தேடி அலைந்தது நவீனின் மனம்.


பள்ளம் தயார் நிலையில் இருந்தது… சூர்யா எழுந்து சென்று தான் கொண்டுவந்திருந்த பெரிய பிளாஸ்டிக் பேப்பரை டிரம்க்கு அருகிலே விரித்து டானியேலை அமர சொன்னான், நடக்க முடியாமல் நடந்து அமர்ந்தார் டேனியல், டேனியல் மனைவி மயங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறாள். தான் கொண்டு வந்திருந்த கோக்கேன் கலந்த தண்ணியை டேனியலுக்கு குடுத்தான், குடித்த சில வினாடிகளிலேயே சுருண்டு விழுந்தார் டேனியல். டேனியலின் கன்னத்தை தட்டி “டேனியல்…. டேனியல்….” டேனியலின் முகத்தில் எந்த அசைவுமே இல்லை. சூர்யா காரை நோக்கி நடந்து காரின் டிக்கியில் டேனியல் குடும்பத்துக்கே தெரியாமல் கொண்டுவந்திருந்த டிரம்மை வெளியில் எடுத்தான், காரில் ஏற்கனவே மயக்கத்தில் சுயநினைவை இழந்த நிலையில் இருக்கும் டேனியலின் மகளை தூக்கி தோலில் போடு கொண்டு தன் பையை மாட்டிக்கொண்டு டிரம்மை ஒரு கையில் தூக்கிக்கொண்டு டேனியல் இருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரமித்தான்.


ஜி.பி.ஆர்.எஸ்…..

காவ்யா அந்த கார்ல ஜி.பி.ஆர்.எஸ் இருக்கு செக் பண்ணி பாத்தீங்களா…

காவ்யா காரை பற்றி ஆராய தொடிங்கிய சில வினாடிகளிலேயே

எஸ் சார்... இது லேட்டஸ்ட் மாடல் கார் சோ கண்டிப்பா இருக்கு, கார்லா இருக்க ஜி.பி.ஆர்.எஸ் மூளையுமா கார் இப்போ இர்ருக்குற இடத்தை லாக் பண்ணிட்டேன் லொகேஷன் 10°13'12.3"N 77°27'16.7"E…

சீக்கிரம் போலாம்…


சூர்யா டேனியலின் அருகில் சென்று தன் தோலில் இருக்கும் டேனியலின் மகளை தரையில் வீசிவிட்டு தான் கொண்டு வந்த டிரம்மை பள்ளத்தில் வைத்தான். தன் பையில் இருந்த ஆடிடை பத்திரமாக டிரம்மினுள் நிரப்பின்னான். தன் பையில் இருக்கும் பெரிய கத்தியை எடுத்து டேனியலின் அருகில் சென்று தன் கண்களை மூடி வானத்தை பார்த்து மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.

டேனியல் முகம் தரையை பார்த்த படி கிடந்தார், சூர்யா தன் முட்டிக்காலை டேனியலின் முதுகில் ஊனி முடியை பிடித்து டேனியலின் தலையை தூக்கி கழுத்தை பொறுமையாக அறுத்தான் தரை எங்கும் ரத்தம் டேனியல் உடல் துடித்தது எதையுமே பொருட்படுத்தாமல் தலையை தனியே எடுத்தான் சூர்யா.


30 நிமிட பயணத்துக்கு பிறகு நவீனும் அவர் டீமும் சம்பவ இடத்தை அடைந்தனர்.வேனை தூரமாகவே நிறுத்தி விட்டு நவீன் கையில் துப்பாக்கியுடன் பதுங்கி அந்த இடத்தை நோக்கி முண்ணேறினார். நீல கலர் கார் நின்றுகொண்டிருந்தது அனேகமாக டேனியல் வந்த காரகத்தான் இருக்க முடியும் , காரை நெருங்கி நம்பரை உறுதி செய்துகொண்டு வேனில் இருந்தவர்களுக்கு செய்கை காட்டினார் சத்திய ஜெய் அர்ஜுன் ரிஷி நால்வரும் அவர்கள் லோட் செய்யப்பட்ட துப்பாக்கியை பிடித்துக்கொண்டு இரங்கினர். நவீன் இடத்தை சுற்றி வளைக்க சொல்லி சைகை காட்டினார்.


தன் முகத்தில் இருந்த ரத்தத்தை கத்தி வைத்திருக்கும் வலதுகையால் துடைத்தான், அவன் முகம் முழுவதுமாய் ரத்தம், தன் கையில் இருந்த தலையை தூக்கி டிரம்மில் எரிந்தான் சூர்யா.

டேனியலின் உடம்பை சிறு சிறு துண்டுகளாக வெட்டி டிரம்மில் எரிந்தான். பெருமூச்சு விட்டபடி சென்று டேனியலின் மனைவியை தலை மயிரை பிடித்து இழுத்து வந்தான் பேப்பரில் போடு விட்டு அருகில் இருந்த கத்தியை எடுத்து ஒரே வெட்டு தலை துண்டாய் வந்தது டிரம்மில் எரிந்தான், அவளையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி டிரம்மில் எரிந்தான். அடுத்து டேனியலின் மகள். கத்தியை கீழாய் போடு விட்டு டானியலின் மகளின் அருகில் சென்று குத்துகால் இட்டு அமர்ந்து குழந்தையையே பார்த்தான் தன் கன்னத்தில் கைகளை ஊன்றி.


தூரத்தில் இருந்து தரையில் அதே வித்தியாசமான கோலம் வரைந்திருப்பதை கண்டு இடத்தை உறுதிசெய்துகொண்டார் நவீன்.

சூர்யாவை தேட தொடங்கினார் எங்கு தேடியும் சூர்யா இருப்பதற்கான அறிகுறி இல்லை. அந்த இடத்தை நெருங்க நெருங்க அவருக்குள் ஏதோ இனம் புரியாத பயம் “டேனியல் பேமிலிக்கு என்ன ஆச்சி”… “ஒன்னும் ஆகியிருக்கக்கூடாது…” “ஒன்னும் ஆகியிருக்காது..” தனுக்கு தானே சொல்லிக்கொண்டு மூணெறினார்.


இதயம் படபடத்தது. அவர் இதய துடிப்பை உணர்ந்தார். மூச்சி காற்று பலமாக வீசியது. தரையில் அதே கோலம் , சூர்யாவை காணவில்லை,


“கொன்னுட்டான இல்ல தப்பிச்சிட்டாங்களா,”


“கார் இங்க தான் நிக்குது அப்போ சூர்யா இங்க தான் இருக்கானா”


தனக்குத்தானே கேள்விகள் எழுந்தன. தரையில் மணல் மேடை கண்ட நவீனுக்கு கை கால்கள் வெலவெலத்து.


“பாய்ஸ்…” ஒரே குரலில் அனைவரும் நவீனை நெருங்கினார்கள்


“சீக்கிரம் அந்த இடத்தை தோண்டுங்க…”


தோண்ட ஆரமித்த சிலநிமிடங்களிலே டிரம் தட்டுப்பட்டது, நடந்ததை அனைவரும் புரிந்துகொண்டனர், டேனியல் குடும்பம் அசிடில் கரைந்துகொண்டிருந்தது சூர்யா தப்பித்துவிட்டான். சத்தியா வேணில் இருபவர்களுக்கு தகவல் அளிக்க அனைவரும் சம்பவம் நடந்த இடத்தை அடைந்தனர்.


நவீன் தன் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தும் சூர்யாவை தவறவிட்டதை நினைத்து தன்னை தானே கடிந்துகொண்டிருந்தார். “சரி இப்போ இதுக்கு நேரம் இல்லை சூர்யாவை புடிச்சி ஆகணும்…” தனுக்கு தானே சொல்லிக்கொண்டு


“ஆஷா ஆஃப்ராக்ஸிமெட்டா எப்போ நடந்திருக்கும்னு சொல்லமுடியுமா?…”


ஆராய்ச்சிக்கு பிறகு “11.30ல இருந்து 12.00குள்ள பாடி இப்போ தான் கரைய ஆரமிச்சிருக்கு…”


“ஆதித்யா…”


“சார்…”


“சூர்யா தப்பிச்சிட்டானு எல்லா ஹைவே செக்கபோஸ்ட்க்கும் தகவல் அனுப்புங்க, எல்லாவண்டியும் தரவா செக் பண்ண சொல்லுங்க… உடனே எல்லா லோக்கல் போலிசையும் வர சொல்லி இந்த காட்ட முழுசா சர்ச் பண்ண சொல்லுங்க… ரென்டெ ஆப்ஷன் தான் ஒன்னு தப்பிச்சி மைனரோடுக்கு பொய் இருக்கனும் இல்ல இந்த காட்டுக்குள்ளயே பதுங்கி இருக்கனும், சோ சீக்கிரம்…”



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
அய்யோ
அவ்வளவு கஷ்டப்பட்டு ட்ரேஸ் செஞ்சு நவீன் வந்தும் டேனியல் பேமிலியை காப்பாற்ற முடியலையே
சூர்யா படுபாவி தப்பிச்சுட்டானே
 
கசாப்பு கடைக்காரன் மாதிரி டேனியல் குடும்பத்தை அறுத்து வீசுறானே சூர்யா படுபாவி
குழந்தையையும் கொன்னுட்டானா?
 
கதையோட தலைப்புக்கு ஏத்தது போல சூர்யா தன் குடும்பத்தை உயிரோட கொண்டுவந்துடுவான். ஆனா கடைசில ஜெயிலுக்கு போவான்னு தோணுது. {ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட்}
 
Top