Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்(ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 6

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 6/21

“டேய் மணி…. ரூம்நம்பர் 201 சார்க்கு காட்டு…”

அமைதியாக விளையாடிக் கொன்டே வழி காட்டிய சிறுவனை பின் தொடர்ந்தான் சூர்யா “சார் இதன் ரூம்… இந்தாங்க சாவி…”

“தம்பி இங்க சர்ச் எதாவது இருக்கா…”

“இருக்கு சார் 5 கீ.மீ போகணும் இங்கேயிருந்து நேரா மைனரோடுக்கு போயிடு தெற்கால போய்ட்டே இருந்தா மலை மேல ஒரு சர்ச் தெரியும்.. இன்னும் கொஞ்சம் தூரம் போன இன்னும் நறிய சர்ச் இருக்கு சார்…”

“சரி…”

கதவை சாத்திவிட்டு ஃபேக்கில் இருந்த ஆசிடை எடுத்து கபோர்டில் வைத்து தான் கொண்டு வந்திருந்த பூட்டினாள் பூட்டி சாவியை பான்ட் பின் பாக்கெட்டில் வைத்து கொண்டான்.




நேரம் காலை 10.00 மணி ஸ்டேஷனுள்லே நுழைந்தார் இன்ஸ்பெக்டர் நவீன் தன் இருக்கையில் அமர்ந்தார். ஸ்டேஷன் வழக்கமான பரபரப்பில் இருந்தது.

“ஏட்டு…. ரிப்போர்ட் கேட்டு இருந்தனே என்ன ஆச்சி…”

“சார் உங்க டேபிள்ல இருக்கு…”

“ஹ்ம்ம்... ஒரு டீ ஒரு சிகிரெட் சொல்லு…”

“சரி சார்…” நகர்ந்தார் ஏட்டு.

தன் டேபிளில் இருந்த பைலை ஆராந்து கொண்டிருந்தார்..

“சார்…”

“சொல்லு சத்திய…”

“டி.என்.ஏ கான்போர்ம் பணியாச்சி அலெக்ஸ் அவர் பொண்டாட்டி அவர் குழந்தை தான் சார்…. சார் அப்புறம் அலெக்ஸ் வேலை செஞ்ச கம்பெனி மேனேஜர் அவுரு டீம் மெட்ஸ் வந்து இருக்காங்க சார்..”

“மேனேஜரை உள்ள அனுப்பு…

45 வயது மிக்க ஒருவர் வந்தார் நீட் க்ஷேவ், இன் ஷர்ட், ஷூ என இருந்தார். இன்ஸ்பெக்டர் நவீனிடம் கை நீட்டி “சார் அம் பிரபாகர் மேனேஜர் ஆப் இன்போசிஸ் சொல்லுங்க சார் நா என்ன சொல்லணும்…”

அலெக்ஸ்ன் பேமிலி போட்டோவை டேபிளில் வைத்தார் இன்ஸ்பெக்டர் நவீன்…

“இவுரு அலெக்ஸ் எங்க கம்பெனில தான் அசிஸ்டன்ட் மானேஜராக வேலை பாத்தார்… சொல்லுங்க சார் எதாவது பிரேசனைய…”

“அலெக்ஸ் அவர் பொண்டாட்டி கொழந்தை மூணு பேருமே டெட்…புலியூர் போரெஸ்ட் ஏரியால…”

“அய்யயோ எப்புடி சார்… கொலையா?…”

“மேபீ… இன்வெஸ்டிகேட் பண்ணிக்கிட்டு இருக்கோம்…”

“சார் அவர் வேலைய விட்டு 3 மாசம் ஆச்சி சார்… நா அந்த ஆபீஸ் ஜாயின் பணியே 5 மாசம் தான் ஆகுது சோ அந்த அளவுக்கு இவுர பத்தி எனக்கு எதுவும் தெரியது சார்…”

“பாரெஸ்டில் இருந்த காரின் போட்டோ காட்டினார்…”

“ஆமாம் சார் இது அவர் கார் தான்…” என்றார் அலெக்ஸின் டீம் மெட்.

“சார் அலெக்ஸ் லாஸ்ட் 6 மண்த்ஸ்சாவே ஒழுங்கா பேர்போர்ம் பண்ணாததுனால நாங்களே அவரை வேலையை விட்டு தூக்கலாம்னு தான் சார் இருந்தோம் ஆனா அவுரே வேலை புடிக்கலனு ரிசெய்ன் பண்ணிட்டாரு…” என்றார் மேனேஜர்.

“சார் அவரு செம டெடிகேட்டட் எம்ப்லாய் சார்… அவர் பையன் இறந்ததுல இருந்து ரொம்போ ஸ்ட்ரெஸ் ஆகி யாருகிட்ட என்ன பேசுறோம்னு தெரியாம எல்லார்கிட்டயும் கத்துவார் அதுனாலே லாஸ்ட் 2 மண்த்ஸ்சாவே யாரும் அவரோட அதிகமா வெச்சிக்க மாட்டோம்…” என்றார் இன்னொரு டீம் மெட்….

“அவருக்கு நண்பர்கள்னு யாரும் எங்களுக்கு தெரியல சார்…”

ஒன்றன் பின் ஒன்றாக அனைவரையும் விசாரித்தார் இன்ஸ்பெக்டர் நவீன்.

“சத்தியா... அவுங்க கிட்ட அட்ரஸ் லாம் வாங்கி வெச்சிக்கோ தேவ பட்டா வரணும்னு சொல்லி அனுப்பு...”

“சரி சார்…”

“சார்… பாரென்சிக் ரிப்போர்ட், போட்டோஸ் எல்லாமே இந்த பைல்ல இருக்கு சார்…’’

“ஏட்டு... சிகிரெட் வாங்கிட்டு வர சொல்லுய்யா கடுப்பா இருக்கு…”

“சத்தியா… அந்த போட்டோல இருந்த அம்மாவ விசாரிக்க சொன்னனே என்ன ஆச்சி…”
“சார் அவுங்க சென்னைல அவுங்க தங்கச்சி வீட்டுல இருக்காங்களாம் ரீச் பண்ணியாச்சி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க சார்…”

“அவுங்ககிட்ட விழியத்தை சொல்லிடீங்களா…”

“சொல்லியாச்சு சார்… அவுங்க அந்த லேடியோட அம்மாவாம்…”

“சரி போ…”

இன்ஸ்பெக்டர் நவீன் வந்திருந்த ரிப்போர்ட்டை ஆராய்ந்து கொண்டிருந்தார் நேரம் சென்று கொன்டே இருந்தது… பாக்கெட்டில் இருந்த சிகிரெட்டுகள் தீர்ந்துக்கொன்டே இருந்தது. மதியம் உணவு முடிந்தது மணி 4.00 இருக்கும்,

“சார்… எலிசபெத் அம்மா வந்து இருக்காங்க சார்…”

“வர சொல்லு…”

“வாங்க மா உக்காருங்க…”

இன்ஸ்பெக்டர் நவீனின் பின்னால் இருக்கும் போர்டில் எலிசபெத் பேமிலி போட்டோ மற்றும் அவர்களின் சடலங்களின் போட்டோக்களை பார்த்த எலிசபெத்தின் அம்மா தன் முந்தானையை வெயில் திணித்தவாறு அழுதார்.

“அழுவாதீங்க மா…” கண்களை துடைத்து கொண்டு, “சார் சேத்தது அவுங்கதான்னு கான்போர்ம் பண்ணிடீங்களா…”

“டி.என்.ஏ டெஸ்ட் மூலமா கான்போர்ம் பணியாச்சி அவுங்க தான்…”

“மீண்டும் அழ தொடங்கினார்…”

“அம்மா அழுவாம சார் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க…”

“சத்தியா... கம்முனு இரு…”

“கண்களை துடைத்துக்கொண்டு சொல்லுங்க சார் நா என்ன சொல்லணும்…?”

“கடைசியா எப்போ அவுங்களை பாத்தீங்க?…”

“5 மாசத்துக்கு முன்னால சார்… அதுக்கப்புறம் பாக்கல சார்… நா என் தங்கச்சி வீட்டுக்கு போய்ட்டேன், அப்போ அப்போ போன் மட்டும் தான், அதுவும் நானா போன் செஞ்சா தான் உண்டு…”

“ஏன்?…”

“என் பேரன் எதிர்பாராத விதமா இறந்துட்டான்…”

“எப்புடி?…”




இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!


அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்றுமுழு நாவலையும் உடனடியாக படிக்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
 
மிஸ் ஆனவுங்க வேற அலெஸ் வேற ஆன இது ரெண்டுக்கும் சூர்யா கூட தொடர்பு இருக்கும் போலவே....
 
இரண்டு குடும்பத்துலையும் குழந்தைகள் இறந்து போய் இருக்கு. அதன் பின் ஒரு குடும்பம் கொலை செய்யப்பட்டிருக்கு. ஒரு குடும்பம் காணாமல் போய் இருக்கு. கண்டிப்பா சூர்யாக்கு தொடர்பு இருக்கு. அதுவும் சர்ச்சுக்கு போனவங்களைத்தான் கடத்தி கொலை பண்ணி இருப்பான்னு தோணுது.
 
இரண்டு குடும்பத்துலையும் குழந்தைகள் இறந்து போய் இருக்கு. அதன் பின் ஒரு குடும்பம் கொலை செய்யப்பட்டிருக்கு. ஒரு குடும்பம் காணாமல் போய் இருக்கு. கண்டிப்பா சூர்யாக்கு தொடர்பு இருக்கு. அதுவும் சர்ச்சுக்கு போனவங்களைத்தான் கடத்தி கொலை பண்ணி இருப்பான்னு தோணுது.
vaera level ippudi ellathaiumae kandupudichi ean en pozhapuku olai vaekureenga :p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top