Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்(ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 7

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 7/21

“கடைசியா எப்போ அவுங்களை பாத்தீங்க?…”

“5 மாசத்துக்கு முன்னால சார்… அதுக்கப்புறம் பாக்கல சார்… நா என் தங்கச்சி வீட்டுக்கு போய்ட்டேன், அப்போ அப்போ போன் மட்டும் தான், அதுவும் நானா போன் செஞ்சா தான் உண்டு…”

“ஏன்?…”

“என் பேரன் எதிர்பாராத விதமா இறந்துட்டான்…”

“எப்புடி?…”



“அவுங்க வீட்டுக்கு பின்னாடி இருக்க கிணத்துல தவறி விழுந்து இறந்து போய்ட்டான்…”

கண்கலங்கியபடி “அன்னைக்கு நா கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருந்தா என் பேரன் இறந்து இருக்க மாட்டான்… கண் எதிரே தான விளையாடிட்டு இருக்கான் விலாடட்டுமேனு விட்டேன், என் பொண்ணு அப்போவே சொன்னா, அம்மா கெணத்துக்கிட்ட தம்பி போறான் புடிங்கனு, கிண்ணத்தின் செவுரு அவனுக்கென்ன எட்டவா போகுதுனு அலட்சியமா இருந்துடன்… கீழ கிடந்த கல்லு மேல ஏறி குழந்தை கேனத்துக்குள்ள விழுந்துடுச்சி… இதுக்கு நான் தான் காரணம்னு மாப்ள என்கிட்ட பேசறது கூட இல்ல என் பொன்னும் தான்… அதுனால அவங்களுக்கு எதுக்கு இன்னும் பாரமா இருக்கணும்னு என் தங்கச்சி வீட்டோட போய்ட்டேன்…”

“சரி உங்க பொண்ணுக்கோ இல்ல மாப்புளைக்கோ பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா?…”

“இருக்காங்க, ஆனா அந்த அளவுக்கு நெருக்கம்னு யாருமே இல்ல…”

“ஆபீஸ் பிரண்ட்ஸ்சோ இல்ல ஸ்கூல், காலேஜ் பிரண்ட்ஸ்சோ யாராச்சும்னு?…” யோசித்து விட்டு “இல்ல சார்…”

“சரி கொழந்த இறந்ததுக்கு அப்புறமோ இல்ல முன்னாடியோ யாராச்சும் அவுங்ககூட நேருக்கமாயிருந்தாங்களா?…”

“தெரியலையே சார்…” யோசித்த பிறகு “சார் அவுங்க சர்ச்ல யாரையோ பாத்ததாகவும், அவுங்க பேசுறது கொஞ்சம் ஆறுதலா இருந்துதுன்னும், அவுங்கள வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடத்தவும் என் பொண்ணு ஒரு வாட்டி சொல்லி இருக்கா…”

“எந்த சர்ச்?…”

“செயின்ட் தாமஸ் சர்ச்…”
“அவுங்க ஆனா இல்ல பெண்ணா... வேற ஏதாச்சும் டீடெயில்ஸ் தெரியுமா?…”

“இல்ல எனக்கு ஏதும் தெரியாது…”

“சரி... உங்க போன்ணுகிட்டையோ இல்ல மாப்புளை கிட்டையோ எதாவது சேஞ்சு தெரிஞ்சிதா?…”

சிறிது நேரம் யோசனைக்கு பிறகு “ஆமா சார்... என்ன என் தங்கச்சி வீட்டுக்கு போகும்படி வார்பூர்த்தனா நா காரனம் கேட்டேன் எவளோ கேட்டும் சொல்லல, நறிய நாள் இப்புடியே சொல்லிக்கிட்டே இருந்தா நா கேக்கல, அப்போ ஒரு நாள் நானும் என் பொன்னும் கார்ல போயிடு இருக்கும்போது எனக்கும் என் பொண்ணுக்கும் சண்டை முத்திடுச்சி, அப்போ அவ டோட்டலா வேற யாரையோ போல பிஹவ் பண்னா, எனக்கு ரொம்போ பயமா ஆயிடுச்சி, பயங்கரமா கத்துனா அவளோட குரல் யாரோ ஆம்புல குரல் மாரி இருந்துது கத்திடு என்ன அங்கேயே இறக்கி விட்டுட்டு போய்ட்டா, அந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் நா ரொம்போ மனசு உடைஞ்சி என் தங்கச்சி வீட்டுக்கே போய்ட்டேன்…”

“சார் இது கொலையா இல்ல தற்கொலையா…”

“கொலை மா... அதுனால தான் எதாவது கிளு கிடைக்குமான்னு அவுங்களுக்கு தெரிஞ்சவங்கள பத்தி இவளோ நேரம் விசாரிச்சிட்டு இருந்தன்… நீங்க கிளம்புங்க உங்களுக்கு வேற எதாவது தெரிஞ்சா எப்பொவேணும்னாலும் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க” தன் போன் நம்பர் அடங்கிய கார்டை கொடுத்தார் நவீன்.

“சரி சார்…”

“பாடி நாளைக்கு காலைல எல்லா பார்மாலுடிஸும் முடிஞ்சி வீட்டுக்கு வந்துடும் மா…” அழுதவாறு கிளம்பினார் எலிசபெத்தின் அம்மா. நவீன் மீண்டும் தன் வேலையில் மூழ்கினார்.

அடுத்த நாள் காலை 10.00மணி, ஸ்டேஷனில் நவீன் தடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கையில் ஏட்டு ஓடி வந்து “ஐய்யா... AC ஐய்யா வராரு…” அசிஸ்டன்ட் கமிஷனர் மணிவேல், யாருக்கும் மரியாதையே குடுக்கமாட்டார் வாயா… போயா…. மீறினால் அடி… எந்த நேரமும் கடுப்பாக இருக்கும் ஒருவர் வயது 52. இன்ஸ்பெக்டர் நவீன் நின்றுகொண்டிருக்க நவீனின் இருக்கையில் அமர்ந்தார் அசிஸ்டன்ட் கமிஷனர் மணிவேல்

“என்னய்யா... கேஸ் எந்த லெவல்ல இருக்கு?…”
.
“இப்போ தான் சார் ஸ்டார்ட் பண்ணி இருகன்…”

“ஏது... இப்போ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கியா?... யோவ் என்ன பாத்தா எப்புடி தெரியுது நேத்தே மீட்டிங்ல சொன்னன் கேஸ்ஹ சீக்கிரமா முடியானு, மேலிடத்திலிருந்து என் தாலிய அருகுரானுங்கய… எலெக்க்ஷன் டைம் வேற… CM சைடுல இருந்து வேற பிரஷர்... நீ இன்னனா இப்போ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கன்னு சொல்லுற… தா... உங்ககிட்டலாம் மாட்டிகிட்டு தாலி அருக்கனும்னு என் தலைல எழுதி இருக்கு போல… ரெண்டு நாலா என்னதான்யா கிழிச்ச…”

கோவத்தில் முகம் சிவந்தது இதுவரை தான் சேகரித்த தடையங்களை வைத்து நடந்ததை விளக்க முயல்கிறார், தன் இருக்கையின் பின்னல் இருந்த போர்டில் ஒட்டப்பட்டிருந்த போட்டோக்கலில் இருந்து ஆரமிக்கிறார்…

முதலில் ஒரு போட்டோவை காட்டி “பாடி இருந்த இடம் புலியூர் பாரஸ்ட் ஏரியா, இந்த பாரேஸ்ட்டோட சுற்றளவு 6கீமீ, இந்த காடு அத்தியூர் அரசூர்ன்ற ரெண்டு கிராமத்துக்கு நடுவுல தான் இருக்கு, 1800கல்லுல பிரிட்டீஷ் அவுங்களோட வர்த்தகத்துக்காக போடப்பட்ட ரோடு தான் அது, 1912ல நடந்த ஒரு பேரீச்சனைனால பிரிட்டீஷ் அந்த சாலைவழி போக்குவரத்தை கைவிட்டுட்டாங்க, இந்த ரெண்டு கிராமத்துல இருக்க மக்களுமே இந்த ரோட யூஸ் பண்ணமாட்டாங்க, ஏன்னா இது அவுங்களுக்கு சுத்துவழி அதுனால காட்டுக்குள்ளயே இருக்க வழிய தான் யூஸ் பண்ணுவாங்க அவுங்கள தவிர வேற யாருமே இந்த வழி யூஸ் பண்ண மாட்டாங்க… பெரும்பாலும் சிட்டில இருக்கவங்களுக்கு இதுமாதரி ஒரு ரோடு இருக்குறதே தெரியாது, இவென் பஸ் கூட காட்டோட குறுக்கு வழில தான் போகும்… இந்த காட்டுக்குள்ள யாருமே பொதுவா வரமாட்டாங்க யாராச்சும் தேன் எடுக்க மட்டும் தான் வருவாங்க அப்புடி தேன் எடுக்க வந்தவனோட இன்போர்மஷன் வெச்சி தான் அங்க பாடி கடக்குறதே தெரிஞ்சிது…”

“பொதுவா எங்கயாவது பாடி கிடைச்சிச்சின ரென்டெ விசியம் தான் ஒன்னு கொலை இன்னொன்னு தற்கொலை, இது கண்டிப்பா தற்கொலை இல்ல எத வெச்சி சொல்லுரனா”.....





இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று
முழு நாவலையும் உடனடியாக படிக்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

 
இது என்ன பிளாக் மேஜிக்யா.... எலிசபெத் சொன்ன ஆள் யாரு சூர்யாவா.... ஏன் தீடீர்னு ஜெண்ட்ஸ் வொய்ஸ்ல பேசணும்....
 
அப்போ சூர்யா சர்ச்ச எங்கன்னு கேட்டது இப்படி குழந்தையை இழந்து தவிக்கிற பேரண்ட்ஸுக்கு ஆறுதல் சொல்லுறது போல வேட்டையாடத்தானா? ப்ளாக் மேஜிக் கூட இருக்கும் போல
 
Top