Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 9

Advertisement

என் கதை பிடித்திருக்கிறதா?....

  • பிடிக்கவில்லை தொடரவேண்டாம்

    Votes: 0 0.0%
  • பரவாயில்லை தொடரலாம்

    Votes: 0 0.0%

  • Total voters
    7

naveen prabu

Member
Member
EPISODE - 9/21


விடியோவை உற்று பார்த்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒரு காக்கா தள்ளாடி தள்ளாடி பறந்து வந்து கேமரா மீது படாரென மோதியது, மோதிய வேகத்தில் கேமரா உடைந்து கீழ விழுந்து செயலிழுக்கிறது…



“அவன பத்தி ஒரு சின்ன எவிடன்ஸ் கூடவா கிடைக்கல?…”


“இதுவரைக்கும் ஒரு சின்ன பிங்கர்பிரிண்ட் கூட கிடைக்கல சம்பவம் நடந்த இடத்தில் இருந்த எல்லா செல்போன் டவரையும் செக் பண்ணியாச்சு அலெக்ஸ் நம்பர தவிர வேற யார் நம்பரரும் அங்க இல்ல… லாஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்சா அலெக்ஸ் போனோட அவுட்கோயிங் இன்கமிங் கால் எல்லாத்தையும் செக் பண்ணியாச்சு எந்த எவிடென்சும் கிடைக்கல... இப்போதைக்கு நமக்கு தெரிஞ்ச வரைக்கும் அவனுக்கு மொத்தமா 18 தல தேவைப்படுது, மேபி இது முதல் தலையாகவும் இருக்கலாம் இல்ல கடைசி தலையாவும் இருக்கலாம், ஒருவேளை இது கடைசி தலையா இருந்துச்சுன்னா வேற எங்கேயாவது இதேபோல சேம் பேட்டன்ல ஏதாவது கொலை நடந்திருக்கானு செக் பண்ணனும்…”



“செக் பண்ணனும்னா எங்க?…”

“முதல்ல தமிழ்நாட்ல, கிடைக்கலன்னா இந்தியா முழுக்க தேடணும்…

அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஒரு சின்ன தப்பாவது பண்ணியிருக்கணும் அதைத்தான் நாம தேடணும்…”


“என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது அடுத்த கொலை நடக்குறதுக்கு முன்னாடி நீ அவனை புடிக்கணும்…”



“நிச்சியமா சார்… அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டீம் வேணும், மொத்தம் பத்து பெரு ஐ.டி சைபர் செல்லுல இருந்து ரெண்டு பெரு ஆதித்யா, காவ்யா, பாரென்சிக் டிபார்ட்மென்ட்ல இருந்து ரெண்டு பெரு பிரேம், ஆஷா, சப்-இன்ஸ்பெக்டர்ஸ் சத்தியா, அர்ஜுன், ஜெய் மூணு பி.சி அவினாஷ், ரிஷி, மதன் அப்புறம் ஒரு வேன், வேன் குள்ள மினி போரென்சிக் லேப் மினி ஐ.டி லேப் இருக்கனும்…”


“இன்னும் கொஞ்ச நேரத்துல நீ கேட்ட எல்லாம் இங்க இருக்கும்…” கமிஷனர் மணிவேல் கிளம்பினார்.


“சத்யா… தமிழ்நாட்ல இருக்க எல்லா ஸ்டேஷனுக்கும் இன்ஃபர்மேஷன் அனுப்புங்க… நம்மகிட்ட இருக்க டீடெயில்ச கொடுங்க இதே பேட்டன்ல ஏதாவது கொலையோ இல்ல டோட்டல் ஃபேமிலி மிஸ்ஸிங் கேஸோ எதுவா இருந்தாலும் உடனே நமக்கு இன்ஃபார்ம் பண்ண சொல்லுங்க…”



“சரி சார்…”


“நான் செயின்ட் தாமஸ் சர்ச் பொய் அலெக்ஸ் ஃபேமிலி பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்குதான்னு பாக்குறேன்…”



காரின் கதவை தொடும் நேரத்தில் இன்ஸ்பெக்டர் நவீனுக்கு ஒருகணம் உடம்பு வேர்த்து போனது கரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த ஃபேமிலி மிஸ்ஸிங் கேஸ் திடிரேன நியாபகத்துக்கு வந்தது, ஸ்டேஷனுக்குள் விரைந்தார்,


“ஏட்டு... ரெண்டு நாளைக்கு முன்னாடி ரெஜிஸ்டர் பண்ண சொல்லி உன்கிட்ட ஒரு கேஸ் குடுத்திருந்தன்ல அத நா பாக்கணும்…”


ரெஜிஸ்டரை திருப்பிக் காட்டினார் ஏட்டு, ஏறக்குறைய ஒரே மாதிரியான கேஸ், “இந்த கேஸ்ச யார பாக்க சொல்லி இருந்தன்?…”



அருகில் இருந்த ரமேஷ் ஓடி வந்து “சார்… என்ன தான் பேசிக் இன்வெஸ்டிகேஷன ஸ்டார்ட் பண்ண சொல்லியிருந்தீங்க…”


“பன்னீங்களா சார்?...” என்றார் நவீன்

“பண்ணன் சார்…“


“அப்புறம் ஏன் சார் ஏண்ட எதுவும் அப்டேட் பண்ணல?…”


“சாரி சார்…”



“சாரிய தவிர்த்து வேற ஏதாவது வெச்சி இருக்கீங்களா சார் இந்த கேஸ் சம்மந்தமா?…” தன் கையில் இருந்த பைலை காண்பித்து “இதுல இருக்கு சார்…”



பைலை புடுங்கி தன் பின்னால் இருந்த டேபிளின் மேல் வைத்து விட்டு “நீங்க சொல்லுங்க சார்… வாயில ஏதாவது வெச்சி இருக்கீங்களா சார்?…”



இல்ல என்பதை போல் தலையசைத்தார் ரமேஷ்…. “அப்புறம் என்ன சார் சொல்லுங்க…”



“சார் காணாம போனது மூணு பெரு, அப்பா அம்மா அப்பும்றம் அவுங்க குழந்தை, அந்த அப்பா பெரு அன்டனி அம்மா பெரு மேரி அந்த குழந்தை பெரு கேபிரில்ல… அவுங்க காணாம போன தேதி நவம்பர் 4 கம்பளைண்ட் குடுத்தது நவம்பர் 6, அவுங்க கடைசியா சர்ச்கு போறதாக சொல்லிட்டு பொய் இருக்காங்க செயின்ட் பீட்டர் சர்ச், அந்த சர்ச்ல விசாரிச்சதுல அவுங்க ஒரு மாசமா சர்ச்க்கே வரதில்லனு அந்த சர்ச் பாதர் சொன்னார், அந்த சர்ச் சி.சி.டீவி-ய செக் பண்ணிட்டேன் பாதர் சொன்னது உண்மை தான்… அன்டனிக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல, மேரிக்கு அப்பா அம்மாவ தவிர வேற யாரும் இல்ல, ஆன்டனிக்கு எதிரினு சொல்லிக்குற அளவுக்கு யாரும் இல்ல, எந்த எவிடேன்ஸுமே தெளிவா கிடைக்கல சார்…”


“அன்டனி வீட்ட செக் பன்னீங்களா?...”



“இல்ல சார்…”



“சத்தியா... பொய் அன்டனி வீட்ட செக் பண்ணு எதாவது எவிடென்ஸ் கிடைக்குதான்னு பாரு…”



இன்ஸ்பெக்டர் நவீன் செயின்ட் தமோஸ் சர்ச்க்கு விரைந்தார்.


நேரம் மாலை 4.00 செயின்ட் தமோஸ் சர்ச் 1800களில் கட்ட பட்ட ஒரு பழமையான சர்ச். நவீன் சர்ச்சில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவரிடம் பாதரை பார்க்க வேண்டுமென்று கேட்டதால் அவர் நவீனை மேனேஜ்மென்ட் ரூம்க்கு அழைத்து சென்று “உள்ள உக்காருங்க சார் பாதர் இப்போ வந்திடுவாரு...”

இன்ஸ்பெக்டர் நவீன் ரூமினுள் அமர்ந்தார் அரை முழுக்க ஏசு கிறிஸ்துவின் படங்களும் சிலைகளும் இருந்தது. சிறிது நேரத்தில் பாதர் பெர்னாண்டஸ் அறையினுள் நுழைந்தார்.


“நா பெர்னாண்டஸ் கை குலுக்கியவாறு அமர்ந்தார்…”



“நா இன்ஸ்பெக்டர் நவீன் ஒரு கேஸ் சம்பந்தமா சின்ன டீடெயில்ஸ் வேணும் பாதர்…”


“ஹ்ம்ம்... சொல்லுங்க” என்றார் பாதர்



தன் கைல் இருந்த அலெக்ஸ் ஃபேமிலி போட்டோவை காட்டினார். நவீன் பேச ஆரமிப்பதற்கு முன்பே பாதர் பேச தொடங்கினார்


“இவுரு பெரு அலெக்ஸ், அவர் மனைவி குழந்தை எல்லாரும் நம்ப சர்ச்க்கு தான் வருவாங்க, ஆனா இவுங்க கொஞ்ச நாலா வர்ரதில்ல போல…”



“ஆமா பாதர் அவுங்க மூணு பெரும் கொலை செய்யப்பட்டாங்க…”



“ஜீசஸ்…” அதிர்ந்தார் பாதர்.



“அந்த கொலை சம்பந்தமா தான் சில டீடைலிஸ் கலெக்ட் பன்னுறதுக்காக நா வந்திருக்கேன்…”



“சொல்லுங்க மிஸ்டர் நவீன், என்ன டீடெயில்ஸ் வேணும்…”



“இந்த சர்ச்ல சமீபத்துல இவுங்களுக்கு நெருக்கமானவங்க யாராச்சும் இருக்காங்களா?…”



“மிஸ்டர் நவீன் இந்த சர்ச் ஒரே நேரத்துல 600 பேர் உக்கார கூடிய பெரிய சர்ச், அதுனால இவுங்கள நா பாக்குறதே பெரிய விழியம்… இதுல அவுங்க நண்பர்களை நா பாக்குறது முடியாத காரியம் மிஸ்டர் நவீன்…”


“உங்க சர்ச்ல சி.சி.டிவி கேமரா இருக்கா ?…”


“சாரி மிஸ்டர் நவீன் இல்ல…”



“இவுங்கள பத்தின வேறா எதாவது டீடெயில்ஸ் உங்களுக்கு தெரியுமா?…”


“இல்ல எனக்கு எதுவும் தெரியாது…”


“வேற ஏதாவது டீடெயில்ஸ் தெரிஞ்ச இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…” விசிட்டிங் கார்டை குடுத்தார்



“கண்டிப்பா மிஸ்டர் நவீன்…” நவீன் கிளப்பின்னர்.


நவீன் தன் காரின் கதவை திறக்கும் நிமிடம் நவீனின் கைபேசி ஒலித்தது.


“சொல்லு சத்தியா…”


“சார்…அன்டனி வீட்டை சேர்ச் பணத்துல எந்த முக்கியமான எவிடெனஸும் கிடைக்கல சார், ஒரே ஒரு புக் கிடைச்சது அது பாக்க பைபிள் மாதரியே இருந்துது ஆன பைபிள் இல்ல சார்…”



“ஷீட்... சந்தியா நீ அங்கயே இரு நா உடனே வரன் அட்ரஸ்ச மெசேஜ் பண்ணிவிடு….” அழைப்பை துண்டித்து வண்டில் ஏறினார். தூரத்தில் பாதர் பெர்னாண்டஸ் கையசைப்பதை பார்த்த நவீன் காரை விட்டு இரங்கி பாதர் பெர்னாண்டசை நோக்கி நடந்தார்…


“மிஸ்டர் நவீன் தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு இப்போ தான் ஒரு விசியம் நியாபத்துக்கு வந்துது…”



“சொல்லுங்க பாதர்…”



“மிஸ்டர் அலெக்ஸ் ஒரு நாள் என் கிட்ட வந்து பாவ மன்னிப்பு கேட்டார்…. அப்போ அவர் ஏதோ தவறான வழில போராதாவும் கர்த்தர் தன்னை மன்னிக்கவே மாட்டார்னும் சொல்லி அழுதார்… நா என்ன பண்ணீங்கனு கேட்டேன், அவரு தன் இறந்துபோன குழந்தையை திரும்ப பேரனும்னு சில தீய பாதைல போனதாக சொன்னார் நான் மிஸ்டர் அலெக்ஸ் இரந்தவங்க இறைவனை அடைஞ்சிடுவாங்க அவுங்க திரும்ப வரமாட்டாங்க இறைவனை நினைங்க எல்லாம் சரி ஆய்டும்னு சொல்லி அனுப்பிவெச்சேன்...”



“அவர் என்ன சொன்னார்?…”


“எதுவும் சொல்லாம கண்கலங்கிய படியே போய்ட்டார்… அப்புறம் இன்னொரு நாள் எனக்கு போன் பண்ணி இருந்தார், போன்ல அவர் நீங்க எவளோ சொல்லியும் கேக்காம நா தீய வழில பொய் இப்போ என் கண்ணுக்கு சாத்தான் தெரியுதுனு சொன்னார், பேசிகிட்டு இருக்கும் போதே பயங்கரமா காத்திடு போனே வெச்சிட்டார், நா அடுத்த நாள் அவுங்க வீட்டுக்கு பொய் பாக்கும் போது வீடு பூட்டி இருந்துது, சந்தேக பட்டு போலீஸ்க்கு போன் பண்ணலாமேன்னு போனே எடுக்கும் போது ஒரு மெசேஜ் வந்திருந்தது, அது அலெக்ஸ் அனுப்புன மெசேஜ் அதுல பாதர் எனக்கு ஒன்னும் இல்ல கொஞ்சம் மனசு சரி இல்லாததனால நாங்க என் மனைவியோட அம்மா வீட்டுக்கு போறம், அங்க பொய் சேந்ததும் கண்டிப்பா போன் பண்ணுறதாகவும் மெசேஜ் அனுப்பி இருந்தார், அதுக்கு அப்புறம் எந்த காலும் வரல நானும் மறந்துட்டேன் மிஸ்டர் நவீன்…”



“அந்த மெசேஜை நா பாக்கலாமா?…”



“தாராளமாக இந்தாங்க…” தன் போனில் இருந்த மெசேஜை காட்டினார் மெசேஜ் வந்திருந்த நம்பர் அலெக்ஸ் நம்பர் தான் என உறுதி செய்து கொண்டு கிளம்பினார் இன்ஸ்பெக்டர் நவீன்.....



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!


அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று
முழு நாவலையும் உடனடியாக படிக்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

 
Last edited:
யாருக்காகவும் இல்ல இது என் வாசகர்களுக்காக, நீங்க கேட்டிங்க நான் கொடுத்துட்டேன்.
love you all thanks for the wonderful support.??? ungaloda comments thaan enaku vaenum.???
unga ellar kittaium naan paesanum, enakulla nariya kaelvigal irruku,( in writing) i need solutions for that. unga ellarkittaum paesa ethavathu vaipu irruntha enaku sollunga bcoz na intha siteku puthusu so enna pananum eppudi pananumnae enaku theriyala.

appuram mukiyama kathaiya padichitu comment pannunga athu thaan enaku boost horlics ellamae. love u all take care. maela audience poll iruku marakama ellarum vote podunga naan terinjikanum.
 
பாதருக்கு சந்தேகம் வந்ததை தெரிஞ்சி சூர்யாதான் அலெக்ஸ் போன்ல இருந்து msg பண்ணி இருக்கணும். :whistle:
நவீன் சரியான ரூட்லதான் போய்கிட்டு இருக்கான்.:cool:
 
அருமை சகோ.. நீங்கள் திரும்ப பதிவு செய்யமாட்டார்கள் என நினைத்தேன்... ஆனால் நீங்கள் அடுத்த epi பதிவு செய்துவிட்டீங்க...ரொம்ப அருமையாக இருக்கு உங்கள் கதை... Very interesting ?????????...pls கதை முழுவதும் பதிவு செய்யுங்கள் சகோ..
 
பாதருக்கு சந்தேகம் வந்ததை தெரிஞ்சி சூர்யாதான் அலெக்ஸ் போன்ல இருந்து msg பண்ணி இருக்கணும். :whistle:
நவீன் சரியான ரூட்லதான் போய்கிட்டு இருக்கான்.:cool:
ellathaium neenga ippudi sollita enna artham oru niyayam vaenama :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: thank you
 
அருமை சகோ.. நீங்கள் திரும்ப பதிவு செய்யமாட்டார்கள் என நினைத்தேன்... ஆனால் நீங்கள் அடுத்த epi பதிவு செய்துவிட்டீங்க...ரொம்ப அருமையாக இருக்கு உங்கள் கதை... Very interesting ?????????...pls கதை முழுவதும் பதிவு செய்யுங்கள் சகோ..
nandri sago ???
 
அச்சோ அலெஸ் இறந்துட்டான்னு எப்படி முடிவு பண்ண நவீன்.... பாதேர் சரியான நேரத்தில் நீங்க உண்மையை சொல்லிடீங்க..... சூர்யா தான் சாத்தானா.... அவனோட பையனும் மனைவியும் கூட இறந்து தானே இருக்காங்க..... அவன் பையன் திரும்ப கிடைக்க தான் இப்படி செய்யுறனா.... அவனுக்கும் மேல யாராவது இருக்காங்களா.....

Regular yaa post பண்ணுங்க.... கொஞ்சம் ஸ்பெல்லிங் mistake இருக்கு அதை கொஞ்சம் சரி பண்ணி போஸ்ட் பண்ணுங்க....
 
உங்க ஸ்டோரி kindle ல் இருக்குனு சொல்லி இருக்கீங்க... free offer கொடுத்தா நிறைய பேர் படிபங்க.. if possible free கொடுத்துட்டு site ல் inform பண்ணுங்க
 
ellathaium neenga ippudi sollita enna artham oru niyayam vaenama :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: thank you
பானுமாவா கேட்டு பாருங்க சகோ எனக்கு twist queenனு இன்னொரு பெயர் இருக்கு. நானே twist வைப்பேன். நீங்க வைக்கிறதா கண்டு பிடிக்கைலைனா என் பெயர் கெட்டுடாது. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
 
Top