Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – Episode 4

Advertisement

Aathirai

Well-known member
Member
1971


(Episode-4)

அஞ்சலி காலை 7 மணிக்கு பெங்களுரூ வந்து சேர்ந்தாள்.. அவள் மாமா அவளை அழைத்துப் போக வந்திருந்தார்.. வீடு செல்லும் வரை அவர் மட்டுமே பேசிக் கொண்டு வந்தார்.. அவள் எதுவுமே பேசவில்லை.. அவர் அதைப் புரிந்தவராக மௌனம் காத்தார்..

கார் அவர்கள் இருக்கும் இடமான சிவாஜி நகருக்குள் நுழைந்தது.. அங்கே உள்ள அந்த பிரம்மாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தனர்.. ஆம் அது தான் அவர்கள் வீடு... அவள் மாமா மகேஷ் பெங்களுருவின் சிறந்த கட்டிட நிபுணர்களில் ஒருவர்.. அவர்கள் வீட்டை பார்த்துப் பார்த்து மிக ரசனையோடு கட்டியிருந்தார்...

அது அந்த ஏரியாவிலேயே பெரிதும் பேசப்படும் வீடு.. அஞ்சலி குடும்பமும், அவள் மாமா குடும்பமும் சில வருடங்களாக ஒன்றாகத் தான் உள்ளனர்.. அவள் காரை விட்டு இறங்கி, வீட்டினுள் நுழைந்தாள்...

“ஹே..... அஞ்சலிக்கா வந்தாச்சு....” என்று உற்சாகத்தில் வந்து அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள் மாமா மகள் பூஜா...

“எப்படி இருக்கே கா...?? ஹும்ம்ம்... நீ, ஸ்வேதா அக்கா யாரும் இல்லாம எனக்கு செம போர்.. இந்த வருண் கூட சண்ட போட்டா எனக்கு யாருமே சப்போர்ட் பண்ண மாட்டிங்கறாங்க.. நல்ல வேளை, நீ வந்துட்ட.. இனி வெகேஷன் முடியற வரைக்கும் எனக்கு நோ ப்ராப்ளம்..” என்று சந்தோஷப்பட்டாள் பூஜா..

இதைக் கேட்டு அங்கே வந்த வருண் செல்லமாக பூஜா தலையைத் தட்டினான்.. “வா கா...” என்றான் அஞ்சலியைப் பார்த்து...

“அஞ்சலி மா... எப்படி டா இருக்க...??” என்று பாசத்தோடு வந்து அணைத்துக்கொண்டாள் அம்மா பானுமதி.. கூடவே அத்தையும் வந்தாள்..

“ஹும்ம்... சென்னைல ஹாஸ்டல் சாப்பாடு சாப்ட்டு, சாப்ட்டு கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்க அஞ்சலி...” என்றாள் அத்தை மீனா.. அவள் அம்மாவும் ஆமாம் என்றாள்...

“அப்படி எல்லாம் இல்ல அத்தை.. நீங்க ரொம்ப நாள் கழிச்சு பாக்கறதால அப்படித் தெரியுது.. நான் எப்பவும் போல தான் இருக்கேன்..” என்றாள் அஞ்சலி..

“எப்பவும் போலன்னா எங்க பொண்ணு இவ்ளோ டல்லா இருக்க மாட்டாளே.. இந்நேரம் இந்த வீடே ஒரு வழியாயிருக்கணுமே” என்றார் அவள் மாமா சைடு கேப்பில்.. மாமா எதற்காக இதைச் சொல்கிறார் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது..

“மாமா, எனக்குக் கொஞ்சம் டையர்டா இருக்கு... அதனால தான் உங்க கூட நான் எதுவும் பேசாம வந்தேன்..” என்று சமாளித்தாள்... அதைப் புரிந்து கொண்டவர், இப்பொழுது எதுவும் பேச வேண்டாம் என விட்டு விட்டார்...

“சரி டா.. நீ போய் குளிச்சு, சாப்ட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு... நாம ஈவினிங் பாக்கலாம்..” என்று கிளம்பினார் மாமா... அவர் கிளம்பியதும் அம்மாவிடம் வந்தாள்... அம்மாவைக் கட்டிக் கொண்டே கேட்டாள்...

“அப்பா எப்படி மா இருக்கார்..?? ஸ்வேதா எப்போ வருவா...??” என்றாள்..

மகளின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவள் சொன்னாள்.. “அப்பா நல்லா இருக்கார் டா.. ஸ்வேதாக்கு கம்பெனில ஏதோ வொர்க் வந்துடுச்சாம் அதனால, நெக்ஸ்ட் வீக்ல லீவ் போட்டுட்டு வரேன்னு சொல்லிருக்கா...” என்றாள்..

“ஹும்ம்... நான் போன் பண்ணப்போ இந்த வீக்கே வருவேன்னு சொல்லிருந்தா.. அதுக்குள்ளே வொர்க் வந்துடுச்சா.. ஹும்ம்.. ரொம்ப பிசியாயிட்டாங்க மேடம்... போன் பண்ணா கூட கொஞ்சம் தான் பேசறா...” என்று செல்லமாய் திட்டினாள் தன் அக்காவை.. அம்மா சிரித்தாள்...

“அப்பா எப்போ மா வருவார்...??” என்றாள் திரும்பவும்...

“இது என்னடா புது கேள்வி..?? எப்பவும் அவர் சண்டே தான வருவார்... அதுவே பெரிய விஷயம்.. இந்த வீக் நீ வருவேன்னு சொல்லிருந்தேன்.. வருவார்ன்னு தான் நெனைக்கறேன்..” என்றாள் ஏதோ மாறியாக...

ஆம், அவர் மும்பையில் இருக்கிறார்... இப்பொழுது கூட யாருடனாவது தன் ஆட்டோ மொபைல் பிசினஸ் பற்றி தான் பேசிக்கொண்டிருப்பார்.. வாரம் அந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் வருவார்.. அவரின் வருகையை அம்மாவே எதிர்பார்ப்பது என்பது பெரிய விஷயமாக நினைக்கும் போது, தான் மட்டும் என்ன செய்ய முடியும் என்று நினைத்தாள் அவள்..

அக்கா ஸ்வேதா புனேவில் இருக்கிறாள்.. எம்.பி.ஏ படித்தவள், மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் வேலைக்குச் சென்றிருக்கிறாள்.. வேறு என்ன அவள் அப்பா முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.. மாமா நீண்ட தூரம் பேசிய பிறகு தான் சரி என்றார்.. அவள் வேலைக்குச் சென்று ஒரு வருடம் ஆகி விட்டது...

சென்ற செமஸ்டர் லீவில் அவளைப் பார்த்தது.. அவ்வப்போது போனில் பேசுவாள்... அவ்வளவு தான்.. அவர்கள் இருவரையும் நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு...

குளித்து முடித்து, சாப்பிட்டதும் சிறிது நேரம் நன்றாக உறங்கினாள்.. மதிய உணவிற்கு பிறகு வருண், பூஜாவுடன் சிறிது நேரம் பொழுதைப் போக்கினாள்.. பிறகு, தன் தோழிகளுக்கு போன் செய்து பேசினாள்..

தோழிகளிடம் பேசியதும் அவர்கள் கூறிய விஷயம் மேலும் அவளை வந்து இம்சை செய்தது... மேலும் கவலைப்பட்டாள்..

மனம் ஏனோ அமைதியே அடையாததைப் போல் தோன்றியது... சிறிது நேரத்தில் மாமா வந்து விட்டார்.. ரெப்ரெஷ் செய்து விட்டு வந்தவர், அஞ்சலியை அழைத்தார்..

“அஞ்சலி மா...” என்றார்.. “சொல்லுங்க மாமா...” என்றாள் அருகில் வந்து..

“உனக்கு என்னதான் ப்ராப்ளம்..?? அத சொல்லு மொதல்ல.. நீ இப்படி டல்லா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு டா.. என் பொண்ணு எவ்ளோ அழகா சிரிச்சுட்டு இருப்பா.. ஆனா, இப்போ பாரு... முகமே சரி இல்ல..” என்றார்..

“இல்ல மாமா... நான் நல்லாதான் இருக்கேன்.. எதுவும் இல்ல..” என்றாள்..

“சமாளிக்காத அஞ்சலி மா... என்னன்னு சொல்லு..” என்றார் கறாராக...

இதற்க்கு மேல் முடியாதென்று தன் தோழிகள் கூறியவற்றைக் கூறினாள்..

“ஹும்ம்... இப்போ உனக்கு எம்.எஸ்.ஸி பண்ணனும்.. அவ்ளோதானே.. இதுக்கு போய் ஏன் இவ்ளோ டல்லா இருக்க.. விடு.. நான் அப்பாகிட்ட பேசறேன்.. மொதல்ல மாட்டேன்னு தான் சொல்வார்.. அப்பறம் ஒத்துக்குவார்.. ஸ்வேதா விஷயத்துலயும் இப்படி தான நடந்தது...” என்றார்..

“இல்ல மாமா, இருந்தாலும் அப்பா என்ன சொல்வாறோன்னு பயமா இருக்கு..” என்றாள் அஞ்சலி...

“அஞ்சலி மா, அப்பாவப் பத்தி உன்ன விட எனக்கு நல்லாவே தெரியும்... அவர்கிட்ட எப்படி பேசணுமோ, அப்படி பேசி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு... ஓகே வா...??”

அஞ்சலி எதுவும் பேசாமல் இருந்தாள்...

“ஹும்ம்.. அஞ்சலி, இந்த மாமா இருக்கும் போது எதுக்கு பயப்படற...?? நீ எதுக்கும் கவலைப்படாதே.. ஹாப்பியா இரு டா.. நான் இருக்கேன்... ப்ரீயா விடு... ம்ம்.. சரியா...” என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டுச் சென்றார்...

அவர் பேசியதும், அஞ்சலிக்கு ஏதோ ஒரு எனெர்ஜி டானிக்கை குடித்தது போல் இருந்தது... கொஞ்சம் மனம் நிம்மதியை அடைந்தது போல் உணர்ந்தாள்..

நிஜம், மாமா தன் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என எண்ணினாள்.. போன ஜென்மத்தில் அவர்கள் செய்த புண்ணியம் என்று தோற்றியது அவளுக்கு... எப்படியாவது தன் அப்பா இதற்க்கு சம்மதம் சொல்லி விட வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டாள்...
 
மகேஷ் மாமா சூப்பர்
அப்பாவை விட ரொம்பவே அனுசரணையாக இருக்கிறார்
 
Top